Tuesday, September 30, 2014

​இருப்பதை விட்டுவிட்டு பறப்பதைப் பிடிக்க ஆசை

ருப்பதை விட்டுவிட்டு பறப்பதைப் பிடிக்க ஆசைப்படுவது மனித இயல்பு. அந்த இயல்பு அவலத்தில் தள்ளி விடும்போது தாங்க முடியவில்லை. தண்ணீருக்குப் பஞ்சமுள்ள நாட்டில், கண்ணீர் பஞ்சமில்லாமல் பொங்கி வழிகிறது!

நம்பாதவர்களுக்கு...

தொலைக்காட்சிகளிலும் பத்திரிகை களிலும், அவ்வப்போது சிலர் பேட்டி கொடுப்பதைப் பார்த்திருப்பீர்களே!

'பேங்க்லேர்ந்து பத்துலட்ச ரூபா பணத்தோட வெளியில வந்தேன் சார்! அத வண்டியில வச்சிட்டு, சாவியப் போட்டு திருப்பினேன். அப்ப ஒரு ஆள் வந்து, 'சார்! கீழ கெடக்குற இருபது ரூபா உங்களுதா பாருங்க'ன்னு சொன்னான். இருபது ரூபா கீழ கெடந்துச்சு. குனிஞ்சு அத எடுத்துக்கிட்டு நிமிர்ந்து பார்த்தா, பத்து லட்ச ரூபாயோட இருந்த என் 'பேக்'கைக் காணோம் சார்!' என்று கண்ணீர் வழிய பேட்டி வந்திருக்கும்.

இருபது ரூபாய் மீது ஆசை கொண்ட மனித மனம், பத்து லட்சத்தை இழந்துவிட்டு பதறுகிறது. இருப்பதை விட்டு பறப்பதைப் பிடிக்க எண்ணியதன் விளைவு அது.

இப்படி காசுபணம் போய் விட்டால், எப்படியாவது திரும்பப் பெற்று விட முடியும். ஆனால்... காலம்..? போய்விட்டால், திரும்பப் பெற முடியாதது அது. அதன் மூலம் கிடைக்க வேண்டிய அனுபவப் பாடங்களும் போய்விடும். சிறியதற்கு ஆசைப்பட்டு பெரியதை இழந்துவிடக் கூடாது.

இன்று பல நிறுவனங்களில், அதிலும் குறிப்பாக இளைய தலைமுறையினரிடம் பழகி வரும் ஓர் அழுத்தமான வசனம் (பஞ்ச் டயலாக்), 'பேப்பர் போட்டுட்டேன்' என்பது.

ஓர் ஆயிரம் ரூபாய் அதிகமாகக் கிடைக் கிறது என்பதற்காக, பல நாட்களாகப் பார்த்துக் கொண்டிருந்த வேலையை விட்டு விட்டு, வேறு ஒரு நிறுவனத்துக்குப் போகும்போது... சர்வீஸ் தொடர்பற்றுப் போகிறது.

அதைவிட, இன்னும் ஆயிரம் ரூபாய் அதிகமாகக் கிடைக்கும் என்றால், அங்கிருந்தும் புறப்படத் தயாராகிவிடுவோம். பல நேரங்களில், வேலை முடிந்தவுடன் 'ஆட் குறைப்பு' என்ற பெயரில், புதிதாக வந்தவர்கள் அதாவது ஆயிரம் ரூபாய் அதிகம் கிடைக்கும் என்று வந்தவர்கள், வெளியேற்றப்படுவார்கள்.

ஆயிரம் ரூபாய் அதிகமாகக் கிடைக்கும் என்று வெளியே வந்த பலர், அன்றாட செலவுகளுக்கே அல்லாடிக் கொண்டிருக்கிறார்கள். சிறியதற்கு ஆசைப்பட்டு பெரியதை இழந்து விடக் கூடாது. மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இதை பழந்தமிழ்ப் பாடல் ஒன்று கவிதையாக விவரிக்கிறது.

வேடன் ஒருவன் கூரான அம்பை ஏவி, ஒரு யானையைக் கொன்றான். அதேநேரம், ஒரு நாகப் பாம்பு வேடனைக் கொத்த, வேடன் பாம்பின் மீது விழுந்து இறந்தான்; பாம்பும் இறந்தது. ஆக மொத்தத்தில் யானை, வேடன், பாம்பு என மூன்று உடல்கள் அங்கே மூச்சின்றி கிடந்தன. அந்த நேரம் பார்த்து... அந்தப் பக்கமாக வந்த ஒரு நரி, இறந்து கிடந்த மூன்று உடல்களை யும் பார்த்தது. அதற்கு ஆனந்தம் தாங்கவில்லை.

'ஆகா! யானையை மூன்று மாதங்கள் வரை வைத்துத் தின்னலாம். வேடனை மூன்று நாட்கள் வைத்துத் தின்னலாம். பாம்போ, ஒரு நாளுக்கு இரையாகும்...' என்று சொல்லிக் கொண்டே நரி நெருங்கியது. அப்போது அதன் கண்களில், இறந்து கிடந்த வேடனின் கையில் இருந்த வில் தென்பட்டது. வில்லில் இருந்த நாண் கயிறு பளபளத்து, நரியின் ஆசையைச் சுண்டி இழுத்தது. அந்த நாண் கயிறு மிருகங்களின் நரம்பால் ஆனது. அதைப் பார்த்த நரி, நாக்கில் நீர் சொட்ட, 'இந்த நரம்பினாலான நாண் கயிற்றை முதலில் கடித்துச் சுவைத்து விட்டு, யானை முதலானவைகளைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம்' என்று நினைத்தபடி, நாண் கயிற்றைக் கடித்தது. அவ்வளவுதான்! விபரீதம் விளைந்தது. நாண் கயிறு துண்டானதும், 'படீ'ரென்று நிமிர்ந்தது வில். அதன் கனமான பகுதி தலையில் தாக்க, நரியின் தலை துண்டாகிப்போய் விழுந்தது.

சிறியதற்கு ஆசைப்பட்டதன் விளைவு!

இந்தக் கதையைச் சொல்லி, அற்ப சந்தோஷத்தின் விளைவை உணர்த்தி, எச்சரிக்கும் பாடல்...

கரி ஒரு திங்கள் ஆறு
       கானவன் மூன்று நாளும்
இரிதலைப் புற்றில் நாகம்  
       இன்று உணும் இரை ஈதென்று
வருதலை வேடன் கையில்
       விற்குதை நரம்பைக் கவ்வி
நரியனார் பட்ட பாடு
       நாளையே படுவர் தாமே.

(விவேகசிந்தாமணி 92ம் பாடல்)

கீதையில் பகவான் நமக்கா சொன்னார்?

''எனக்கு மட்டும் ஏன்தான் கடவுள் இத்தனை கஷ்டத்தைக் கொடுக்கிறானோ தெரியலை. இத்தனைக்கும் நான் போகாத கோயில் இல்லை, வேண்டாத தெய்வம் இல்லை. இருந்தாலும், வாழ்க்கைல நிம்மதிங்கறதே இல்லாம போச்சு!'' என்று அங்கலாய்க்காதவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம்.

எங்கள் பக்கத்து வீட்டுப் பெண்மணியும் இந்த ரகம்தான். சுண்டுவிரலில் காயம் பட்டால்கூட, தெருமுக்குப் பிள்ளையாரை அர்ச்சிக்க ஆரம்பித்துவிடுவாள்.

''ஒரு வருஷமா, ரெண்டு வருஷமா... கடந்த அஞ்சு வருஷமா ஒருநாள் விடாம, தினமும் சாயந்திரம் விளக்கு வச்சா, தெருக்கோடி பிள்ளையார் கோயிலுக்கு நான் போகாம இருந்ததே இல்லை. தினமும் உண்டியல்ல அஞ்சு ரூபாய் காயின் ஒண்ணு போட்டுட்டுத்தான் வருவேன். வீட்டுச் செலவுக்காக மாமா கொடுக்கற ரூபாய்ல பிள்ளையாருக்குன்னே நூத்தம்பது ரூபா எடுத்து வச்சுடுவேன். ஆனாலும், அந்தப் பிள்ளையாருக்கு என்மேல கொஞ்சம்கூட கருணையே இல்லை!''

''ஏன், என்னாச்சு?''

''வர்ற சங்கடஹர சதுர்த்திக்கு கொழுக்கட்டை பண்ணலாம்னு மாவு அரைச்சு வச்சேன். நேத்து ராத்திரி எலி ஒண்ணு எப்படியோ சமையலறைக்குள்ளே வந்து அத்தனை மாவையும் குதறி வச்சுட்டுப் போயிட்டுது. ம்... எனக்கு மட்டும் ஏன்தான் இந்த விநாயகப் பெருமான் இத்தனை கஷ்டத்தைக் கொடுக்கிறானோ..!''

இப்படி கொழுக்கட்டை மாவில் ஆரம்பித்து, வீட்டில் பழைய துடைப்பக்கட்டை காணாமல் போனாலோ, காரில் போகும்போது பாதி வழியில் பெட்ரோல் தீர்ந்துபோனாலோ... இப்படிச் சின்னச் சின்ன விஷயங்களுக்குக்கூட, 'எனக்கு மட்டும் ஆண்டவன் ஏன்தான் இப்படி அடுக்கடுக்கா கஷ்டங்களைக் கொடுக்க றானோ?' என்று புலம்ப ஆரம்பித்துவிடுவாள்.

அந்தப் பெண்மணிக்கு போன வாரம் அவரே எதிர்பாராத விதமாக, ஐம்பது லட்சம் ரூபாய் சுளையாக வந்தது. அவருடைய தாத்தா சம்பாதித்து, பேத்திக்கு என எப்போதோ எழுதி வைத்த சொத்து. அது பற்றி அவர் வாயைத் திறக்க வேண்டுமே? மூச்!

போகட்டும்... 'எனக்கு மட்டும் ஆண்டவன் ஏன்தான் இத்தனை பெரிய ஆனந்தத்தைக் கொடுக்கறானோ?' என்று புதிய பல்லவியாவது பாடுவார் என்று எதிர்பார்த்தேன். ஊஹூம்!

அதுசரி, சுகத்தையும் துக்கத்தையும் சமமாகப் பாவிக்கவேண்டும் என்று கீதையில் பகவான் நமக்கா சொன்னார்? அர்ஜுனனுக்குதானே?

ஒரு மகன் தன் அப்பாவைப்பற்றி என்ன நினைக்கிறான்?

ஒரு மகன் தன் அப்பாவைப்பற்றி என்ன நினைக்கிறான்?

4 வயதில்-
என் அப்பா தான் பெஸ்ட். அவரை விடச் சிறந்த அப்பா ஒருவரும் இல்லை.

6 வயதில்-
என் அப்பாவுக்கு எல்லோரையுமே தெரியும்
.
10 வயதில்-
என் அப்ப நல்ல அப்பாதான். ஆனால் அவருக்கு அடிக்கடி கோபம் வருகிறது..

12 வயதில்-
ஹும்! நான் சின்னவனாக இருந்தபோது அப்பா என் மீது பாசமாக இருந்தார்.

14 வயதில்-
என் அப்பா தான் எல்லா விஷயத்தையும் சரியாகச் செய்வதாக நினைத்துக்கொண்டிருக்கிறார்.

16 வயதில்-
அப்பா அந்த காலத்து மனிதர். லேட்டஸ்ட் விஷயங்களே தெரிவதில்லை.

18 வயதில்-
அப்பா ஏன் இப்படி பல சமயங்களிலும் பைத்தியக்காரத்தனமாக நடந்து கொள்கிறார்?

20 வயதில்-
அப்பாவுடன் இருப்பதே கஷ்டமாக இருக்கிறது. அம்மா எப்படித்தான் இவரை சகித்துக்கொள்கிறாரோ?

25 வயதில்-
என் அப்பாவுக்கு என்ன ஆச்சு? நான் என்ன செய்தாலும் அதை எதிர்ப்பதையே முதல் காரியமாகச் செய்கிறாரே?

30 வயதில்-
என் மகனை சமாளிப்பது பெரியகஷ்டம்! நான் சின்னவனாக இருந்தபோது அப்பாவுக்கு எத்தனை பயந்து நடந்தேன்?

40 வயதில்-
ஹும்! அந்த காலத்தில் என் அப்பா என்னை அத்தனை ஒழுக்கத்தோடு வளர்த்தார். நானும் என் மகனை அப்படித்தான் வளர்க்க வேண்டும்!

45 வயதில்-
குழந்தைகளை-அதுவும் டீன் ஏஜ் குழந்தைகளை வளர்ப்பது மிகவும் கஷ்டம். என்னை அப்பா எப்படித்தான் சமாளித்தாரோ

50 வயதில்-
எத்தனையோ கஷ்டங்களுக்கு மத்தியில் என் அப்பா எங்கள் எல்லோரையும் நன்றாக வளர்த்தார். எனக்கு ஒரு மகனையே ஒழுங்காக வளர்க்கத் தெரியவில்லை.

55 வயதில்-
என் அப்பா ஒரு தீர்க்கதரிசி. தனித்துவம் மிக்கவர்.

60 வயதில்-
என் அப்பா தான் பெஸ்ட். அவரை விடச் சிறந்த அப்பா ஒருவரும் இல்லை!

முதல் நிலைக்கு திரும்பவும் வருவதற்கு ஒரு மகனுக்கு 56 வருடங்கள் பிடித்திருக்கிறது.

நல்ல வேளையாக உங்களுக்கு அத்தனை வயது ஆகவில்லையெனில், ஏன் தாமதிக்கிறீர்கள்? உடனடியாக உங்கள் அப்பாவுக்கு ஒரு ஃபோன் செய்து அவரை நீங்கள் மிகவும் நேசிப்பதாகச் சொல்லுங்கள்..

Monday, September 29, 2014

அக்டோபர் மாதமும் பிங்க் ரிப்பனும்

உலக மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதம்: அக்டோபர்

பெண்களை அச்சுறுத்திவரும் உடல்நலக் குறைபாடுகளின் பட்டியலில் மார்பகப் புற்றுநோய் முக்கிய இடம் பிடித்திருக்கிறது. ஆனால் பலரும் பயப்படுவதைப் போல மார்பகப் புற்றுநோய் குணப்படுத்த முடியாததல்ல. "ரியான நேரத்தில் கண்டறியப்பட்டால் தேவையான சிகிச்சை பெற்று நலமுடன் வாழலாம்" என்கிறார் கோவை ராமகிருஷ்ணா மருத்துவமனை புற்றுநோய் ஆராய்ச்சி மைய நிபுணர் டாக்டர் பி. குகன்.

மார்பகப் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த அக்டோபர் மாதத்தை 'பிங்க் மாதம்' என்று அறிவித்திருக்கிறார்கள். ஒவ்வொரு வருடமும் இந்த மாதத்தில் மார்பகப் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரங்களும் நிகழ்ச்சிகளும் நடைபெறும்.

மார்பகப் புற்றுநோய் இந்தியாவில் குறிப்பாக மும்பை, கொல்கத்தா, சென்னை, டெல்லி, பெங்களூரு போன்ற பெருநகரங்களிலும், கோவை போன்ற வளர்ந்து வரும் நகரங்களில் வாழும் பெண்களுக்கே அதிகமாக கண்டறியப்பட்டு வருகிறது.

பெண்களுக்கான புற்றுநோய் என்று பார்த்தால் கிராமப்புறப் பெண்களுக்குக் கர்ப்பப்பை வாய் புற்றுநோயும், நகர்புறப் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோயுமே பெருமளவு பாதித்து இருக்கின்றன. 1 லட்சம் பெண்களில் 26 பேருக்கு மார்பகப் புற்றுநோய் இருப்பதாகக் கணக்கெடுப்புகள் சொல்கின்றன. இது உலக அளவில் உள்ள சராசரியைவிட மிகவும் அதிகம். இந்த அளவுக்கு மார்பகப் புற்றுநோய் அதிகரித்துள்ளதற்குக் காரணம், இது குறித்த விழிப்புணர்வு பெண்களிடம் இல்லாததும், வரும் முன்னே கண்டறிய முடியாததும்தான்.

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ரீகனின் மனைவி நான்சி ரீகன், மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டபோது அத்தனை மீடியாக்களும் அந்த நோயைப் பற்றிச் செய்திகள் வெளியிட்டன. மக்களும் விழிப்புணர்வு பெற்றார்கள். இந்த விழிப்புணர்வினால் அமெரிக்கர்கள் மார்பக சுயபரிசோதனையில் ஈடுபடுகிறார்கள். மார்பகப் புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்துவிடுகிறார்கள். அதனால் பாதிப்பு மிகக் குறைந்துவிட்டது.

"நம் நாட்டில் போதிய விழிப்புணர்வு இல்லை. படிக்காத பெண்கள் மட்டுமல்ல, படித்தப் பெண்களும் மார்பகத்தில் சின்னக் கட்டிகள் தென்பட்டால்கூட அதைப் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. நோய் முற்றிய நிலையிலேயே மருத்துவரிடம் வருகிறார்கள். அது ரொம்பத் தவறு. அவர்கள் த்தனைப் பேரும் ஆரம்பத்திலேயே சுய பரிசோதனை செய்திருந்தால் அறுவை சிகிச்சைக்கான தேவையே வந்திருக்காது என்பதுதான் உண்மை" என்று சொல்லும் டாக்டர் குகன், சுயபரிசோதனை செய்துகொள்ளும் முறைகள் குறித்து விளக்குகிறார்.

சுய பரிசோதனை

18 வயது முதல் 30 வயதுவரை உள்ள பெண்கள் தங்கள் மார்பகத்தை மாதத்துக்கு ஒரு முறையேனும் சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும். 1 செ.மீ அளவுக்கும் குறைந்த சின்னக் கட்டிகள் இருந்தாலும் உடனே மருத்துவரிடம் தெரியப்படுத்த வேண்டும். கட்டிகள் இருந்தாலே அவை கேன்சர் கட்டிகள் என்று பீதியடையத் தேவையில்லை. எல்லா கட்டிகளும் கேன்சர் கட்டிகள் இல்லை.

சிறிய அளவில் கண்டுபிடிக்கப்பட்ட 1 செ.மீக்கும் குறைவான கேன்சர் கட்டிகளுக்கு 'ஃபைப்ரோ அடினோமா' என்று பெயர். இதற்கு அறுவை சிகிச்சையோ, ரேடியேஷனோ, கீமோதெரபியோ எதுவும் தேவையில்லை. ஒரு சைக்கலாஜிக்கல் கவுன்சலிங் போதும். அதுவும் எடுபடாத பட்சத்தில் இந்தக் கட்டிகளை அகற்றி விடலாம். அப்படி அகற்றிய பின்பு கட்டியில்லாத மார்பக வளர்ச்சியும் பாதிக்கப்படாது.

30 வயதுக்கு மேல் 40 வயதுக்குட்பட்ட பெண்கள் அவ்வப்போது மருத்துவர்களிடம் சென்று கிளினிக்கல் பிரெஸ்ட் எக்ஸாமினேஷன் செய்துகொள்ளலாம். 40 வயதுக்கு மேல் உள்ள பெண்கள் வருடத்திற்கு ஒரு முறையாவது மாமோகிராம் செய்துகொள்ள வேண்டும். இதன் மூலம் மார்பகத்தில் கட்டிகள் இல்லாவிட்டாலும் கட்டிகள் வரக்கூடிய அறிகுறிகள், கால்சியம் அளவில் மாற்றங்கள் இருந்தால்கூட மாமோகிராம் பரிசோதனை காட்டிக் கொடுத்துவிடும். இந்தச் சோதனையில் ஆரம்ப நிலையில் கேன்சர் கட்டிகள் தென்பட்டால் சிகிச்சையில் சரிசெய்வது மிக எளிது.

அக்டோபர் மாதமும் பிங்க் ரிப்பனும்

பிங்க் நிறத்தை மென்மைக்கான, பெண்மைக்கான வண்ணமாக மேலைநாட்டவர்கள் கருதுகின்றனர். பெண்களைப் பெரிதும் பாதிப்புக்குள்ளாக்கும் மார்பகப் புற்றுநோய்க்கு தீர்வு காண ஓர் அமெரிக்கர், 1985-ல் கேன்சர் சொஸைட்டி என்ற அமைப்பை ஆரம்பித்தார். கேன்சருக்கு மருந்து தயாரித்து சப்ளை செய்யும் ஒரு கெமிக்கல் தொழிற்சாலையும் இவரும் இணைந்தே இதனைத் தொடங்கினார்கள். மார்பகப் புற்றுநோய்க்கான மருந்துகள் மற்றும் சிகிச்சை முறைகளை இந்த சொஸைட்டி விளக்கியதைவிட, மார்பகப் புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் முன்னிலை வகித்தது. அவர்கள் உலகம் முழுவதும் இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தை ஏற்படுத்த அக்டோபர் மாதத்தைத் தேர்ந்தெடுத்தார்கள்.

1991-ம் ஆண்டு நியூயார்க் நகரில் மார்பகப் புற்றுநோயிலிருந்து மீண்டவர்களை வைத்து ஒரு விழிப்புணர்வு பேரணி நடந்தது. அதில் பிங்க் ரிப்பன்கள் கொடுக்கப்பட்டன. அடுத்த ஆண்டு தேசிய மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்துக்கு பிங்க் ரிப்பன்களைப் பயன்படுத்திக்கொண்டார்கள். அதுவே இப்போது இதன் சின்னமாக மாறிவிட்டது.

இந்த அக்டோபர் மாதத்தை நாமும் மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாகக் கடைப்பிடிப்போம். மார்பகப் புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்து, நிவாரணம் பெறுவோம்.

அறிகுறிகள்

மார்பகத்தில் வலி தோன்றினாலே அது மார்பகப் புற்றுநோய்க்கான அறிகுறி என்பது தவறு. மார்பகப் புற்றுக்கட்டிகள் ஆரம்ப நிலையில் மட்டுமல்ல; முற்றிய நிலையிலும் வலி ஏற்படுத்துவதில்லை. அது நெஞ்சோடு ஒட்டிச் சுருங்கிப் போகும் நிலையில்தான் வலியை உண்டாக்குகிறது. இந்த அளவுவரை விடுவது ஆபத்தானது. தாய்ப்பால் கொடுத்தால் மார்பகப் புற்றுநோய்க்கு வாய்ப்பே இல்லை என்பதும் உண்மையல்ல. "ஒன்றரை வருடம்வரை என் குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுத்தேன். அப்புறம் ஏன் எனக்கு மார்பகப் புற்றுநோய் வந்தது?" என்று கேட்கும் பெண்களும் உண்டு. தாய்ப்பால் கொடுத்தால் 50 சதவீதம் மார்பகப் புற்றுநோய்க்கு வாய்ப்பில்லை. தாய்ப்பால் கொடுக்காவிட்டால் மார்பகப் புற்றுநோய் வருவதற்கான சாத்தியம் அதிகம் என்று வேண்டுமானால் சொல்லலாம்.

காரணங்கள்

சிறு வயதில் பூப்படைதல், மாதவிடாய் தள்ளிப்போவது, 30 வயதுக்கு மேல் திருமணம் நடப்பது, முதல் குழந்தை 30 வயதுக்கு மேல் பெற்றுக்கொள்வது, அம்மா, பாட்டி, சித்தி போன்ற ரத்த உறவுகள் யாராவது மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பது, கர்ப்பத்தடை மாத்திரைகள் உட்கொள்வது, உடலுழைப்பு இல்லாதது, உணவு முறை மாற்றங்கள், அதிக உடல் எடை, கொழுப்பு அதிகரித்தல், உடற்பயிற்சி இல்லாதிருத்தல், மரபணுக்கள் பிராகா 1, பிராகா 2 (braca 1, braca 2) குரோமோசோம்களில் மாற்றங்கள் ஏற்படுவது... இப்படிப் பல காரணங்கள் உண்டு.

மரபணுக்களில் ஏற்படும் மாற்றங்களை ஜெனிட்டிக் ஸ்கிரீன் டெஸ்ட் மூலம் கண்டுபிடித்து விடலாம். 18 வயது முதல் 80 வயதுவரை எப்பொழுது இந்த டெஸ்ட் எடுத்தாலும் எத்தனை ஆண்டுகள் கழித்து குறிப்பிட்ட ஒருவருக்கு இந்த மார்பகப் புற்றுநோய் வரலாம் என்பதையும் கண்டுபிடித்து, அதற்கேற்ப சிகிச்சையை ஆரம்பித்துவிட முடியும்.

ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி இந்த ஸ்கிரீன் டெஸ்ட் மூலம் தனக்கு மார்பகப் புற்றுநோய்க்கான வாய்ப்பு இருப்பதைக் கண்டுபிடித்து, முன்கூட்டியே இரண்டு மார்பகங்களையும் எடுத்துவிட்டு, செயற்கை மார்பகங்கள் பொருத்திக்கொண்டார். 80 வயதில் வரப்போகும் நோய்க்கு 20 வயதில் அறுவைசிகிச்சை செய்துகொள்வது எப்படிச் சரியாகும்? எனவே இதனை நான் அங்கீகரிப்பதில்லை" என்கிறார் டாக்டர் குகன்.

குழந்தைகள் வீட்டில் கற்கும் பாடம்

குடும்ப வன்முறை குறித்த சக்திவாய்ந்த நான்கு நிமிடக் குறும்படம் ஒன்றை It's time to act on Our Watch என்ற பெயரில் செப்டம்பர் 4-ம் தேதி வெளியிட்டுள்ளது. பார்ப்பதற்கு பால்மனம் மாறாதவர்களாகத் தோன்றும் ஏழெட்டு வயதுக் குழந்தைகளிடம், “நீங்கள் பெரியவர்களான பிறகு என்ன செய்வீர்கள்?” என்று கேட்கப்பட்ட கேள்விக்கு அவர்கள் அதிர்ச்சிகரமான பதிலைச் சொல்லியிருக்கிறார்கள். “என் மனைவி என்னைப் புண்படுத்தினால் அவளை அடிப்பேன்” என்று ஒரு சிறுவன் சொல்கிறான். இன்னொரு சிறுவனோ, “என் மனைவியை வேறு ஆடவர்களுடன் பழகாதே” என்பேன் என்கிறான். ஒரு சிறுமி, “பெரியவள் ஆனபிறகு என் கணவன் அடிப்பான். நான் ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆவேன்” என்கிறாள். குடும்ப வன்முறைக்கான சூழ்நிலையை, அது நியாயம்தான் என்ற கருத்தை குழந்தைகள் தங்கள் வீட்டுச் சூழலிலேயே உருவாக்கிக் கொள்கிறார்கள் என்பதை எச்சரிக்கும் வீடியோவாக இது இருக்கிறது. இந்த வீடியோவில் ஆஸ்திரேலிய பிரபலங்களும் கருத்து சொல்லியுள்ளார்கள். குழந்தைகளின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் இடமாக வீடு இருக்கும்போது அவர்களுக்கு நல்ல சிந்தனையை வளர்க்க வேண்டிய கடமையும் பொறுப்பும் பெற்றோருக்கு இருக்கிறது. அதைச் சரியாகச் செயல்படுத்தும்போதுதான் வரும் தலைமுறையினர் சரியான பாதையில் பயணிப்பார்கள்.

வங்கித் தேர்வுகளில் ரீசனிங் பகுதியில் கேட்கப்படும் கேள்விகள்


undefined


வங்கித் தேர்வுகளுக்கான தேர்வுகளில் ரீசனிங் பகுதியில் கேட்கப்படும் கேள்விகள்

போட்டியாளரின் பகுத்தாராயும் திறன், தர்க்கத் திறன் (Logical skill), ஏதாவது ஒரு வரையறையின் அடிப்படையில் கொடுக்கப்பட்டிருக்கும் படங்கள், குறியீடுகள், எண்களில் இருந்து தரவுகளையும், தகவல்களையும் புரிந்துகொள்ளும் திறன் (Ability to interpret) போன்ற திறமைகளை ஆராயும் வகையில் இந்தப் பகுதியில் வினாக்கள் கேட்கப்படுகின்றன.

ஒழுங்குபடுத்துதல் (Arrangement), தொடர் முடிவை கண்டுபிடித்தல் (Sequential Output Tracing), முடிவுக்கு வருதல் (syllogisms), தகவல் ஆய்வு (Data), சிக்கலான ஆராய்வு (Critical Reasoning), மாறுபட்டதை கண்டறிதல் (Odd-man out), காட்சி ஆராய்வு (Visual Reasoning) என ரீசனிங் பகுதியில் பல்வேறு பிரிவுகளில் இருந்து வினாக்கள் இடம்பெறும்.

கேள்விகளின் தன்மை

ஒழுங்குபடுத்துதல் பிரிவில் 12 முதல் 15 கேள்விகள் வரை கேட்கப்படுகின்றன. விடையளிக்க சற்று அதிக நேரம் எடுக்கும் பகுதி இது. இருப்பினும், கொடுக்கப்பட்டிருக்கும் படங்கள், அட்டவணைகள், தரவுகளை புரிந்துகொண்டால் விரைவாக விடையளித்து முழு மதிப்பெண்ணும் பெற்றுவிட முடியும். இப்பகுதியின் கேள்விகளுக்கு விடையளிக்க, விஷயங்களைப் புரிந்துகொள்ளும் திறன் இருந்தாலே போதும்.

தொடர்பு முடிவு கண்டுபிடிக்கும் பகுதியில் 4 முதல் 6 கேள்விகள் வரை கேட்கிறார்கள். எண்கள் அல்லது எழுத்துக்களைக் கொண்டு கேள்விகளை உருவாக்கியிருப்பார்கள்.

அனைத்து கேள்விகளுக்கும் விடையளிக்கக்கூடியதாகவும் இந்தப்பகுதி அமையும். சில நேரம் ஒரு கேள்விக்குக் கூட விடையளிக்க முடியாததாகவும் இப்பகுதியில் வினாக்கள் அமைந்துவிடுவது உண்டு.

கேள்விகளின் தன்மை பிடிபட்டுவிட்டால் பிறகு விடையளிப்பது எளிது. இதற்கு ஒருமுகப்படுத்தும்திறன் மிகவும் முக்கியமானது. ஒருசிறு தவறுகூட ஒட்டுமொத்தமாக அனைத்து கேள்விகளுக்கும் சரியாக விடையளிக்க முடியாமல் செய்துவிடும்.

விதிமுறை

முடிவுக்கு வருதல் பகுதியில் (syllogisms) 6 முதல் 8 கேள்விகள் இடம்பெறுகின்றன. கொடுக்கப்பட்டுள்ள வாக்கியங்களில் ஒன்றுக்கொன்று இருக்கும் தொடர்புகளை அடிப்படையாகக் கொண்டு கேள்விகள் கேட்கப்படுகின்றன. வாக்கியங்களைப் புரிந்துகொள்வதுடன் கேள்விகளின் தன்மையை நன்கு புரிந்துகொண்டு அதற்கேற்ப விடையளிக்க வேண்டியது அவசியம்.
ஏதாவது ஒரு விதிமுறை அடிப்படையில் பதில் அளிக்கக்கூடிய வகையில் வினாக்கள் அமைந்திருக்கும். அந்த விதிமுறை தெரியாமல் இப்பகுதி கேள்விகளுக்கு விடையளிக்க முடியாது.
தரவு (Data Sufficiency) பகுதியில் 4 முதல் 6 வினாக்கள் வரை கேள்விகள் இடம்பெறும். மேற்கண்ட பகுதியைப் போன்றே இதிலும் வாக்கியங்கள் கொடுக்கப்பட்டு கேள்விகள் கேட்கப்படும்.
ஆனால், கேள்விகள் கணிதம் சார்ந்து இல்லாமல் தர்க்கம் (Logic) தொடர்பானவையாக அமைந்திருக்கும். கேள்வியில் கொடுக்கப்பட்டிருக்கும் விளக்கங்களை நன்கு புரிந்துகொண்டுவிட்டாலே பாதி விடையளித்தது போல்தான்.

கேள்வியின் அடிப்படை

விஷூவல் ரீசனிங் பிரிவில் 5 முதல் 10 வினாக்கள் வரை கேட்கிறார்கள். ஐந்தாறு படங்களைக் கொடுத்து அந்த தொடரின் தொடர்ச்சி எது, அல்லது அந்த தொடர்ச்சிக்குப் பொருந்தாதது எது என்ற வகையிலான கேள்விகள் இடம்பெறுகின்றன. கூர்ந்து உற்றுநோக்கும் திறன் இருந்தால் எளிதாக விடையளித்துவிடலாம்.

எண்களின் கூட்டல், கழித்தல் கொண்ட படங்கள், கடிகார முள் திசை பக்கம் நோக்கி அல்லது எதிர்திசை நோக்கிய நகர்தல், ஏதாவது கூடுதல் அடையாளம் இருத்தல் அல்லது ஏதாவது ஒன்று விடுபடுதல் என்பன போன்று படங்கள் கொடுக்கப்பட்டிருக்கும். படங்களின் அடிப்படை தன்மை பிடிபட்டுவிட்டால் விரைவாக விடையளித்துவிடலாம். அடிப்படைத்தன்மை புரியாவிட்டால் உடனடியாக அடுத்த கேள்விக்கு சென்றுவிடுவதுதான் புத்திசாலித்தனம்.

ஆய்வுத்திறன்

ரீசனிங் பகுதியில் கடினமான பிரிவாக கருதப்படுவது 'கிரிட்டிக்கல் ரீசனிங்' பிரிவுதான். பகுத்தாராயும் திறமை அதிகளவில் சோதிக்கப்படும் இப்பகுதியில் 6 முதல் 8 வினாக்கள் இடம்பெறுகின்றன. கேள்வியில் என்ன கேட்டிருக்கிறார்கள் என்பதை புரிந்துகொண்டு தர்க்கம் மற்றும் ஆங்கில அறிவைப் பயன்படுத்தி விடையளிக்க வேண்டியதிருக்கும்.

அனுமானங்கள், காரணங்கள்-விளைவுகள், செயல்பாட்டு போக்கு, வாதங்களை உறுதிபடுத்தும் மற்றும் பலவீனப்படுத்தும் தன்மை, கண்டிப்பாக சரியா? அல்லது தவறா?, சரியாக இருக்கலாமா? அல்லது தவறாக இருக்கலாமா? என குழப்பும் வகையில் வினாக்கள் கேட்கப்பட்டிருக்கும்.
வெறுமனே தகவல்களை தெரிந்து வைத்திருப்பதுடன் ஆராய்ந்து பார்க்கும் திறனையும் வளர்த்துக்கொண்டால் ரீசனிங் பகுதியில் அதிக மதிப்பெண்கள் எடுப்பதில் சிரமம் இருக்காது. வினாக்களுக்கு விடையளித்துப் பயிற்சி பெறும்போது, அவற்றின் அடிப்படை விஷயங்களைப் புரிந்துகொள்ள வேண்டியது அவசியம். அது தேர்வின்போது கைகொடுக்கும்.

Top Interview Questions by Companies, Skills, Roles

How To Start Teaching Your Kids To Meditate

Meditation could be considered your brain's scheduled maintenance. It's not just for adults, either. Childhood is a good time to start learning how to meditate, a practice that might help kids deal with troubles throughout life. While we've previously shown how to get started meditating, with younger kids it's probably best to start small and simple. (It's hard enough for adults to sit still for five minutes.) The video above by author Gabrielle Bernstein explains two basic things you can teach kids: a simple mantra ("Peace begins with me") with mudra (hand gestures) and deep breathing. Simple, yet possibly life changing.

Warning signs of a troubled marriage

Although we all love to be happily married, couples often find themselves caught off guard when a marriage breaks. The reasons may range from silly to serious. It happens in the most unexpected way. Only when you face the situation do you actually begin to think back and realize if you missed the warning signs.

Here are a few situations that suggest trouble in your marriage

1. Digging up the past, name calling, verbally abusing and belittling in-laws have almost become common for you two.

2. Both look for silly excuses to fight. You try avoiding each other and don't look forward to coming back home anymore. Even a trivial complaint turns into a bitter fight. You feel there's no workable solution in sight.

3. Nothing is a joint decision anymore. There's no logic behind your explanation. It's simply a matter of ego to prove what you feel is right.

4. Jealousy creeps in. There's no healthy competition anymore. It's not at all fun to ask for guidance as you are belittled for your complete lack of knowledge or ignorance. You can't take your spouse into confidence.

5. Your spouse can't think beyond himself/herself. You feel like an outsider being neglected and unwanted. You don't feel part of the family at all. It is no more our family but 'my family'. This means danger!

6. One of you cheats. Extra-marital affair is a strict no-no and ruins family life. It's an unpardonable mistake and means the end of a marriage.

7. Neither of you are inclined towards sex. It kind of becomes mechanical with absolutely no passion. Sex is something that keeps the marriage going.

8. You don't seem to sort out issues then and there. Either of you is an escapist and avoids confrontation. You have bottled it all up and can't wait for it to burst so you can put an end to your relationship.

9. No communication of any sorts. Forget the mushy notes and flower bouquet, your partner doesn't bother asking 'how are you' in a mail or text message. When there's total silence between the two of you and you run out of topics to talk, then your relationship has reached a dead end.

Sunday, September 28, 2014

திறமை + அதிர்ஷ்டம் = வெற்றி !

மைக்கேல் ஜே. மவ்பௌஸின் எழுதிய 'தி சக்சஸ் ஈக்யுவேஷன்'. நாம் செய்யும் வியாபாரம், முதலீடு, விளையாட்டு போன்ற விஷயங் களில் நம்முடைய திறமையையும் அதிர்ஷ்டத்தையும் வெளிக்கொண்டு வருவது எப்படி என்பதைச் சொல்லும் புத்தகம் இது.
'திறமையும் அதிர்ஷ்டமும் நம்முடைய கையிலேயே இருக்கிறது. ஆனால், ஓர் இடியாப்ப சிக்கலுக்குள்ளே  இருக்கிறது. அந்தச் சிக்கல்களைப் பிரித்தெடுத்தால், நம்முடைய திறமையும் அதிர்ஷ்டமும் நமக்கு முழுமையாக உதவும்' என்பதைச் சொல்லும் புத்தகம் இது.
''இன்றைக்கு இந்தப் புத்தகத்தை நான் எழுதி நீங்கள் படிக்கிறீர்கள் என்றால் அதற்குக் காரணம் ஒரு குப்பைத் தொட்டிதான்'' என எடுத்த எடுப்பிலேயே அசத்துகிறார் புத்தகத்தின் ஆசிரியர் மைக்கேல். அவர் படித்து முடித்தவுடன் ஒரு பெரிய இன்வெஸ்ட்மென்ட் பேங்கிங் நிறுவனத்தில் வேலைக்குப் போவதற்கு விண்ணப்பித்து இருக்கிறார். முதல் சுற்று நேர்காணல் முடிந்து ஒரு இருபது பேரை தேர்வு செய்தனராம். அதன்பின்னர் இன்னமும் இரண்டு சுற்று இருக்கிறது. அதில் முதலில் ஆறு பேர் கொண்ட குழு ஒன்று உங்களை நேர்காணல் செய்யும். அதன்பின் நீங்கள் வேலை செய்யப்போகும் டிவிஷனின் சீனியர் ஒருவர் உங்களை சரியாகப் பத்து நிமிடம் மட்டும் நேர்காணல் செய்வார். அவர் செய்யும் நேர்காணல் தான் கடைசி நேர்காணல். அதில் தேர்ச்சி பெற்றால்தான் வேலை. இல்லாவிட்டால் இல்லை என்று சொன்னார்களாம் அந்த நிறுவனத்தினர்.
undefined
ஆறுபேர் நேர்காணலை முடித்துவிட்டு,  அடுத்த நேர்காணலுக்கு மிகப் பெரிய அறையில் மிகப் பெரிய மேஜையின் பின்னால் அமர்ந்திருந்த நபரின் முன்னால் போய் நின்றாராம் ஆசிரியர். மேஜையின் கீழே இருந்த இடைவெளியில் ஒரு குப்பைத்தொட்டி இருந்ததாம். அதில் வாஷிங்டன் ரெட்ஸ்கின்ஸ் என்ற புரொஃபஷனல் ஃபுட்பால் டீமின் லோகோ போட்டிருந்ததாம்.
''அட, நீங்கள் ஃபுட்பால் பிரியரா? இந்த டீமின் லோகோ போட்ட குப்பைத் தொட்டியை வாங்கி வைத்திருக்கிறீர் களே! வாழ்க உங்கள் ஃபுட்பால் ஆதரவு'' என்றாராம் ஆசிரியர். இப்படி ஆரம்பித்த பேச்சுவார்த்தை கறாராக சொன்ன பத்து நிமிடங்களைத் தாண்டி பதினைந்து நிமிடம் வரை சென்றதாம். ஒட்டுமொத்த டிஸ்கஷனுமே ஒன்றும் அறிவுப்பூர்வமானதாக இல்லை. ஆனால், இருவருக்கும் பொதுவாய் பிடித்த விஷயங்கள் ஒன்றாக இருக்கவே, வேலையும் கிடைத்ததாம்.
''ஒரு குப்பைத்தொட்டி என் கேரியரை அமைக்க எப்படி அதிர்ஷ்டவசமாக உதவியது பார்த்தீர் களா? நம்முடைய வெற்றிகள் எல்லாமே நம்முடைய திறமை மற்றும் அதிர்ஷ்டத்தின் கூட்டணியாலேயே அமைகிறது'' என்று சொல்கிறார் ஆசிரியர்.
மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு எழுதப்பட்டுள்ள இந்தப் புத்தகத்தில், முதல் பகுதியில் திறமை மற்றும் அதிர்ஷ்டம் என்றால் என்ன என்பதற் கான வரையறைகளைத் தந்துள்ளார் ஆசிரியர்.
இரண்டாவது பகுதியில் அதிர்ஷ்டத்தையும் திறமையையும் கணக்கிட உதவும் சில கருவிகளையும்,  மூன்றாவது பகுதியில் அதிர்ஷ்டம் குறைவாக இருக்கும் தருணங்களில் திறமையை வளர்த்து / வைத்து வெற்றி பெறுவது எப்படி என்பது பற்றியும், அதிர்ஷ்டம் அதிகமாக இருக்கும் நேரங்களில் திறமையை எப்படி சரியான விகிதாசாரத்தில் உபயோகிக்க வேண்டும் என்பது பற்றியும் சொல்லியுள்ளார் ஆசிரியர்.
அதிர்ஷ்டம் என்பது என்ன? ''ஒரு சூழலில் நமக்கு சாதகமாகவோ அல்லது பாதகமாகவோ நடக்கும் சில நிகழ்வுகள் நமக்கு சாதகமாக நடந்தால் அதிர்ஷ்டம். பாதகமாக நடந்தால் துரதிர்ஷ்டம்'' என்று சொல்லும் ஆசிரியர், இதற்கு தரும் விளக்கம் சுவாரஸ்யமானது. ''மாணவர்களை நூறு கேள்விகளையும் அதன் விடைகளையும் படித்துக்கொண்டு வரச்சொன்ன ஆசிரியர், அதிலிருந்து இருபது கேள்விகளைத் தேர்ந்தெடுத்து தேர்வில் கேட்கிறார். அதில் 80 கேள்வி களை மட்டுமே படித்துவந்த ஒரு மாணவனுக்கு அவன் படித்த 80-ல் இருந்தே அந்த இருபது கேள்விகளும் கேட்கப்பட்டு, அவை அத்தனைக்கும் பதில் எழுதி நூற்றுக்கு நூறு வாங்கினால் அதுதான் முழு அதிர்ஷ்டம்'' என்கிறார்.
''கடுமையாக முயற்சித்து திறமையை வளர்க்கும்போது அதிர்ஷ்டமும் அதிகரிக்கிறது. அதிர்ஷ்டத்தைப் பெற அது செல்லும் வழியில் நாம் இருக்க வேண்டும். உங்களுக்கு லாட்டரியில் பரிசு விழவேண்டுமென்றால் நீங்கள் முதலில் லாட்டரி சீட்டு வாங்க வேண்டுமில்லையா?'' என்று கேட்கிறார். 
''ஐந்து இன்டர்வியூகளுக்குச் சென்றுவிட்டு வேலை கிடைக்காமல் இனி நமக்கு வேலை கிடைக்காது என்று முடிவு செய்து உதவாக்கரையாய் திரிகிறார் ஒருவர். ஐந்தில் வேலை கிடைக்காத போதும், தொடர்ந்து இன்டர்வியூக்களுக்கு சென்று பத்தாவது இன்டர்வியூவில் வேலையைப் பெறுகிறார் இன்னொருவர். துரத்திப்பிடித்து வேலையை வாங்கியது அதிர்ஷ்டம் அல்ல. விடாமுயற்சி, பொறுமை, மனத்திடம் என்ற மூன்றையும் கொண்டவர் இவர் என்றே சொல்ல வேண்டும் இல்லையா? இவை மூன்றும் திறமையை வளர்க்க தேவைப்படும் விஷயமல்லவா'' என்று கேட்கிறார் அவர்.

அடுத்தபடியாக திறமையைப் பற்றி விவரிக்கிறார் இந்த புத்தகத்தின் ஆசிரியர். ''திறமை என்பது அறிவை செயலாக்குவது. திறமையை வளர்ப்பது கடின உழைப்பால் மட்டுமே முடியும். திறமையை வளர்ப்பதில் அதிர்ஷ்டம் என்பது இருக்கலாம் அல்லது இல்லாது போகலாம். திறமையின் அளவு அதிகரிக்க அதிகரிக்க, வெற்றிக்கான வாய்ப்பும் அதிகரிக்கவே செய்யும்'' என்று சொல்லும் ஆசிரியர் இதற்கோர் உதாரணத்தைச் சொல்கிறார்.
''நீங்கள் டைப் செய்கிறீர்கள். தொடர்ந்து கடினமாக முயற்சி செய்து டைப்பிங் ஸ்பீடை அதிகரிக்கிறீர்கள். அதிகமான ஸ்பீடும் தப்புகள் குறைவதும் பயிற்சியால் வருவதேயன்றி அதிர்ஷ்டத்தால் வருவதல்ல. அதேசமயம் அதிர்ஷ்டத்தை சார்ந்த ஒரு விஷயத்தில் என்னதான் திறமையை வளர்த்தெடுத்து வைத்திருந்தாலும் வெற்றிக்கு எந்தவிதமான கேரன்டியும் கிடையாது'' என்கிறார் ஆசிரியர்.
இதையெல்லாம் கருத்தில்கொண்டு, ''ஒரு கோட்டின் ஒரு எல்லையில் அதிர்ஷ்டமும், மறுஎல்லையில் திறமையும் உள்ளது; இரண்டும் சேர்ந்து பல்வேறு விகிதாசாரங்களில் செயல்பட்டு வெற்றியைத் தேடித் தருகிறது'' என்கிறார் ஆசிரியர். (பார்க்க மேலே உள்ள படம்)
இறுதியாக ஆசிரியர், ''அதிர்ஷ்டத்தையும் திறமையையும் இணைக்கும் இணைப்புக்கோட்டில் நீங்கள் எந்த இடத்தில் இருக்கிறீர்கள் என்பதைப் புரிந்துகொள்ள முயலுங்கள். பிறர் சொல்லும் பின்னூட்டங்களை (ஃபீட்பேக்) கேட்டு ஆராய்ந்து செயல்படுங்கள். திறமையை வளர்ப்பதற் கான திட்டங்களை எப்போதுமே கைவசம் வைத்திருங்கள். உங்களுடைய எல்லைகளை தெளிவாகப் புரிந்து கொண்டு செயல்படுங்கள்'' என பல்வேறு கருத்துக்களை  உதாரணங் களுடன் விளக்கியுள்ளார் ஆசிரியர்.
அதிர்ஷ்டம் வேண்டும் என்பவர் களும், திறமையை வளர்க்கவேண்டும் என்று நினைப்பவர்களும் கட்டாயம் படிக்க வேண்டிய புத்தகம் இது.



.

Saturday, September 27, 2014

Be true to yourself and follow these seven essential rules

 "We're happy, free, confused and lonely at the same time," Taylor Swift reminds us in her single, "22." That pretty much sums up a day in the life of a 20-something. But no matter where life takes you during this tumultuous decade, be true to yourself and always follow these seven essential rules.

1. Be Forever Young
Being Forever Young means achieving timelessness, the feeling that pushes you to make the most out of everyday life. Approach every day and situation with originality. Life is not about having expectations, which can lead to disappointment, but rather believing in the good and rolling with the punches.Appreciate what it means to be young, and hold onto that feeling.

2. Don't Waste Energy
Jealousy and insecurity are useless emotions. Turn them into something more productive, and let it propel you forward. Never let the fear of not being good enough, pretty enough or talented enough keep you from achieving your goals.


3. Brush it Off
Let go of anger. Don't blame someone else for your mistakes. Own up to your faults, and take responsibility for your own actions. Life is a learning process. We all make mistakes, and no one is perfect.

4. Decipher: Friend or Foe
We've been told to keep our friends close but our enemies closer. While every relationship means something, let go of the enemies. Life is too short to hold grudges.

5. Follow Your Heart
Some say we only find that one true love once in a lifetime, or that soul mates are hard to come by. If we never open our hearts to new possibilities and relationships, we never learn from our mistakes. Love as much as you can; don't be scared of it, and don't let a bad experience close you off for good.


6. Be Kind
Stop bragging and criticizing – no, really. Despite what it looks like on someone's Facebook or Twitter, no one has it figured out. We all have our own hopes, dreams and goals. There is no need to be vain or harsh on others because at the end of the day, we are all beautiful in our own way.


7. Have No Regrets
Never regret any moment, experience or relationship because at some point, it is exactly what you wanted. When you try something new and it doesn't work out, don't fret. Knowing what you don't want can often be more valuable than knowing what you do want.
undefined
Every day is the start to a new chapter. Hold on to your 20s while they're here. And live. It. Up!

வெற்றிக்கு கைகொடுக்கும் ATM

ஊர், உலகத்தில் உள்ளவர் களை ஊக்கப்படுத்தும் தொழில் அதிபர்களை / உயர் அதிகாரிகளை யார் ஊக்கப்படுத்துவது? வேறு யாரும் அல்ல. அவர்களே தங்களைத் தாங்களே ஊக்கப்படுத்திக் கொள்கிறார்கள். தங்களின் இலக்கை அடைய அவர்கள் செய்யும் ஒவ்வொரு செயலையும் அவர்கள் மனதார யோசிக்கும்போது சுய ஊக்கம் ஊற்றெடுத்து சவால்களை மீறி சாதிக்கும் சக்திக்கு உரமிடுகிறது.

வெற்றியாளர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்குள் ஒரு ஏடிஎம்மை வைத்துள்ளார்கள். 'எல்லா நேரமும் சுய ஊக்கம்' (Any Time Motivation) என்ற கருவிதான் அது. முதலீடு, சேமிப்பு, வியாபாரம், போட்டிகள், லாப நஷ்டம் போன்ற பல்வேறு விஷயங்களில் சந்திக்க வேண்டிய இடையூறுகளையும், தடங்கல்களையும் இந்த ஏடிஎம் துணை யோடு தவிடுபொடி ஆக்கிவிடுகின்றனர்.

நம்முள் நிறுவப்படும் ஏடிஎம் திறந்த மனதை (Open Mind) அடித்தளமாகக் கொண்டிருக்கும். காலங்கள் மாறும், காட்சிகள் மாறும் என்று நாம் மனதார நம்பும்போது பொருளாதாரத் தோல்விகள் நம்மைத் துவண்டுவிடச் செய்ய முடியாது. ஒரு வெற்றிக்கனியை பறிக்கும்போது, அடுத்த வெற்றியை நோக்கி நம் முழுக் கவனத்தைச் செலுத்து வதற்கும், ஒரு தோல்வி அனுபவத்தைப் பெறும்போது நமது அடுத்த முயற்சி நிச்சயம் வெற்றியைப் பெற்று தரும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை உருவாவதற்கும் நமக்குள் ஒரு ஏடிஎம் அவசியம் தேவை.

இருபதாம் நூற்றாண்டின் சக்தி வாய்ந்த மனிதர்களில் ஒருவராகப் போற்றப்படும் மைக்ரோ சாஃப்ட் நிறுவனத்தின் பில்கேட்ஸ், பெற்றோர் களால் கைவிடப்பட்டு பிறரால் தத்து எடுக்கப்பட்டு வாழ்க்கை பயணத்தைத் தொடங்கி தொடர் வெற்றிகளைப் பெற்ற ஆப்பிள் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் தலைவர் ஸ்டீவ் ஜாப்ஸ், 16 வயதில் ஆபீஸ் பையனாக வாழ்க்கையைத் தொடங்கி இந்திய தொழிலதிபர்களில் குறிப்பிட்டதக்கவர் களில் ஒருவராக விளங்கிய திருபாய் அம்பானி, தாவர எண்ணெய் வியாபாரத்தை சிறிய அளவில் நடத்திவந்த தன் தந்தைக்குப்பின் தான்  பொறுப்பேற்றுக் கொண்டு விப்ரோ நிறுவனங்களின் தலைவராக உருவெடுத்த அஜிம் பிரேம்ஜீ போன்ற சாதனையாளர்கள் அனைவரும் பிறர் கண்களுக்குப் புலப்படாத ஏடிஎம் ஒன்றை தங்களுக்குள் கொண்டிருந்தார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை.

நமக்குள் இருக்கும் சுய ஊக்கம்தான் 'முயற்சியைக் கைவிட்டுவிடாதே' என்று நமக்குத் திரும்பத் திரும்ப நினைவூட்டி கொண்டிருக்கும். வாழ்வில் வெற்றிகள் நிரந்தமானவை அல்ல (Success is not End), தோல்விகள் இறுதியானவை அல்ல (Failure is not Final). எல்லாம் மாறக்கூடியது.

ஒரு கோணத்தில் பார்த்தால், தோல்விகள் என்பது தள்ளிபோடப்பட்ட வெற்றிகளே! (Failures Are Postponed Success).  தோல்வியால் ஏற்படும் மனச்சோர்வை நம்முள் இருக்கும் ஏடிஎம் மூலம் சுய ஊக்கத்தை எப்போது வேண்டுமானாலும் தாராளமாக எடுத்துக் கொள்ளலாம். அப்போது மனம் லேசாகும்.

பள்ளியில் படிக்கும்போது தலைசிறந்த மாணவனாகவும், வாழ்க்கையில் தலைசிறந்த சாதனை யாளன் ஆகவும் நாம் இருக்க வேண்டும் என நம்மைச் சுற்றியுள்ளவர்களால் எதிர்பார்க்கப்படுகிறோம். ஆனால், வேலையில், தொழிலில் மற்றும் ஒட்டுமொத்த வாழ்க்கையில் ஏற்றத்தாழ்வுகள் தவிர்க்க முடியாதவை.

நாம் நமக்காக விரும்பி நிர்ணயம் செய்த இலக்கை அடைவதற்கு கவனம் சிதறாமல் பார்த்துக்கொள்ள சுய ஊக்கம் கைகொடுக்கும்.


மனித வாழ்க்கை என்பது கம்ப்யூட்டர் விளையாட்டு அல்ல. வாழ்வில் நாம் எடுக்கும் பல்வேறு முயற்சிகளின் முடிவுகள் நமக்கு முன்கூட்டியே தெரிய வாய்ப்பில்லை. ஆனால், விளைவுகள் எதுவாக இருந்தாலும் தயங்காமல், தளராமல் விடாமுயற்சியோடு இலக்கை எட்டுவதற்கு சுய ஊக்கம் ஒன்றே அருமருந்து.

எந்தவிதமான தடைகளும் தடங்கல் களும் நம் முயற்சிகளுக்கிடையே சந்திக்க நேரும்போது நாம் அவைகளுக்குப் பலிகடாக ஆகக் கூடாது. மாறாக, நான் எந்தச் சூழ்நிலையையும்விட பெரியவன் என்று திடமாக நம்ப வேண்டும்.

பிரச்னைகள் இல்லாத தொழில் இல்லை. அதுபோல் தீர்வுகள் இல்லாத பிரச்னைகள் இல்லை. கனவுகளுக்கும் பிரச்னைகளுக்கும் இடையேதான் வாழ்க்கை. இந்தப் பயணத்தை இனிதாக்க நமக்குத் தேவை ஒரு ஏடிஎம்!

(20 - 20) Hard lessons everyone should learn in their 20s

Transitioning from a lifestyle without significant responsibilities into the "real world" makes your 20s a decade of tough lessons. 

Wherever you're at in your 20s — whether you're on your own or still with your parents, figuring out your career or going through grad school — you can learn from those who have already been through it. 

We took at look at the Quora thread "What are the most difficult things people have to learn in their 20s" and highlighted the best answers. 

Here are 20 hard lessons that everyone should learn in their 20s: 

1. Your world view may be seriously flawed. 

It's natural to feel like you've got a solid life philosophy figured out by the time you graduate college, but you'll likely redefine how you see relationships, politics, your career, and anything else you can think of. As Rachel Laine puts it, "[Y]ou discover everything that you thought you had all figured out was tragically wrong, laughably confused, or utterly delusional." 

2. It's harder to get away with lies and excuses. 

Maybe you made a habit of getting away with things by making up stories for your parents or professors. But lies and deceit won't fly in your professional or personal life anymore. 

"The truth has a way of rearing its ugly head, so the sooner you can come to integrity with yourself and the world at large, the sooner you'll be able to get working towards what you really want, who you really want to be," says Arjuna Perkins. 

3. You can't party like you used to. 

Back in college you may have been able to spend a night binge drinking until two in the morning and make it to class by 11am. That sort of lifestyle is incompatible with most careers. And you'll come to find that as you progress through your 20s, your body has a harder time dealing with excess, Perkins says. 

Enjoy your vices in moderation, exercise, and eat well. Your future self will thank you. 

4. People will resent you if you try to always be right. 

"Let go of having to be right about things — this isn't a contest," Perkins says. "It's not a game. You don't win at life. So say, 'Thanks for your perspective. I'll think about that,' or, 'I was wrong. I'm sorry.'" 

5. Life is hard, and it never gets much easier. 

As your responsibilities begin to pile up in your 20s, you'll realize that just getting by — let alone becoming very successful — requires a lot of work. And there will always be failures and setbacks. 

"You will fail in life, over and over and over. It won't feel fair. Maybe for decades. You've got to keep moving forward. Keep going," Perkins says. 

6. Meaningful relationships are difficult to maintain. 

If and when you decide to consider marriage or at least a serious romantic relationship, you're going to realize that it requires plenty of sacrifices and work. You'll realize the same goes for your closest friends, who will also be changing as you grow older. But these relationships are more important to your happiness and fulfillment than anything else in your life, says Rich Tatum. 

7. You're replaceable at work. 

Many companies like to portray themselves as families, but at the end of the day that's just semantics. If your company can no longer afford you or thinks it can invest more wisely in someone else, you'll be cut from that family pretty easily. 

"The company does not love you. It has no heart," Tatum says. 

8. You don't have forever to find and pursue your passion. 

The money you make from your job will mean nothing if you're not actually enjoying life, Tatum says. 

If you pursue a career solely for a big check and set aside the things you love to pursue later, you'll find it becomes significantly harder to change careers or dedicate yourself to a passion project the older you get. 

9. You're not entitled to anything. 

It's necessary to be humble, Tatum says, especially about advantages you may have received through sheer luck. And never think that just because you put in work for things like degrees from elite universities that they guarantee you privileges in life. 

Be grateful for what you have, and realize that in a single moment you can lose the things you take for granted. 

10. Picking fights and holding grudges will make you miserable. 

"Avoid fights. Seriously. Avoid them like a plague: Nobody wins in a fight, even if you walk away unscathed," Tatum writes. 

Accept apologies and apologize when you make a mistake. Don't fill your life with negativity. 

11. You must keep learning if you want to be successful. 

Your education is far from over after you leave a classroom for the last time. Dedicate yourself to learning things that will help you in your career, including "the abilities to assimilate, communicate, and persuade," Tatum says. 

12. Decisions that take a few seconds to make can have long-term ramifications. 

Never make a decision on an emotional impulse. "[S]tupid decisions made in the moment can rob you of years of joy and happiness," Tatum writes. 

13. Money is hard to earn. 

When your family is supporting you, it can be difficult to grasp how much a dollar is worth, even if you are not spoiled or selfish, says Rahul Bhatt. 

As you start living on your own, however, you'll soon realize that frivolous things you would normally not give a second thought about purchasing are not worth the hours of work equivalent to the price tag. 

14. Your friend circle will likely get smaller. 

As you go through your 20s, you'll naturally start to drift away from some of your friends. Gone are the days of partying with a room full of your buddies, Bhatt says. You will realize, though, that the friends you put the effort into staying in touch with are the ones who mean the most to you. 

15. You'll probably have a bigger role to play in your family. 

"Family is very important. Till now they supported you, now it's your turn," Bhatt writes. 

Your parents may always try to nurture you as if you were a child, but they will need your emotional - and perhaps even financial - help as they get older and you become your own person. 

16. Hard work isn't always recognized. 

You should accept that your boss may not always notice your contributions, Bhatt says. 

Do not let that be an excuse to become lazy, and don't protest if someone else gets credit for your work. 

Be careful. 

17. Debt will haunt you. 

A full 70% of college students graduated with debt last year, averaging $30,000 in loans. But the fact that most young professionals are living with debt doesn't make it something you should live with for a long time. Prioritize your spending to get rid of it as quickly as you are able to. 

And at some point in your 20s you're probably going to get a credit card - use it wisely. "Realize that you will end up paying double, maybe more, for that round of drinks at the bar because you put it on credit instead of saving the cash," says Thea Pilarczyk. 

18. There is always someone "better" than you. 

"There are always going to be people who are smarter, better looking, more sociable, and just all around 'better' than you... To be happy, then, you have to learn to accept yourself and your shortcomings," says Brandon Chu. 

Pursue success on your own terms, not by living someone else's life or forever living in the shadow of someone else. 

19. You'll never have it "all sorted out."

"Remember when you thought you'd have it all sorted out by 30?" Chu asks. You'll realize how silly that is as your 30th birthday draws closer. The truth is, you'll become wiser with age, but you'll always question your decisions. 

20. Becoming an adult is not some magical transformation. 

Being an adult is more a matter of heightened expectations than any tangible change, says Hugh Powell. As he bluntly puts it: "[N]o matter how good you get at playing the adult, you won't forget that underneath it all, at any age, you are always a scared little child, with no real idea of what you are doing." 

Use this knowledge to recognize that everyone else is in the same position as you, no matter what image they project to the world. This can help you become more insightful, compassionate, and forgiving,