'மரம் அரைத்து, மரம் பூசி, மரம் ஏறிச் சென்றவன், மூன்று பேர், இரண்டு கால்களால் நடந்து சென்றதைப் பார்த்ததாகக் கூறினான்...'
இது ஒரு பழந்தமிழ் விடுகதை.
விடை புரிகிறதா? கொஞ்சம் யோசியுங்கள். புரியாவிட்டால், தொடர்ந்து படியுங்கள்.
மரம் அரைத்து - சந்தன மரத்தை அரைத்து, மரம் பூசி - சந்தனத்தை உடம்பெல்லாம் பூசி, மரம் ஏறி - பாதரட்சை கட்டைகளை போட்டுக் கொண்டு நடந்து சென்ற ஒருவன், மூன்று பேர் இரண்டு கால்களில் சென்றது என்று குறிப்பிட்டது: ஒரு தாய், இடுப்பில் ஒரு கைக் குழந்தையுடனும், வயிற்றில் (நிறை கர்ப்பமாக) ஒரு குழந்தையுடனும் சென்றதை!