சிறு வயதில் இருந்தே 'கனி'க்கு விளையாட்டில் அதிக ஆர்வம் இருப்பதை அறிந்துகொண்டு அதிலேயே முழுக் கவனத்தையும் செலுத்த அனுமதித்தார். 'டேபிள் டென்னிஸ்' ஆட்டத்தில் கனி சிறிதுசிறிதாக மேலே வந்தாள். வீட்டு விசேஷங்கள், உடல்நிலை சரியில்லை என்று எந்தக் காரணத்துக்காகவும் விளையாடுவதை மட்டும் நிறுத்தவே மாட்டாள். நாள்தோறும் கடுமையான பயிற்சி. தூங்கும்போதுகூட 'டி.டி' பற்றிதான் நினைப்பு. ஆரம்பத்தில் பள்ளி ஆசிரியர்கள் பெரிய அளவில் ஆதரவு தரவில்லைதான். 'படிப்புல கான்சன்ட்ரேட் பண்ணச் சொல்லுங்க. அதுதான் முக்கியம். ஸ்போர்ட்ஸ் எல்லாம் ஒண்ணும் வேலைக்கு ஆகாது. அவளோட லைஃபை நீங்களே வேஸ்ட் பண்ணிடுவீங்கபோல இருக்கே...'
வாத்தியார்கள் சொல்வதற்கேற்ப, ஸ்கூல்ல வைக்கிற டெஸ்ட்களில் எல்லாம் கனி ரொம்ப சுமாராகதான் மார்க் வாங்கினாள். அவள் படித்த பள்ளியோ, பொதுத்தேர்வில் 'ஸ்டேட் ரேங்க்' பெறுகிற ஒன்றாகவே இருக்கும் பிரபலமான பள்ளி வேறு! விடுவார்களா..?
பள்ளி ஆசிரியர்கள் முதல், நண்பர்கள், உறவினர்கள், தெரிந்தவர்கள், பக்கத்து வீடுகளில் உள்ளவர்கள் என்று அத்தனைபேரும் கேட்கிற ஒரே கேள்வி, 'இந்த ஸ்கூல்ல படிச்சிக்கிட்டா இவ்வளவு கம்மியா மார்க் வாங்கறே?'
ஒரு கட்டத்தில், தாம் தவறு செய்கிறோமோ என்கிற அச்சம் கனியின் பெற்றோருக்குமேகூட வந்துவிட்டது. கனிஷ்காதான் மிகவும் தெளிவாக இருந்தாள்.
'அதெல்லாம் இல்லை, டேபிள் டென்னிஸ்தான் எனக்கு முக்கியம். நீங்க வேணும்னா என்னை வேற எங்கேயாவது சேர்த்து விட்டுடுங்க, ஐ டோன்ட் மைண்ட் கோயிங் டு சம் அதர் ஸ்கூல்'. அவள் இப்படி தீர்மானமாக முடிவு எடுத்தபோது, எட்டாவதுதான் படித்துக்கொண்டிருந்தாள்!
அந்த ஆண்டு பள்ளிகளுக்கு இடையிலான போட்டியில் கலந்துகொண்டு, தன்னைவிட வயதில் பெரியவர்களை எல்லாம் தோற்கடித்து இறுதியில் 'ரன்னர்அப்' ஆனாள்.
அதன்பிறகு ஆசிரியர்களிடமும் மாற்றம் தெரிந்தது. 'பாஸ்' பண்ணத் தேவையான குறைந்தபட்ச மார்க் வாங்குற அளவுக்குப் படித்தால்போதும், டி.டி. போட்டிகளுக்கு அனுப்பிவைப்பதாகச் சொன்னார்கள். ஒப்புக் கொண்டாள். அப்போது தொடங்கியது அவளின் வெற்றிப் பயணம்.
முதன்முறையாக, டி.டி. போட்டியில், பள்ளிகளுக்கு இடையே நடந்த போட்டிகளில் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் வென்று 'சாதனை' படைத்தாள். தேசிய அளவில் நடைபெற்ற நேஷனல் ஜூனியர்ஸ் போட்டியில் இரண்டுமுறை ஃபைனல்வரை வந்தவள். சென்ற ஆண்டு சாம்பியன் பட்டம் வென்றாள். சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளுக்குச் சென்று போட்டிகளில் பங்குபெற்று வந்திருக்கிறாள். அதுசமயம்தான் ப்ளஸ்டூ தேர்வு வந்தது. ஏதோ எழுதினாள். சுமாரான மதிப்பெண்களில் தேறிவிட்டாள். சென்னையின் மத்தியில் உள்ள பிரபலமான கல்லூரியில் ஆங்கில இலக்கியம் சேர்த்துவிடலாம் என்று விண்ணப்பம் வாங்கப் போனார்!
அப்ளிகேஷன் தருகிற கவுன்டர்லேயே கேட்டுட்டாங்க 'கேன்டிடேட் என்ன மார்க் சார்..?'
மார்க் சொன்னார்
'என்ன சார் விளையாடுறீங்களா..? 90 பெர்சன்ட் மார்க் வாங்கினாலே இங்கே சீட் கிடைக்காது... எந்த தைரியத்துல அப்ளிகேஷன் வாங்கறீங்க..?'
சக்கரவர்த்தி விடுவதாக இல்லை. 'நீங்க முதல்ல அப்ளிகேஷன் குடுங்க. அப்புறம் அதெல்லாம் பார்த்துக்கலாம்..'
'ஏதோ 'இன்ஃப்ளுயன்ஸ்' இருக்கும்போல இருக்கு... குடுத்துடுவோம்..' என்றாள் பக்கத்தில் இருந்தவள்.
வாங்கிக்கொண்டு விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து 'பிரின்சிபல் மேடம்' ரூமுக்குப் போனார். மிகுந்த பிரயாசைக்குப் பின்னர்தான் பார்க்க முடிந்தது.
'ஓ... ஷி ஹேஸ் ரியலி டன் அ மார்வலஸ் ஜாப்... இப்பவே சேர்த்துடுங்க... இனிமே கனியோட கேரியரைப் பத்தி நீங்க கவலைப்பட வேண்டாம். வி வில் டேக் கேர்'.
இந்த நிலைக்கு அவளால் எப்படி வர முடிந்தது..? கனி சொல்கிற வாசகம் இதுதான்:
'நமது 'ஆம்பிஷன்' எதுவோ அதுதான் முதல்ல. மீதி எல்லாம் அப்புறம்தான்.' இதற்கு என்ன அர்த்தம்..?
தன்னுடைய லட்சியத்துக்கு உதவும் என்றால் எதற்கும் உடனே தயார். வேறு ஏதாவதா..? பிறகு பார்த்துக்கொள்ளலாம். தன்னுடைய விளையாட்டுக்குத் தேவை என்றால், உடனே வேண்டும் என்பாள். இல்லையா.., அது உடையாக இருக்கட்டும், உணவாக இருக்கட்டும். வாங்கிக்குடுத்தா குடுங்க, குடுக்காட்டி விடுங்க. கவலையே இல்லை.
'சின்ன வயசுல இருந்தே அப்படிதான்...' என்கிறார் கனியின் அம்மா. 'டி.டி க்ளாஸுக்கு மட்டும் எல்லாம் கரெக்ட்டா இருக்கணும். மத்தபடி, வீட்டுல டிவி இல்லை, டிஃபன் சரியில்லை... வாயைத் தொறந்து ஒரு வார்த்தை சொல்லமாட்டா...'
'இந்த டெடிகேஷன்தான் அவளோட ஸ்பெஷாலிட்டி...' பெருமிதத்துடன் சொல்கிறார் . 'லைஃப்ல பெருசா சாதிக்க நினைக்கிறவங்க எல்லாருமே இந்த ஒரு விஷயத்துல மட்டும் ஒரேமாதிரிதான் இருக்காங்க...'
'ஆமாம். 'சிங்கிள் மைண்டட் டிவோஷன்' இருக்கற யாரும் தோக்கறதே இல்லை. விளையாட்டுல மட்டும் இல்லை, வியாபாரம், கலை, இலக்கியம், அரசியல்... எல்லா ஃபீல்டுலயுமே இதுதான் அடிப்படை விதி.
இதனோடுகூடவே, ஒரு க்வாலிட்டியும் இருந்ததுன்னு வச்சிக்குங்க.. சிம்ப்ளி அன்ஸ்டாப்பபிள்தான்