Thursday, November 28, 2013

புதுப்புது வெளிநாட்டு உணவுகளைச் சாப்பிடும்போது.. - மருத்துவர் கு.சிவராமன்

துவரை வீட்டிலும் நடுத்தர, கையேந்தி பவன் வகை உணவகங்களிலும் மட்டுமே சாப்பிட்டுப் பழகிய நீங்கள், முதல்முறையாக நட்சத்திர உணவகத்தில் சாப்பிட்ட அனுபவம் ஞாபகம் இருக்கிறதா?
எனக்கு நன்றாக ஞாபகத்தில் இருக்கிறது! நான் வேலைபார்த்த மருத்துவமனையின் அதிபர், எங்களையெல்லாம் நட்சத்திர உணவக விருந்துக்கு அழைத்துச் சென்றார். மேஜை முன் சாப்பிட அமர்ந்ததும், மடியில் துண்டை விரித்தார்கள். உணவு மேஜையில் தட்டுக்கு அருகில் கத்தி ஸ்பூன், முள் கரண்டி... என, பளபள ஆயுதங்களைப் பார்த்ததுமே பதட்டமாகியது. அகோரப் பசியுடன் நாங்கள் காத்திருக்க, 15 நிமிடங்களில் சாப்பிடவேண்டிய உணவு வகைகளை ஆற அமர இரண்டு மணி நேரத்துக்குப் பரிமாறினார்கள். கரண்டியில் எடுக்கவேண்டியதை ஃபோர்க்கிலும், கையில் கிள்ளவேண்டியதை கத்தியிலும், ஃபோர்க்கில் குத்தவேண்டியதை கரண்டியிலுமாக தட்டுத்தடுமாறி எடுத்துச் சாப்பிட்டு முடித்தபோது, கடினமான கணக்குப் பரீட்சை எழுதி வந்த களைப்பு உண்டானது எனக்கு.
புது இடத்தில் சாப்பிடும்போது, உணவு மேஜையில் வயிற்றுக்கு வெளியே நடக்கும் பரபரப்பு இது. இதே ரீதியிலான பதற்றம்தான் புது வகை உணவை உண்ணும்போது வயிற்றுக்குள்ளும் அரங்கேறும்... அமிலங்களின் கொதிகொதிப்போடு!

அதிலும் புதுப்புது வெளிநாட்டுச் சந்தை உணவுகளைச் சாப்பிடும்போது நம் வயிற்றுக்குள் உள்ள பெப்சின் (உணவை ஜீரணிக்க உதவும் நொதி) பயத்துடனே பழக்கமில்லாதவற்றைச் சுவைக்கும் என்கிறது உணவு மரபணு அறிவியல். போதாக்குறைக்கு வயிற்றுக்குள்ளும், சிறுகுடலின் உள்ளும் உள்ள சமர்த்தான சில நுண்ணுயிரிகள், 'இது ஏதோ புதுசா இருக்கு. நான் அப்புறமா சாப்பிடுறேன்' என பயத்தில் ஒதுங்குவதும் நடக்குமாம். எப்போதேனும் இப்படியான பதற்றம் அரங்கேறினால், உடம்பு நோகாது. அடிக்கடி நடக்கும்போது மருத்துவரை நாட வேண்டியிருக்கும்!
மேற்கு ஐரோப்பாவைப் பூர்விகமாகக் கொண்ட 'மேயோனைஸ்' சாஸ் (Mayonnaise), இப்போது சிந்துபூந்துறைச் சித்தப்பா வீட்டு உணவு மேஜை வரை ஆக்கிரமித்துக்கொண்டு இருக்கிறது. காய்ச்சல் கண்டபோது மட்டுமே பார்த்திருந்த ரொட்டியை, நீளவாக்கில் பிளந்து அதில் மேயோனைஸைத் தடவி சிலபல காய்கறிகளை நுழைத்து, கூடுதல் சீஸையும் பிதுக்கி, வாய் வலிக்கப் பிளந்து சாப்பிடும் கலாசாரம் இங்கே வேகமாகப் பரவுகிறது.
'பாலும் கீரையும் ஒன்றாகச் சேரக் கூடாது. பாலும் மீனும் ஒன்றாகச் சேரக் கூடாது. தயிருடன் வாழைப்பழம் சாப்பிடக் கூடாது. தயிருடன் இறைச்சி நஞ்சாகும்' என சித்த மருத்துவம் சொல்லும் தமிழர் உணவு விதிகளை, குழந்தைகள் உலகத்தில் விதைக்காமலேயே கடந்து சென்று கொண்டிருக்கிறோம்.
எண்ணெய், பால், முட்டை, வினிகர், பதப் பொருள்கள், சுவையூட்டிகள் முதலான பல ரசாயனங்களின் கலவையாக எமல்சிஃபை செய்யப்பட்ட பொருளே 'மேயோனைஸ்'. அதிகளவிலான டிரான்ஸ் ஃபேட்டும், ரத்த நாளங்களில் படியும் கெட்டக் கொழுப்பையும் தரும் அந்த சாஸ், நம் சீதோஷ்ண நிலைக்கும் ஜீரண சுழற்சிக்கும் எப்போதும் பழக்கமானது அல்ல. அதோடு, என்றோ எப்போதோ எங்கேயோ செத்த பிராய்லர் கோழி இறைச்சி, பெருங்கடல் மீன் இறைச்சி அல்லது உருளை மசியல்களை, அந்தப் பால் எண்ணெய் பொருளில் தோய்த்துச் சாப்பிடுவது தற்காலிகமாகச் சந்தோஷப்படுத்தினாலும்(?), நெடுங்காலத்தில் நிச்சயம் சங்கடப்படுத்தும். இந்த மேயோனைஸ், கட்டக் கடைசியாக சாப்பாட்டின் மேல் ஒரு கோட்டிங் தடவி ருசி சேர்க்க உதவும் ஒரு பொருள். ஆனால், நம் பாரம்பரிய  உணவுப் பழக்கத்தில் சமைத்த பின் கடைசியாகச் சேர்த்த விஷயமே வேறு. அப்படி நம் முன்னோர்கள் சேர்த்தது மணம் மட்டுமல்ல, மருத்துவத்தையும்தான்.
சாம்பாரோ, வத்தக்குழம்போ, வாழைக்காய் பொரியலோ அதில் போடும் பெருங்காயத் தூளே அந்த மருத்துவம். பெருங்காயம், ஒரு தாவர ரெசின். அதன் கந்தக மணத்தைப் பார்த்த அமெரிக்கர்கள் விஷயம் புரியாமல் முதலில் அதனை, 'பிசாசு மலம்' (Devil dung) என்று முகம் சுளித்தனர். 1918-ல் உலகில் 20 மாதங்கள் கட்டுக்கடங்காமல் 100 மில்லியன் மக்கள் 'ஸ்பானிஷ் ஃப்ளூ' நோயில் கொத்துக்கொத்தாக இறந்தபோது, பெருங்காயம் இந்தக் காய்ச்சலில் இருந்து காக்கும் எனக் கண்டறிந்து, கழுத்தில் பெருங்காயத் துண்டுகளைக் கட்டித் திரிந்தார்கள் அதே அமெரிக்கர்கள். அதற்குப் பிறகு அவர்கள் அதனை 'கடவுளின் உணவு' (Food of Gods) என பெயர் மாற்றியது வரலாறு. பறவைக் காய்ச்சலுக்கு இன்றளவிலும் பயன்படும் Symadineக்கு இணையான, வைரஸ் எதிர்ப்பு ஆற்றல் பெருங்காயத்துக்கு உண்டு என எகிப்து விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். காய்ச்சலை மட்டுமல்ல, கேன்சரையும் தடுக்கும் தன்மைகொண்டது பெருங்காயம் என ஆய்வு முடிவுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது. கிரீன் டீ, சிவப்பு ஒயின், கறுப்பு சாக்லேட், மாதுளை ரசம் இவற்றில் எல்லாம் உள்ள ஆன்ட்டி-ஆக்சிடென்ட் பெருங்காயத்தில் நிறையவே உள்ளது.
ருஞ்சீரகமும் அப்படி ஓர் அற்புதமான மருந்து. சீரகம் பயன்படுத்தும் அளவுக்கு நம்மில் பலர் கருஞ்சீரகத்தைக் கண்டுகொள்வது இல்லை. இஸ்லாத்தின் தந்தை முகமது அவர்கள், மரணத்தைத் தவிர மற்ற அனைத்தையும் குணப்படுத்தும் என்று அன்றே குறிப்பிட்டது கருஞ்சீரகத்தைதான். அதன் எண்ணெய், கழுத்துப் புற்றுநோயைத் தடுப்பதையும், நோய் எதிர்ப்பாற்றலைத் தூண்டுவதையும், கொஞ்சம் குணப்படுத்த கடினமான குடலின் Ulcerative colitis  நோயைக் கட்டுப்படுத்துவதிலும் கருஞ்சீரகப் பயன் கண்டறியப்பட்டு வருகிறது. இதிலுள்ள THYMOQUINONE, வேறு எந்த தாவரத்திலும் இதுவரை கண்டறியப்படவில்லை என்கிறது Healing Spices நூல்.
யாருடைய துரத்தலுக்கோ எப்போதும் ஓடிக் கொண்டிருக்கும் நாம், இந்தத் துரித வாழ்வில் தொலைத்தவை, ஜன்னல் காற்று, சைக்கிள் பயணம், முற்றத்து மாக்கோலம், மாடக்குழி விளக்கு, தோட்டத்து கிரேந்திப்பூ, கிணற்றுக் குளியல், திருவிழாக் களிப்பு மட்டுமல்ல... நம் நலவாழ்வையும்தான். கொஞ்சம் திரும்பிப் பார்த்து, வயோதிகச் சுருக்கங்களில் இன்னும் ஒட்டியிருக்கும் மிச்சத்தையாவது, எடுத்து ஒட்டிக்கொள்வோமே!

Tuesday, November 26, 2013

God is real and does care for us!

This incident happened in Charlotte, North Carolina, USA, in September 2008. 14-year-old Chelsea Barton was born five weeks prematurely which resulted in developmental disabilities and serious health problems all her life.


Chelsea got sick very easily and going back and forth to the hospital very often. In 2008, she caught pneumonia and was eventually put on life support at Presbyterian Hospital in Charlotte, North Carolina.


Doctors told Chelsea's mother that there was no hope for young Chelsea's recovery.


The family gathered one last time in Chelsea's hospital room to say their goodbyes and the order was giving to disconnect her from the life support system and "just let nature take its course."


It appeared that Chelsea had another visitor just after the life support was disconnected!


As her mother waited for the girl to take her last breath, an image of bright light appeared on the hospital's security monitor screen. Within an hour, the dying girl began a recovery that doctors were at a loss to explain.


The mother and other workers noticed an image of an angel in light on the security surveillance monitor near the hospital room door and the mother managed to capture the image with her cell phone camera.


The mother told that at first she thought that it was the angel-of-death coming to take her daughter but shortly afterwards Chelsea started showing signs of improvement.


It would be another two months before Chelsea finally left the hospital to return home but her mother is so convinced that Chelsea was saved by divine intervention.


God is real and does care for us!




Sources: MSNBC News & Truth or Fiction

Please tell me my angel’s name

Once upon a time there was a child ready to be born. So one day he asked God: "How am I going to live on earth being so small and helpless?"


God replied, "Among the many angels, I chose one for you. She will be waiting for you and will take care of you."


"But tell me, here in Heaven, I don't do anything else but sing and smile, that's enough for me to be happy."


"Your angel will sing for you and will also smile for you every day. And you will feel your angel's love and be happy."


"And how am I going to be able to understand when people talk to me, if I don't know the language that men talk?"


"Your angel will tell you the most beautiful and sweet words you will ever hear, and with much patience and care, your angel will teach you how to speak."


"And what am I going to do when I want to talk to you?"


"Your angel will place your hands together and will teach you how to pray."


"I've heard that on earth there are bad men. Who will protect me?"


"Your angel will defend you even if it means risking its life."


"But I will always be sad because I will not see you anymore."


"Your angel will always talk to you about me and will teach you the way for you to come back to me, even though I will always be next to you."


At that moment there was much peace in Heaven, but voices from earth could already be heard, and the child in a hurry asked softly:


"Oh God, if I am about to leave now, please tell me my angel's name."


"Your angel's name is of no importance, you will call your angel: Mommy."

Monday, November 25, 2013

Have we ever appreciated the unconditional sacrifice of our parents?


That night, Sue quarreled with her mother, then stormed out of the house. While enroute, she remembered that she did not have any money in her pocket, she did not even have enough coins to make a phone call home.

At the same time, she went through a noodle shop, picking up sweet fragrance, she suddenly felt very hungry. She wished for a bowl of noodles, but she had no money!

The seller saw her standing wheat faltered before the counter and asked:

- Hey little girl, you want to eat a bowl?

- But … but I do not carry money … she shyly replied.

- Okay, I’ll treat you – the seller said – come in, I will cook you a bowl.

A few minutes later the owner brought her a steaming bowl of noodles. Ate some pieces, Sue cried.
- What is it? – He asked.

- Nothing. I am just touched by your kindness! – Sue said as she wiped her tears.

- Even a stranger on the street gives me a bowl of noodles, and my mother, after a quarrel, chased me out of the house. She is cruel!!

The seller sighed:
- Girl, why did you think so? Think again. I only gave you a bowl of noodles and you felt that way. Your mother had raised you since you were little, why were you not grateful and disobeyed your mom?

Sue was really surprised after hearing that.

Why did I not think of that? A bowl of noodles from a stranger made me feel indebted, and my mother has raised me since I was little and I have never felt so, even a little.

On the way home, Sue thought in her head what she would say to her mother when she arrives home: “Mom, I’m sorry. I know it is my fault, please forgive me … ”

Once up the steps, Sue saw her mother worried and tired of looking for her everywhere. Upon seeing Sue, her mother gently said: “Sue, come inside honey. You are probably very hungry? I cooked rice and prepared the meal already, come eat while it is still hot …”

Can not control any longer, Sue cried in her mom’s hands.

In life, we sometimes easy to appreciate the small actions of some people around us, but for the relatives, especially parents, we see their sacrifices as a matter of natural …

Parental love and concern are the most precious gifts we have been given since birth.

Parents do not expect us to pay back for nurturing us …… but
have we ever appreciated or treasure the unconditional sacrifice of our parents?



Translated from a Vietnamese story by Tina

எதுவந்தபோதும் எதிர்கொள்வோம் என்கிற மனஉறுதி

ஒருமுனைப்பட்ட முயற்சி இருந்தால்போதும், வெற்றி நிச்சயம். கூடவே இன்னொரு குணமும் சேர்ந்து அமைந்துவிட்டால், அவ்வளவுதான், சிம்ப்ளி அன்ஸ்டாப்பபிள்தான். அது என்ன க்வாலிட்டி? ஆன்ட்ரூஸ் சொல்வதைக் கேட்போம்.

''மாத்திக்கணும் சார். சூழ்நிலைக்கு ஏத்தமாதிரி நம்மள மாத்திக் கணும். நாம ஏதோ ஒண்ணு புதுசா பண்ணனும்னு நினைச்சிக்கிட்டு இருப்போம். நமக்கு முன்னே வேற ஒருத்தன் அதையே பண்ணிட்டுப் போயிடுவான். உடனே நாம மனசு தளர்ந்துடக்கூடாது. அதையே இன்னும் வேற எப்படிப் பண்ணலாம்னு பார்க்கணும். இல்லியா... அதை விட்டுட்டு மொத்தமுமே புதுசா வேற எதையாவது முயற்சி செஞ்சுபார்க்கணும். அப்பப்போ என்னென்ன நடக்குதோ, அதுக்கு ஏத்தமாதிரி நாமும் மாறிக்கிட்டே இருக்கணும். அப்போதான் ஜெயிக்க முடியும். இல்லைன்னா நாம இருக்கற இடத்துலயே இருக்க வேண்டியதுதான்.''

ஆன்ட்ரூஸ். நாகப்பட்டினம் மாவட்டத்துல, ஒரு கடலோர கிராமத்துல இருந்து சென்னைக்கு வந்த இளைஞன். படிப்பு அதிகம் இல்லை. ஆனா, கலை ஆர்வம் எக்கச்சக்கம். ஏன் கேட்கறீங்க..? நகைச்சுவை யில அவனை அடிச்சுக்கவே முடியாது. ஒவ்வொரு அசைவிலேயும் 'சென்ஸ் ஆஃப் ஹ்யூமர்' பொங்கி வழியும். ஆனா, ஆச்சா¢யம் என்னன்னா, அவன் வீட்டுல வறுமைன்னா வறுமை, அப்படியரு கொடிய வறுமையில வளர்ந்தவன். அவனைப் பார்த்த மாத்திரத்துலயே அவனோட வறுமையை யார் வேணுமின்னாலும் சட்டுன்னு புரிஞ்சுக் குவாங்க..!  

எப்படியாவது சினிமாவுல ஜெயிச்சுட ணும்னு சென்னைக்கு வந்தான். ஒண்ணும் நடக்கலை. சாப்பாட்டுக்கு என்ன செய்றது..? எங்கெங்கேயோ சுத்தி, அம்பத்தூர்ல ஒரு கம்பெனியில நைட் செக்யூரிட்டி வேலையில சேர்ந்துட்டான். அநியாயத்துக்கு குறைந்த சம்பளம். 'சம்பளம் யாருக்கு சார் வேணும்..? ராத்திரியில எங்கே சார் போய்த் தூங்கறது..? அதுதான் 'சேஃப்'ஆ செட்டில் ஆயிட்டேன்!' என்பான் காமெடியாக.

'பகல்லே அங்கேயே ஏதாவது ஒரு மூலையில படுத்துத் தூங்கிடுவேன். கம்பெனி கேன்டீன்ல குறைஞ்ச விலையில சாப்பிட்டுக்குவேன். போதாக்குறைக்கு நம்ம பேச்சைக் கேட்க, கைதட்ட நாலுபேரு எப்பவும் பக்கத்துல இருக்காங்க. இது போதாதா சார், லைஃப்பு சொர்க்கமாப் போகுது சார்.'

நல்ல மழை. விடாம கொட்டிக்கிட்டு இருந்தது. முழுக்க நனைஞ்சுபோய் சொட்டச் சொட்ட என் ரூமுக்குள்ளே வந்தான் ஆன்ட்ரூஸ்.  

'சார்... எங்க மேனேஜர் உங்ககிட்ட இந்த லெட்டரை குடுத்துட்டு வரச் சொன்னார்' என்று நீட்டினான். புரிந்தது. 'அட்ஜர்ன்மென்ட் லெட்டர்'. வாங்கி வைத்துக்கொண்டேன்.

'உட்காருங்க, நனைஞ்சி வந்துருக்கீங்க...'

'உட்கார்ந்தா உலர்ந்துடுமா சார்..?'

சற்றும் தயக்கம் இன்றி பதில் வந்தது.

'முன்பின் தெரியாத ஒரு ஆபீஸர்கிட்ட இப்படிப் பேசறியே... உங்க மேனேஜர்கிட்ட சொல்லிட்டா என்ன ஆகும் தெரியுமா..?'

'சொன்னா கோவிச்சுக்க மாட்டீங்களே...?'

'இல்லை, சொல்லுங்க...'

'என்ன... நம்மாலதான் ஆபீஸர்கிட்ட துடுக்காப் பேச முடியலை. இவனாவது பேசறானேன்னு சந்தோஷப்படுவாரு...'

காலை சுமார் 11 மணிக்கு வந்தவனை ஈவினிங் 5 மணி வரைக்கும் உட்கார வைச்சுட்டேன். என் வேலையும் பார்த்துக் கொண்டு அவனோடும் பேசிக் கொண்டிருந்தேன்.

அன்னைக்கு என் ரூமுக்கு வந்தவங்க அத்தனைபேரும் அவனோட நகைச்சுவைப் பேச்சுல மயங்கிட்டாங்க. அதுல ஒருத்தர், தங்கமுத்து. ஈ.சி.ஆர்.-ல ஹாலிடே ரிசார்ட் வச்சி நடத்துறவரு. அப்பவே அவனோட பேசி தன்னோட ரிசார்ட்ல வேலைக்குச் சேர்த்துக்கிட்டாரு. இடம், சாப்பாடு எல்லாம் போக கணிசமான சம்பளமும் குடுத்தாரு.

ரிசார்ட்ல இருந்து, சென்னையின் மத்தியில இருக்குற ஸ்டார் ஓட்டல். அங்கிருந்து அப்படியே சிங்கப்பூர்.... சினிமாவில் நடிக்கிற ஆசை இன்னமும் நிறைவேறவில்லைதான். ஆனால், மலேசிய டிவி வரையில் சென்றுவிட்டான். அவனது இயல்பான கலப்படமற்ற நகைச்சுவை அவனை மேலே மேலே ஏற்றி வைத்துக்கொண்டிருக்கிறது.

இப்போதும்கூட, தன் சட்டைப்பையில் நடிகர் நாகேஷ் படம் இருக்கிறதா என்று உறுதிசெய்து கொண்டுதான் வெளியிலேயே கிளம்புகிறான். (கேட்டால், 'அந்தாளு மனுஷனே இல்லை சார்!' என்பான். தப்பா நெனைக்காதீங்க, நாகேஷ்மேல் அவனுக்கு அப்படி ஒரு பிரமிப்பு!)

'சினிமாவுல நடிச்சுதான் லைஃப்ல மேல வரமுடியும்னு நினைச்சுகிட்டு இருந்தேன். ஆனா, அப்படி இல்லைங்கறதைப் புரிஞ்சுக் கிட்டேன். நான் சென்னைக்கு வந்து இறங்கினப்போ எனக்குத் துணையோ, தெரிஞ்சவங்களோ யாருமே இல்லை. என்னுடைய நகைச்சுவைதான் என்னை இன்னைக்கு சிங்கப்பூர் வரைக்கும் கொண்டு போயிருக்கு. என்ன ஒண்ணு...

சினிமாவுக்கு நான் நினைச்சிருந்த நகைச்சுவை வேறே. ஓட்டல்ல 'லைவ்'-ஆ பண்ற காமெடி ஷோங்கறது வேற. இங்கே, ஏதேனும் ஒண்ணு புதுசாப் பண்ணிக்கிட்டே இருக்கணும். ஏன்னா, நம்மளைவிடவும் ஷோவுக்கு வர்ற ஆடியன்ஸுக்கு நகைச்சுவை உணர்வு அதிகம். அவங்க இந்தமாதிரி எத்தனை ஷோ பார்த்துருப்பாங்க..?

அதுமட்டுமில்லை, உருப்படியாப் பண்ணலைன்னா தொலைச்சிடுவேங்கற மாதிரி சிலபேர் வருவாங்க. அவங்க எல்லோருமே பெரிய மனுஷங்களாதான் இருப்பாங்க. ஃப்ரன்ட் ரோலதான் உட்காருவாங்க. இந்த சவால்தான் சார் எனக்குப் புடிச்சிருக்கு'.

'இப்படி எத்தனை ஆன்ட்ரூஸ்கள்! ஊர், பேர் தெரியாத நிலையில் இருந்து பேரும் புகழும் மிக்க நிலைக்கு உயர்ந்தவர்கள் எத்தனை எத்தனை பேர்! இவர்கள் அத்தனை பேருக்கும் பொதுவாக இருப்பது எது..? எதுவந்தபோதும் எதிர்கொள்வோம் என்கிற மனஉறுதிதானே..?

யாரிடமும் எதற்காகவும் கை ஏந்தாமல், தனக்குத்தானே கைகொடுத்துத் தன்னை உயர்த்திக்கொண்ட ஆன்ட்ரூஸ்களைக் காட்டிலும் சிறந்த 'இன்ஸ்பிரேஷன்ஸ்' இருக்க முடியுமா என்ன..?' 

When Life Throws You Dirt, ...


One day a farmer's donkey fell down into a well that the farmer had accidentally left uncovered. The animal cried piteously for hours as the farmer tried to figure out what to do. Finally, he decided the animal was old, and the well needed to be covered up anyway, so it just wasn't worth it to retrieve the donkey.

He invited all his neighbors to come over and help him. They all grabbed a shovel and began to shovel dirt into the well. At first, the donkey realized what was happening and cried horribly. Then, to everyone's amazement he quieted down.

A few shovel loads later, the farmer finally looked down the well. He was astonished at what he saw. With each shovel of dirt that hit his back, the donkey was doing something amazing. He would shake it off and take a step up.

As the farmer's neighbors continued to shovel dirt on top of the animal, he would shake it off and take a step up. Pretty soon, everyone was amazed as the donkey stepped up over the edge of the well and happily trotted off!

Life is going to shovel dirt on you, all kinds of dirt. The trick to getting out of the well is to shake it off and take a step up. Each of our troubles is a stepping stone. We can get out of the deepest wells just by not stopping, never giving up! Shake it off and take a step up.

Now, most people think that's the end, but it isn't.

The donkey later came back and bit the hell out of the farmer who had tried to bury him. The gash from the bite got infected, and the farmer eventually died in agony from septic shock.

So the real moral from this message -

When you do something wrong and try to cover your ass, it always comes back to bite you.

Friday, November 22, 2013

Triple Filter Test

In ancient Greece, Socrates was reputed to hold knowledge in high esteem. One day an acquaintance met the great philosopher and said, "Do you know what I just heard about your friend?"




"Hold on a minute," Socrates replied. "Before telling me anything I'd like you to pass a little test. It's called the Triple Filter Test."

"Triple filter?"

"That's right," Socrates continued. "Before you talk to me about my friend, it might be a good idea to take a moment and filter what you're going to say. That's why I call it the triple filter test. The first filter is Truth. Have you made absolutely sure that what you are about to tell me is true?"

"No," the man said, "Actually I just heard about it and ..."

"All right," said Socrates. "So you don't really know if it's true or not. Now let's try the second filter, the filter of Goodness. Is what you are about to tell me about my friend something good?"

"No, on the contrary…"

"So," Socrates continued, "you want to tell me something bad about him, but you're not certain it's true. You may still pass the test though, because there's one filter left: the filter of Usefulness. Is what you want to tell me about my friend going to be useful to me?"

"No, not really …"

"Well," concluded Socrates, "if what you want to tell me is neither true nor good nor even useful, why tell it to me at all?"

At least I’m a loving husband…


When I got home that night as my wife served dinner, I held her hand and said, I've got something to tell you. She sat down and ate quietly. Again I observed the hurt in her eyes.


Suddenly I didn't know how to open my mouth. But I had to let her know what I was thinking. I want a divorce. I raised the topic calmly.

She didn't seem to be annoyed by my words, instead she asked me softly, why?


I avoided her question. This made her angry. She threw away the chopsticks and shouted at me, you are not a man! That night, we didn't talk to each other. She was weeping. I knew she wanted to find out what had happened to our marriage. But I could hardly give her a satisfactory answer; she had lost my heart to Jane. I didn't love her anymore. I just pitied her!


With a deep sense of guilt, I drafted a divorce agreement which stated that she could own our house, our car, and 30% stake of my company.


She glanced at it and then tore it into pieces. The woman who had spent ten years of her life with me had become a stranger. I felt sorry for her wasted time, resources and energy but I could not take back what I had said for I loved Jane so dearly. Finally she cried loudly in front of me, which was what I had expected to see. To me her cry was actually a kind of release. The idea of divorce which had obsessed me for several weeks seemed to be firmer and clearer now.


The next day, I came back home very late and found her writing something at the table. I didn't have supper but went straight to sleep and fell asleep very fast because I was tired after an eventful day with Jane.


When I woke up, she was still there at the table writing. I just did not care so I turned over and was asleep again.


In the morning she presented her divorce conditions: she didn't want anything from me, but needed a month's notice before the divorce. She requested that in that one month we both struggle to live as normal a life as possible. Her reasons were simple: our son had his exams in a month's time and she didn't want to disrupt him with our broken marriage.


This was agreeable to me. But she had something more, she asked me to recall how I had carried her into out bridal room on our wedding day.


She requested that every day for the month's duration I carry her out of our bedroom to the front door every morning. I thought she was going crazy. Just to make our last days together bearable I accepted her odd request.


I told Jane about my wife's divorce conditions. She laughed loudly and thought it was absurd. No matter what tricks she applies, she has to face the divorce, she said scornfully.


My wife and I hadn't had any body contact since my divorce intention was explicitly expressed. So when I carried her out on the first day, we both appeared clumsy. Our son clapped behind us, daddy is holding mommy in his arms. His words brought me a sense of pain. From the bedroom to the sitting room, then to the door, I walked over ten meters with her in my arms. She closed her eyes and said softly; don't tell our son about the divorce. I nodded, feeling somewhat upset. I put her down outside the door. She went to wait for the bus to work. I drove alone to the office.


On the second day, both of us acted much more easily. She leaned on my chest. I could smell the fragrance of her blouse. I realized that I hadn't looked at this woman carefully for a long time. I realized she was not young any more. There were fine wrinkles on her face, her hair was graying! Our marriage had taken its toll on her. For a minute I wondered what I had done to her.


On the fourth day, when I lifted her up, I felt a sense of intimacy returning. This was the woman who had given ten years of her life to me.


On the fifth and sixth day, I realized that our sense of intimacy was growing again. I didn't tell Jane about this. It became easier to carry her as the month slipped by. Perhaps the everyday workout made me stronger.


She was choosing what to wear one morning. She tried on quite a few dresses but could not find a suitable one. Then she sighed, all my dresses have grown bigger. I suddenly realized that she had grown so thin, that was the reason why I could carry her more easily.

Suddenly it hit me… she had buried so much pain and bitterness in her heart. Subconsciously I reached out and touched her head.


Our son came in at the moment and said, Dad, it's time to carry mom out. To him, seeing his father carrying his mother out had become an essential part of his life. My wife gestured to our son to come closer and hugged him tightly. I turned my face away because I was afraid I might change my mind at this last minute. I then held her in my arms, walking from the bedroom, through the sitting room, to the hallway. Her hand surrounded my neck softly and naturally. I held her body tightly; it was just like our wedding day.


But her much lighter weight made me sad. On the last day, when I held her in my arms I could hardly move a step. Our son had gone to school. I held her tightly and said, I hadn't noticed that our life lacked intimacy.


I drove to office… jumped out of the car swiftly without locking the door. I was afraid any delay would make me change my mind… I walked upstairs. Jane opened the door and I said to her, Sorry, Jane, I do not want the divorce anymore.


She looked at me, astonished, and then touched my forehead. Do you have a fever? She said. I moved her hand off my head. Sorry, Jane, I said, I won't divorce. My marriage life was boring probably because she and I didn't value the details of our lives, not because we didn't love each other anymore. Now I realize that since I carried her into my home on our wedding day I am supposed to hold her until death do us apart.


Jane seemed to suddenly wake up. She gave me a loud slap and then slammed the door and burst into tears. I walked downstairs and drove away.


At the floral shop on the way, I ordered a bouquet of flowers for my wife. The salesgirl asked me what to write on the card. I smiled and wrote, I'll carry you out every morning until death do us apart.


That evening I arrived home, flowers in my hands, a smile on my face, I run up stairs, only to find my wife in the bed – dead.


My wife had been fighting CANCER for months and I was so busy with Jane to even notice. She knew that she would die soon and she wanted to save me from the whatever negative reaction from our son, in case we push through with the divorce –At least, in the eyes of our son— I'm a loving husband…



 

Three Great Teachers

When Hasan, an Islamic philosopher was about to pass away, he was asked: " Dear Hasan, who is your teacher?"

Hasan answered: "I have numerous teachers. However, if I have to count the names of these teachers, it will take months, years, and that is too late since I have very little time left. But I can tell you about three of my teachers as follows:

The first one was a thief. There is a time when I was lost in the desert. When I found a village, it was very late at night, and all the people in this village had gone to bed. However, at last, I found a man who was piercing a hole on the wall of a house in the village. I asked him where could I stay and he answered me: " It is very difficult to find a resting place in this very late night, but you can come to my house if you do not hesitate to stay with a thief."

He was a wonderful man. I remained at that place for a month! Every night, he said that: "I have to go to work right now. Stay at home and pray for me, ok?". Every time when he came back, I always asked him: "Did you steal any thing?" and he always replied: "Not today, but I will try my best tomorrow, it could be". I have never found him in a desperate situation, he was always happy.

There was period of time when I kept thinking and thinking for many years, however, I could not discover any truth . I felt into desperate situations, so desperate that I though I had to put an end to all of these rubbish and valueless thing. Right after that, I thought about the thief , the man that every night had said to me: "I can do it tomorrow, it could be!"

The second teacher was a dog. When I went out to the river to drink water, a dog appeared. He was thirsty, too. But when looking down to the river, he saw his shadow but thought that it was another dog. Being filled with terror, he screamed and run away. However, being too thirsty, he came back. At last, despite of his fear deep inside his heart, he jumped into the river and the shadow disappeared. We understand that this was a message for us: "Human being must triumph over the fear in their soul by action."

The last teacher was a child. When I came to a city and saw a child bringing a lighted - candle to put into the church, I asked this child: " You yourself lighted this candle, didn't you?". The child answered: "Yes, sir". Then I asked: "At the beginning, the candle was not lighted, however, after a moment, it was burned. So, do you know where the light come from?"

The child laughed loudly, blown out the candle and said: "You see that the light has disappeared, so tell me where did the light go?"

My scornful selfness absolutely collapsed, and my set of present-and-the-past knowledge also collapsed, too. At that time, I discovered the crass ignorance of myself. And from that moment, I thrown all of my pride about my broad knowledge.

It can be said that I had no one as my teacher, but it does not mean that I am not a student. I accept all things as my teacher. My learning spirit is always broaden than all of yours. I learn from every thing, from a branch of tree to a wild grass, to the cloud in that sky. I have no teacher because I have millions of teachers whenever possible. The necessity in life is always being a student. What does this mean? It means that having the ability to learn, always ready to learn to know the meanings of every thing.

Thursday, November 21, 2013

Waves are not waves


The story is about a little wave, bobbing along in the ocean, having a grand old time. He's enjoying the wind and the fresh air – until he notices the other waves in front of him, crashing against the shore. "My God, this terrible", the wave says. "Look what's going to happen to me!"

Then along comes another wave. It sees the first wave, looking grim, and it says to him: "Why do you look so sad?"

The first wave says: "You don't understand! We're all going to crash! All of us waves are going to be nothing! Isn't it terrible?"

The second wave says: "No, you don't understand. You're not a wave, you're part of the ocean."

Sorrows and troubles are like waves and our life is a great ocean. 

Wednesday, November 20, 2013

Life is an echo, What you send out Comes back

One day a traveller was walking along a road on his journey from one village to another. As he walked he noticed a monk tending the ground in the fields beside the road. The monk said "Good day" to the traveller, and the traveller nodded to the monk. The traveller then turned to the monk and said "Excuse me, do you mind if I ask you a question?"

"Not at all," replied the monk.

"I am travelling from the village in the mountains to the village in the valley and I was wondering if you knew what it is like in the village in the valley?"

"Tell me," said the monk, "What was your experience of the village in the mountains?"

"Dreadful," replied the traveller, "to be honest I am glad to be away from there. I found the people most unwelcoming. When I first arrived I was greeted coldly. I was never made to feel part of the village no matter how hard I tried. The villagers keep very much to themselves, they don't take kindly to strangers. So tell me, what can I expect in the village in the valley?"

"I am sorry to tell you," said the monk, "but I think your experience will be much the same there".

The traveller hung his head despondently and walked on.

A while later another traveller was journeying down the same road and he also came upon the monk.

"I'm going to the village in the valley," said the second traveller, "Do you know what it is like?"

"I do," replied the monk "But first tell me - where have you come from?"

"I've come from the village in the mountains."

"And how was that?"

"It was a wonderful experience. I would have stayed if I could but I am committed to travelling on. I felt as though I was a member of the family in the village. The elders gave me much advice, the children laughed and joked with me and people were generally kind and generous. I am sad to have left there. It will always hold special memories for me. And what of the village in the valley?" he asked again.

"I think you will find it much the same" replied the monk, "Good day to you".

"Good day and thank you," the traveller replied, smiled, and journeyed on.

Tuesday, November 19, 2013

Stories have a lesson in it

There was once a disciple of a great teacher. Day after day the disciple would sit at the feet of his teacher listening to his instruction. Many people would come to visit and inevitably the teacher would engage them by telling a story. 

One day the disciple asked; "Guruji, why do you engage people by means of stories? Why don't you just give them your teaching straight out?"

The guru answered: "Bring me some water."

Now the disciple knew his teacher to be a very formal and disciplined man. He had never asked for water at this time of the day. Nevertheless, he went immediately to fetch it. Taking a clean brass water pot from the ashram kitchen, the disciple went to the well, filled the pot with water and returned. He offered it to his teacher.

"Why have you brought me a pot when I asked only for water?"

The moral of this story…

We share with others the lessons we have learned. We provide you with a banquet of various tastes and styles. It is up to you to choose that dish which you find most palatable.

 

நண்பனாக தோழியாக பிள்ளைகளின் போக்கிலேயே சென்று பாருங்கள்... நிச்சயமாக மாற்றம் நடக்கும்.

'பட்... பட்.. படார்... படார்...' - காதைப் பிளக்கும் சரவெடிச் சத்தம், விசில், கூச்சல், ஆரவாரம் ஒரு பக்கம். ''யோவ்... மீசை..! இந்தா புடி லட்டு... உமக்கு பல்லு போனா என்ன? பக்குவமா மென்னு சாப்பிடு'' என்று இனிப்பு விநியோகம் மறுபக்கம்... அந்த கிராமத்துக்குள் நான் நுழைந்தபோது, இப்படி திடீர் தீபாவளி கொண்டாடிக் கொண்டிருந்தார்கள் கிராமத்தினர். கைகளையே பல்லக்காக்கி, சுரேஷைத் தூக்கி வட்டமடித்துக் கொண்டிருந்தனர் நண்பர்கள்.

தலையும் புரியாமல், வாலும் புரியாமல் விழிபிதுங்கி நின்றேன்.

''டேய், மாப்பிள்ளை... நம்ம சுரேஷ§ பத்தாங் கிளாஸ்ல டிஸ்ட்ரிக்ட் ஃபர்ஸ்ட் வந்திருக்கான்யா'' என்று உறவுக்காரர் ஒருவர் உரக்கச் சொன்னபோதுதான், திடீர் தீபாவளிக்கான காரணம் புரிந்தது.

பத்திரிகையாளர்கள் வட்டமடித்துக் கொண்டிருக்க, அன்று சுரேஷ§க்கு மட்டுமல்ல... பெருமையின் உச்சத்தில் இருந்த அந்தக் கிராமத்தின் ரவிக்கை போடாத பல்லு விழுந்த பாட்டிக்குக்கூட கழுத்தருகே காலர் முளைத்திருந்தது. எல்லோரும் சுரேஷ் கழுத்தில் மாலை போட்டுக் கொண்டிருக்க... சுரேஷின் அப்பா, அவன் கழுத்தில் மாட்டியதோ... ஸ்டெதாஸ்கோப்! அடுத்த நிமிடமே 'டாக்டர் சுரேஷ்'... 'டாக்டர் சுரேஷ்' என ஆரவாரம். அன்றிலிருந்து நண்பர்கள் மத்தியில் அவன் 'டாக்டர் சுரேஷ்'!

''இதே வேகத்தோட ப்ளஸ் டூ பரீட்சையிலயும் நல்ல மார்க் எடுக்கணும்டா'' என வாழ்த்திவிட்டு வந்தேன்.

ஆண்டுகள் சில கரைய... 'ஊரே எதிர்பார்த்தது போல, சுரேஷ் டாக்டராக மாறி, நோயாளிகளைக் குணப்படுத்திக் கொண்டிருப்பான்' என நான் நினைத்திருக்க... கிரீஸ் கறை படிந்த துண்டு கழுத்தில், விதம்விதமா ஸ்க்ரூ டிரைவர் கையில் என லாரி டிரைவரிடம் திட்டு வாங்கும் 'கிளீனர் சுரேஷ்' என அவன் மாறிக் கிடந்ததைப் பார்த்தபோது... அதிராமல் எப்படி இருக்க முடியும்?

பதினாறு வயதிலேயே அவனுக்குள் நுழைந்த காதல், ஊரின் டாக்டர் கனவுக்கு கல்லறை எழுப்பிவிட்டது. அவன் சொன்ன அந்தக் காதல் (!) கதையை உங்களிடம் பகிர நினைக்கும்போதே மனம் படபடக்கிறது.  

அன்று அவனுக்குப் பிறந்த நாள்...

''சுரேஷ்... இந்த காப்பரீட்சையில நீதான்பா முதல் மார்க்'' - ப்ளஸ் ஒன் படிக்கும் அவனை, வகுப்பாசிரியர் பாராட்டியதும், சக தோழர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தார்கள். சுரேஷ் மட்டும் எதையோ பறி கொடுத்தவனாக சோகத்தில் ஆழ்ந்திருந்தான். ஆளாளுக்குப் பரிசு கொடுத்துக் கொண்டிருந்தார்கள். அதுவரை, எதன் மீதும் ஆர்வம் காட்டாதவன், அவள் கொடுத்த பரிசைப் பார்த்ததும் உயிர் துடிக்க துள்ளிக் குதித்தான்.

அவள்... துளசி. ரெட்டை ஜடை, கை நிறைய வளையல்கள், காதில் ஊஞ்சலாடும் ஜிமிக்கி, அடிதோறும் ஜதி சொல்லும் கொலுசு... என அன்று அவள் சுரேஷ§க்கு ரொம்பவே வித்தியாசமாகத் தெரிந்தாள். இப்படி அவன் வியந்து போகும் அளவுக்கு அவள் கொடுத்த பரிசு என்ன தெரியுமா? சுரேஷ் தொலைத்த ராசியான பேனா. அது துளசியின் கையில் கிடைக்க, அதையே அவள், அவனுக்குப் பரிசாக கொடுத்த அந்தக் கணத்தில்... அவனுடைய இதயம், அவளிடம் முழுமையாகத் தொலைகிறது. பேனாவில் ஊற்றிய மை... 'துளசி... துளசி... துளசி...' என எழுதியே தீர்கிறது தினமும். ஒருநாள், துளசியிடம் காதலை வெளிப்படையாகச் சொன்னபோது, அவளும் ஏற்றுக் கொண்டாள்.

காதல் பற்றிய புரிதலோ... வாழ்க்கையைப் பற்றிய தெளிவோ இல்லாத பதினாறு வயது காதல் அவர்களைப் படுத்தியபாடு... அப்பப்பா! டாக்டர் கனவை மறந்து காதலால் கசிந்துருகி நின்றான். காதல் தவிர உலகில் எதுவும் முக்கியமில்லை என்ற முடிவில் பள்ளியை மறந்து... வயல், வரப்பு தோப்புகளில் சுற்றித் திரிந்தனர். ப்ளஸ் டூ தேர்வு முடிவு... ஊரே அவனைத் திட்டி தீர்க்க வைத்தது. ஆம், பத்தாம் வகுப்பில் அத்தனை மதிப்பெண்கள் பெற்றவன், ப்ளஸ் டூ-வில் தேர்ச்சிகூட பெறவில்லை.

ஊரார் கேலிக்கு அஞ்சி, பெற்றோர் எதிர்ப்பையும் மீறி ஊரை விட்டே ஓடிப்போனார்கள். கஞ்சி குடிக்க வழியில்லாமல் நண்பனின் உறவினர் வீட்டில் ஒண்டிப் பிழைக்கும்போது, துளசி கர்ப்பமானாள். அதுவரை காதல் மயக்கத்தில் இருந்தவனை வாழ்க்கை பற்றிய பயம் விரட்டியது. காதல் மனைவியை காப்பாற்றுவதற்காக கிளீனர் வேலையில் சேர்ந்துவிட்டான். அறியாத வயதில் செய்த விடலைக் காதல், டாக்டராக வேண்டியவனை கிளீனர் ஆக்கிவிட்டது.

இதற்கு சுரேஷ், துளசி மட்டுமா காரணம்... பெற்றோர்க்கும் பங்கு இருக்கிறதுதானே?

இன்றைக்கு எத்தனை பெற்றோர், குழந்தைகளுடன் சிநேகம் பாராட்டுகிறார்கள்? காலையில் எழுந்ததும் 'குட் மார்னிங்' ஒரு தரம்... ராத்திரி தூங்கும்போது 'குட் நைட்' ஒரு தரம்... என பிள்ளைகளுடன் பேசுவதே சுருங்கிவிட்ட காலமல்லவா இது! தாங்கள் கடந்து வந்த பாதையை குழந்தை களிடமும்... குழந்தைகள், தாங்கள் கடக்கிற பயணங்களை பெற்றோர்களிடம் பகிர்ந்து கொள்வது, எத்தனை குடும்பத்தில் நடக்கிறது?

இங்கே பெற்றோர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு ஓர் உதாரணமாக... இவரைப் பற்றி சொல்வது சரியாக இருக்கும் என நினைக்கிறேன். அந்த மனிதர் எனக்குச் சொன்ன பாடங்கள்... என் வாழ்வில் பல தடவை காதல் வந்து போன பிறகும், என்னைச் சரியான பாதையில் பயணிக்க வைத்து, இந்த அளவுக்கு வளர்த்தெடுத்துள்ளது.

ஒரு காலத்தில் வாழ்வாங்கு வாழ்ந்திருந்தாலும்... ஒரு கட்டத்தில் ஒருவேளை சாப்பாட்டுக்கே வழியில்லாத நிலைக்குத் தள்ளப்பட்ட மனிதர் அவர். ஒரு நாள் பசி வயிற்றைப் பிடுங்க... கஞ்சிப் பானையைத் திறந்து பார்க் கிறார். அதில் பெருச்சாளி துள்ளிக் கொண்டிருக்கிறது. பசியோ வயிற்றைக் கிள்ளிக் கொண்டிருக்கிறது. சட்டென்று பெருச்சாளியின் வாலைப் பிடித்து தூக்கி எறிந்தவர்... கட கடவென கஞ்சியைக் குடித் திருக்கிறார். வாழ்க்கையில் தான், கடந்து வந்த வலியான பாதைகளை எனக்குச் சொல்லி தந்த அந்த மனிதர் வேறு யாருமல்ல... என் அப்பா நல்லுச்சாமி.

பெற்றோர்கள் குடும்ப கௌரவம், அந்தஸ்து என்றெல்லாம் போட்டு வைத்திருக்கும் மாயவலைகளில் இருந்து முதலில் வெளியேற வேண்டும். எந்தவித முன்முடிவுகளும் இல்லாமல், நிஜமான நண்பனாகவே பிள்ளைகளிடம் மனம்விட்டுப் பேச வேண்டும். உள்ளுக்குள் உங்களின் கௌரவம் லேசாக ஒட்டிக் கொண்டிருந்தாலும், அது எதிர்விளைவையே ஏற்படுத்தும். முழுக்க முழுக்க ஒரு நண்பனாக... தோழியாக... பேசிப் பாருங்கள்... பிள்ளைகளின் போக்கிலேயே சென்று பாருங்கள்... நிச்சயமாக மாற்றம் நடக்கும்.


இயக்குநர் சுசீந்திரன்.

ஒளிந்திருக்கும் எமன் - ஸ்கூல் புராஜெக்ட், விளையாட்டு பொம்மைகள், வீட்டுச் சுவர்...

'அம்மா... எங்க ஸ்கூல்ல புராஜெக்ட் கொடுத்திருக்காங்க. அழகா ஒரு வீடு செஞ்சுட்டு வரணுமாம்...''

''அதுக்கென்ன செல்லம், செஞ்சுட்டா போச்சு. ஏங்க... நம்ம புள்ளைக்கு புராஜெக்ட் செய்யணுமாம். பெயின்ட், பிரஷ் இன்னும் என்னென்ன வேணுமோ, எல்லாத்தையும் வாங்கிட்டு வாங்க.''

- குட்டிக் குழந்தைகள் இருக்கும் பெரும்பாலான இல்லங்களில், இன்றைக்கு இந்த உரையாடல் சர்வசாதாரணம். அதேசமயம், இப்படி பெயின்ட்டை பயன்படுத்தி செய்யப்படும் மாதிரி உருவங்கள், விளையாட்டுப் பொருட்கள் போன்றவற்றை வைத்து பள்ளிக்கூடங்களில் பாஸ் மார்க் வாங்குகிறார்களோ இல்லையோ, உடலில் பல்வேறு பிரச்னைகளை வாங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பது நிதர்சனம்!

ஐ.நா சபை அண்மையில் வெளியிட்ட அந்த அறிக்கையைப் படித்தால்... இதை நீங்களும் நிச்சயமாக உணர முடியும்.

ஆண்டுக்கு ஒரு லட்சம் உயிர்களுக்கு மேல்!

''பெயின்ட் பூசப்பட்ட பொருட்கள், விளையாட்டுப் பொருட்கள் போன்றவற்றைப் பயன்படுத்தும்போது, பெயின்ட்டில் கலக்கப்படும் காரீயத்தின் நச்சுத்தன்மை, குழந்தைகளின் உடல் நலனுக்கு கேடு விளைவிக்கிறது. கர்ப்பிணிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்துகிறது. காரீய விஷத் தன்மை காரணமாக உலகமெங்கும் ஆண்டுக்கு ஒரு லட்சத்து 43 ஆயிரம் பேர் உயிரிழக்கிறார்கள்.

இது தொடர்பாக அர்ஜென்டினா, சிலி, எத்தியோப்பியா, கானா, உருகுவே உள்ளிட்ட ஒன்பது நாடுகளில் தயாரிக்கப்படும் பெயின்ட்டை எங்கள் குழு ஆராய்ச்சி செய்தபோது, உரிய அளவுக்கும் அதிகமாக காரீயம் சேர்க்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. காரீயம் சேர்க்கப்பட்ட பெயின்ட் காரணமாக, குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் உள்ள நாடுகளில் 99 சதவிகித குழந்தைகள் பாதிப்புக்கு ஆளாகிறார்கள். காரீயத்துக்கு மாற்றுப் பொருட்கள் பல இருந்தாலும், பெயின்ட் நீண்ட நாட்கள் நிலைத்து நிற்பதற்காக காரீயத்தை அதிக அளவில் சேர்க்கிறார்கள். குறிப்பாக... மஞ்சள், சிவப்பு நிற பெயின்ட்களில் காரீயம் அதிகளவில் சேர்க்கப்படுகிறது.''

- இதுதான் ஐ.நா சபை வெளியிட்டுள்ள அறிக்கையின் சாரம். தற்போது, உலகளவில் 30 நாடுகளில் பெயின்ட் தயாரிப்பில் காரீயம் சேர்ப்பதை நிறுத்திவிட்டனர். ஆனால், காரீயம் கலக்கும் நாடுகளின் எண்ணிக்கைதான் அதிகம். வழக்கம்போல, இப்படிப்பட்ட சுற்றுச்சூழல், சுகாதாரக் கொடுமைகளை அனுமதித்து, வேடிக்கை பார்க்கும் இந்தியாவும் இந்த நாடுகளில் ஒன்று என்பது நம் சாபம்!


நாசமாகும் நரம்பு மண்டலம்!

''இன்றைக்கு 100-க்கு 99 சதவிகித பள்ளிகூடங்களில், குழந்தைகளுக்கு கொடுக்கப்படற புராஜெக்ட் வேலைகள் எல்லாமே முக்கியமா பெயின்ட் பயன்படுத்தற வகையிலதான் இருக்கு. ஆனா, இந்த காரீய கொடுமை பத்தி ஆசிரியர்களுக்கோ... பெற்றோர்களுக்கோ கொஞ்சம்கூட விழிப்பு உணர்வு இல்லைங்கறது கொடுமை'' என்று வேதனையை வெளிப்படுத்தும், சென்னை யைச் சேர்ந்த குழந்தைகள் நல சிறப்பு மருத்துவரும் ஓய்வுபெற்ற மருத்துவப் பேராசிரியருமான செல்வராஜ், தொடர்ந்தார்...

''புராஜெக்ட்களுக்காக பெயின்ட்டை பயன்படுத்துற குழந்தைகளுக்கு நரம்பு மண்டலம் கடுமையா பாதிக்கப்படுவதற்கான வாய்ப்பு இருக்கு. 5 வயசுக்கு கீழ இருக்குற குழந்தைகளுக்கு சீக்கிரமே நரம்பு மண்டல பாதிப்பு வந்துடும். இதன் காரணமா வலிப்பு, ரத்தசோகை, வயிற்றுவலி, வாந்தி, மயக்கம் மாதிரியான பிரச்னைகளும் வரும். 'இதுக்கெல்லாம் முக்கிய காரணம், காரீயம்தான்'னு நிறைய ஆராய்ச்சியில நிரூபிச்சுருக்காங்க. பெயின்ட்டை முகரும்போதோ, உடல் பகுதியில படும்போதோ பாதிப்பை ஏற்படுத்தும். ஆனா... கொஞ்சம்கூட யோசிக்காம, பெயின்ட்டை பயன்படுத்துறோம்... பயன்படுத்துறதை ஊக்குவிக்கிறோம்'' என்ற டாக்டர், தன் அனுபவத் திலிருந்து ஒரு நிகழ்வைச் சொன்னார்.


''இருபது வருஷத்துக்கு முன்ன, ஐந்து வயதுக் குழந்தையை நிமோனியா, கடுமையான வயிற்றுவலினு மருத்துவமனையில் சேர்த்தாங்க. தொடர்ந்து சிகிச்சை கொடுத் தும் குணமாகல. பிறகு, எக்ஸ்ரே எடுத்துப் பார்த்தப்ப... எலும்பு, நரம்பு எல்லாம் வெள்ளை வெளேர்னு இருந்துச்சு. பிறகு, ரத்தப் பரிசோதனை செய்தப்பதான் குழந்தையோட உடல்ல காரீயம் கலந்திருக்கிறது உறுதியாச்சு. பிறகு, தீவிர சிகிச்சை கொடுத்து, உடல்ல இருந்த காரீயத்தை வெளியேத்தி குழந்தையைக் காப்பாத்தினோம்.

சாதாரணமா, பெரியவர்களுக்கு 45 மைக்ரோ கிராம், குழந்தைகளுக்கு 5 மைக்ரோ கிராம் அளவுக்கு மேல் ரத்தத்தில் காரீயம் கலந்திருந்தா பிரச்னைதான். குழந்தைக்கு அடிக்கடி வயிற்றுவலி, மயக்கம், மந்தநிலை, வாந்தி மாதிரியான பிரச்னைகள் வந்தா, குழந்தையின் ஹிஸ்ட்ரியை வெச்சு (குழந்தை யின் வீடு இருக்கும் இடம், அதன் சுற்றுப்புறச் சூழல், சாப்பிடும் உணவு, பயன்படுத்தும் பொருட்கள் போன்றவை) ரத்தத்தில் காரீயம் கலந்திருக்க வாய்ப்பிருக்கானு கண்டுபிடிக் கலாம். காரீயம் கலந்திருந்தா, உடனடியா சிகிச்சை கொடுத்து, அந்த காரீயத்தை கொஞ்சம் கொஞ்சமாக வெளியேத்தி, பெரிய அளவிலான பாதிப்புகளைத் தவிர்க்கலாம்'' என்று சொன்னார் டாக்டர்.

ஊனமாக்கும் காரீயம்!

காரீயம், கர்ப்பிணிகள் மீது நடத்தும் தாக்குதல் பற்றி பேசிய, சென்னையைச் சேர்ந்த 'கருப்பை சிசு நிபுணர்' இந்திராணி சுரேஷ், ''பள்ளிக்கூடங்களில் குழந்தைகளுக்குத் தரப்படும் புராஜெக்ட்களை பெரும்பாலான வீடுகளில் அம்மாக்கள்தான் பக்கத்திலிருந்து முழுமையாக செய்து கொடுக்கிறார்கள். குழந்தையையும் அருகில் வைத்துக் கொண்டுதான் செய்வார்கள். இந்த அம்மாக்களில் அதிகமானோர்... இரண்டாவது/மூன்றாவது குழந்தையை வயிற்றில் சுமந்தவர்களாக இருப்பதற்கும் வாய்ப்பு அதிகம். இந்நிலையில், புராஜெக்ட் தயாரிப்பின்போது பயன்படும் பெயின்ட்டில் உள்ள காரீயமானது முகர்தல், உடல் பகுதியில் படுதல் போன்ற வழிகளால் குழந்தையையும், கர்ப்பிணியையும், வயிற்றில் இருக்கும் குழந்தையையும் எளிதில் பாதிக்கவே செய்யும்.

கர்ப்பக் காலத்தில் எதையாவது தின்றுகொண்டே இருக்க ஆசை வரும். குறிப்பாக, சுவரில் அடிக்கப்பட்டிருக்கும் சுண்ணாம்பை சிலர் நக்குவார்கள். சில பெண்கள் பெயின்ட் அடிக்கும்போது, அருகிலிருந்து அதன் வாசனையை முகர்வதில் ஆர்வமாக இருப்பார்கள். இதன் மூலமாகவும் காரீயம், உடலுக்குள் சென்று, கருவில் உள்ள சிசுவையும் பாதிக்கும். கர்ப்பிணிகளுக்கு அடிக்கடி சோர்வு வருவதோடு, சில உறுப்புகள் வளராமலோ அல்லது குறைபாட்டுடனோ குழந்தை பிறக்க வாய்ப்பு உண்டு. காரீயம் சார்ந்த பொருட்களைத் தயாரிக்கும் தொழிற்சாலைகளில் வேலை செய்பவர்கள், கர்ப்பக் காலங்களில் மிக கவனமாக இருக்க வேண் டும்'' என்று எச்சரிக்கை தந்தார்.

இந்தக் கொடுமை பற்றி பேசிய சமூக ஆர்வலரும், இரண்டு குழந்தைகளுக்குத் தாயுமான பூமா, ''காரீயம் பத்தின தகவலை கேட்டதிலிருந்தே அதிர்ச்சியா இருக்கு. இதைப் பத்தின விழிப்பு உணர்வை, எல்லாருக்கும் கொடுக்கறதோட, இது மாதிரியான பாதிப்பு உண்டாக்கக்கூடிய பொருட்களை அரசாங்கம் உடனே தடை செய்ய ணும். அதுதான் என்னை மாதிரியான பெற்றோர்களோட கோரிக்கை'' என்றார் கோபத்துடன்.

காரியத்தில் மட்டுமல்ல... இனி, 'காரீய'த்திலும் கவனமாயிருங்க!



காரீய பாதிப்பிலிருந்து தப்பிக்க..!

விலை குறைவாக இருக்கிறதே என்று வீட்டுச் சுவருக்கு தரமற்ற பெயின்ட் அடிக்க வேண்டாம்.

 பென்சில், க்ரையான், வாட்டர் கலர் போன்றவற்றில் தரமற்ற பொருட்களை குழந்தைகளுக்கு வாங்கித் தரக்கூடாது.

 வீட்டில் பெயின்ட் அடிக்கும்போது, கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தைகள் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். பெயின்ட் அடித்து முடித்த சில நாட்களுக்குப் பிறகே... அந்த இடங்களில் அவர்களை அனுமதிக்க வேண்டும்.

 பெயின்ட் அடித்த பொம்மைகள், பேட்டரி செல்கள், பென்சில், கலாய் பூசிய பாத்திரங்கள், எலெக்ட்ரானிக் பொருட்கள், மண், சால்ட்ரிங் பொருட்கள் போன்ற எது கிடைத்தாலும் குழந்தைகள் வாயில் வைக்கும். இவற்றில் கலந்திருக்கும் காரீயம், நேரடியாக உடலில் உள்ள ரத்தத்தில் கலந்து வயிற்று வலி தொடங்கி, உயிர் பலி வரை கொண்டு போய் நிறுத்திவிடும்.

'எங்களுக்குத் தெரியாதே!'

'சென்னை, தி சைல்டு ஸ்மித் அகாடமி பள்ளி'யின் முதல்வர் இந்திராதேவியிடம் பேசியபோது, ''குழந்தைகளோட அறிவு வளர்ச்சிக்குத்தான் புராஜெக்ட் செய்யச் சொல்றோம். அவங்களும் பெயின்ட் எல்லாம் பயன்படுத்தி செய்றாங்க. ஆனா, அந்த பெயின்ட்ல காரீயம் கலந்திருக்கு... அது குழந்தைகளோட உயிருக்கு பாதிப்பை விளைவிக்குதுங்கறதெல்லாம்... நீங்க சொல்லித்தான் எனக்கே தெரியுது'' என்று அதிர்ச்சி காட்டியவர்,

''இப்படிப்பட்ட ஆபத்தான பொருட்களை பெயின்ட்டில் கலந்து தயாரிக்கறதுக்கு எப்படித்தான் மனசு வருதோ தெரியல. கட்டாயம் இதுபோன்ற பொருட்களை அரசாங்கம் தடை செய்யணும். இதுபோன்ற ஆபத்தை விளைவிக்கக் கூடிய பொருட்கள் இன்னும் என்னென்ன இருக்கு என்பது பத்தின விழிப்பு உணர்வையும் அரசாங்கம் ஊட்டணும். அப்போதான் இதுமாதிரியான ஆபத்துகள்ல இருந்து நாம தப்பிக்க முடியும். 

ஆசிரியர்களும் பெற்றோர்களும் இனியாவது விழிப்பா இருந்து, தரமான பொருட்களா வாங்கி பயன்படுத்தறது பத்தி குழந்தைகளுக்கு சொல்லணும்'' என்றதோடு, ''எங்கள் பள்ளிக்கூடத்துல இதைப் பத்தின விழிப்பு உணர்வை நிச்சயமா ஏற்படுத்துவேன்'' என்றார்.

மஞ்சளிலும் காரீயம்!

பிரபல கல்லூரி ஒன்றில் ஆய்வுப் பணியை மேற்கொண்டிருக்கும் வேதியியல் நிபுணர் ஒருவர், காரீயம் பற்றி சொன்ன தகவல், நம்மை மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. தன் பெயரை வெளிப்படுத்திக் கொள்ளாமல் பேசிய அவர், ''பெயின்ட்டின் பளபளப்பு, நீண்ட ஆயுள் போன்ற வற்றுக்காகத்தான் காரீயம் கலக்கப்படுகிறது. 20 ஆண்டுகளுக்கு முன்பே, அதற்கு ஒரு வரையறை வகுக்கப்பட்டது. ஆனால், பல நிறுவனங்கள் அதையெல்லாம் பின்பற்றுவதில்லை.

நாம் உணவில் சேர்க்கும் மஞ்சளில்கூட காரீயம் கலக்கப்படுகிறது. மஞ்சள் தரமான தோற்றத்தில் காட்சியளிப்பதற்காக, அறுவடை செய்யப்பட்ட மஞ்சளின் மீது காரீயத்துகள்களைத் தெளிக்கிறார்கள். தோட்டத்தில் உள்ள மஞ்சள், கடைகளில் விற்கப்படும் மஞ்சள்தூள் ஆகியவற்றை ஆய்வு செய்து இதைக் கண்டுபிடித்தோம். உணவுக்கான மஞ்சளில் 'கர்கமின்' என்ற மூலப்பொருள் இருக்கும். இது உடல் உறுப்புகளை சுறுசுறுப்பாக வைத்திருக்கவும், நோய் எதிர்ப்புக் காரணியாகவும், மூளைச் சிதைவு போன்றவை ஏற்படாமல் இருக்கவும் பயன்படுகிறது. ஆனால், காரீயம் தெளிக்கப்பட்ட மஞ்சளில் இந்த கர்கமின் குறைவான அளவில்தான் இருக்கும். 'கர்கமின்' இல்லாத மஞ்சள்... சாப்பிட ஏற்றதல்ல என்பதோடு, அதைப் பயன்படுத்துவதால் வேறுவிதமான உபாதைகளுக்கும் அதிக வாய்ப்பு இருக்கிறது'' என்று சொன்னார்.

எது தரமான பெயின்ட்?

''தரமான பெயின்ட் என்பதை எப்படிக் கண்டறிவது?'' என்று சென்னையைச் சேர்ந்த வேதியியல் ஆய்வாளர் சரவணனிடம் கேட்டபோது, ''பெயின்ட்டை பொறுத்தவரை, அதில் கலந்துள்ள பொருட்கள் இந்த இந்த அளவில்தான் இருக்க வேண்டும் என்று எந்தவித விதிமுறைகளும் நம்நாட்டில் சரிவர வகுக்கப்படவில்லை. தரமான பொருட்களை மக்களுக்கு வழங்க வேண்டும் என்கிற நோக்கில் பெயின்ட் தயாரிப்பில் உள்ள சில நிறுவனங்கள், தாங்களாகவே முறைப்படி அதைத் தயாரிக்கின்றன. ஆனால், பெரும்பாலான நிறுவனங்கள் உயிரினங்களுக்கு பாதிப்புகளை விளைவிக்கக் கூடிய பொருட்களை அளவுக்கு அதிகமாக பெயின்ட்டில் கலப்பதுதான் நடைமுறையாக இருக்கிறது. அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற பல நாடுகளில் பெயின்ட் தயாரிப்புக்கான விதிமுறைகள் வகுக்கப்பட்டு கட்டாயமாக கடைபிடிக்கப்படுகின்றன. இங்கிலாந்து போன்ற நாடுகளில் அளவுக்கு அதிகமாக காரீயம் கலக்கப்படும் பெயின்ட்டுக்கு தடையே விதிக்கப்பட்டுள்ளது. இதேபோல் நம் நாட்டிலும் கடுமையான விதிமுறைகள் வகுக்கப்பட்டால்தான், அதனால் வருகிற பாதிப்புகளிலிருந்து நாம் தப்பிக்க முடியும்'' என்று சொன்னார்!


(Courtesy: Aval Vikatan)