ஒரு பெண்ணின் வயிற்றில் கரு உருவானதில் இருந்து குழந்தை பிறப்பு வரை 10 மாதங்களுக்கு அதன் வளர்ச்சியில் கிரகங்கள் தங்கள் ஆதிக்கத்தை செலுத்துகின்றன. அதனால், கர்ப்பம் தரித்தது முதல்... ஒவ்வொரு மாதமும் அந்தக் கருவை ஆளுமை செய்யும் கிரகத்தின் தெய்வத்தை வணங்குவது சிறப்பு.
முதல் மாதம் கரு உருவாகும். இதற்கு காரக கிரகம் சுக்கிரன். இந்திராணி, ஸ்ரீபுவனேஸ்வரி, லட்சுமியை வணங்கலாம்.
2-வது மாதம்: இந்த மாதம் கரு சற்று மென்மை தன்மையை அடைந்து இருக்கும்.
செவ்வாய் அதிபதி. முருகனையும், க்ஷேத்ர பாலகர்களையும் வணங்க வேண்டும்.
3-வது மாதம் குழந்தையின் கை, கால் உருவாகி இருக்கும். குரு அதிபதி. இந்திரன், பிரம்மா, தட்சிணாமூர்த்தியை வணங்க வேண்டும்.
4-வது மாதம் குழந்தையின் எலும்பு, நரம்பு உருவாகும் மாதம். சூரியன் அதிபதி. சிவனை வணங்கிவர, கரு நல்ல வளர்ச்சி பெறும்.
5-வது மாதம் குழந்தையின் தோல் மூலம் உடலமைப்பு உருவாகிக் கொண்டிருக்கும். சந்திரன் அதிபதி. கௌரி, துர்கை அம்மனை வணங்க வேண்டும்.
6-வது மாதம் குழந்தையின் அங்கம், ரோமம், நகம் உருவாகும். சனி அதிபதி. ஆஞ்சநேயர், பைரவர், விநாயகரை வழிபடவும்.
7-வது மாதத்தில் பிராணன் உருவாகும். புதன் அதிபதி. விஷ்ணுவை வணங்க வேண்டும்.
8-வது மாதத்தில் கருவின் உடல் வளர்ச்சி பெருகும். விநாயகரை வணங்க வேண்டும்.
9-வது மாதத்தில் கரு முழு வளர்ச்சி பெற்றிருக்கும். சந்திரனே அதிபதி. கௌரி, துர்கையை வழிபட வேண்டும்.
10-வது மாதத்தில் குழந்தை பிறந்துவிடுவதால் ஆத்ம பலம் பெறும். இதற்கு ஆத்மகாரகன் சூரியன் அதிபதி. சிவனை வழிபட வேண்டும்.
- ஜோதிடர் டி.செல்வகுமரன், சென்னை-39
Courtesy: Sakthi Vikatan