உழைப்போரை ஊக்குவியுங்கள்!
சாமி தரிசனம் முடித்து கோயிலில் இருந்து வெளியே வந்தேன். வாசலில் பிச்சைக்காரர்கள் வரிசையாக அமர்ந்திருந்தனர். அவர்களில் தள்ளாத வயதிலிருந்த ஒரு சிலரைத் தவிர, மற்றவர்கள் அனைவருமே திடகாத்திரமானவர்கள் என்பதாகவே தோன்றியது. அவர்கள் அனைவரின் தட்டுகளிலுமே காசுகள் விழுந்தபடி இருந்தன. சற்றுத் தொலைவில் எடை பார்க்கும் மெஷின் ஒன்றுடன் அமர்ந்திருந்தார் ஓர் ஏழைப் பெண். அவரை யாரும் கண்டுகொள்ளவே இல்லை. இதைப் பார்த்ததும்... 'உழைத்துப் பிழைக்க சோம்பல்பட்டு, பிச்சை எடுப்பவர்களுக்கு, புண்ணியம் கிடைக்கும் என்கிற நம்பிக்கையில் தர்மம் செய்கிறார்கள். ஆனால், உழைத்துதான் வாழவேண்டும் என்கிற முனைப்போடு தொழில் செய்து பிழைக்க நினைக்கும் அந்தப் பெண்ணை ஊக்குவிக்கத் தவறுகிறார்களே' என்று வேதனையாக இருந்தது. தேவையோ, இல்லையோ, ஒரு ரூபாய் காசு கொடுத்து எடை பார்த்தால், அவருக்கு ஒரு சொற்ப வருமானம் கிடைக்கும் என்று சொல்லி, உடன் வந்த அனைவரையும் எடை பார்க்க வைத்து, காசைக் கொடுத்துவிட்டு திரும்பியபோது, மனதில் திருப்தி அலைகள்!
ஊதுபத்தி விற்கும் தாத்தா, சுட்டிகளுக்கான ஸ்டிக்கர்கள் விற்கும் பெண்... இப்படிப்பட்ட உழைக்கும் வர்க்கத்துக்கு மரியாதை செய்யுங்களேன்!