நேம்லெஸ் 200
எங்கள் வீட்டு திருமண நிகழ்வின்போது, மொய் எழுதும் வேலையில், கல்லூரியில் முதலாமாண்டு படிக்கும் என் அக்கா மகனை அமர்த்தினோம். மிக அழகான கையெழுத்துடன் மொய் எழுத ஆரம்பித்தவன், திருமணம் முடிந்ததும் நோட்டை விசேஷ வீட்டினரிடம் ஒப்படைத்தான். இரண்டு, மூன்று நாட்கள் சென்ற பின் நிதானமாக நோட்டை புரட்டிப் பார்த்தால்... ராமநாதன் - 200, சொக்கலிங்கம் - 500 என்று தொடர்ந்து பெயர்கள் வந்துகொண்டிருக்கையில்... இடை இடையே 'நேம்லெஸ் (Nameless) 200' என்று குறிப்பிடப்பட்டிருந்தது. புரியாமல் அவனிடமே போன் செய்து கேட்க, ''ஆமாம் சித்தி. கூட்ட நெரிசல்ல சிலரோட பெயர் தெளிவா கேட்கல... அவங்க எல்லாம் எந்த வகை உறவுனு எனக்கு அடையாளமும் தெரியல. அதனால அவங்களை எல்லாம் 'நேம்லெஸ்'னு எழுதிட்டேன்'' என்றான் சாதாரணமாக.
சொந்தபந்தங்களை தெரிந்த பெரியவர்களிடம் மட்டுமே மொய் எழுதும் பொறுப்பை ஒப்படைக்க வேண்டும் என்பது அப்போதுதான் புரிந்தது!