Friday, September 7, 2012

எங்கும் எதிலும் கிருமிகள்

எங்கும் எதிலும் கிருமிகள்

 

மக்களே.... நிலாவை தொட்டது யாருன்னு கேட்டா டக்குன்னு பதில் சொல்லுவது போல, கிருமிகள் எங்க அதிகமாக இருக்கும்? அப்படின்னு கேட்டா சும்மா யோசிக்காம டக்குன்னு பதில் சொல்லிடுவிங்க...டாய்லெட்டில் தான் இருக்குமுன்னு.  ஒரு விளம்பரத்தில் நம்ம விஜய் ஆதிராஜ் ஒரு பிகர் கூட வந்து ஒரு அக்கா வீட்டுல உள்ள பாத்ருமை கிளின் பண்ணிட்டு போவாங்க...ஆனால் அந்த டாய்லெட்டை விட மோசமான அதிக கிருமிகள் இருக்கும், நாம அதிகமா பயன்படுத்தும் இடங்கள் எது எதுன்னு பாக்கலாமா?.

1. ஹோட்டல்களின் மெத்தை விரிப்புகள்: சில ஹோட்டல்களில் மெத்தை விரிப்புகளை தினமும் மாத்த மாட்டாங்க. இதுக்கு பெரிய 5 ஸ்டார் ஹோட்டல்கள் கூட விதிவிலக்கு இல்லை. லேட்டஸ்டா இது போல ஒரு 5 ஸ்டார் ஹோட்டலில் தான் ரொம்ப நாளைக்கு பின்ன பாக்ஸர் மைக் டைசனின் டி என் ஏ வை ஒரு மெத்தை விரிப்புலருந்து எடுத்தாங்க. அந்தளவுக்கு துவைக்காத மெத்தை விரிப்புகளில் மோசமான கிருமிகள் இருக்க வாய்ப்பு இருக்குன்னு சொல்லத்தான் இந்த உதாரணம். அதனால ஹோட்டலுக்கு போனா துவைக்காத மெத்தை விரிப்புகள் இருந்தா உடனே மாத்த சொல்லுங்க. 

 2. டாய்லெட் இருக்கும் அறையின் தரை: நாம வெளி இடங்களுக்கு போகும் போது..நம்ம பையை பக்கத்துலையே வச்சுப்போம்..சில சமயம் டாய்லெட் போனா கூட அங்கயும் எடுத்துட்டு போயி டாய்லெட் பக்கத்துல தரையில் வச்சுப்போம். அதுமாதிரி செய்யாதிங்க...ஏன்னா? டாய்லெட்டை விட டாய்லெட் தரையில்தான் அதிக கிருமிகள் இருக்காம்.

3. ஏ டி எம் மெசின்: கிருமிகள் அதிகமா இருக்கதுல மூனாவது இடம் ஏ டி எம் மெசினின் தொடு திரையும் key போர்டுதான். இந்த  key போர்டுல பூசப் பட்டிருக்கும் வேதிப் பொருள் ஒரு ஸ்லொவ் பாய்சனாம். மெசினை பயன்படுத்திய உடன் விரலை கண்ணு காது வாயில வச்சுடாம உடனே கழுவும் வேலைய பாருங்க.

4. ஆபீஸ் டெலிபோன்: பல பேர் பயன்படுத்தும் ஆபீஸ் டெலிபோனில் 25000 வரையான எண்ணிக்கையில் கிருமிகள் இருக்கிறதா அமெரிக்கா பல்கலை கழகம் நடத்திய ஆய்வு சொல்லுது.

5. ஹோட்டல் மெனு கார்ட்ஸ்: இந்த மெனு கார்ட்சை அப்போபோ ஆன்டி பாக்டீரியா திரவம் வச்சு தொடைக்கணும்...ஆனால் யாரும் செய்யவதில்லை. அதை தொட்டுட்டு சாப்பாடு ஆர்டர் பண்ணி சாப்பிட்டா கிருமிகள் நேரா வயித்துக்குத்தான்.

6. ஹோட்டல் டேபிள் வேர்ஸ்: சாப்பாட்டு மேசையில்  உப்பு, சக்கரை,ஊறுகா வைத்திருக்கும் பாட்டில்கள் அல்லது டப்பாக்களில் ஏகப்பட்ட கிருமிகள் இருக்காம்.

7. ட்ராலிகள்: பெரிய பெரிய சூப்பர் மார்கெட்டில் அல்லது ஏர்போர்டில் ட்ராலிகள் வச்சுருப்பாங்க...அந்த ட்ராளிகலிலும் கிருமிகள் அதிகம்.சில பேர் குழந்தைகளை அதுல உக்கார வச்சு தள்ளிகிட்டு போவாங்க அதுமாதிரி செய்யாதிங்க.

8. கார்: காரில் உள்ள ஸ்டியரிங் வீலில் கிருமிகள் அதிகம். சில பேர் சாப்பிட்டுக்கிட்டே வண்டி ஓட்டுவாங்க. பின்ன ஸ்டியரிங் வீலில் இருக்கும் கிருமிகள் அப்படியே வயித்துக்குத்தான் ஸ்ட்ரெயிட்டா...

9. சமையல் அறை: சமைக்கற இடம், பாத்திரம் கழுவும் பேசணில் அதிகமா கிருமிகள் இருக்குமுன்னு எல்லாருக்கும் தெரியும். சுத்தமா வச்சுக்கணும் என்பதும் தெரியும்தானே..

10.ஜிம்: பல பேர் பயன்படுத்தும் உடற்பயிற்சி உபகரணங்களில் கிருமிகள் இருப்பது இயற்கைதானே.

11. பூங்கா: பறவைகள் எச்சம் இருக்கும்... பூங்காக்களில் குழந்தைகள் விளையாடும்...ஊஞ்சல், சறுக்கு மரம், சாய்ந்தாடும் பலகைகளில் கிருமிகள் எப்போதும் இருக்கும்.

இதுல சொன்ன நிறைய இடங்களுக்கு நாம போயித்தான் ஆகணும். நாம போகும் அந்த இடங்களையும் அந்த இடத்தில் உள்ள பொருள்களையும் நாம கழுவிக்கிட்டே இருக்க முடியாது. ஆனால் பயன்படுத்துவதற்கு முன்னரும் பயன் படுத்திய பின்னரும் நம்ம கைய கழுவிக்கலாம்தானே....