திருமணப்பொருத்தம் பார்ப்பது
என்றால் அநேக பொருத்தங்களைப்
பலவிதமாக பார்க்கலாம். உதாரணமாக கீழ்கண்ட பொருத்தங்களை
ஒரு ஜோதிடரிடம் சென்று பார்க்கலாம்.
1. ஆண்,பெண் ஜாதகங்களின்
சுப, பாவ, சம நிலை ?
2. நக்ஷத்திரப் பொருத்தம்.
3. செவ்வாய் தோஷப் பொருத்தம்
4. நாக தோஷம் / காலசா;ப்ப nhதஷம்
5. லக்னப் பொருத்தம்
/ லக்னாதிபதிப் பொருத்தம்;
6. ராசிப் பொருத்தம்
/ ராசியாதிபதிப் பொருத்தம்
7. ஆயுள் பொருத்தம்
/ நாடிப் பொருத்தம்
8. புத்திரபாவப் பொருத்தம்
9. கூட்டு கிரகப் பொருத்தம்
10. களத்திர தோஷம்/
ஷஷ்டாஷ்டகம் / பஞ்சநவமம்
11. உறவுப் பொருத்தம் /
விதிவழிப் பொருத்தம்
12. தசா சந்திப்பு
இவ்வாறு பலவித பொருத்தங்களை
தனித்தனியாகப் பார்க்கலாம்.
திருமணப் பொருத்தத்தை கீழ்கண்ட
முறையிலும் பார்க்கலாம்.
1. நக்ஷத்திரப் பொருத்தம்
2. செவ்வாய் தோஷம்
3. தசா சந்திப்பு
4. பாவ சாம்யம் (தோஷ சாம்யம்)
இந்த 4 வகை பொருத்தங்களும்
கட்டாயம் பார்க்கவேண்டும்.
இவை திருப்திகரமாக அமைந்தால்
மட்டுமே விவாகம் செய்யலாம்.
இந்த 4ல் ஏதாவது ஒன்று சரியாக
பொருந்தாது போனால் திருமணம்
செய்யக் கூடாது,
மேலும் இந்த முறையில் துல்லியமாகவும்,
சீக்கிரமாகவும், குறைந்த செலவிலும்
முடிவைத் தெரிந்து கொள்ளலாம்.
திருமணப்பொருத்தம் பார்ப்பதில்
உள்ள விபரங்கள் பல பெற்றோர்களுக்கு
தெரிவதில்லை. ஆகையால் நக்ஷத்திரப் பொருத்தம்,
செவ்வாய் தோஷம், தசாசந்திப்பு,
பாவசாம்யம் (தோஷசாம்யம்), நாகதோஷம் /
காலசர்ப்ப தோஷம் இவைகளைப்பற்றி
தமிழில் வெளியிட்டுள்ளோம்.
அனைவரும் படித்து பயன்
பெற அழைக்கின்றோம்.
|