Wednesday, November 18, 2009

உங்கள் மனம் அசைந்தது


உங்கள் மனம் அசைந்தது


மாலை வேளை....வேதாந்த ஆச்ரமம் ரம்யமாக இருந்தது...

நந்தவனத்துடன் கூடிய ஆச்ரமம் முன்பு மாணவர்கள் அமர்ந்து விவாதித்து கொண்டிருந்தனர்.

தர்க்கம் , மீமாம்சை என பல வேத கருத்துக்களை மாணவர்கள் அந்த ஆசிரமத்தில் பயின்று வந்தார்கள்.

அப்பொழுது தென்றல் வீசியது...நந்தவனத்தில் இருந்த மலர் கொடி அசைந்தது...


இதை கண்ட மாணவர்களுக்குள் தர்க்கம் ஆரம்பித்தது.

"காற்று வந்ததும் கொடி அசைந்ததா?" என ஒரு பகுதியும் ,

"கொடி அசைந்ததும் காற்று வந்ததா? " மற்றொரு பகுதியும் என மாணவர்கள் இரு பகுதியாக பிரிந்தனர்.

இந்த தர்க்கம் முற்றிபோகவே , சப்தம் கேட்டு குரு நாதர் வெளியில் வந்தார்.

இரு குழுவின் தர்கத்தையும் கேட்டார்.

பின்பு அனைவரையும் பார்த்து கூறினார் ..."பிரிய ஆன்மாக்களே...! கொடியும் அசையவில்லை, கற்றும் வீசவில்லை... உங்கள் மனம் அசைந்தது , அதனால் எண்ணம் உங்கள் மனதில் வீசியது. "

வேதாந்த மாணவர்கள் உண்மையான வேத சாரத்தை உணர்óதார்கள்.