Wednesday, September 23, 2009

வாழ்வே ஒரு அதிசயம்....

வாழ்வே ஒரு அதிசயம்....

இது உங்களுக்கு அனுபவமாக ஆகாவிட்டாலும் சரி, அல்லது இது உங்களுக்கு அனுபவமாக ஆக வேண்டுமானாலும் சரி, இந்தக் கட்டுரை உங்களுக்குத்தான்.

ஒட்டகக்குட்டி, தன் தாயிடம் கேட்டது, ``நமக்கு மட்டும் கால்கள் இவ்வளவு நீளமாக இருக்கின்றனவே, ஏன்?''

தாய் ஒட்டகம், ``பாலைவன மண்ணில் நடக்கும்போது கால்கள் அந்த மண்ணுக்குள் புதைந்து விடாமல் இருப்பதற் காகத்தான் நமக்கு இவ்வளவு பெரிய கால்கள்'' என்றது.

ஒட்டகக்குட்டி, ``அது சரி நமக்கு கண் இமைகளில் இருக்கும் முடிகள் மட்டும் இவ்வளவு நீளமாக இருக்கிறதே, ஏன்?'' என்று கேட்டது.

தாய் ஒட்டகம், ``பாலைவனத்தில் காற்று வீசிக் கொண்டேயிருக்கும். புழுதியும், தூசும் பறந்து கொண்டேயிருக்கும். அவற்றால் நம் கண்கள் பாதிக்கப்படாமல் இருப்பதற்காகத்தான் இவ்வளவு நீளமாக இமை முடிகள்'' என்றது.

ஒட்டகக்குட்டி, ``அம்மா அதெல்லாம் சரிதான். நம்முடைய தோல் மட்டும் இவ்வளவு சொரசொரப்பாக இருக்கிறதே, ஏன்?'' என்று கேட்டது.

தாய் ஒட்டகம், ``பாலைவனத்தில் மிக அதிக குளிரும், மிக அதிக வெயிலும் மாறி மாறி வந்து கொண்டேயிருக்கும். அதற்கெல்லாம் நாம் தாக்குப்பிடிக்க வேண்டாமா? அதற்காகத்தான் இவ்வளவு கடினமான, சொரசொரப்பான தோல்கள்'' என்றது.

ஒட்டகக்குட்டி, ``இதெல்லாம் எனக்குப் புரிகிறது. நீ சொல்கிறபடி பார்த்தால் நாம் பாலைவனத்தில் தானே இருக்க வேண்டும். இங்கே, இந்த மிருகக்காட்சி சாலைக்குள், அதுவும் கூண்டுக்குள் இருக்கிறோமே! ஏன்?''

குட்டியின் இந்தக் கேள்விக்கு, என்ன பதில் சொல்வது என்று தெரியாத தாய் ஒட்டகம் திருதிருவென்று விழித்துக் கொண்டிருந்தது!


இப்படித்தான் ஒவ்வொரு மனிதரின் நிலையும் இருக்கின்றது.

ஒருவேளை உங்களின் குழந்தை, ``அப்பா எதற்காக நமக்கு இவ்வளவு பெரிய மூளையை இறைவன் தந்திருக்கிறார்?'' என்று கேட்டுவிட்டால் நம்மில் பலரால் பதிலே சொல்ல முடியாது.

ஏனென்றால் விஞ்ஞானிகளாலேயே இதற்கு பதில் சொல்ல முடியவில்லையே.

ஐன்ஸ்டீன் கூட 13% மூளையை மட்டும்தான் பயன்படுத்தியிருக்கிறார் என்று சொல்லும் விஞ்ஞானத்தால், ``மீதமுள்ள 87% மூளை எதற்காக?'' என்ற கேள் விக்கு பதில் சொல்ல முடிவதில்லை.

Your Brain is wired for 24 Hrs bliss and radiate enlightment

உண்மையில் உங்களுடைய மூளை வடிவமைக்கப்பட்டிருக்கும் விதமே 24 மணி நேரமும் ஆனந்தத்தை அனுபவிப்பதற்காகத்தான். வடிவமைக்கப்பட்டிருக்கிறது. ஜீவன் முக்தியை கதிர் வீசுவதற்காகத்தான் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

ஆனால் இன்று உங்களின் நிலைமை அப்படி இல்லை.

ஒருவேளை ``எப்போதும் ஆனந்தமாக இருப்பது ஞானிகளுக்கு வேண்டுமானால் சாத்தியமாக இருக்கலாம். என்னைப் போன்ற சாமான்யமானவர்களுக்கெல்லாம் எப்படி அது சாத்தியமாக முடியும்?'' என்று கேட்பவராக நீங்கள் இருந்தால்கூட, நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய உண்மை, உங்களின் நரம்பு மண்டலம்கூட எப்போதும் ஆனந்தமாயிருப்பதற்காக வடிவமைக்கப்பட்ட ஒன்றுதான். அதில் சந்தேகமே வேண்டாம்.

அப்புறம் ஏன் நம் நரம்புகளோ மனமோ அப்படியிருப்பதில்லை? ஏன் எப்போதும் உற்சாகமாய் இருக்க முடிவதில்லை?

பத்துமுதல் பதினைந்து சதவிகிதத்திற்கு மேல் மூளையையோ, உடலையோ பயன்படுத்த அவசியமே இல்லாத வாழ்வு முறையில் மனிதர்கள் சிக்கிக் கொண்டதுதான், மனிதகுலத்திற்கு இழைக்கப்பட்டிருக்கும் மாபெரும் தீங்கு! உங்களை சாமான்யமானவர், சாதாரணமானவர் என்று நீங்கள் நம்புவதற்கும் காரணம் இதுதான். எப்போதும் ஆனந்தமாய் இருப்பதற்கு பழக்கப்பட்ட நரம்புகள், அதற்கு நேர் எதிரான வாழ்வு முறையில் சிக்கியிருப்பதனால்தான் இவ்வளவு சீர்கேடுகள். துக்கமாயிருப்பதுதான் உங்களின் நரம்புகளுக்குப் புதிய அனுபவம்.

ஒட்டகம் மிருகக்காட்சி சாலைக்குள் மாட்டிக்கொண்டதுபோல்தான் இன்றைய மனிதர்கள் மாட்டிக் கொண்டிருக்கிறார்கள். தவறான வாழ்வு முறையிலிருந்து நீங்கள் உங்களை விடுபடுத்திக் கொள்வது மட்டும்தான் தீர்வாக இருக்க முடியும்.

புலிக்குட்டியை கூண்டில்  அடைத்து வளர்த்தால், அது ஆட்டுக் குட்டியைப் போல வளர்ந்து விடும். அதனுடைய உடலில் உள்ள பல வீர்யம் மிக்க தசைகள் வலுவிழந்த தசைகளாகிவிடும். நாளடைவில் அந்தத் தசைகள் எதற்கும் பயன்படாத தசை நார்களாக மாறிவிடும்.

இதற்கு ஒரே தீர்வு அடைக்கப்பட்டிருக்கும் புலிக் குட்டிக்கு, அது வாழ வேண்டிய உண்மையான வாழ்வை மீட்டுத் தருவதே. உங்களின் உண்மையான வாழ்வை மீண்டு பெறுவதே உங்களுக்கான தீர்வாக இருக்க முடியும். அதற்கப்புறம்தான் எதற்காக உங்களுக்கு இவ்வளவு பெரிய உடல் தரப்பட்டது? ஏன் அதற்குள் இவ்வளவு உறுப்புகள் வைக்கப்பட்டன? என்ற எல்லாமே புரிய ஆரம்பிக்கும். உங்களுக்குள் இருக்கும் அதிசயங்கள் புரிய ஆரம்பிக்கும். வாழ்வே ஒரு அதிசயம் என்பது அனுபவமாகும்..



Add whatever you love to the Yahoo! India homepage. Try now!