வரமல்ல... சாபம்.
நினைத்தபோது நினைத்ததைச் செய்வதற்கான எல்லா சுதந்திரமும் உங்களுக்கு இருந்ததென்றால்... தெளிவாகத் தெரிந்து கொள்ளுங்கள், இது வரமல்ல... சாபம்.
நீங்கள் அனுபவிக்கும் சுதந்திரம் உங்களின் சுதந்திரமல்ல, உங்களுடைய மனதின் சுதந்திரம். நீங்கள் அனுபவிக்கும் வாழ்வு உங்களின் வாழ்வல்ல, அகங்காரத்தின் வாழ்வு!
1. உணவு உண்பது உங்க ளின் விழிப்புணர்விற்கு உட்பட்டி ருக்கிறதா? இதற்குமேல் உடலுக்கு உணவு தேவையில்லை என்று தோன்றும் போதே நிறுத்த முடிகிறதா?
பதில் : ஆம் என்றால் உங்களின் வாழ்வு முறை சரியான வாழ்வு முறை.
2. தேவையற்ற நேரங்களில், அதுவும் வேலை செய்யவேண்டிய நேரத்தில் தூக்கம் வருகிறதா?
பதில்: ஆம் என்றால் உங்களின் வாழ்வு முறை தவறான வாழ்வு முறை.
3. மற்றவர்களின் பாராட்டை எதிர்பார்த்து நிற்குமளவிற்கு, இன்னும் பக்குவமடையாத உணர்வு எனக்கு இருக்கத்தான் செய்கிறது. மற்றவர்கள் என் விருப்பத்திற்கு எதிராக நடந்தால் நான் ஆடிப்போகிறேன். எனக்கு கோபம் வருகிறது.
இதற்கு நீங்கள் ஆம்! என்றால், தெளிவாகத் தெரிந்துகொள்ள வேண்டும். வாழ்வு முறை மிகவும் தவறான முறையில் இருக்கிறது.
சரியான வாழ்வு முறை என்பது ஒவ்வொருவரும் கண்டுகொள்ள வேண்டிய ஒன்று.
வெளியுலக சுதந்திரத்தை விட ஆழமான உள்ளுலக சுதந்திரம் கொண்டதாக இருக்கும் வாழ்வு முறை, சரியான வாழ்வு முறை! அதற்கான வாழும் சூழலை உருவாக்க வேண்டும்.
உலகை மாற்ற முடியாது. ஆனால், உணர்வை மாற்ற முடியும்.
உங்களின் வாழ்வை நீங்கள் எதிர்பார்த்தபடி மாற்றியமைத்து கஷ்டப்படாமல் வாழ்வின் போக்கிற்குத் தகுந் தாற்போல் உங்களின் உணர்வை மாற்றி அமைத்துக் கொண்டு வாழும் வாழ்வு முறைதான் மிகச் சரியான வாழ்வுமுறை.
அதற்கான வாழ்க்கைக் கல்வியை ஒவ்வொருவரும் தன் வாழ்வில் சேர்க்க வேண்டும்.
எப்போதும் உங்களின் உணர்வை உற்சாகமாகவே வைத்திருக்கும் வாழ்வு முறை தான், சரியான வாழ்வு முறை! அதற்கான உடலையும் மனதையும் உருவாக்க வேண்டும்.
இதெல்லாம் புரிகிறது. எப்படி இதை என் வாழ்வில் நிகழ்த்துவது? என்பது புரிய வில்லை... என்பது உங்களின் எண்ணமாக ஒருவேளை இருந்தால் உங்களுக்கான உடனடித் தேவை தியானம் அல்ல. ஜீவன் முக்தி.
ஜீவன் முக்தியை வாழ வைக்கும் தியானங்களை இன்றிலிருந்து வாழ்வில் சேர்த்தாலே உங்களின் வாழ்வு முறை சரியான வாழ்வு முறையாகிவிடும்.
இந்தப் புரிந்து கொள்ளுதல் உருவாவதே ஒரு ஆழமான தியான ரஸவாதம்.
.