குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம், இளைஞர்களுக்குச் சொன்ன யோசனைகளில் ஒரு ஐந்து மட்டும் இங்கே…
1) எந்த ஒருவரின் வாழ்க்கையிலும் ஏமாற்றமும், மன அழுத்தமும் இருக்கவே செய்யும்; அதற்காகக் கவலைப்பட்டுக் கொண்டிருப்பதை விட்டுவிட்டு, அவற்றை எப்படி அணுகுவது எனக் கற்றுக் கொள்ளுங்கள்.
2) உங்கள் திறமை, பலம் இவற்றை நம்புவதோடு, உங்கள் மனம் சொல்வதையும் நம்புங்கள்!
3) துவண்டு போகாதீர்கள்; அடுத்த வாய்ப்பு என்பது எல்லோருக்கும் எப்போதும் உண்டு!
4) முயற்சியை ஒருபோதும் கைவிடாதீர்கள்; ஒருவேளை வெற்றி கிடைக்கவில்லை ஆயினும், அதற்காக நீங்கள் மேற்கொண்ட முயற்சிகள் உங்களைத் திருப்திப்படுத்தும்; சந்தோஷப்படுத்தும்!
5) என்னையே உதாரணமாக எடுத்துக் கொள்ளுங்கள். இரண்டு குழந்தைகளுக்குத் தாயான என்னாலேயே பதக்கம் வெல்ல முடிகிறதென்றால், உங்களால் ஏன் முடியாது?