.
ஞானியிடம் ஓர் இளஞன் ,''எப்போதும் நீங்கள் சிரித்தமுகத்துடன் இருக்கிறீர்கள். கோபம் கொள்வதே இல்லை. இப்படி நானும் இருக்க முடியுமா? என்று கேட்டான்.
'ஞானி சொன்னார், ''அது இருக்கட்டும். இன்னும் ஏழு நாட்கள்தான் நீ உயிருடன் இருப்பாய். ஏழாவது நாள் சூரியன் மறையும்போது நீ மரணமடைவாய்,'' என்றார்.
அவன் பதட்டத்துடன் உடனே அங்கிருந்து புறப்பட்டான். அவனுக்கு சாவு நெருங்கிக் கொண்டிருந்தது.
எதுவும் இனி செய்ய முடியாது என்ற தெளிவான முடிவுக்கு அவன் வந்ததும்,
அவனுக்குள் ஒரு விசித்திரம் நிகழ்ந்தது.
அவன் யோசித்தான்,
''ஞானி தினமும் தியானம் செய்ய சொல்வாரே. நாம்கூட, இப்போது என்ன அவசரம்,வயதான காலத்தில் பார்த்துக் கொள்ளலாமே என்று நினைத்தோம்.
பல ஆண்டுகள் தள்ளிப் போட்டதை ஏன் இப்போது ஆரம்பிக்க கூடாது ?'' இரண்டு தினங்களில் முழுமையான மௌனத்தில் ஆழ்ந்து விட்டான்.
நான்காவது நாள், அவன் முகம் அழகாக, கருணை ததும்ப ஒரு ஞானி போலக் காட்சி அளித்தது. ஏழாவது நாள் வந்தது. சூரியன் மறையும் நேரமும் வந்தது.
அந்தத் தருணத்தில் ஞானி அங்கு வந்தார்.
அவனிடம் சொன்னார், ''நீ சாக மாட்டாய். இன்னும் உனக்கு நீண்ட ஆயுள் உள்ளது. நீ கேட்ட கேள்விக்கு பதில் அளிக்க எனக்குத் தெரிந்த வழி இது தான்.
எப்போதும் மகிழ்ச்சியுடன் இருக்க முடியும் என்ற அனுபவத்தை உனக்குக் கொடுக்க விரும்பினேன்.
இந்த ஏழு நாட்களும் உனக்கு அந்த அனுபவத்தைத் தந்து விட்டது. உனக்கு வேண்டிய பதில் கிடைத்து விட்டது அல்லவா?'' என்றார்.
அவன் உடனே ஞானியின் பாதத்தைத் தொட்டு வணங்கினான்.
"நாம் அழிவற்றவர் என்ற ஒர் எண்ணம் இருப்பதனாலேயே அனைத்து முட்டாள் தனங்களை தொடர்கிறோம். எப்போது அடுத்த கணமும் இந்த உலகில் இருந்து மறையலாம் என்ற உணர்வு ஆழமாக தோன்றில் நாமும் மகான்தான். "---ஜென்