புத்தகத்தின் பெயர்:குட் பாஸ், பேட் பாஸ் (Good Boss, Bad Boss)
ஆசிரியர்: ராபர்ட் ஐ ஸட்டன் (Robert Sutton)
பதிப்பாளர்: Little, Brown Book Group
நாம் அறிமுகப் படுத்தும் புத்தகம் ராபர்ட் ஐ ஸட்டன் எழுதிய 'குட் பாஸ், பேடு பாஸ்' என்னும் புத்தகத்தை.நல்ல பாஸாக இருப்பது எப்படி என்பதையும்; கெட்ட பாஸ்களிடம் இருந்து கற்றுக் கொண்டு, அப்படியில்லாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதையும் சொல்லும் புத்தகம் இது.
அடுத்தவர்களுடைய தவறு களில் இருந்து கற்றுக்கொண்டு வாழ முற்படுங்கள். ஏனென்றால், உங்கள் தவறுகளில் இருந்தே கற்றுக்கொண்டு வாழும் அளவுக்கு உங்களுக்கு வாழ்நாள் இருக்காது என்ற பொன்மொழி யின் அடிப்படையில் 'கெட்ட பாஸ்' செய்யும் தவறுகளில் இருந்து, நீங்கள் நிறையவே கற்றுக் கொண்டு சிறந்த பாஸ் ஆகலாம் என்கிறார்.
உதாரணமாக, ஒரு நிறுவனத் தின் அதிகாரி, கூட்டம் நிறைந்த ரயில் வண்டி ஒன்றில் செல்போனில் தனது நிறுவனத் தில் வரவிருக்கும் லே-ஆஃப் (ஆட்குறைப்பு) குறித்து உரக்கப் பேச, அந்த செய்தி எல்லோருக்கும் பரவி, கடைசியில் நிர்வாகத்திடம் மன்னிப்பு கேட்கும் அளவுக்கு போனதாம். நாலு பேர் முன் ரகசியம் பேசாதே என்பதை அந்த அதிகாரியிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டுமே தவிர, அந்த அதிகாரிபோல, நீங்களும் அதே தவறை செய்து தெரிந்துகொள்ள வேண்டும் என்பதில்லை என்கிறார் ஆசிரியர்.
பாஸ்கள் முக்கியமானவர்கள். ஏனென்றால், எல்லா பணியாளர் களுக்கும் பாஸ் இருக்கிறார்கள். சில பாஸ்கள், பாஸ்களாகவும் பணியாளர்களாகவும் இரட்டை வேடம் ஏற்று இருக்கிறார்கள். அதனாலேயே பாஸ்கள் முக்கி யமானவர்களாக ஆகிவிடுவார் கள். மிலிட்டரியாகட்டும், கப்பலாகட்டும், ஸ்டார் ஹோட் டலின் சமையலறையாகட்டும் பாஸ் என்பது ஒரு தேவையான கட்டாயப் பதவியாக இருக்கிறது
.
இந்தப் புத்தகத்தை எழுதும் முன், கரடுமுரடாக நடந்து கொள்கிற பாஸ்களைக் கண்ட றிந்து, அவர்களை வேலையில் இருந்து தூக்குவது எப்படி என்பதைச் சொல்லும் புத்தகத்தை எழுதினாராம் ஆசிரியர்.
அந்தப் புத்தகத்துக்கு அமோக வரவேற்பு கிடைத்ததாம். அதிலும், அந்தப் புத்தகம் வெளிவந்த உடனே எங்குச் சென்றாலும், அவரை சந்தித்து பேசும் நபர்களெல்லாம் தங்கள் அலுவலகத்தில் இருக்கும் கரடுமுரடான பாஸ்களைப் பற்றிக் கதைகதையாய் சொன்னார்களாம். ஸ்டார் பக்ஸிலில் காபி போடும் நபரிலிருந்து நியுயார்க் போலீஸில் வேலை பார்க்கும் சார்ஜென்ட் வரை எல்லா இடத்தில் வேலை பார்ப்பவர்களிடமும் இது மாதிரி பல கதைகள் இருந்தன என்கிறார் ஆசிரியர்.
குட் பாஸ், பேட் பாஸ் புத்தகம் பெஸ்ட் மற்றும் வொர்ஸ்ட் பாஸ்களின் இடையே இருக்கும் வித்தியாசத்தைச் சொல்லும் புத்தகம் என்று சொல்லும் ஆசிரியர், பொறுப்பை எடுத்தல், முடிவுகளை எடுத்தல், சொல்லை செயலாக்குதல், மோசமான வேலைகளையும் நேர்த்தியாய் செய்தல் போன்ற முக்கியமான விஷயங்களில் இந்த இருவரின் செயல்பாடுகளின் வித்தியா சத்தை உணர்த்த முயல்கிறார்.
சின்னச் சின்னச் சரியான விஷயங்களைச் செய்வதன் மூலமே ஒருவர் சிறந்த பாஸாக ஆக முடியும் என்று சொல்லும் ஆசிரியர், அதற்கான வழிகளை இந்தப் புத்தகத்தில் சொல்கிறார்.
தன் நண்பன் முதன் முதலாக வேலைக்குச் சேர்ந்த நிறுவனத்தில் அவருக்குக் கிடைத்த முதல் இரண்டு பாஸ்களின் குணாதிசயத்தைச் சுவையாக ஒப்பிடுகிறார் ஆசிரியர். முதல் பாஸ் பணியாளர்களைக் கண்டு கொள்ளவே மாட்டாராம். திடீரென வந்து, அட, இதைச் செய்யுங்கள். அதைச் செய்யுங்கள் என ஏவி வேலை வாங்கி வெற்றியை அடைந்துவிட்டுச் சென்றுவிடுவாராம்.
அதன் பின்னர் நீண்ட நாட்கள் கண்டு கொள்ளாமல் இருப்பாராம். அவரின் கீழே வேலை பார்க்கும் அனைவருமே, என்ன ஒரு ஆளையா இவர் என வெறுத்துப் போய் இருப்பார்களாம்.
தன் குழுவினரை கிட்டத்தட்ட ஒரு குதிரைபோல் நடத்தும் குணம். திடீரென வந்து குதிரை யில் ஏறி, வேகமாய் ஓட்டி, போருக்குச் சென்று, போரை தலைமை தாங்கி நடத்தி, வெற்றி பெற்று அதைக் கொண்டாடி விட்டுப் பின்னர் குதிரையை லாயத்தில் கட்டிப்போட்டு விடுவதைப் போன்ற ட்ரீட்மென்ட் இது. மனிதர்கள் குதிரைகளா என்ன? என்கிறார் ஆசிரியர்.
சில நாட்களில் அவர் பதவி உயர்வு கிடைத்துப் போக, அடுத்து வந்த பாஸ் மொத்தத்தில் வேறு மாதிரியானவராக இருந்தாராம். எல்லோரிடமும் பேசி பழகி, அவர்கள் எதில் சிறந்தவர்களாக இருக்கின்றனர் என்பதைக் கண்டறிந்து அவர் களுடைய திறமைக்கும் பிடித்தத் துக்கும் ஏற்ற வேலைகளைத் தந்து ஊக்குவித்தாராம். இதனாலேயே தாக்குப்பிடிக்குமா என்ற நிலை யில் இருந்த அந்த டிவிஷன் நன்றாக நடக்க ஆரம்பித்ததாம்.
முந்தையவரோ, டிவிஷனே நஷ்டத்தில் இருக்கிறது. உங்களுக்குச் சம்பள உயர்வு ஒரு கேடா என்ற எண்ணம் கொண்டு, நடக்க, பிந்தையவரோ மொத்த நிறுவனம் லாபத்தில்தானே இருக்கிறது. அவரவரிடம் வாங்கும் வேலைக்குச் சம்பளம் கொடுப்போம் என்று அந்தத் தொழிலில் வெளியே என்ன சம்பளம் கிடைக்கிறதோ, அதைப் பெற்றுத் தர மேனேஜ்மென்டிடம் சண்டைகூடப் போட தயங்கா மல் இருந்தாராம்.
அட, வேலைக்கென்று போனால், நாலு பாஸ் நாலு விதமாகத்தான் இருப்பார்கள். இதெல்லாம் ஒரு மேட்டரா என்று சொல்லும் நபரா நீங்கள்?
பாஸ், கொஞ்சம் இந்தப் புள்ளிவிவரத்தைக் கேளுங்கள். முதல் வேலையில் நல்ல பாஸ் கிடைத்தவர்களுக்கு வாழ்க்கை யில் ஹார்ட் அட்டாக் வரும் வாய்ப்பு 20% குறைகிறது என்கிறது ஆய்வுகள். இதுபோன்ற நல்ல பாஸிடம் நான்கு வருடம் வேலை பார்த்தீர்கள் என்றால் ஹார்ட் அட்டாக் வர வாய்ப்பு 39% குறைகிறதாம்.
இப்போது சொல்லுங்கள், நல்ல பாஸ், கெட்ட பாஸ் பற்றித் தெரிந்துகொள்வது எவ்வளவு முக்கியம் என்று எனக் கிண்டல் அடிக்கிறார் ஆசிரியர்.
வேலையில் நல்ல பாஸாக இருப்பது என்பது கையில் புறாவை வைத்திருப்பதைப் போன்றது. நன்றாக அழுத்திப் பிடித்தால் புறா இறந்துபோகும். அதற்காக லேசாக விட்டால், பறந்து போய்விடும். உணவில் உப்பு குறைவாக இருந்தாலும் அதிகமாக இருந்தாலும் சகிக்காமல் போய்விடுகிற மாதிரி, நல்ல பாஸுக்கும் கெட்ட பாஸுக்கும் இடையே ஒரு நூலிழைதான் வித்தியாசம். அதைத் தாண்டினால் எல்லாமே கைவிட்டுப்போய்விடும் என்கிறார் ஆசிரியர்.
நல்ல பாஸாக இருப்பதற்கு நிறைய நுண்ணறிவு தேவைப் படுகிறது. கன்ட்ரோல் கையை விட்டுப் போன நேரத்திலும்கூட கன்ட்ரோல் இருப்பதைப் போன்ற நிலையைத் தொடர்ந்து காட்ட வேண்டும்.
எப்போதுமே நழுவாமல் 'ஆம்'அல்லது 'இல்லை' என்று சொல்வது, உரிய புகழை (கிரெடிட்) பெறவும் தரவும் தயங்காதிருப்பது, பழியைத் தன் மீதே போட்டுக்கொள்வது, தன்னிடத்தில் இருக்கும் பவர் என்ன என்பதையும் அதன் எல்லை என்ன என்பதையும் தெளிவாகத் தெரிந்துவைத்துக் கொண்டிருப்பது போன்ற குணங்களை ஆசிரியர் இந்த நுண்ணறிவில் சேர்த்துக் கொள்கிறார்
.
முழுமையான கன்ட்ரோலை எடுத்துக்கொள்ளுதல், புத்திசாலித்தனமாகச் செயல்பட எப்போதும் விழைதல், நல்லதை யும் கெட்டதையும் தெளிவாய் பிரித்தெடுத்து கையாளத் தெரிந்துகொள்ளுதல், செய லுடன் இணைத்துக் கொண்டே இருக்குமாறு பார்த்துக் கொள்ளுதல், தனக்குக் கீழே பணிபுரிவோருக்கு ஒரு கவசமாய் இருந்து காத்தருள்தல் போன்ற பல முக்கியப் பிரிவுகளில் பல்வேறு ஆலோசனைகளை வழங்கியுள்ளார் ஆசிரியர்.
நிறைய உதாரணங்களுடன் வெகு சுவாரஸ்யமாக இருக்கிற இந்தப் புத்தகத்தை பாஸ்களும் பாஸாக ஆசைப்படுபவர்களும் கட்டாயம் படிக்க வேண்டும்!
English | 2010 | ISBN-10: 0446556084 | 320 pages | EPUB | 0,5 MB
Good Boss, Bad Boss does a wonderful job of challenging conventional wisdom while outlining a clear and compelling rationale for thinking differently. From Sutton's useful steps for getting "in tune" with what it feels like to work for you, to evidence that eliminating the negative is more powerful than accentuating the positive, to the importance of demonstrating confidence with the admission that you're not always right.
Good Boss, Bad Boss teaches the art and the science of practical leadership for the 21st century. I would consider it a must-read for anyone looking to improve their impact and accelerate their desired outcomes. (Brad Smith, CEO of Intuit )
This book is the personal coach that every boss deserves: warm, smart, and freakishly good at translating scientific research into practical tips that will help keep you at the top of your game. (Chip & Dan Heath, authors of Switch: How to Change Things When Change is Hard )
We are damned lucky to have Bob Sutton. While his every word is backed up by significant research, he writes in simple sentences that make enormous sense. Typical in this book, Sutton's little chart in Chapter 3, 'Smart Versus Wise Bosses,' is worth, all by itself, 100 times the price of admission. Good Boss, Bad Boss is as good as it gets. (Tom Peters, author of The Little Big Things and co-author of In Search of Excellence )
It has been damn near impossible to find consistently good and objective insight and analysis from business thought leaders. But Robert I. Sutton, a professor of Management Science and Engineering at Stanford and the Stanford Institute of Design (where we have overlapped), is an exception. His new book, out now, is his best to date. Good Boss, Bad Boss is food for thought for managers and leaders in organizations large and small. It is packed with insight, lists of "how to" suggestions, and questions for bosses to ask themselves. (Reuters )
I loved this book - immediately my favorite business book. There are so many great principles and ideas to live up to, backed up by real data - it should be every boss' responsibility to read and understand it. (John Lilly, CEO of Mozilla Corporation, producer of the Firefox web browser )