1902ஆம் ஆண்டு முதல் 2002 வரை வாழ்ந்த வில்லியம் கிளமெண்ட் ஸ்டோன் ஒரு தொழிலதிபர், சிறந்த கொடையாளி மற்றும் சுய முன்னேற்ற நூல்களின் ஆசிரியர். குடும்பத்திற்கு உதவுவதற்காக தனது ஆறு வயதில், தெருவில் செய்தித்தாள்களை விற்பனை செய்தார். தனது விற்பனைத்திறனால், இளம்வயதில் காப்பீடு பாலிசிகளை விற்பனை செய்யும் பணியை மேற்கொண்டார்.
வாழ்க்கையின் ஏழ்மையினை பொருட்படுத்தாமல், யாரும் வெற்றிகரமான வாழ்வினைப் பெறமுடியும் என்பதை தனது எழுத்துகளில் பிரதிபலித்தவர். வெற்றிக்கு தூண்டுகோலாக அமைந்த இவரின் சுய முன்னேற்ற எழுத்துகள் உலகளாவிய பார்வையாளர்களை சென்றடைந்தது.
$ சிந்தனையால் பயத்தை வெல்ல முடியாது; ஆனால், செயல்பாடு அதனை சரியாகச் செய்கின்றது.
$ உண்மையை எதிர்கொள்ள துணிச்சல்; மறுப்பு தெரிவிக்க தைரியம்; சரியான செயல்களைச் செய்தல்; இவையே நேர்மையான வாழ்க்கைக்கான மந்திர திறவுகோல்.
$ உங்கள் நோக்கம் நிலவாக இருக்கட்டும். ஒருவேளை அதில் தோற்றால், நீங்கள் ஒரு நட்சத்திரத்தை வெல்லக்கூடும்.
$ எப்பொழுது நாம் நமது எண்ணங்களை ஒழுங்காக வழிநடத்துகிறோமோ, அப்பொழுது நம்மால் நமது உணர்வுகளைக் கட்டுப்படுத்த முடிகின்றது.
$ நமக்கு ஒரு பிரச்சனை, "வாழ்த்துகள்"; ஆனால் இது ஒரு கடுமையான பிரச்சினை, அப்படியானால் "இரட்டிப்பு வாழ்த்துகள்".
$ உங்களுக்கான சூழலைத் தேர்ந்தெடுக்கும்போது கவனமாக இருங்கள், ஏனெனில் அதுவே உங்களை வடிவமைக்கின்றது; நண்பர்களை தேர்ந்தெடுக்கும்போது கவனமாக இருங்கள், ஏனெனில் நீங்கள் அவர்களைபோல் மாற வாய்ப்பிருக்கிறது.
$ மக்களிடம் உள்ள சிறிய வேறுபாடே பெரிய வித்தியாசத்தை உருவாக்குகிறது. அந்த சிறிய வேறுபாடு என்பது "அணுகுமுறை", அதனால் ஏற்படும் பெரிய வித்தியாசம் ஒன்று நேர்மறையானது அல்லது எதிர்மறையானது.
$ வெற்றி போலவே தோல்வியிலும் பலருக்கு நிறைய விஷயங்கள் இருக்கின்றது; நேர்மையான மனப்பாங்கின் மூலம் தோல்வியானது கற்றுக்கொள்ளும் அனுபவமாகின்றது.
$ உங்களின் தனிப்பட்ட சாதனை உங்கள் மனதிலேயே தொடங்குகிறது; உங்களின் பிரச்சினை, குறிக்கோள் மற்றும் ஆசை என்ன என்பதை சரியாக அறிவதே முதல்படி.
$ நீங்கள் உங்கள் சூழ்நிலையின் ஒரு தயாரிப்பே; இலக்கை நோக்கி உங்களை சிறப்பாக உருவாக்கும் சூழலைத் தேர்ந்தெடுங்கள்.
$ முயற்சி செய்வது மற்றும் முயற்சியை தக்கவைத்துக் கொள்பவராலேயே வெற்றி பெறவும் மற்றும் வெற்றியை பராமரிக்கவும் முடிகின்றது.
$ முயற்சி, முயற்சி, முயற்சி மற்றும் தொடர்ச்சியான முயற்சி என்பதே எதிலும் நிபுணராவதற்காக பின்பற்றவேண்டிய விதி