Friday, July 31, 2015

அப்துல் கலாம் - அதிசய மனிதரின் மற்றொரு பரிமாணம்

அப்துல் கலாம் தன் வாழ்வின் ஒவ்வொரு பரிமாணத்தையும் பாடமாக்கி சென்றுள்ளதை அவருடன் பழகிய பலரும் கூறுகின்றனர்.

கடந்த 2014-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடந்த ஈரோடு புத்தக திருவிழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சியில் அப்துல் கலாம் பங்கேற்றார். ஈரோட்டில் இருந்து புறப்படும்போது, அவருக்கு வெட் கிரைண்டர் ஒன்று பரிசாக வழங்கப்பட்டுள்ளது. இந்தப் பரிசை வழங்கியவரிடம், 'எங்களது வீட்டுக்கு வெட்கிரைண்டர் தேவை. ஆனால், இதனை பரிசாக நான் பெற்றுக்கொள்ள மாட்டேன். இதற்கான தொகையை செலுத்திவிட்டுதான் பெற்றுக்கொள்வேன்' என்று கலாம் தெரிவித்துள்ளார்.

நடந்தவை குறித்து சவுபாக்யா கிரைண்டர் தயாரிப்பு நிறுவன நிர்வாக இயக்குநர் வி.ஆதிகேசவன் 'தி இந்து'விடம் கூறியதாவது:

எங்களது நிறுவன கிரைண்டரை கலாமுக்கு நண்பர் ஒருவர் (பெயர் வெளியிட விரும்பவில்லை) பரிசாக வழங்கியுள்ளார். கிரைண்டரை வீட்டு உபயோகத்துக்குப் பயன்படுத்த விரும்பிய கலாம் அதற்கான தொகையை பெற்றுக்கொள்ளுமாறு கூறியும், அவர் பெற்றுக் கொள்ளவில்லை. இதையடுத்து கிரைண்டருக்கான பில்லில் இருந்த விலையான ரூ. 4,850-க்கான காசோலை ஒன்றை அப்துல் கலாமின் உதவியாளர் எங்களுக்கு அனுப்பினார். அப்துல் கலாம் கையெழுத்திட்டிருந்த அந்த காசோலையை நாங்கள் வங்கியில் செலுத்தாமல் அதனை பொக்கிஷமாக கருதி, 'பிரேம்' செய்து பாதுகாத்தோம். இரண்டு மாதங்களுக்கு பின், அப்துல் கலாமின் அலுவலகத்தில் இருந்து எங்களை தொடர்புகொண்டனர். கிரைண்டர் வாங்கியதற்காக வழங்கப்பட்ட காசோலையை இதுவரை நீங்கள் வங்கியில் செலுத்தி பணம் பெறவில்லை. நீங்கள் பணம் பெறாவிட்டால், இதுவரை பயன்படுத்தாமல் வைத்துள்ள வெட் கிரைண்டரை திருப்பி அனுப்பிவிடுமாறு கலாம் சார் கூறிவிட்டார் என்று தெரிவித்தனர். இதையடுத்து வேறு வழியில்லாமல், காசோலையை நகல் எடுத்து வைத்து கொண்டு நாங்கள் வங்கியில் காசோலையை செலுத்தி பணம் பெற்றோம் என்றார்.
 
 
 
 

Thursday, July 30, 2015

அற்புதங்களின் உறைவிடம் - பூரி ஜகந்நாதர் கோயில்

பூரியில் அமைந்துள்ள, ஜகந்நாதர் கோயில் பல அற்புதங்களின் உறைவிடம் என்று கூறப்படுகிறது. அவற்றில் சில:

கோயில் கோபுரத்தின் உச்சியில் கட்டப்பட்டுள்ள கொடி காற்றடிக்கும் திசைக்கு எதிர் திசையில் பறக்கும்.

கோயில் அமைந்துள்ள இடமான பூரி என்ற நகரில் நின்று எந்தப் பக்கத்தில் இருந்து பார்த்தாலும் கோயில் கோபுரத்தின் உச்சியில் இருக்கும் சுதர்சன சக்கரம் காண்பவரை நோக்கியே இருக்கும்.

பொதுவாக காலையிலிருந்து மாலை வரையான நேரங்களில் காற்று கடலில் இருந்து நிலத்தை நோக்கியும் மாலை முதல் இரவு முழுவதும் நிலத்திலிருந்து கடலை நோக்கியும் வீசுவது இயற்கை. ஆனால் பூரியில் இதற்கு நேர்எதிரான திசை நோக்கிக் காற்று வீசும்.

இக்கோயிலின் முதன்மை கோபுரத்தின் நிழல் பகலில் எந்த நேரத்திலும் கண்களுக்குப் புலப்படுவதில்லை.

கோயிலின் உள்ளே சமைக்கப்படும் உணவின் அளவு ஆண்டின் அனைத்து நாட்களிலும் ஒரே அளவாகவே இருக்கும். ஆனால் வருகின்ற பக்தர்கள் எண்ணிக்கை லட்சக்கணக்கில் கூடினாலும், குறைந்தாலும் சமைக்கப்பட்ட உணவு போறாமல் போனதும் இல்லை, மீந்து இருந்ததும் இல்லையாம்.

இக்கோயிலின் நுழைவாயிலான சிங்கத்துவாராவின் முதல்படியில் கோயிலின் உட்புறமாகக் காலெடுத்து வைத்து நுழையும்போது கடலில் இருந்து வரும் அலையோசை கேட்காது. ஆனால் அதே சிங்கத்துவராவின் முதல் படியில் கோயிலின் வெளிப்புறமாக வரும்போது கடலில் இருந்து வரும் அனைத்து சப்தமும் கேட்கும். இதனை மாலை நேரங்களில் தெளிவாக உணர முடியும்.
 
 
 
 
 

Wednesday, July 29, 2015

15 ஊட்டச்சத்து பாடிகாட்ஸ்! உச்சி முதல் உள்ளங்கால் வரை...

"உடலின் அனைத்து உறுப்புகளும் திறம்பட இயங்கினால்தான் நம்மால் அன்றாட வேலைகளை சிறப்பாகச் செய்ய முடியும். ஒவ்வொர் உறுப்பையும் பாதுகாக்க, தனிக் கவனம் எடுப்பது நல்லது. இதற்கு, பெரிய மெனக்கெடுதல்கள் தேவை இல்லை. நம் அன்றாட உணவில் சின்ன சின்ன மாற்றங்களை செய்தாலே போதும். சில உணவுப் பொருட்களின் தோற்றம், குறிப்பிட்ட உறுப்புகளின் தோற்றத்துடன் பொருந்தியிருப்பதோடு, அவற்றைச் சாப்பிடும்போது, அந்தந்த உறுப்புகளுக்கு பலத்தையும் கூட்டுகின்றன" என்று சொல்லும் ஊட்டச்சத்து ஆலோசகர் ஸ்ருதிலயா எந்தெந்த உணவுகள், எந்தெந்த உறுப்புகளோடு பொருந்துகின்றன என்பதையும், அவை என்னென்ன நன்மைகளைத் தருகின்றன என்பதையும் விளக்குகிறார்.


மூளை - வால்நட்

வால்நட்டின் வடிவத்தைக் கவனித்திருக்கிறீர்களா? மூளையின் மினியேச்சர் போலவே இருக்கும். அக்ரூட்டை பிரெய்ன் ஃபுட் (மூளை உணவு) என்பார்கள். ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் நிறைந்துள்ளதால் மூளையின் செயல்பாட்டுக்கும், சீரான இயக்கத்துக்கும், வளர்ச்சிக்கும் உதவுகிறது. குழந்தைகள், பள்ளி செல்லும் பிள்ளைகள், கர்ப்பிணிகள் அவசியம் சாப்பிட வேண்டிய உணவுகளில் ஒன்று வால்நட். அறிவுத்திறன் (ஐ.க்யூ) மேம்படவும், படைப்பாற்றல் அதிகரிக்கவும் உதவும்.

சமீப ஆய்வுகளில், வால்நட்டில் புரதச்சத்துக்கள் இருப்பதால், மறதி நோய் வராமல் தடுக்கும் எனக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தினமும் இரண்டு மூன்று அக்ரூட் சாப்பிட்டுவந்தால், மூளை செல்கள் புத்துயிர் பெறும். உயர் ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும்.


கண்கள் - கேரட், பாதாம்

ண்களை ஆன்மாவின் ஜன்னல் என்பார்கள். கண்களைப் பாதுகாக்க சன் கிளாஸ், கண்ணுக்கான பயிற்சிகள், அடிக்கடி கண்களைக் கழுவுதல், ஆண்டுக்கு ஒரு முறை கண் பரிசோதனை செய்வது நல்லது.

பார்வைத்திறன் மேம்பட கேரட், பப்பாளி நல்ல பலனைத் தரும். கேரட்டை குறுக்காக வட்ட வடிவில் வெட்டினால், கண்ணின் (Pupil, iris) தோற்றத்தைப் போல இருக்கும். தினமும் ஒரு கேரட் சாப்பிட்டால், கண்களில் புரை உருவாவது தடுக்கப்படும். கேரட்டில் உள்ள பீட்டா கரோட்டீன், வயதாகும்போது வரும் பார்வைக்குறைபாடுகளை (Macular degeneration) தடுக்கும். கிட்டப்பார்வை, தூரப்பார்வை போன்ற பிரச்னைகள் வராது. கண்களுக்குச் செல்லும் ரத்த ஓட்டத்தைச் சீராக்கும். அதுபோல், பாதாமின் தோற்றம், கண்களின் வெளிப்புற அமைப்பைப் போலவே இருக்கும். கண்களுக்கு நன்மையைச் செய்யக்கூடிய சத்துக்கள் பாதாமில் நிறைந்துள்ளன. கண் மை தயாரிப்புக்கு பாதாம் முக்கிய பொருள். தினமும், நான்கைந்து பாதாமை சாப்பிட்டால் கண்களுக்கு நல்லது.


காது - காளான்

காதுகளில் காக்லியா (Cochlea) எனும் கேட்கும் திறனுக்கான உறுப்பு வளர வைட்டமின் டி தேவை. அவற்றை காளானும் சூரிய ஒளியும் தரும். காளானில் வைட்டமின் டி, டி3, டி2 சத்துக்கள் நிறைந்துள்ளன. கால்சியம் சத்தை உடல் கிரகித்துக்கொள்ள வைட்டமின் டி உதவுகிறது.

உள்ளுறுப்புகளின் வளர்ச்சி, ஆரோக்கியமான எலும்பு வளர்ச்சிக்கு ஆதாரமாக காளான் இருக்கிறது. மார்பகம், பிராஸ்டேட் புற்றுநோய்களைத் தடுக்கும். அதிகமாக ஈஸ்ட்ரோஜன் சுரப்பதால் ஏற்படக்கூடிய விளைவுகளைச் சரி செய்யும். விலங்குகளிடமிருந்து பெறப்படும் புரதத்தை காளானிலிருந்தும் பெற முடியும்.


நுரையீரல் - திராட்சை

திராட்சைக் கொடியில் தொங்கும் திராட்சைப் பழத்தைப் பார்த்தால், திராட்சைக் கொத்து நுரையீரல் போலவும், அதில் உள்ள ஒவ்வொரு திராட்சையும் ஆல்வியோலி எனப்படும் நுண்காற்று அறைகள் போலவும் தோன்றும். ரத்தத்தில் உள்ள கார்பன் டை ஆக்ஸைடைச் சுத்திகரித்து, சுவாசக் காற்றில் உள்ள ஆக்சிஜனைப் பிரித்து, ரத்த அணுக்களில் நிறைத்து அனுப்புகிறது நுரையீரல். இந்தச் செயல்பாட்டை மேம்படுத்தும் திறன், திராட்சைப் பழத்துக்கு உண்டு. நுரையீரலில் வரக்கூடிய புற்றுநோய் செல்களை அழிக்கும் திறன் திராட்சைக்கு உண்டு. கர்ப்பிணிகள் திராட்சையை 23-வது வாரத்தில் இருந்து சாப்பிட்டுவந்தால், குழந்தையின் வளர்ச்சிக்கு உதவும். திராட்சையில் உள்ள ப்ரோஆந்தோசயனிடின் (Proanthocyanidin) ஆஸ்துமா பிரச்னையின் வீரியத்தைக் குறைக்கும்.

திராட்சையில் உள்ள பாலிபீனால் நுரையீரல், வாய், சுவாசப் பாதை, மூச்சுக்குழாய், கணையம் போன்ற இடங்களில் ஏற்படும் புற்றுநோயைத் தடுக்கும்.


மார்பகம் - ஆரஞ்சு

பெண்களின் மார்பக வடிவில் அமைந்திருக்கிறது ஆரஞ்சுப் பழம். சாத்துக்குடி, ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற சிட்ரஸ் வகைப் பழங்களில் உள்ள லிமோனாட்ய்ட்ஸ் (Limonoids) புற்றுநோய் செல்களை வளரவிடாது. சிட்ரஸ் பழங்களில் தினமும் ஒன்றைச் சாப்பிட்டுவந்தால், புற்றுநோய்க்கான வாய்ப்பு குறையும். மார்பகச் செல்களின் ஆரோக்கியம் மேம்படும். வைட்டமின் சி சத்துக்கள் நிறைந்துள்ளதால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இதயத்தில் படிந்த கெட்ட கொழுப்புகளை அகற்றும். சுவாசம் தொடர்பான நோய்கள், சில வகைப் புற்றுநோய்கள், அல்சர், மூட்டுநோய், சிறுநீரகக் கற்கள் போன்ற பிரச்னைகளுக்குத் தீர்வு கிடைக்கும்.

சிட்ரஸ் நிறைந்த பழங்களை இயற்கையான ஆன்டி-கார்சினோஜென் (Anti-carcinogen) எனச் சொல்லலாம். தினமும் சாப்பிட்டுவர, புற்றுநோய் வரும் ஆபத்துகள் முற்றிலுமாகத் தடுக்கப்படும்.


இதயம் - தக்காளி

சாம்பார், ரசம், புளிக்குழம்பு என நம்முடைய அன்றாட உணவுகளில் தக்காளிக்கு முக்கிய இடம் உண்டு. இனிப்பு மற்றும் புளிப்பு சுவைகொண்ட தக்காளியில் சத்துக்கள் ஏராளம். லைக்கோபீன் (Lycopene) என்ற நிறமிதான், தக்காளியின் சிவப்பு நிறத்துக்குக் காரணம். இது உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் கரைத்து, இதயத்துக்கு நன்மை விளைவிக்கிறது. கெட்ட கொழுப்பு குறைவதால், தமனிகளில் (Arteries) அடைப்புகள் ஏற்படாது. லைக்கோபீன், சில வகை புற்றுநோய் செல்களை அழிக்கும் தன்மை கொண்டது. உணவில் தக்காளியை அதிக அளவில் சேர்த்துக்கொண்டவர்களின் இதயம் பலமாகவும் ஆரோக்கியமாகவும் இருப்பதை சில ஆய்வுகள் ஊறுதிசெய்திருக்கின்றன. சிவப்பு நிறப் பழங்களையும் காய்களையும் சாப்பிட்டால், இதயம் ஆரோக்கியம் பெறும். இவற்றைத் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால், இதயம் தொடர்பான பிரச்னைகள் நெருங்காது.


கணையம் - சர்க்கரைவள்ளிக் கிழங்கு

ணையத்தின் வடிவத்தில் இருக்கும் சர்க்கரைவள்ளிக் கிழங்கு கெட்ட கொழுப்பைக் குறைக்கும். சர்க்கரை வள்ளிக்கிழங்கின் கிளைசெமிக் குறீயீட்டின் அளவு (ரத்தத்தில் சர்க்கரை சேரும் திறன்) குறைவு. சர்க்கரை நோயாளிகள் இதை அளவாகச் சாப்பிடலாம். சர்க்கரைவள்ளிக் கிழங்கு கணையத்தின் செயல்திறனைப் பாதுகாத்து, ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள்வைக்க உதவுகிறது. மேலும், இதில் வைட்டமின் பி6 அதிக அளவில் உள்ளது. இது கணைய செல்கள் ஆரோக்கியமாக இருக்கவும், கணையப் புற்றுநோய் செல்களை வளரவிடாமல் தடுக்கவும் உதவுகிறது.

சர்க்கரை நோயாளிகள் மா, பலா, வாழை, சீதா, சப்போட்டா, திராட்சை ஆகியவற்றைத் தவிர்க்கலாம். பழச்சாறுகளைவிட பழமாகச் சாப்பிடுவது நல்லது.


வயிறு - இஞ்சி

யிற்றுக்கு நன்மை செய்யக்கூடிய உணவுகளில் முக்கியமானது இஞ்சி. செரிமான சக்திக்கு இஞ்சி உதவும் என்பதால், இஞ்சிதான் வயிற்றின் `நண்பேண்டா.' மலச்சிக்கல், வயிற்றுக்கோளாறு போன்ற பிரச்னைகளைச் சரிசெய்யும்.

சீரகம், சோம்பு, ஏலக்காய், புதினா போன்றவற்றில் குர்குமின் (Curcumin) நிறைந்துள்ளது. இவற்றைத் தினமும் உணவில் சேர்த்துக்கொண்டால், வயிற்றுக்கு நல்லது. கஷாயம், மூலிகை டீ போன்ற ஏதேனும் ஒரு திரவ உணவைச் சேர்த்துக்கொள்வது நன்மையைத் தரும்.

நிறையப் பேருக்கு அல்சர் பிரச்னை பாடாய்ப்படுத்தும். இவர்கள், 50 மி.லி அளவு இஞ்சி, சீரகம் போன்ற குர்குமின் சத்துக்கள் உள்ள உணவுகளைக்கொண்டு டீ தயாரித்து சாப்பிட்டால், வயிற்றுப் பிரச்னைகள் தீரும்.


சிறுநீரகம் - கிட்னி பீன்ஸ்

யர் தரமான புரதத்தை உள்ளடக்கி வைத்துள்ளது கிட்னி பீன்ஸ். கழிவுகளை உடலிருந்து வெளியேற்றும் வேலையைச் சிறுநீரகம் செய்கிறது. அதற்கு ஆதாரமான உயர் புரதம் கிட்னி பீன்ஸில் உள்ளது. சில வகை புரத உணவுகள் கொழுப்பைச் சேர்க்கும். அவை உடலுக்குக் கேடு. ஆனால், கிட்னி பீன்ஸில் உள்ள புரதம், நல்ல புரதம் என்பதால், கொழுப்பை உடலில் சேரவிடாது. அமினோ அமிலங்கள் நிறைந்துள்ளதால், சருமத்தின் பளபளப்பைக் கூட்டும். மலச்சிக்கலைப் போக்கும். இதயம் தொடர்பான பிரச்னைகள் மற்றும் மறதி நோயைச் சரிசெய்யும்.


கருமுட்டை (ஓவரி) - ஆலிவ்

ருமுட்டையின் வடிவத்தில் ஆலிவ் காய்கள் இருக்கின்றன. ஆலிவ்வில் உள்ள சத்துக்கள் எள், மஞ்சள் போன்ற நம் ஊர் உணவுகளிலும் நிறைந்துள்ளன. ஓலிக் (Olic) ஆசிட் நிறைந்தது ஆலிவ். நல்லெண்ணெய், தவிட்டு எண்ணெய், முட்டை, நட்ஸ், மீன் போன்றவற்றிலும் ஓலிக் ஆசிட் கிடைப்பதால், அவற்றை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். இந்த உணவுகளைத் தொடர்ந்து சாப்பிட்டால், ஓவரியன் புற்றுநோய் வராமல் தடுக்க முடியும்.

ஊட்டச்சத்துக்கள் மிகுந்த உணவுகளைச் சாப்பிடும் பழக்கத்தை அடிப்படையாக மாற்றிக்கொண்டாலே, கருமுட்டையின் வளர்ச்சி சீராக இருக்கும்.


கர்ப்பப்பை - அவகேடோ

வகேடோவின் விதை அமைப்பு, கர்ப்பப் பையின் உள் வடிவம் போல இருக்கும். ஃபோலிக் சத்துக்களின் களஞ்சியமாக இருப்பதால், அவகேடோ சாப்பிடுவது கர்ப்பப்பைக்கு நல்லது. ஃபோலிக் சத்து நிறைந்துள்ள நம் நாட்டு காய்கறிகளும் உள்ளன. இவற்றைச் சாப்பிட்டும் கர்ப்பப்பையைப் பலப்படுத்தலாம்.

இனப்பெருக்க உறுப்புகளுக்கு மிகவும் அவசியமான ஃபோலிக் ஆசிட் சத்து, கர்ப்பப்பை வாய் புற்றுநோய், புற்றுநோய் வருவதற்கு முந்தைய நிலையில் தோன்றும் சிக்கல்களைக் குறைக்கும். வாரம் ஒரு அவகேடோ சாப்பிட்டாலே ஃபோலிக் சத்துக்களின் தேவை பூர்த்தியாகும்.

கர்ப்பப்பை வாய் புற்றுநோயை வராமல் அழிக்கும் ஆற்றல் அவகேடோ பழத்துக்கு உண்டு. மேலும், உடல் எடை குறைந்த குழந்தைக்கு நல்ல ஆகாரம். இந்தப் பழத்தை, பழுத்த பிறகே சாப்பிடவேண்டும். காய், செங்காயைச் சாப்பிடக் கூடாது.


செல்கள் - வெங்காயம்

டல் கோடிக்கணக்கான செல்களால் ஆனது. ஒவ்வொரு செல்லிலும் தேவையற்ற கழிவுகள் படிந்திருக்கலாம். செல்களின் ஆரோக்கியத்தை, வலுவைக் கெடுக்கும் கழிவுகளை, நச்சுக்களை நீக்கும் சக்தி, வெங்காயத்துக்கு உண்டு.

கழிவுகளை வெளியே தள்ளி, டீடாக்சிஃபையிங் ஏஜென்டாக (Detoxifying agent) வெங்காயம் செயல்படுகிறது. ரத்தத்தைச் சுத்திகரிக்கும். சீரான ரத்த ஓட்டத்துக்கு உதவும்.


எலும்பு - கொத்தமல்லி

கொத்தமல்லியின் தண்டுகள், இரண்டு கால்கள், இரண்டு கைகள் எனக் கிளைபிரியும் மனித எலும்புகளைப் போன்றவை. கொத்தமல்லியில் சிலிக்கான், வைட்டமின் டி, கால்சியம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. எலும்புகளின் வளர்ச்சிக்கு ஆதாரமாக இருப்பது வைட்டமின் டி, கால்சியம் சத்துக்கள்தான். மேலும், சிலிக்கானும் எலும்பு வளர்ச்சி மற்றும் ஆரோக்கியத்துக்குத் தேவை. கொத்தமல்லியின் இலைகளில், குறிப்பாக இலையின் மையப்பகுதியில் அதிக அளவில் கால்சியம் உள்ளது. எலும்புகளின் நெகிழ்வுத்தன்மைக்கும், உடைந்த எலும்புகள் மீண்டும் வளரவும், நீண்ட நாட்கள் வலுவாக இருக்கவும், எலும்பு மெலிதல் நோய் வராமல் தடுக்கவும், தினமும் 30 கிராம் கொத்தமல்லியை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.


ரத்தம் - பீட்ரூட்


ன்று பெரும்பாலான பெண்களும் குழந்தைகளும் ரத்தசோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர். பதின் பருவப் பெண்களுக்கு வரும் தலையாய பிரச்னை ரத்தசோகை. ரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைவதால், ரத்தசோகை ஏற்படுகிறது. பெண்கள் ஊட்டச்சத்துள்ள உணவுமுறைகளைப் பின்பற்றாததால், கருவுறும்போது ரத்தசோகையால் பாதிக்கப்படுகின்றனர். இதனால், குழந்தையின் ஆரோக்கியமும் பாதிக்கப்படுகிறது. ரத்த சிவப்பு அணுக்கள் உற்பத்திக்கு இரும்புச்சத்து மிகவும் அவசியம். பீட்ரூட்டில் இரும்புச்சத்து நிறைவாக உள்ளது. இது ரத்த உற்பத்திக்குப் பெரிதும் உதவியாக இருக்கிறது. ரத்தத்தின் நிறத்தில் இருக்கும் பீட்ரூட், ஒரு வகையில் ரத்த உற்பத்தித் தொழிற்சாலை.

பீட்ரூட்டில் ஃபோலிக் அமிலம், மாங்கனீஸ், கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின் ஏ, சி, கே ஆகியவை நிறைந்துள்ளன. ஒவ்வொரு செல்லுக்கும் தேவையான நைட்ரேட், ஆக்சிஜன் போன்றவற்றை பீட்ரூட் சாறு கொடுக்கும்.

தினமும் பீட்ரூட் சாறு குடித்தால், மலம், சிறுநீர் ஆகியவை ரத்தம் போல சிவப்பு நிறத்தில் வெளியேறும். இதற்குப் பயப்படத் தேவை இல்லை. பீட்ரூட் சாறு, உடலுக்குள் சென்று சரியாக வேலை செய்கிறது என்பதை உணர்த்தும் அறிகுறி இது.


புற்றுநோய் செல்கள் - புரோகோலி

ம்முடைய உடலில் தினசரி ஏராளமான புற்றுநோய் செல்கள் உருவாகின்றன. அதை நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தி கண்டறிந்து அழித்துவிடுகிறது. நோய் எதிர்ப்பு சக்தி குறையும்போது, புற்றுநோய் செல்கள் வளர்ச்சியடைகின்றன. நோய் எதிர்ப்பு சக்தியில் குறைபாடு ஏற்பட, நம்முடைய தவறான வாழ்வியல் பழக்கங்களும் உணவு பழக்கங்களும் முக்கிய பங்கு வகிக்கின்றன. புரோகோலியில் நார்ச்சத்து, வைட்டமின் ஏ, பி6, சி, பொட்டாசியம் ஆகியவை நிறைந்துள்ளன. பைடோகெமிக்கல்களும், ஆன்டிஆக்ஸிடன்ட்களும் நிறைந்துள்ளதால், புற்றுநோயை எதிர்க்கும் வல்லமை புரோகோலிக்கு உண்டு. `அமெரிக்க புற்றுநோய் ஆய்வு மையம்' புரோகோலியில் புற்றுநோயை அழிக்கக்கூடிய சத்துக்கள் உள்ளன எனக்கண்டறிந்திருக்கிறது.

புரோகோலியில் உள்ள சல்ஃபரோபேன், கந்தகம் போன்ற சத்துக்கள் புற்றுநோய் செல்களை அழிக்கும். புற்றுநோய் வரவிடாமல் தடுக்கும். கணையம், பிராஸ்டேட், மார்பகம், வயிறு, நுரையீரல் போன்ற இடங்களில் உருவாகும் புற்றுநோய் செல்களை அழிக்கும் வல்லமை பெற்றது.

வாரத்தில் மூன்று நாட்கள், 100 கிராம் அளவுக்கு புரோகோலியைச் சாப்பிட்டுவந்தால், புற்றுநோய் செல்கள் அழிக்கப்படும் திறன் மேம்படும். ஆரோக்கியம் பெருகும்.


கல்லீரல் பலப்பட

குடி அல்லது வேறு காரணங்களால் சேதமடைந்த கல்லீரலைப் பலப்படுத்தும் உணவுகள் கிரீன் ஆப்பிள், முட்டைகோஸ், அஸ்வகந்தா, அக்ரூட், சாமை, குதிரைவாலி, முள்ளங்கி, கீழாநெல்லி, நெல்லி. இந்த உணவுகள் கல்லீரல் செல்களைப் புத்துயிர் பெறச்செய்து, கல்லீரலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.


பற்களின் நண்பன்

வைட்டமின் சி சத்துக்கள் நிறைந்த சிட்ரஸ் பழங்கள், பால் பொருட்கள், ஆப்பிள், கேரட், கீரைகள் ஆகியவை பற்களைப் பாதுகாக்கும். ஊறுகாய், சோடா, குளிர் பானங்கள், மது, சிகரெட், காபி ஆகியவை பற்களுக்கு எதிரி.


ஆரோக்கியமான தசைக்கு

சைகளை ஆரோக்கியமாக்குவதில் ஒமேகா3 ஃபேட்டி அமிலங்களின் சத்து முக்கியமானது. மீன், ஃப்ளக்ஸ் விதைகள், அக்ரூட், புரோகோலி, பால் பொருட்கள், நல்லெண்ணெய், இஞ்சி, வைட்டமின் சி சத்துக்கள் நிறைந்த பழங்களைச்சாப்பிடலாம்.


தசைநார்கள் வலுவாக

சைநார்களை உறுதிப்படுத்தும் உணவுகளான புரத உணவுகள், சிட்ரஸ் பழங்கள், தக்காளி, குடமிளகாய், மீன், கீரைகள் ஆகியவற்றைச் சாப்பிடலாம்.


சிறுகுடல், பெருங்குடலுக்கு

பெருங்குடல் மற்றும் சிறுகுடலை ஆரோக்கியமாக்கும் உணவுகளான ப்ரோபயாடிக் உணவுகள் (தயிர், மோர், யோகர்ட், இட்லி மாவு), மீன், கீரைகள், அவரை, பீன்ஸ், வாழைத்தண்டு ஆகியவற்றைச் சாப்பிடலாம்.


பித்தப்பைக்கு

பித்தப்பைக்கு, ஃப்ரெஷ்ஷான பழங்கள் மற்றும் காய்கறிகள், பருப்பு, பயறு வகைகள், மீன், ஆடை நீக்கப்பட்ட பால் பொருட்கள், கொழுப்பு நீக்கப்பட்ட இறைச்சி, முழு தானியங்கள், சிறுதானியங்கள் ஆகியவை நன்மை தரக்கூடியவை.


அழகிய கூந்தலுக்கு

கூந்தல் வளர புரதமும் வைட்டமின்களும் அவசியம். மீன், கீரைகள், பாதாம், அக்ரூட், சிவப்பு கொய்யா, சர்க்கரைவள்ளிக் கிழங்கு, பச்சை நிறக் காய்கறிகள், முட்டை, சோயா, முழு தானியங்கள், கறிவேப்பிலை, பேரீச்சை, உலர் திராட்சை போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம்.


நகங்கள் நலம்பெற

கங்கள் நம் உடலின் ஆரோக்கியத்தைக் காண்பிக்கும் கண்ணாடி. நகங்கள் பலவீனமாகி உடைந்தாலே ஆரோக்கியமின்மையை உணர்த்துகிறது எனப் புரிந்துகொள்ளலாம். இதற்கு, முந்திரி, வாழை, முட்டை, ஆரஞ்சு, பாதாம், தோல் நீக்கப்பட்ட இறைச்சி ஆகியவற்றைச் சாப்பிடலாம்.


நோய்களை எதிர்க்கும் ரெயின்போ காய்கறிகள்

பழங்கள், காய்கறிகள் உடலுக்குப் பலத்தை அளிப்பவை. அதிலும், வைட்டமின் ஏ மற்றும் சி கூட்டணியான ஆரஞ்சு போன்ற மஞ்சள் நிற உணவுகளைத் தங்க உணவுகள் என்றே சொல்லலாம். இவற்றைத் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால், மருத்துவமனை செல்ல வேண்டிய அவசியமே இருக்காது. ஆரோக்கியத்தைத் தந்து, புத்துணர்வைக் கூட்டும் இந்த உணவுக் கூட்டணி, உடலின் வெளிப்புறத்தைப் பளபளபாக்கும். உட்புறத்தை வலுவாக்கும்.

உணவுகள்: எலுமிச்சை, மாம்பழம், அன்னாசி, ஆரஞ்சு, கேரட், பப்பாளி, பரங்கிக்காய், உருளை, சர்க்கரைவள்ளிக் கிழங்கு, வாழை, மக்காசோளம், கருணைக் கிழங்கு.

கறுப்பு, கருநீல நிறம் கொண்ட உணவுகளில் ஃபிளேவனாய்ட்ஸ், ஆந்தோசைனின் மற்றும் ஐசோஃப்ளேவன்ஸ் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைவாக உள்ளன. இவை, நினைவாற்றல் குறைவு முதல் புற்றுநோய் வரை, பல பாதிப்புகளில் இருந்து நம்மைப் பாதுகாக்கின்றன.

உணவுகள்: கறுப்பு உளுந்து, பீட்ரூட், திராட்சை, கருஞ்சீரகம், கறுப்பு எள், கறுப்பு அரிசி, கத்தரிக்காய், மிளகு, பிளாக் டீ, நாவல் பழம், கறுப்பு உப்பு, பேரீச்சை.

சிவப்பு மற்றும் அடர்சிவப்பு நிறக் காய்கறி பழங்களில் ஆந்தோசைனின், லைகோபீன் ஆகிய ஊட்டச்சத்துக்கள் நிறைவாக உள்ளன. இவற்றை தினசரி உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம், சில வகை புற்றுநோய்கள் வராமல் தடுக்கலாம். குறிப்பாக, லைகோபீன் சத்து, பிராஸ்டேட் புற்றுநோய்க்கான வாய்ப்பைக் குறைக்கிறது. அதனால், இந்தக் காய்கறிகளை தினசரி சேர்த்துக்கொள்ளும்படி, அமெரிக்காவின் தேசியப் புற்றுநோய் நிறுவனம் பரிந்துரை செய்கிறது. ஆந்தோசைனின் உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய்க்கான வாய்ப்பைக் குறைக்கிறது.

உணவுகள்: மாதுளை, தக்காளி, சிவப்பு மிளகாய், ஆப்பிள், தர்பூசணி, சிவப்பு கொய்யா, ஸ்ட்ராபெர்ரி

அன்றாட உணவுகளில் இயற்கையாகவே கிடைக்கக்கூடிய வெள்ளை உணவுகள் சத்துக்கள் நிறைந்தவை. அவற்றைத் தயக்கமின்றிச் சாப்பிடலாம். செயற்கை முறையில் வெள்ளையாக்கப்பட்ட சர்க்கரை, உப்பு போன்ற உணவுகள்தான் உடலுக்குக் கெடுதியை ஏற்படுத்தக்கூடியவை. வெள்ளை உணவுகளில் இதயத்துக்கு நன்மைகளைச் செய்யும் சத்துக்கள் இருக்கின்றன. மேலும், பூண்டு, வெங்காயம் போன்றவை புற்றுநோயைக்கூட தடுக்கும் என்கிறது தேசிய புற்றுநோய் நிறுவனம்.

உணவுகள்: முள்ளங்கி, வெங்காயம், பூண்டு, காலிஃபிளவர், காளான், தேங்காய், முட்டைகோஸ்.

உடலில் எதிர்ப்புத் திறனை அதிகரிக்கும் இம்யூன் செல்கள் பச்சை நிறக் காய்கறிகளில் நிறைந்துள்ளன. இவை, கெட்ட பாக்டீரியாக்களை குடலிருந்து நீக்குகிறது. உடல் எடையைக் குறைக்கும் சக்தி பச்சை நிற உணவுகளுக்கு உண்டு. வயிறு தொடர்பான புற்றுநோய்களை அழிக்கவல்லது. செரிமானச் சக்தியை மேம்படுத்தும். அதிகமான அளவில் ஆன்டிஆக்ஸிடன்ட் சத்துக்கள் நிறைந்திருக்கும்.

உணவுகள்: வெள்ளரி, அவரை, கொத்தமல்லி, குடமிளகாய், கொத்தவரங்காய், வெண்டைக்காய், கீரைகள், கறிவேப்பிலை, நூல்கோல், சௌசௌ, புடலங்காய், பீர்க்கங்காய், பச்சை மிளகாய்.

Baba and Others Saints

Baba and Others Saints

 


Keshav Naik of Tardev, when Akkalkote Maharaj was passing away (about 1878) thus addressed him: Maharaj, if you go away, what support have we?

 

Akkalkote Maharaj: (giving his shoes to be worshipped) My Avatar (spirit) will be at Shirdi in Ahmadnagar District. Go there always. Be devoted there. If you do so, you will not remember me. And you will be happy

 

When Akkalkote Maharaj passed away, Keshav Naik and his son Ramachandra Naik, accompanied by two orthodox Brahmins went to Sai Baba at Shirdi. On the way the Brahmins referred to Baba as a mad moslem fakir to whom no Brahmins could bow.

 

When all four reached Baba.

 

Baba (to Keshav Naik): You and your son may come and visit me, if you like.

(Pointing to the other two): These are Karmata Brahmins.

 

Baba to Ramachandra Naik: Fetch Margosa leaves.

 

Ramachandra Naik brought some leaves. Baba distributed the leaves to the four.

 

Baba: Eat the leaves. How do they taste?

 

Brahmis (with a wry face); Very bitter.

 

The two Naiks: The leaves are sweet. We ate plenty of the leaves.

 

Thus Baba parted his sheep from the goats, and confirmed the statement of Akkalkote Maharaj.

 

 

(Baba's Charters and Sayings, No. 74)

 




Guruvaar Prarthna

Guruvaar Prarthna

 


Our Beloved Sadguru Sainath, please accept our humble prayers on this Holy day of Guruvaar. Baba, we are immature and asking you materialistic things in the world. As we are living in a world where all materialistic things are valued to evaluate our life, we have no way but to come to you to fulfill our objects for a decent life. In this eventuality, please take us to a life what you want to be and guide us to lead a life of purity and piety. You are our Divine Father and savior to redeem our past deeds and keep us under your care for now and always. Baba, on this holy day we start our prayers by reading your divine words in Shri Sai Samartha Satcharita.

 


Since he had no children, he had made a lot of efforts. He had invoked Saints and Sages to get their blessings.

 

He danced attention on Saints and Sages for this purpose and to propitiate his planets he even tried astrology, to such a degree that he became an astrologer himself.

 

According to the stars in his horoscope, he had no children. This was the outcome of the knowledge of astrology. Anna knew this very well and had given up all hopes.

 

Yet, these were the words of assurance from the saint Sai. Hope dawned again as the Samartha was propitious.

 

Be it so. After some time, Baba's words came true. As the 'prasad' of the saint germinated and bore fruit, the children were born.

 

It happened as it was said. Anna's own forecast was proved to be wrong. Sai's words turned out to be fruitful. Sons were born as he had promised.

 

May it be whatsoever. This was Baba's speech when Baba was in body. Later even after he left the body, he had determined the greatness of his speech.

 

 "Even when I pass away, believe in my words. From my tomb my bones will give you assurance.

 

Not only I, but my tomb would be speaking, moving and communicating with those who surrender themselves whole heartedly to me.

 

Do not worry that I shall be hidden from your eyes. You will hear my bones speak and discuss your welfare.

 

Always remember me only. Believe in me heart and soul. Pray without selfish motives and you will attain your welfare ".

 

 "O Sai Sadguru, the wish-fulfilling tree of the devotees, let not Hemad forget and lose sight of your feet.




I bow down to Sree Ganesh

I bow down to Sree Saraswati

I bow down to the Guru

I bow down to the Family Deity

I bow down to Sree Sita-Ramachandra

I bow down to Sree Sadguru Sainath.

 

 

 

 

-(from Shri Sai Samartha Satchrita, Chapter  25, Ovi 98 - 109)

http://babaprayers.blogspot.in/






Your wife is part of your life and should be treated as the Queen

Every Husband Should Read This


"Love her …when she sips on your coffee or tea. She only wants to make sure it tastes just right for you.

Love her …when she "pushes" you to pray. She wants to be with you in Heaven.

Love her …when she asks you to play with the kids. She did not "make" them on her own.

Love her …when she is jealous. Out of all the men she can have, she chose you.

Love her …when she has annoying little habits that drives you nuts. You have them too.

Love her …when her cooking is bad. She tries.

Love her …when she looks disheveled in the morning. She always grooms herself up again.

Love her …when she asks to help with the kids homework. She only wants you to be part of the home.

Love her …when she asks if she looks fat. Your opinion counts, so tell her she's beautiful.

Love her …when she looks beautiful. She's yours so appreciate her.

Love her …when she spends hours to get ready. She only wants to look her best for you.

Love her …when she buys you gifts you don't like. Smile and tell her it's what you've always wanted.

Love her …when she has developed a bad habit. You have many more and with wisdom and politeness you have all the time to help her change.

Love her …when she cries for absolutely nothing. Don't ask, tell her it's going to be okay.

Love her …when she suffers from PMS. Buy chocolate, rub her feet and back and just chat to her (this works!).

Love her …when whatever you do is not pleasing. It happens and will pass.

Love her …when she stains your clothes. You needed a new shirt anyway.

Love her …when she tells you how to drive. She only wants you to be safe.

Love her …when she argues. She only wants to make things right for both.

Love her …she is yours. You don't need any other special reason!!!


All this forms part of a Woman's Character.

Women are part of your life and should be treated as the Queen.

• Treat the women well.

• The best of you are those who are the best in the treatment of their wives.



Tuesday, July 28, 2015

உங்கள் அந்தரங்கம்... ஊருக்கே வெளிச்சம்!

திடுக்கிட வைக்கும் `டெக்னாலஜி' பயங்கரம்

''சென்னையைச் சேர்ந்த அந்தக் குடும்பத்தலைவிக்கு, தெரியாத எண்ணில் இருந்து தொடர் மொபைல் அழைப்பு. 'நீங்க இன்னிக்கு ரெட் கலர் புடவையில சூப்பரா இருந்தீங்க', 'வெள்ளை சுடிதாரில் நீங்க தேவதை மாதிரி இருந்தீங்க', 'இன்னிக்கு ஏன் டல்லா இருக்கீங்க?', 'ஒருநாள்கூட உங்களைப் பார்க்காம என்னால் இருக்க முடியல' என்று அந்த எண்ணில் வழிந்த ஆண் குரல் இவர் நிம்மதியைப் பறிக்க, கணவரிடம் விஷயத்தைச் சொல்லி, தம்பதி காவல் நிலையம் சென்றனர். சைபர் க்ரைம் செல்லில், அவர்கள் குழந்தை படிக்கும் பள்ளியின் அட்டெண்டர் அவன் என்பது தெரிய வந்தது. குற்றவாளி கைதானான். தொழில்நுட்ப வளர்ச்சியால், பெண்கள் கண்ணுக்கே தெரியாத காமக் கள்வர்களும் எளிதில் தொடர்புகொள்ளும் வெளிக்கு வருகிறார்கள்!''
இங்கே, தொழில்நுட்ப வளர்ச்சி பெண்களுக்கு ஏற்படுத்தும் பாதுகாப்பின்மையை, இன்னும் பல உண்மைகளுடனும், உதாரணங்களுடனும். ஒவ்வொன்றும் பாடமாக எடுத்துக்கொள்ள வேண்டிய அனுபவம்!

எங்கே பிரைவஸி ?

''நம் எண்ணில் இருந்து இன்னொரு எண்ணுக்குப் பேசும் அழைப்போ, அனுப்பும் குறுஞ்செய்தியோ, பகிரும் புகைப்படமோ... நமக்கும் அந்த நபருக்கும் இடையே மட்டுமேயான தகவல் தொடர்பு என்று நினைத்தால், அது முட்டாள்தனம். நம் எண்ணில் இருந்து மற்றொரு எண்ணுக்குத் தொடர்புகொள்ளும் செய்தி, முதலில் சம்பந்தப்பட்ட நெட்வொர்க்கின் தரவுதளத்துக்குச் செல்கிறது. அங்கிருந்துதான் அது, அந்த எண்ணுக்குச் செல்கிறது. அந்த நெட்வொர்க்கில் பணிபுரியும் நபர் நினைத்தால், அதை உலகின் கண்களுக்குத் தெரியச் செய்யலாம். அழைப்பு, மெசேஜ், சாட் போன்ற தன் வாடிக்கையாளர்களின் நெட்வொர்க் தகவல்களை, அரசாங்கம் கேட்டால் ஒழிய, தனியாருக்கு எந்த நெட்வொர்க் நிறுவனமும் வழங்கக்கூடாது என்பதுதான் விதி. ஆனால், தவறு செய்ய நினைப்பவர்கள் யாரும் விதி
முறைகளைப் பின்பற்றுவதில்லை.

தொழில்நுட்பத் தகவல் திருட்டில் தடைசெய்யப்பட்ட கருவிகள் இன்று கள்ளப் புழக்கத்துக்கு வந்துவிட்டன. இதன் மூலம், இரு மொபைல் எண்களுக்கு இடையேயான தகவல் தொடர்புகள் தொடங்கி, அந்த மொபைல்களில் உள்ள தகவல்கள் வரை அனைத்தையும் எளிதாகத் திருட முடியும். இப்போது சொல்லுங்கள்... பிரைவஸி என்ற ஒன்று இங்கிருக்கிறதா என்ன?!

ஹைடெக் திருட்டு!

'கீ -லாக்கர்' என்று சொல்லக்கூடிய மிக மிகச் சிறிய வைஃபை டிவைஸ் ஒன்றை, துப்புரவுப் பணியாளர் மூலம் ஒரு பெரிய தனியார் நிறுவனத்தின் சி.இ.ஓ கணினியின் கீ-போர்டில் பொருத்திவிட்டார்கள் மோசடி நபர்கள். மறுநாள் காலை சி.இ.ஓ தன் கணினியை ஆன் செய்ய, அந்த அலுவலகத்துக்கு வெளியே ஒரு காருக்குள் இருந்தபடி, அவர் தன் கணினியில் டைப் செய்யும் ஒவ்வொன்றையும் தாங்கள் பொருத்திய வைஃபை டிவைஸ் உதவியோடு இங்கே தங்கள் கணினியில் பார்த்தது அந்த திருட்டுக் கும்பல். உடனே அவரது தொலைபேசி எண்ணுக்கு அழைத்து, 'சார்... உங்க நெட் பேங்கிங் பாஸ்வேர்டை உடனே மாத்திடுங்க... ஃபார் செக்யூரிட்டி பர்பஸ்' என்று சொல்லிவிட்டு இணைப்பைத் துண்டித்துவிட்டார்கள். அவரும் உடனே வங்கி வலைதளப் பக்கத்துக்குச் சென்று யூசர்நேம், பழைய பாஸ்வேர்டு, புதிய பாஸ்வேர்டு போன்றவற்றை டைப் செய்ய.. அது அப்படியே இவர்களது கணினியில் தெரிய... அடுத்த சில நிமிடங்களில் அவரது வங்கிக் கணக்கில் இருந்த அனைத்துப் பணத்தையும் சுருட்டிக்கொண்டு தப்பிவிட்டது திருட்டுக் கும்பல். ஒரு நிறுவனத்தின் சி.இ.ஓ-வின் செக்யூரிட்டியே இந்த நிலையில் இருக்கும் போது, நம் கணினியின் செக்யூரிட்டியை என்ன வென்று சொல்ல?!

`வலை' குழந்தைகள்!

இன்று குழந்தைகளுக்காக ஆன்லைனில் பல போட்டிகள் நடத்தப்படுகின்றன. கிஃப்ட் காம்படிஷன், மதர் சர்ப்ரைஸ் கிஃப்ட் போன்ற அந்தப் போட்டிகளில் ஈர்க்கப்பட்டு பரிசுக்காக விளையாடும் குழந்தைகள் மூலமாகவே, அவர்கள் நண்பர்களையும் அங்கு வரவழைக்கிறார்கள். 'அப்பா, அம்மா விவரங்கள், தொடர்பு எண்கள், ஸ்கூல், க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸ், ஃப்ரீ டைம் ஹாபி, அவுட்டிங்' போன்ற தகவல்களை கேட்டுப் பெற்று, அவர்கள் பெற்றோரின் தொழில் சம்பந்தமான பிசினஸ் விளம்பரங்களை அவர்களுக்கு அனுப்புவது தொடங்கி, குழந்தை கடத்தல் வரை திட்டமிடப்படுகிறது என்பது அதிர்ச்சியான உண்மை.

நம் பிள்ளைகளை இணையத்தில் இருந்தும், இணையத்தால் விஷமாகிப் போன சகாக்களிடம் இருந்தும் காப்பாற்ற வேண்டிய நம் பொறுப்பைத்தான் அதிக மாக்கிக்கொள்ள வேண்டும்.

எச்சரித்தாலும்...

ஒரு கல்லூரிப் பெண்ணின் ஃபேஸ்புக் ஃப்ரெண்ட்ஸ் லிஸ்ட்டில் 4 ஆயிரம் பேர் இருக்கிறார்கள். 'இவர்கள் அனைவரையும் உனக்குத் தெரியுமா' என்றால், அசட்டை யாக தோளை உலுக்குகிறாள். தான் நான்காயிரம் பேரால் கண்காணிக்கப்படுவதில், அதில் உள்ள அயோக்கியர் களின் எண்ணிக்கையை, அவர்கள் அவளுக்கு விளைவிக்கக்கூடிய ஆபத்தையெல்லாம் அவள் சிந்திக்கவில்லை. 'ஜஸ்ட் ஃபார் ஃபன்' என்கிறாள்... ஒருநாள் வீட்டில் யாருமில்லாதபோது, 'சிங்கிள் அட் ஹோம்...' என்று ஸ்டேட்டஸ் தட்டிய ஒரு பெண்ணை, அவள் ஃபேஸ்புக் ஃப்ரெண்ட்ஸ் லிஸ்ட்டில் இருந்த ஓர் அந்நியன் சீரழித்த கதை தெரியாமல்.

ஆளே இல்லை!

ஃபேஸ்புக்கில் ஒரு பெண்ணைப் பற்றிய ஆபாச, அவதூறு வீடியோ பரவினால், அதை உடனடியாகத் தடுக்க புகார் அளிக்க, இந்தியாவில் ஒரு நபரைக்கூட ஃபேஸ்புக் நிறுவனம் நியமிக்கவில்லை. அயர்லாந்தில் உள்ள ஃபேஸ்புக் மையத்தில்தான் புகார் அளிக்க முடியும். அதற்கு முன்பு நம் நாட்டு நீதிமன்றத்தில் ஆர்டர் வாங்க வேண்டும். அதை அவர்கள் நாட்டு நீதிமன்றம் அங்கீகரிக்க வேண்டும். இதையெல்லாம் செய்துமுடிக்க குறைந்தது 15 நாட்கள் ஆகும். சில நிமிடங்களில் பல்லாயிரம், பல லட்சம் ஷேர்களை நிகழ்த்தும் நம் 'நல்லவர்கள்' தேசத்தில், சம்பந்தப்பட்ட பெண்ணின் வாழ்க்கையே அந்த வீடியோ வால் முடங்கிவிடும். இதை எல்லாம் உத்தேசித்துதான், 'எங்கள் நாட்டுக்குள் ஃபேஸ்புக்கே வரக்கூடாது' என்ற முடிவெடுத்த சீனா, இன்றுவரை ஃபேஸ்புக்கே இல்லாத நாடாக இருக்கிறது.


ஆபாச வீடியோக்கள்... அரசின் நடவடிக்கை என்ன?

வலைதளங்களைவிட, செல்போனில் ஆபாச வீடியோக்கள் பார்ப்பவர்கள் தான் அதிகம் என்கிறது புள்ளிவிவரம். அரசு நினைத்தால், நெட்வொர்க் நிறுவனங்களின் கடி வாளத்தை இறக்கி, ஆபாச வீடியோக்கள் பரப்பப்படுவதற்கு தடை விதிக்கலாம், தடுக்கலாம். ஆனால், அதிக மெமரி கொண்ட ஆபாச வீடியோக்களை டவுன்லோடு செய்வதன் மூலம், அதிகக் கட்டணம் வசூலிக்கும் நெட்வொர்க் நிறுவனங்கள், அதில் ஒரு பங்கை அரசுக்கும் கொடுத்து அதை 'ஆஃப்' மோடில் வைத்திருக்கின்றன. ஆக, நடக்கும் குற்றங்களுக்கு எல்லாம் அரசும் மறைமுகமாக துணை போகிறது என்பதே உண்மை.''


போதிய வசதிகள் இல்லாத சைபர் க்ரைம்!

இணைய அட்டூழியங்களுக்குத் தண்டனை கொடுக்க காவல்துறையில் சைபர் க்ரைம் எனும் பிரிவு இருக்கிறது. ஆனால், அந்தத் தொழில்நுட்ப விவரங்கள் தெரிந்தவர்கள் இங்கே போதுமான அளவில் பணியமர்த்தப்படுவதில்லை. 7 கோடி மக்கள் இருக்கும் தமிழகத்தில் தற்போது ஆயிரத்தில் மட்டும் சைபர் க்ரைம் போலீஸார் இருந்தால், பிரச்னைகளை எப்படி விரைந்து முடிக்க முடியும்?

ஆக, சமூக வலைதளங்களுக்கான கடிவாளத்தின் சாத்தியத்தன்மை கண்ணுக்கு எட்டிய தூரம் வரை தெரியவில்லை. பாதுகாப்பு எல்லைக்குள் நம்மை நிலைநிறுத்தும் பொறுப்பும், நம் கைகளிலேயே! எனவே, டெக்னாலஜியை மிக மிக மிகக் கவனமாகப் பயன்படுத்துவதுதான்... நமக்கிருக்கும் ஒரே பாதுகாப்பு!


பாதுகாப்பு டிப்ஸ்!
 

இ-மெயில் பாஸ்வேர்டு, டெபிட் கார்டு பாஸ்வேர்டு போன்றவற்றை பொது இடத்தில் அலைபேசியில் சொல்வது, செல்லில், மெயிலில் பதிவது வேண்டாம். எளிதில் கண்டுபிடிக்க முடியாத வகையில் சிக்கலான பாஸ்வேர்டாக வைப்பதுடன், அடிக்கடி அதை மாற்ற வேண்டும்.

மொபைலில் தேவையற்ற ஆப்ஸ்களை டவுன்லோடு செய்து இன்ஸ்டால் செய்ய வேண்டாம். சில ஆப்ஸ்கள் மிக எளிதில் உங்களுக்குத் தெரியாமல் உங்கள் மொபைலில் உள்ள தகவல்களைத் திருடி அனுப்பும்.

புகைப்படங்கள் மார்ஃபிங்கால் சீரழிக்கப்படலாம் என்பதால், சமூக வலைதளங்களில் புகைப்படங் களை பதியாதீர்கள். பெர்சனல் விஷயங்கள் பற்றிய ஸ்டேட்டஸ் பதியாதீர்கள்!

மால், தியேட்டர், பொருட்காட்சி போன்ற இடங்களில், 'குலுக்கல் பரிசு' என்று உங்களைப் பற்றிய தகவல்களைப் பூர்த்தி செய்யச் சொல்லும்போது, தவிர்த்துவிடுங்கள்.

ஹோட்டல், மால், தியேட்டர் என்று இலவச வைஃபை இணைப்பு உள்ள இடங்களில் மிகக் கவனமாக இருங்கள். இதுபோன்ற இடங்களில் வைஃபையை ஆன் செய்தாலே போதும், உங்கள் கைபேசியில் உள்ள தகவல்கள், புகைப்படங்கள் அனைத்தும் திருடப்படலாம்.

செல்போனை சர்வீஸுக்குக் கொடுக்கும்போது மெமரி கார்டு நீக்கி, முக்கிய விவரங்களை அழித்துக் கொடுங்கள்

Monday, July 27, 2015

Best Exercises during Pregnancy

Exercising during pregnancy can be extremely beneficial for you and your baby. Regular exercise during pregnancy can boost your mood, improve sleep, and reduce aches and pains associated with pregnancy. Exercising while pregnant can help prevent pre-eclampsia and gestational diabetes. It also keeps your body strong so that you are more likely to lose the baby weight faster after pregnancy as well. After all muscle burns more than fat and if we lose all our muscle mass during pregnancy we will have to work on building it up again after delivery. Or we could work to maintain it during pregnancy by applying these best exercises during pregnancy to our daily routine.

Some of the exercises that are best involve increasing heart rate, keeping you flexible, managing weight gain , and maintains muscle mass without causing undo stress to you or the baby. Will all exercise programs you should listen to your body and not put too much stress on it.

These exercises are generally safe but be sure to consult your health care provider before starting any exercise program.

Walking

Walking is a great pregnancy workout. It is low impact so it doesn't jar your knees or ankles. It is a moderate intensity exercise and will help keep your blood sugar stable. It is also probably the easiest exercise to do because it requires no equipment besides some good tennis shoes and you can do it anywhere.

Swimming

Swimming is a wonderful exercise during pregnancy. It works your large and small muscle groups and provides cardiovascular benefits but it low impact because you are in water. Swimming is hailed as one of the best exercises you can do while pregnant because it has the capability to greatly increase the amount of oxygen your body can transport without much risk of injury. there are some precautions that need to be taken however as to the kind of stroke you do and what types of chemicals are in the pool you are using. When possible swim in non treated pools or lakes. Here is an article that talks about some more things to consider when trying to swim safely.

Low Impact Aerobics

Aerobics that are low impact help strengthen your body and keep your heart strong. This with any cardio exercise has been shown to increase the size of the placenta enabling more oxygen and nutrients to get to the baby. This also enable you to have more stamina during labor and delivery.

Dancing

This has many of the same effects as aerobics…but you get to have tons of fun. You could join a group and get to know other pregnant moms. While dancing during pregnancy try to avoid dancing that would create very jerky movements. You may not want to do this after your belly starts getting to big.

Yoga

Yoga helps maintain muscle mass and keep you flexible and strong. Prenatal yoga has been shown to improve sleep, reduce stress and anxiety, increase the strength, flexibility, and endurance of muscles needed during childbirth, decrease lower back pain, decrease nausea, Decrease shortness of breath. It also decreases the risk of pre-term labor, pregnancy induced hypertension and intrauterine growth restriction. Make sure when seeking out yoga you get into a class designed for pregnant moms.

Stretching

Stretching is great to keep you flexible and limber and keep your muscles from being strained. Stretching can be very beneficial to relief pain or tension during the many changes your body goes through during pregnancy. Make sure to find a stretch tailored to your specific needs.

Weight training

Weight training is usually best if it is low impact and you have already been doing weight workouts. Reduce the amount of weights you are lifting or make sure you are doing controlled slow movements. A good thing for weight training would be to do body weight exercises with many repetitions instead of higher weights and lower reps.

Exercise during pregnancy prevents diabetes risk, reduces excessive weight gain

Women who exercise during pregnancy are less likely to have gestational diabetes, and the exercise also helps to reduce maternal weight gain, finds a study published on 3 June 2015 in BJOG: an International Journal of Obstetrics and Gynaecology.

Gestational diabetes is one of the most frequent complications of pregnancy. It is associated with an increased risk of serious disorders such as pre-eclampsia, hypertension, preterm birth, and with induced or caesarean birth. It can have long term effects on the mother including long term impaired glucose tolerance and type 2 diabetes. The children of mothers with gestational diabetes are more likely to become overweight or obese and have a higher risk of developing diabetes themselves.

Gaining more weight than is recommended during pregnancy carries similar risks, and these women are also less likely to lose the excess weight after the baby is born. 

In this systematic review, the research team from Spain looked at the results of enrolling healthy pregnant women, who did little or no exercise, into exercise programmes. Analysis of 13 trials, involving more than 2,800 women, found that exercise reduced the risk of gestational diabetes by more than 30% - for women who exercised throughout pregnancy this was even greater (36%). This effect was strongest for women who combined toning, strength, flexibility and aerobic exercise.

Exercise was also helpful in reducing excessive weight gain - those who exercised were on average a kilogram lighter. This held true for the weight gain even if the exercise programme was started in the second trimester of pregnancy.

Gema Sanabria- Martinez, from Virgen de la Luz Hospital and lead author of the study, said, "Exercise is not something to be feared during pregnancy - the moderate levels of exercise used in these studies had significantly positive effects on health and were found to be safe for both mother and baby."

Mike Marsh, BJOG Deputy Editor-in-chief added, "This careful analysis of previous studies shows a beneficial effect of exercise on healthy pregnant women who ordinarily did little or no exercise. It may influence recommendations for exercise in pregnancy in such women. Further studies are needed to establish whether this effect is seen in all pregnant women."
 
 
 
 

27 நட்சத்திரங்களில் பிறந்தோருக்கும் துன்பங்கள் தீர்க்கும் காயத்ரி மந்திரங்கள்

27 நட்சத்திரங்களில் பிறந்தோருக்கும் துன்பங்கள் தீர்க்கும் காயத்ரி மந்திரங்கள்

 

உங்கள் நட்சத்திர காயத்ரி மந்திரத்தை மனப்பாடம் செய்து தினமும் குறைந்தது 9 முறையாவது சொல்லுங்கள். வாழ்க்கையில் மிகச்சிறந்த முன்னேற்றம் காணலாம்.

 

அஸ்வினி

ஓம் ஸ்வேத வர்ண்யை வித்மஹே சுதாகராயை தீமஹி தன்னோ அச்வநௌ ப்ரசோதயாத்

 

பரணி

ஓம் க்ருஷ்ணவர்னாயை வித்மஹே தண்டதராயை தீமஹி தன்னோ பரணி ப்ரசோதயாத்

 

கிருத்திகை
ஓம் வன்னிதேஹாயை வித்மஹே மஹாதபாயை தீமஹி தன்னோ க்ருத்திகா ப்ரசோதயாத்

 

ரோஹிணி
ஓம் ப்ராஜாவிருத்யைச வித்மஹே விச்வரூபாயை தீமஹி தன்னோ ரோஹினி ப்ரசோதயாத்

 

மிருகசீரிடம்

ஓம் சசிசேகராய வித்மஹே மஹாராஜாய தீமஹி தன்னோ ம்ருகசீர்ஷா ப்ரசோதயாத்

 

திருவாதிரை
ஓம் மஹா ச்ரேஷ்டாய வித்மஹே பசும்தநாய தீமஹி தன்னோ ஆர்த்ரா ப்ரசோதயாத்

 

புனர்பூசம்
ஓம் ப்ரஜாவ்ருத்யைச வித்மஹே அதிதிபுத்ராய த தீமஹி தன்னோ புனர்வஸு ப்ரசோதயாத்

பூசம்
ஓம் ப்ரம்ம்வர்ச்சஸாய வித்மஹே மஹா திஷ்யாய தீமஹி தன்னோ புஷ்ய ப்ரசோதயாத்

 

ஆயில்யம்
ஓம் ஸர்பராஜாய வித்மஹே மஹா ரோசனாய தீமஹி தன்னோ ஆச்லேஷ ப்ரசோதயாத்

 

மகம்
ஓம் மஹா அனகாய வித்மஹே பித்ரியா தேவாய தீமஹி தன்னோ மகஃப்ரசோதயாத்

 

பூரம்
ஓம் அரியம்நாய வித்மஹே பசுதேஹாய தீமஹி தன்னோ பூர்வபால்குநீ ப்ரசோதயாத்

 

உத்திரம்
ஓம் மஹாபகாயை வித்மஹே மஹாச்ரேஷ்டாயை தீமஹி தன்னோ உத்ரபால்குநீ ப்ரசோதயாத்

 

அஸ்தம்
ஓம் ப்ரயச்சதாயை வித்மஹே ப்ரக்ருப்ணீதாயை தீமஹி தன்னோ ஹஸ்தா ப்ரசோதயாத்

 

சித்திரை
ஓம் மஹா த்வஷ்டாயை வித்மஹே ப்ரஜாரூபாயை தீமஹி தன்னோ சைத்ரா ப்ரசோதயாத்

 

சுவாதி
ஓம் காமசாராயை வித்மஹே மகாநிஷ்டாயை தீமஹி தன்னோ சுவாதி ப்ரசோதயாத்

 

விசாகம்
ஓம் இந்த்ராக்நௌச வித்மஹே மஹாச்ரேஷ்ட்யைச தீமஹி தன்னோ விசாகா ப்ரசோதயாத்

 

அனுஷம்
ஓம் மித்ரதேயாயை வித்மஹே மஹா மித்ராய தீமஹி தன்னோ அனுராதா ப்ரசோதயாத்

 

கேட்டை
ஓம் ஜயேஷ்டாயை வித்மஹே மகா ஜய்ஷ்ட்யாயை தீமஹி தன்னோ ஜ்யேஷ்டா ப்ரசோதயாத்

 

மூலம்
ஓம் ப்ராஜாதிபாயை வித்மஹே மஹப்ராஜையை தீமஹி தன்னோ மூலாப் ப்ரசோதயாத்

 

பூராடம்
ஓம் சமுத்ரகாமாயை வித்மஹே மஹாபிஜிதாயை தீமஹி தன்னோ பூர்வாஷாடா ப்ரசோதயாத்

 

உத்திராடம்
ஓம் விஸ்வேதேவாய வித்மஹே மஹா ஷாடாய தீமஹி தன்னோ உத்ராஷாடா ப்ரசோதயாத்

 

திருவோணம்
ஓம் மஹா ச்ரோணாய வித்மஹே புண்யஸ்லோகாய தீமஹி தன்னோ ச்ரோணா ப்ரசோதயாத்

 

அவிட்டம்
ஓம் அக்ர நாதாய வித்மஹே வசூபரீதாய தீமஹி தன்னோ சரவிஹ்டா ப்ரசோதயாத்

 

சதயம்
ஓம் பேஷஜயா வித்மஹே வருண தேஹா தீமஹி தன்னோ சதபிஷக் ப்ரசோதயாத்

 

பூரட்டாதி
ஓம் தேஜஸ்கராய வித்மஹே அஜஏகபாதாய தீமஹி தன்னோ பூர்வப்ரோஷ்டபத ப்ரசோதயாத்

 

உத்திரட்டாதி

ஓம் அஹிர் புத்ந்யாய வித்மஹே ப்ரதிஷ்டாபநாய தீமஹி தன்னோ உத்ரப்ப்ரோஷ்டபத ப்ரசோதயாத்

 

ரேவதி
ஓம் விச்வரூபாய வித்மஹே பூஷ்ண தேஹாய தீமஹி தன்னோ ரைய்வதி ப்ரசோதயாத்

 

வெற்றி மொழி

1902ஆம் ஆண்டு முதல் 2002 வரை வாழ்ந்த வில்லியம் கிளமெண்ட் ஸ்டோன் ஒரு தொழிலதிபர், சிறந்த கொடையாளி மற்றும் சுய முன்னேற்ற நூல்களின் ஆசிரியர். குடும்பத்திற்கு உதவுவதற்காக தனது ஆறு வயதில், தெருவில் செய்தித்தாள்களை விற்பனை செய்தார். தனது விற்பனைத்திறனால், இளம்வயதில் காப்பீடு பாலிசிகளை விற்பனை செய்யும் பணியை மேற்கொண்டார்.

வாழ்க்கையின் ஏழ்மையினை பொருட்படுத்தாமல், யாரும் வெற்றிகரமான வாழ்வினைப் பெறமுடியும் என்பதை தனது எழுத்துகளில் பிரதிபலித்தவர். வெற்றிக்கு தூண்டுகோலாக அமைந்த இவரின் சுய முன்னேற்ற எழுத்துகள் உலகளாவிய பார்வையாளர்களை சென்றடைந்தது.

$ சிந்தனையால் பயத்தை வெல்ல முடியாது; ஆனால், செயல்பாடு அதனை சரியாகச் செய்கின்றது.

$ உண்மையை எதிர்கொள்ள துணிச்சல்; மறுப்பு தெரிவிக்க தைரியம்; சரியான செயல்களைச் செய்தல்; இவையே நேர்மையான வாழ்க்கைக்கான மந்திர திறவுகோல்.

$ உங்கள் நோக்கம் நிலவாக இருக்கட்டும். ஒருவேளை அதில் தோற்றால், நீங்கள் ஒரு நட்சத்திரத்தை வெல்லக்கூடும்.

$ எப்பொழுது நாம் நமது எண்ணங்களை ஒழுங்காக வழிநடத்துகிறோமோ, அப்பொழுது நம்மால் நமது உணர்வுகளைக் கட்டுப்படுத்த முடிகின்றது.

$ நமக்கு ஒரு பிரச்சனை, "வாழ்த்துகள்"; ஆனால் இது ஒரு கடுமையான பிரச்சினை, அப்படியானால் "இரட்டிப்பு வாழ்த்துகள்".

$ உங்களுக்கான சூழலைத் தேர்ந்தெடுக்கும்போது கவனமாக இருங்கள், ஏனெனில் அதுவே உங்களை வடிவமைக்கின்றது; நண்பர்களை தேர்ந்தெடுக்கும்போது கவனமாக இருங்கள், ஏனெனில் நீங்கள் அவர்களைபோல் மாற வாய்ப்பிருக்கிறது.

$ மக்களிடம் உள்ள சிறிய வேறுபாடே பெரிய வித்தியாசத்தை உருவாக்குகிறது. அந்த சிறிய வேறுபாடு என்பது "அணுகுமுறை", அதனால் ஏற்படும் பெரிய வித்தியாசம் ஒன்று நேர்மறையானது அல்லது எதிர்மறையானது.

$ வெற்றி போலவே தோல்வியிலும் பலருக்கு நிறைய விஷயங்கள் இருக்கின்றது; நேர்மையான மனப்பாங்கின் மூலம் தோல்வியானது கற்றுக்கொள்ளும் அனுபவமாகின்றது.

$ உங்களின் தனிப்பட்ட சாதனை உங்கள் மனதிலேயே தொடங்குகிறது; உங்களின் பிரச்சினை, குறிக்கோள் மற்றும் ஆசை என்ன என்பதை சரியாக அறிவதே முதல்படி.

$ நீங்கள் உங்கள் சூழ்நிலையின் ஒரு தயாரிப்பே; இலக்கை நோக்கி உங்களை சிறப்பாக உருவாக்கும் சூழலைத் தேர்ந்தெடுங்கள்.

$ முயற்சி செய்வது மற்றும் முயற்சியை தக்கவைத்துக் கொள்பவராலேயே வெற்றி பெறவும் மற்றும் வெற்றியை பராமரிக்கவும் முடிகின்றது.

$ முயற்சி, முயற்சி, முயற்சி மற்றும் தொடர்ச்சியான முயற்சி என்பதே எதிலும் நிபுணராவதற்காக பின்பற்றவேண்டிய விதி