இன்று மிக பெரிய சமுக வலைத்தளம் என்றால் அது Facebook தான். தினம்தோறும் பலர் அதில் இணைத்து வருகின்றனர். தங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளவும் , தனது பழைய நண்பர்களை தேடி கண்டுபிடிக்கவும் , தனது ரசனையுடன் ஒத்துபோகும் நண்பர்களை கண்டுபிடிக்கவும் இது உதவுகிறது. இதில் பல நன்மைகள் இருந்தாலும் சில தீமைகளும் உள்ளது .
குறிப்பாக பெண்கள் இந்த Facebook இல் படும்பாடு சொல்லிமாலாதது .Facebookஆல் வாழ்க்கையை தொலைத்த , பல கஷ்டங்களை அனுபவித்த பெண்கள் பலர் உள்ளனர் . சமுகத்திற்கு பயந்து அவர்கள் சொல்லுவதில்லை . பிறரால் நீங்கள் கஷ்டப்பட்ட கூடாது என நினைத்தால் , உங்களுக்காக சில யோசனைகள் ...
- தயவு செய்து உங்கள் புகைப்படங்களை பதிவேற்றாதிர்கள் . அந்த படங்கள் சில சமுக விரோதிகளால் ஆபாச படமாக மாற்ற வாய்ப்புள்ளது .
- எக்காரணத்தை முன்னிட்டும் உங்கள் உண்மையான முகவரி ,தொலைபேசி எண்ணை கொடுக்காதீர்கள் .
- குறிப்பிட்ட நாட்கள் இடைவெளியில் உங்கள் கடவு சொல்லை(Password) மாற்றி கொண்டே இருங்கள் .
- கடவு சொல் எளிதில் யூகிக்க முடியாததாக வையுங்கள் . உங்கள் பிறந்த நாள் , மொபைல் நம்பர் , பெற்றோர் பெயரை வைக்காதீர்கள் .
- என்ன நெருங்கிய உறவினராக இருந்தாலும் , நன்பர்களாக இருந்தாலும்கடவு சொல்லை கொடுக்காதீர்கள் . திருமணம் நிச்சயமான பெண்கள் கூட கொடுக்காதீர்கள் .
- நன்றாக தெரிந்தவர்களின் Friend Request மட்டும் Accept செய்யுங்கள் .
- உங்கள் நண்பர்கள் புகைப்படங்களில் உங்களை Tag செய்வதை தடுங்கள். அப்படி Tag செய்தாலும் அது உங்கள் அனுமதி கிடைத்த பின்தான் உங்கள் Wall இல் தோன்ற வேண்டும் என Setting கில் மாற்றம் செய்யுங்கள் .
மாற்றம் செய்ய :Home -> Privacy setting ->Timeline and Tagging
- தவறான படங்கள் அல்லது ஆபாசமான Status போடும் நண்பர்களை உடனே Unfriend செய்யுங்கள் .
- உங்கள் கணக்கில் Mobile Notification option ஐ Enable செய்யுங்கள் .
Enable செய்ய : Home -> Account setting ->security setting -> login notification
- மற்றவருடன் Chat செய்யுன் போது உங்களின் உண்மை தகவல்களை சொல்லவேண்டாம் . அதுபோல உங்களின் பலவினங்களை சொல்லாதீர்கள் .
- இதையும் மீறி எதாவது தவறு வந்தால் உடனடியாக உங்கள் Account ஐ அழித்துவிடுங்கள் .
ஆண்களை விட பெண்கள் அதிகம் பாதிக்கபடுவதால் இந்த பதிவு .