Saturday, December 17, 2011

வேலை ரெடி, நீங்க ரெடியா?


இந்த வாரம் எதைப் பற்றி பேசப் போகிறோம் என்று பார்ப்பதற்கு முன்னால், போன வருஷம் எனக்கு ஏற்பட்ட ஒரு சுவாரஸ்யமான விஷயம் பற்றி சொல்கிறேன்.

ன் கோர்ஸ் முடிவில் மாணவர்கள் தரும் ஃபீட்பேக்கில் ஒரு மாணவர்/மாணவி என்னை 'விக்ஷீ.சீணீக்ஷீளீஸீஷீஷ்' என்று கேலியாக குறிப்பிட்டிருந்தார். அந்த மாணவர் ஏன் இப்படி எழுதினார் என்று யோசித்துப் பார்த்தபோது, நான் அந்த வார்த்தையை பாடம் நடத்தும்போது அடிக்கடி (சில சமயங்களில் தேவையே இல்லாமல்) பயன்படுத்தியது புரிந்தது. இதுபோல சிறு சிறு விஷயங்கள் நமக்கே தெரியாமல் நமக்கு பலவீனமாகி போவதுண்டு. இதற்கு காரணம், சுயபுரிதல் இல்லாததே. அதனால் ஜோஹாரி (Johari)என்கிற பிரபலமான உளவியல் அறிஞர் சொன்னதைப் பற்றி உங்களிடம் சொல்கிறேன்.

நம் மனதை நான்கு அறைகளாகப் பிரிக்கலாம். ஒவ்வொரு அறையிலும் என்ன இருக்கிறது என்று பார்க்கலாம்.


முதல் அறையின் பெயர் 'திறந்த அறை' (Open area). இங்கு நம்மை பற்றி நமக்கு தெரிந்த, மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ள நினைக்கிற விஷயங்களை வைத்திருப்போம். இதில் என்ன பிரச்னை எனில், சில பேர் இங்கே என்ன வைப்பது என்று தெரியாமல் எல்லா விஷயங்களையும் கொட்டி வைத்திருப்பார்கள். என் ஃபேஸ்புக் ஃபிரண்ட்ஸ் லிஸ்ட்டில் உள்ள மாணவ நண்பர்கள் பலர் தங்களோட வெள்ளிக்கிழமை புதுச்சேரி சுற்றுலா போட்டோக்களை ஃபேஸ்புக்கில் அப்லோட் செய்வதுபோல. வாழ்க்கையை திறந்த புத்தகமாக வைத்துக் கொள்வதில் தவறில்லை. ஆனால், யாரும் அதில் கிறுக்கியோ அல்லது பக்கங்களைக் கிழித்துவிடாமலோ பார்த்துக் கொள்வது நல்லது.  

இரண்டாவது அறைக்குப் போவோம். இதன் பெயர் 'ரகசிய அறை' (Hidden area). இதில் நம்மைப் பற்றி நமக்கு தெரிந்த, ஆனால், மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்பாத விஷயங்களை வைத்திருக்கிறோம். உதாரணத்திற்கு நண்பர்கள் மத்தியில் பெரிய பிஸ்தாவான உங்களுக்கு, தனியாக இருட்டறையில் தூங்குவதற்குப் பயம் போன்ற விஷயங்கள் இதில் இருக்கும். இந்த அறையில் உங்கள் பலவீனங்கள், குற்ற உணர்வையோ, பதட்டத்தையோ ஏற்படுத்த நெகட்டிவ்வான விஷயங்களை மட்டுமல்ல, நல்ல பாசிட்டிவ் விஷயங்களும் இருக்கலாம். என் கல்லூரி நண்பர் ஒருவர் தனக்கு நன்றாக கிடார் வாசிக்கத் தெரியும் என்பதை கல்லூரியின் கடைசி நாள் வரை யாருக்கும் சொல்லாமல் வைத்திருந்தார். நம் வாழ்க்கை எப்படி முழுக்க முழுக்க திறந்த புத்தகமாக இருக்கக் கூடாதோ, அதேபோல மர்ம நாவலாகவும் இருக்கக் கூடாது. ஏனெனில், இந்த அறையில் நிறைய விஷயங்களை அடைத்து வைப்பது உங்களுக்கு மன அழுத்தத்தை மட்டுமல்ல, உங்கள் நெருங்கிய நண்பர்களுக்கு உங்கள் மேல் அவநம்பிக்கையையும் உருவாக்கும்.

மூன்றாவது அறை, கொஞ்சம் டேஞ்சரான ஏரியா. இதன் பெயர் குருட்டறை (Blind spot). இதில் நம்மைப் பற்றி நமக்கே தெரியாத, ஆனால் மற்றவர்களுக்குத் தெரிந்த விஷயங்கள் இருக்கும். அப்படி என்ன இருக்கும் என்கிறீர்களா? தொடக்கத்தில் எனக்கு நடந்த அனுபவத்தைச் சொன்னேனே, அதுபோல நம்மை பற்றி நாம் கவனிக்கத் தவறிய, ஆனால் மற்றவர்கள் கவனித்த விஷயங்கள் அதில் இருக்கலாம். இந்த குருட்டறையில் உங்கள் குறைகள் மட்டும்தான் இருக்க வேண்டும் என்பதில்லை, நிறைகளும் இருக்கலாம். இதில் குறைகள் நிறைந்திருந்தால் காரணமே இல்லாமல் (தெரியாமல்) முயற்சிகளில் தோல்விகள் வரும்; நிறைகள் அதிகமாக இருந்தால் நிறைய வாய்ப்புகள் முயற்சிக்காமலே கைநழுவிப் போய்விடும். அதனால், கேரியரிலும் வாழ்க்கையிலும் சாதிக்க உங்கள் குருட்டறையைப் புரிந்து கொள்வது அவசியம். இதில் குறை இருந்தால் எப்படி சரி செய்வது?

1. முடிவு வெற்றியோ, தோல்வியோ ஒவ்வொரு முயற்சியிலும் நீங்கள் செய்ததும் செய்யத் தவறியதும் என்ன என்று உணர்ச்சி வயப்படாமல் நடுநிலையோடு பட்டியல் போடுங்கள்.

2. நெருங்கிய நண்பர்கள், நல்ல ஆசிரியர்கள், பெற்றோர் போன்ற உங்கள் நலம் விரும்பிகளிடம், அவர்கள் உங்களிடம் கண்ட நிறை-குறைகள் என்ன என்பதை திறந்த மனதோடு கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.

3. தினமும் சிறிது நேரமாவது தனிமையில் உங்களோடு செலவிடுங்கள் (உதா., டைரி எழுதலாம்!). அந்த நேரத்தில் அன்றைய முக்கிய நிகழ்ச்சிகளில் நீங்கள் நடந்து கொண்ட விதம் பற்றி எண்ணிப் பாருங்கள்.

4. உங்கள் வெற்றி, தோல்விகளில் பிறர் தரும் பாராட்டுகளையும், விமர்சனங்களையும் காது கொடுத்து கேளுங்கள். அவற்றின் உண்மை தன்மையை நடுநிலையோடு ஆராய்ந்து ஏற்றுக் கொள்ளுங்கள்.

இது போன்ற முயற்சிகள் நாளை இல்லாவிட்டாலும், என்றாவது ஒருநாள் கண்டிப்பாக பலன் தரும்.

நாம் பார்க்கப் போகும் கடைசி அறையின் பெயர் 'இருட்டறை' (Unknown Area). இதில் இருப்பது என்ன என்பது உங்களுக்கும் தெரியாது, மற்றவர்களுக்கும் தெரியாது. இந்த இருட்டறை அவ்வளவு அபாயகரமான ஏரியாவாக இல்லாவிட்டாலும்கூட, இது பிற்காலத்தில் அப்படி ஆகலாம்.

1. புதிய புதிய முயற்சிகளில் வெற்றி, தோல்வி பற்றி கவலைப்படாமல், கூச்சமில்லாமல் உங்களை ஈடுபடுத்திக் கொள்ளுங்கள் (நம்ம பவர் ஸ்டார் டாக்டர் சீனிவாசன் போல!).

2. தேடி வரும் பொறுப்புகளையும், வாய்ப்புகளையும் தட்டிக் கழிக்காமல் ஏற்றுக் கொள்வது மட்டுமல்லாமல், புதிய வாய்ப்புகளையும் தேடிச் சென்று அவற்றை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

இதுபோன்ற செயல்கள் உங்களிடம் புதைந்துள்ள ஆற்றலை புரிந்து கொள்ள மட்டுமல்ல, இந்த முயற்சிகளில் கிடைக்கும் அனுபவ அறிவை இன்னும் முதிர்ச்சி கொண்டதாக்கும். இந்த அறிவு முதிர்ச்சி (emotional maturity) பற்றி அடுத்த வாரம் சொல்கிறேன்!

(தயாராவோம்)


மிழ்நாட்டில் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் தேர்வுகளுக்கான பயிற்சி மையங்கள் மூலைக்கு மூலை முளைத்துக் கிடக்கின்றன. ஆனால், திண்டுக்கல்லில் இருக்கும் 'ஆயக்குடி இலவசப் பயிற்சி மையம்' கொஞ்சமல்ல, நிறையவே வித்தியாசமானது. கடைசி யாக நடந்த வி.ஏ.ஓ. தேர்வில் இந்த மையத்தைச் சேர்ந்த 405 பேர் தேர்ச்சி பெற்றது இந்நிறுவனத்தின் வெற்றிக்கு ஒரு சின்ன உதாரணம். இத்தனைக்கும் இம்மையத்தில் பயிற்சி பெற கட்டணம் எதுவும் கிடையாது. இதன் இயக்குநர் ராமமூர்த்தி டி.என்.பி.எஸ்.சி.-யில் வெற்றி பெறும் வழிகளை விளக்கமாக எடுத்துச் சொன்னார்.

''டி.என்.பி.எஸ்.சி. பண்றவங்க தனியா கைடு, புத்தகம்-னு எதையும் வாங்கத் தேவையில்லை. குரூப் 4-க்கு ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரைக்கும் இருக்கும் ஸ்டேட் போர்டு புத்தகங்கள், குரூப் 2-க்கு அதோட சேர்த்து 1, 2 வரலாறு, புவியியல் இதைப் படிச்சாலே போதும், எல்லாத்தையும் படிக்கிறதைவிட பாடத் திட்டத்தைப் பார்த்து படிக்கணும். குரூப் 2, குரூப் 4 இரண்டுக்குமே அறிவியல் 20, கணக்கு 10, அரசியல் 10, வரலாறு 10, புவியியல் 10, பொருளியல் 10, பொது அறிவு 20, இதர கேள்விகள் 10, மொத்தம் 100, பொது தமிழ் 100 என மொத்தம் 200 கேள்விகளுக்கு மொத்தம் 300 மதிப்பெண்.

பொது தமிழ்-ல எடுத்துகிட்டோம்னா அ-ஒள வரைக்குமான பாடத்திட்டம்; அகர வரிசை, ஆங்கிலச் சொல்லுக்கு நிகரான தமிழ்ச் சொல், இலக்கணக் குறிப்பு, உவமையால் விளக்கப்படுதல், எதிர்ச்சொல்; சமூக அறிவியலில்-முக்கிய தினங்கள், ஐ.நா., சார்க் அமைப்புகள், வங்கி, தமிழ்நாடு ஆறுகள்... இதைப் பற்றி ஒரு கேள்வி கண்டிப்பாக இருக்கும். கணக்குன்னா முக்கோணவியல், எண்ணியல், அளவிடல், பகுமுறை வடிவியல், வடிவியல்; குரூப் 2-க்கு கூட்டுச் சராசரி, இடைநிலை அளவு, முகடு...இதுல ஒரு கணக்கு கண்டிப்பா வரும். இதுல தப்பு பண்ணிடவே கூடாது. பொது அறிவுக்கு தினசரி நாளிதழ்களைப் படித்து குறிப்பு எடுத்து வச்சாலே போதும்.

படிக்கிறப்ப கோடு வேர்டு வெச்சு படிக்கணும். சோடியம், கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம் இதை 'சோகாபொம' ன்னு மனசுல வைச்சுகிட்டா மறக்கவே மறக்காது. படிக்கற எல்லாத்தையும் இழுத்துப் போட்டு படிக்கறதைவிட, செலக்ட் பண்ணி படிச்சீங்கன்னா வெற்றி நிச்சயம். ஒரு தடவை

தேர்வெழுதி தோல்வியடைஞ்சாலும், மனம் தளராம முயற்சி பண்ணிட்டே இருக்கணும்'' என்றார்.  

- பானுமதி அருணாசலம், கு.பிரகாஷ்