Wednesday, September 22, 2010

நம்பிக்கை! அதுவே மனிதனின் அஸ்திவாரம்!!

நம்பிக்கை! அதுவே மனிதனின் அஸ்திவாரம்!! 


இன்றைய சராசரி சாதாரண மனிதர்களே, பிற்காலத்தில் அசாதாரண மனிதர்கள் ஆகின்றனர். பிறவியிலேயே யாரும் அசாதாரண மனிதர்கள் அல்லர். இதற்கு உதாரணமாக பலரைக் கூறலாம்.
 
ஜெர்மானியராகப் பிறந்தவர் விஞ்ஞானமேதை ஐன்ஸ்டீன். நாஜிகலால் நாடு கடத்தப்பட்டவர். அமெரிக்காவில் அடைக்கலம் புகுந்தவர். அமெரிக்காவில் பிரின்ஸ்டன் நகரில் உள்ள ஆராய்ச்சி சாலை அவருக்காக ஒதுக்கப்பட்டது. முதல் முறையாக அந்த ஆராய்ச்சி சாலைக்கு அவரை அழைத்துச் சென்று சுற்றிக்காட்டி அவருக்கு திருப்த்திதானா? ஏதும் வசதிக் குறைவுகள் உள்ளனவா என்று அமெரிக்க விஞ்ஞானிகள் விசாரித்தனர்.
 
தயங்கித் தயங்கி மெதுவான குரலில் ஐன்ஸ்டீன் சொன்னார். "இங்கு எல்லாம் வசதியாகவே இருக்கிறது. ஒரே ஒரு குறை" என்று இழுத்தார். "என்ன என்று சொல்லுங்கள் உடனே சரி செய்யப்படும்" என்றனர். அமெரிக்க விஞ்ஞானிகள் அறை ஓரத்தில் இருந்த குப்பைக் கூடையைச் சுட்டிக்காட்டி, "இது ரொம்பவும் சிறியதாக இருக்கிறதே, கொஞ்சம் பெரிய குப்பைத்கூடை இருந்தால் நல்லது" என்றார். திகைத்துப் போய் "பெரிய குப்பைக்கூடையா? எதற்கு?" என்றார்கள்.
 
ஐன்ஸ்டீன் சொன்னார், "நான் என்ன மேதாவியா, எல்லா ஆராய்ச்சிகளையும் முதலிலேயே சரியாகச் செய்யதப்புத் தப்பாகச் செய்வேன். எழுதி எழுதிப் பார்த்தால் எல்லாம் தப்புத் தப்பாக இருக்கும். உடனே கிழித்து எறிந்து விட்டு மீண்டும் மீண்டும் எழுதுவேன். இந்த முட்டாளுக்கு ஒரு விஷயத்தை சரியாகச் செய்ய நிறைய சந்தர்ப்பம் வேண்டும். தவறுகளைப் புதைக்க கொஞ்சம் பெரிய குப்பைக் கூடையும் வேண்டும்" என்றார். அவரே அப்படி என்றால்நாமெல்லாம் எப்படி?
 
சாதாரண மனிதர்களில் இருந்துதான் அசாதாரணர்கள் தோன்றுகிறார்கள். நாம் சாதாரணம் என்று சாதாரணமாகி விடவேண்டாம். நாம் ஜெயிக்கப் பிறந்தவர்கள்.

 

சின்னச் சினனத் தோல்விகள்.
சின்னச் சின்னச் சறுக்கல்கள்
வீழ்ச்சிகள் ஒரு பெரிய விஷயமே அல்ல.
எதை இழந்தாலும்
நம்பிக்கையை இழக்காதீர்கள்.


இந்த ஆழ்ந்த நம்பிக்கையால் தான் உலக வரலாற்றில் இடம்பெற்றுள்ள அனைவரும் சாதாரண மனிதர்களாக இருந்து அசாதாரண மனிதர்களாக மாறியுள்ளனர்.


நம்பிக்கை! அதுவே மனிதனின் அஸ்திவாரம்!!