Saturday, November 29, 2014

குட்டிஸுக்கு அறிமுகப்படுத்த சில தரமான வலைதள முகவரிகள்

ணையத் தொழில்நுட்ப வளர்ச்சியில் குழந்தைகளும் கைகோத்து பயணிக்க ஆரம்பித்துள்ளனர். ஆனால், ஃபேஸ்புக், பொழுதுபோக்குப் பக்கங்கள் என அவர்களின் கவனம் சிதற விடாமல் ஆக்கப்பூர்வமான வழியில் மடை திருப்ப, குழந்தைகளுக்கான பிரத்யேக வலைதளங்கள் பல செயல்பட்டு வருகின்றன. உங்கள் வீட்டு குட்டிஸுக்கு அறிமுகப்படுத்த சில தரமான வலைதள முகவரிகள் இங்கே..

Kids Health

மருத்துவச் செய்திகளை குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுக்கும் பக்கம் இது. 'ஆஸ்துமா என்றால் என்ன?', 'நமது உடல் பாகங்கள் எவ்வாறு செயல்படுகின்றன?', 'வைரஸ் காய்ச்சல் எதனால் ஏற்படுகிறது?' என, இப்படி மருத்துவம் சம்பந்தமான குழந்தைகளின் அனைத்து சந்தேகங்களுக்கும், கேள்விகளுக்கும் இங்கே விடை கிடைக்கும்.

மேலும், வீடியோ மூலமாகவும் தகவல்களை தெளிவுற தெரிந்துகொள்ளலாம். இதன் வலைதள முகவரி: http://kidshealth.org/kid/

National Geographic Kids


அமெரிக்காவிலிருந்து செயல்படும் அறிவியல், கல்வி அமைப்பான The National Geographic Society, குழந்தைகளுக்காக நடத்தும் வலைதளம் இது. இதில் தாவரங்கள், உயிரினங்கள் பற்றிய செய்திகளை குழந்தைகள் சுலபமாக கற்றுக் கொள்ளலாம்.

வாண்டுகளின் ஆர்வத்தைத் தூண்டும் வகையிலான இந்த தளத்தின் புகைப்படங்களும், வீடியோக்களின் இதன் பெரிய பிளஸ். வலைதள முகவரி: http://kids.nationalgeographic.com/kids/.

Kidsmart

இது லண்டனிலிருந்து குழந்தைகளுக்காகச் செயல்படும் இணையதளம். இணையம் தொடர்பான பல்வேறு விஷயங்களை சுலபமாகப் புரிந்துகொள்ளும் வகையில் குழந்தைகளுக்கு கற்றுத் தருகிறது இந்த இணையதளம்.

சாட்டிங், சமூக வலைதள பக்கங்கள், இணைய பாதுகாப்பு உள்ளிட்ட பல விஷயங்களை சின்ன சின்ன டிப்ஸ்களாகத் தெரிந்துகொள்ளலாம். வலைதள முகவரி: http://www.kidsmart .org.uk/.

உங்கள் செல்லங்களின் இணையப் பொழுதுகள் இனி பயனுள்ளதாகக் கழியட்டும்!