திருமணத்தில் அதிகமாகக் கவனிக் கப்படுவர் மணப்பெண் தான். கவனிக் கப்படுவது மட்டுமல்ல, பல்வேறு சமுதா யத் திருமணங்களில் அதிகமாக முக்கிய த்துவம் அளிக்கப்படுவதும் மணப்பெண் ணுக்குத்தான் என்று உங்களுக்குத் தெரி யுமா? பல்வேறு இன, சமுதாய திருமணங்களில் மணப்பெண்ணுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவத்தைப் பார்க்கலாமா...
மலையாளி நாயர் திருணம் 'பெண்ணே அரசி'
மலையாளி நாயர் திருணம் 'பெண்ணே அரசி'
"திருமணம் முடிந்தும் மணப்பெண் யார் காலிலும் விழத்தேவையில்லை. அது கணவனாக இருந்தாலும், மாமனார், மாமி யாராக இருந்தாலும்" சரி. "திருமணத் தின்போது நாங்கள் பெரியவர்கள் காலில் மட்டும் விழுந்து வணங்கி ஆசீர்வாதம் பெறுவோம்" என்று தெரிவிக்கிறார்.
இது, பெண்ணானவள் யார் காலிலும் விழத் தேவையில்லை, அவளால் சொந் தமாக முடிவுகளை எடுக்க முடியும் என்று காட்டுவதாக உள்ளது.
ராஜஸ்தான் திருமணம் 'திருப்பித் தாக்கும் மணமகள்'
திருமணச் சடங்கு முடிந்ததும், ராஜஸ்தானி மணமகளை சிறு கிளைகளைக் கொண்டு செல்லமாகத் தாக்குகிறார்கள். அவ்வாறு 'அடிப்பவர்களை' மணமகள் 'திருப்பித் தாக்க' வேண்டும். "தன்னை மோசமாக நடத்துபவர்களை திருப்பித் தாக்க மணமகளுக்கு உரிமை உண்டு என்பதைக் குறிக்கும் வகையில் இது நடை பெறுகிறது என்கிறார் 'விவாகா கொண்டா ட்டம்' என்ற நூலின் ஆசிரியரான பகவதி மிட்டல்.
சீக்கியர் திருமணம் 'முதலில் வலப்புறம் அமரும் பெண்'
திருமணத்துக்கு முன்பு, மணமகள் பாரம்பரிய முறைப்படி மணமகனுக்கு வலப்புறமாக அமர்கிறாள். பின்னர் நடை பெறும் நான்கு சடங்குகள் கணவன் தனது மனைவிக்குப் பாதுகாப்பு, பராம ரிப்பை அளிப்பதையும், நலத்தைக் கவனி த்துக் கொள்ள வேண்டிய கடமையை யும் உணர்த்துவதாக உள்ளது.
கணவன், மனைவிக்கு உணவு, உடை, உறைவிடம் அளித்து, அவளது பாதுகாப்புக்காக தனது வருமானத்தின் ஒரு பகுதியை அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது. "நான்கு சடங்குகளும் முடிந்து, பெண்ணும், ஆணும் நிபந்தனைகளுக்கு ஒத்துக் கொண்டபின்தான், மணமகனின் இடப்புற மாக மணமகள் அமர்வாள்' அப்படி மணமகள் இடப்புறம் அமரும்போது, மணமகன் அவள் வாழ்வுக்கு உத்தர வாதம் அளிப்பதாகக் கூறுவது உள்ளி ட்ட மற்ற நிபந்தனைகளை அவள் ஏற்ற தாகக் கருதப்படுகிறது.
வங்காளத் திருமணம் 'மணமகளே.... மருமகளே வா, வா...
'பிற இந்து திருமணங்களைப் போல, மணப்பெண் கணவர் வீட்டில் காலடி வைத்ததும் நடக்கும் சடங்குகள் அவ ளுக்கு அதிகாரம் அளிப்பதாக உள்ளன. ஒட்டுமொத்த புகுந்தவீட்டாரும மண மகளை சிறப்பாக வரவேற்பார்கள்.
32 வயது இது வங்காளத்தில் 'போரோன் சடங்கு' என்று அழைக்கப்படுகிறது. 'கிரு கப் பிரவேசம்' போன்றது இது. இந்தச் சடங்குகள் மூலம், கணவர் வீட்டைச் செழுமையூட்ட வந்திருக்கும் மகாலெட்சுமியாக மணமகள் கருதப்படுகிறாள்.
மார்வாடி திருமணம் 'மணப்பெண்ணுக்கு உரிமை'
மார்வாடி திருமணம் முடிந்து கண வன் வீட்டுக்கு வரும் மணமகள் முன் ஒரு பை நிறைய பணத்தை வைத்தபடி நிற்பார் மாமனார். அதில் மணமகள் கையை வைத்து தன்னால் முடிந்த அளவு பணத்தை எடுத்துக்கொள்ள வேண்டும். மாமனார் வீட்டுப் பணத்தில் மருமகளுக்கு உரிமை உண்டு என்று காட்டும் வகையில் இந்தச் சடங்கு அமை ந்துள்ளது" என்கிறார்.
மாமியார் வைத்திரு க்கும் தட்டில் நெய், பாலிலும் மணமகள் கையை நனைக்க வேண்டும். புகுந்த வீட்டின் செல்வ வளம், உயர்ந்த வாழ்க் கைத் தரம் ஆகியவற்றில் மணப்பெண் ணுக்கு உரிமை உண்டு என்பதைக் குறிக்கும் விதமாகவே இந்தச் சடங்கு அமைகிறது.
தென்னிந்தியப் பிராமண திருமணம் 'பெண்ணுக்குத் தேர்ந்தெடுக்கும் உரிமை'
தென்னிந்திய பிராமண திருமணங்க ளில் 'கங்கண தாரணம்' என்பது ஒரு முக்கியமான சம்பிரதாயம். மஞ்சள் கட் டப்பட்ட 'கங்கணம்' என்ற கயிறை மண மகனின் இடுப்பைச் சுற்றிக் கட்டுவார் மணமகள்.
"மணப்பெண், மணமகளைத் தேர்ந் தெடுக்கும் உரிமையைக் காட்டுவதாக இந்தச் சம்பிரதாயம் உள்ளது". இல்ல வாழ்க்ககையில் அடியெடுத்து வைக்கும் பெண்ணுக்கான பாதுகாப்பு விஷயங்கள் ஒவ்வொரு மத திருமணச் சடங்குகளுடன் இணைந்தே இருக்கின் றன. இதைத்தான் அத்தனை திருமண சம்பிரதாயங்களும் நமக்கு உணர்ந்துகி ன்றன.
இந்துத் திருமணம் 'பெண்ணின் சுதந்திரத்துக்கு உத்தரவாதம்'
பொதுவாக இந்துத் திருமணங்களில் 'ஸ்திரீ தானம்' என்பது காணப்படுகிறது. அப்போது பெண்ணுக்குக் கணவர் வீட்டாரால் கொடுக்கப்படும் நகை, புடவை, பணம் எல்லாம் பெண்ணுக்குத்தான் சொந் தம் என்பது உறுதிப்படுத்தப்படுகிறது. ஏதாவது துரதிருஷ்டமாக நடந்தாலோ, பிரிவு, விவாகரத்து நேர்ந்தாலோ பெண் ணுக்கு அவை கைகொடுக்கும். சட்டத் தின்படியும் பெண்ணுக்கு இந்த உரிமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
"இந்து திருமணத்தில் மணப்பெண்ணானவள் சக்தி வாய்ந்தவளாக, வலிமையானவளாக ஒரு பெண் தெய்வ த்தைப் போலவே கருதப்படுகிறாள்" என்று கூறப்படுகின்றது.
நன்றி :- தினகரன் நாளிதழ்