ஸோய்சிரோ ஹோண்டா (Soichiro Honda)
1906 நவம்பர் 17ல் ஜப்பானில் சைக்கிள் ரிப்பேர் செய்யும் தந்தைக்கும், நெசவாளியான தாய்க்கும் பிறந்த சோய்சிரோ ஹோண்டோவின் இளமைப் பருவத்தில் குறிப்பிடும்படி ஒன்றுமில்லீங்க. இளைஞன் ஹோண்டா வசதிக்குறைவாக இருந்தாலும் என்னைப் போல மிகத் திறமைசாலியாக இருந்தாருங்கோ. (ஹி... ஹி...) தன் 15வது வயதிலேயே படிப்பை நிறுத்திட்டு... (அவரா எங்க நிறுத்தினாரு? அது மண்டைல ஏறாததால விட்டுட்டாரு) வேலை தேடி டோக்கியோ வந்தாரு.
ஒரு காரேஜில் மெக்கானிக்காகச் சேர்ந்து தொழில் கத்துக்கிட்டாரு. காங்கிரசும் கோ்ஷ்டிப் பூசலும் மாதிரி எதையும் ஆராய்ஞ்சு பாக்கறது அவரோட இணைஞ்ச தனிக்குணம். மோட்டார் பைக்குகளை அக்கக்கா பிரிச்சு மறுபடி சேர்க்கற அளவுக்கு தொழில் கத்துக்கிட்டாரு. அங்க ஆறு வருஷம் வேலை பாத்தாரு. அப்புறமென்ன... தனிக்கட்சி ஆரம்பிக்க... ச்சே... தனியா ஆட்டோமோபைல் ஆரம்பிக்கணும்னு அங்கருந்து விலகினாரு. ஆறு வருஷம் கழிச்சு தன் 22வது வயதில் 1928-ம் ஆண்டு தனியாக ஆட்டோமொபைல் காரேஜ் வைத்து நடத்த ஆரம்பிச்சுட்டாரு.
ஹோண்டா தனக்கிருந்த ஆராய்ச்சி அறிவின் காரணமாக, ஒரு பிஸ்டனைக் கண்டுபிடிச்சிருந்தாருங்க. அதை கார்கள்ல பொருத்தினா வேகமாக இயங்க உதவுவதுடன், எரிபொருள் சேமிப்புக்கும் உதவுவதை டெஸ்ட் பண்ணிப் பாத்து தெரிஞ்சுக்கிட்டாரு. அதை டொயோட்டோ கம்பெனியில் வித்துரணும்னு விரும்பி அணுகினார். மிகப்பெரிய நிறுவனமான டொயோட்டோவின் இன்ஜினியர் குழுவைச் சந்தித்து தன் பிஸ்டனைப் பற்றி விளக்க முயற்சி பண்ணினாரு.
இங்கதாங்க ஆரம்பிக்குது ஹோண்டாவின் வியக்க வைக்கும் 'விஸ்வரூப'க் கதை! பிஸ்டன்கள் தயாரிக்கறதுக்காக ஒரு ஃபாக்டரியை நிர்மாணிக்க ஆரம்பிச்சாரு ஹோண்டா. ஃபாக்டரி முக்கால்வாசி கட்டப்பட்ட நிலையில தானா இரண்டாம் உலகப் போர் ஏற்படணும்? அதுல ஜப்பான் மீது வீசப்பட்ட பல குண்டுகள்ல ஒண்ணு சரியா இவர் ஃபாக்டரி மேலயா விழுந்து வைக்கணும்? முற்றிலுமாக அழிஞ்சு போனது ஃபாக்டரி. ஹோண்டா கொஞ்சம் அப்செட்டானாருங்க...
அடுத்தடுத்து இப்படி மெகா சோதனைகளை சந்திச்சிருந்தா நாமளாயிருந்தா, 'கடவுளே நீ இல்ல. ஆனா இருந்தா நல்லாயிருக்கும்'னு கடவுளைத் திட்டியிருப்போம். இல்லாட்டி, மனசு உடைஞ்சு போயி, பாருக்கோ, டாஸ்மாக்குக்கோ ஓடியிருப்போம். அங்கதான் நிக்கிறாரு ஹோண்டா. மனசைத் தேத்திக்கிட்டு, தன் நண்பர்கள், தெரிந்தவர்களிடமெல்லாமிருந்து பணம் திரட்டி, தன்கிட்ட இருந்த சொற்ப சொத்துக்களையும் வித்து மீண்டும் ஃபாக்டரியை எழுப்பினாரு. இவ்வளவுக்கப்புறம் இவரை இயற்கை சோதிக்கலை. இந்த முறை ஃபாக்டரி முழுசா தயாராச்சு.
போண்டான்னா விரும்பிச் சாப்பிடற நாம எல்லாரும் இந்த ஹோண்டா கிட்ட இருந்து அயராத தன்னம்பிக்கையையும், உழைப்பையும், பாஸிடிவ் திங்கிங்கையும் கைப்பற்றிக்கணும்ங்கறது என்னோட விருப்பம்! நீங்க என்ன நினைக்கறீங்க...?