Wednesday, June 29, 2011
Eat mangoes to lose weight
Head for some fresh mangoes, for the fruit is packed with nutrients and is full of fibre. Experts say that mangoes are fleshy and a snack of fresh mangoes is usually helpful in keeping one full. "Mangoes have a high content of beta carotene and rank among the top providers of beta carotene. However they are also a great source of nutrients in the concentrated form. In order to reduce the consumption of calories, mangoes are a very good choice," said an expert. Beta carotene is also known to reduce the risk of certain forms of cancer.
To get the right amount of nutrition not too many mangoes need to be consumed. A single fruit is capable of providing of almost a day's supply of Vitamin C to the body. It also helps in making bones stronger since it contains minerals, calcium and magnesium as well as B vitamins. They are also rich in a carotenoid called lycopene, which is an effective antioxidant. In order to lose weight, mangoes can form an important part of the diet however it has to be coupled with other fruits and a complete meal, only after consultation with a nutritionist. Not only losing weight, daily consumption of mangoes make the skin complexion brighter and makes skin softer.
Wednesday, April 6, 2011
கை கழுவுதல் எப்பொழுது, எப்படி?, யாருக்கு
கதிரையில் உட்கார்ந்ததும் இடது கையில் தூக்கி வைத்திருந்த குழந்தையின் கன்னத்தை வலது கையால் தடவியபடியே,
"குஞ்சு சரியாச் சாப்பிடுதில்லை. மெலிஞ்சு போகுது" என்றார்.
சாப்பிட மறுக்கும் குழந்தைக்கு இவரது கையிலுள்ள சளியின் மிச்சங்களில் உள்ள கிருமி தொற்றிக் காய்ச்சலும் வந்தால் இன்னும் பல நாட்களுக்குச் பசியின்மை தொடரப் போகிறது என்பதை நினைவில் கொண்டேன்..
எமது கைகளைச் சுத்தமாக வைத்திருப்பது உடல் நலத்தைப் பொறுத்த வரையில் மிக முக்கியமானதாகும்.
- தனக்கு நோய் வராது தடுப்பதற்காக மாத்திரமின்றி,
- தனது நோய் மற்றவர்களுக்குப் பரவாது தடுப்பதற்கும் இதைக் கடைப்பிடிப்பது அவசியம்.

பக்றீரியா, பங்கசு, வைரஸ், புரடசோவா என எத்தனையோ வகையான கிருமிகள் எமது சூழல் எங்கும் பரந்து கிடக்கின்றன. எமக்கு கிட்டாத சுதந்திரத்துடன் கை கால் மேல் என கேட்டுக் கேள்வியின்றி நீக்கமற உலவித் திரிகின்றன.
ஆயினும் கிருமித் தொற்றுள்ள போது அவற்றின் செறிவானது
எமது உடற்திரவங்களான
- எச்சில்,
- சளி,
- மூக்கிலிருந்து சிந்தும் நீர்,
- சிறுநீர்,
- மலம்
கிருமியால் மாசடைந்த எமது கைகள் வாய், மூக்கு, கண், சருமம் போன்ற உறுப்புகளில் படும்போது அவற்றில் கிருமி பரவிவிடும்.
சாதகமான சூழல் அங்கிருந்தால் அவை பல்கிப் பெருகி நோய்களை ஏற்படுத்தும். இவ்வாறு பரவுவதைத் தடுக்கவே கை கழுவுவது அவசியமாகும்
எவ்வாறு கழுவுதல் வேண்டும்?
குழாய் நீர் போன்ற ஓடும் நீரில் கழுவுதல் நல்லது. இளம் சூட்டு நீரில் கழுவுவது மேலும் சிறந்தது.

முதலில் கைகளை நீரில் நனையுங்கள். பின் சோப் போடுங்கள். கைகளை ஒன்றோடு ஒன்று தேய்த்து நுரை வரச் செய்வதுடன் விரல் இடுக்குகள், நகங்கள் உட்பட கைமுழுவதையும் சுத்தம் செய்யுங்கள். குறைந்தது 20 செகண்டுகளுக்காவது அவ்வாறு தேய்த்துச் சுத்தப்படுத்துவது நல்லது.
ஓடும் தண்ணீரில் சோப் இட்ட கைகளை நன்கு கழுவுங்கள்.
கழுவிச் சுத்தப்படுத்திய கைகளை புதிய பேப்பர் டவலினால் துடைத்து உலர வைப்பது நல்லது. முடிந்தால் அந்த டவலினாலேயே குழாயை மூடுவது சிறந்தது.
ஏனெனில் ஏற்கனவே குழாயைத் திறந்தபோது உங்கள் கையிலிருந்த அழுக்கு அதில் பட்டிருக்கும். கழுவிச் சுத்தம் செய்த கைகளால் மீண்டும் அதை மூடும்போது மீண்டும் கிருமி கையில் தொற்றிவிடும். அல்லது குழாய் மூடியை நீரினால் கழுவிய பின் கைகளால் மூடலாம்.
அழுக்கான டவல், கைலேஞ்சி போன்றவற்றில் துடைக்க வேண்டாம்.
காற்றினால் உலர வைக்கும் உபகரணங்கள் (Air Dryer) இப்பொழுது இங்கும் கிடைக்கின்றன. அவையும் நல்லது.
எப்பொழுது கைகளைக் கழுவ வேண்டும் ?
எப்பொழுதும் கைகளைச் சுத்தமாக வைத்திருப்பது விரும்பத்தக்கது. இருந்தபோதும் கீழ் வரும் செயற்பாடுகளின்போது கழுவுவது மிக அவசியமாகும்.
- உணவு தயாரிக்க முன்னரும் உணவு உட்கொள்ள முன்னரும் மிக மிக அவசியமாகும்.
- மலசல கூடத்திற்குச் சென்று வரும்போது
- நோயுள்ளவர்களைப் பராமரித்த பின்னர்.
- மலசலம் கழித்த குழந்தைகளைச் சுத்தம் செய்த பின், அவர்களின் னiயிநசள யை மாற்றிய பின்
- தும்மல் இருமல் மூக்குச் சீறல் போன்ற செயல்களுக்குப் பின்னர்.
- வீட்டுக் கழிவுப் பொருட்களைத் தொட்டழைதல், அகற்றல் போன்ற செயல்களின் பின்னர்.
- வெட்டுக் காயங்கள் புண் போன்றவற்றை தொட்டு, மருந்து கட்டல் போன்ற செயற்பாடுகளின் பின்னர்.
- வளர்ப்புப் பிராணிகளை தொட்ட பின்னர்.
- கைகளில் கிருமி தொற்றக் கூடிய எந்தச் செயற்பாட்டின் பின்னரும்.

Tuesday, September 21, 2010
இரும்புச் சத்து குறைபாட்டால் ஏற்படும் தீமைகள்
இந்திய மக்கள் தொகையில், 60 முதல் 70 சதவீதம் வரையிலான மக்கள், வயது வித்தியாசம் இன்றி, இரும்புச் சத்து குறைபாட்டினால் அனீமியா என்ற ரத்தசோகை நோயால் பாதிக்கப்படுகின்றனர். உடலில், ஹீமோகுளோபின் (எச்.பி.,) அளவு, 100 மி.லி., ரத்தத்தில் 10 கிராம் தான் உள்ளது. இதை 10 ஜி/டி.எல்., என்ற அளவில் குறிக்கிறோம். உடலில் ஹீமோகுளோபின் அளவு, 100 மி.லி., ரத்தத்தில் 11 முதல் 15 கிராம் வரை இருக்க வேண்டும். இந்தியாவில் உள்ள இந்த குறைபாடு, வேறு எந்த நாட்டிலும் இந்த அளவுக்கு இல்லை. மற்ற நோய்கள் ஏற்படும் போது கடும் காய்ச்சலோ, கட்டியோ உருவாகும். ஆனால், ரத்தசோகை நோய் உடனடியாக ஏற்படாது. மெதுவாக ஏற்பட்டு, மெதுவாகவே அதிகரிக்கும். இந்த நேரத்தில் வரும் என்றும் கூற முடியாது. எனவே, இந்நோயைக் கண்டறிவது கடினம். கண்டறிவதற்கு முன்பே, சம்பந்தப்பட்ட நபர் கடுமையான நோயாளியாகி விடுவார். இதற்கான அறிகுறிகளாக, சோர்வு, அசதி, தலைவலி, தலை லேசாகிப் போதல், மூச்சிறைத்தல், கால், கை சில்லிட்டுப் போதல், நகங்கள் வலுவிழத்தல், நா வறட்சி ஆகியவை ஏற்படும். கால்கள் ஆடிக் கொண்டே இருக்கும்; இதனால் இரவுத் தூக்கத்தில் திடீர் விழிப்பு நிலை ஏற்படும். பசி எடுக்காது. சத்தான உணவு சாப்பிடத் தோன்றாது. ஐஸ் கட்டி, சமைக்கப்படாத அரிசி, புழுதி, சாக்பீஸ், கரிக் கட்டை, பெயின்ட், விபூதி, குங்குமம்
ஆகியவற்றை சாப்பிடத் தோன்றும்.
இரும்புச் சத்து குறைபாடு கொண்ட ரத்தசோகை ஆபத்தானது. ஏனெனில், ஹீமோகுளோபின் உருவாக இரும்புச் சத்து மிக அவசியம். ரத்தத்தின் சிவப்பணுக்களில் ஹீமோகுளோபின் காணப்படும். இதன் முக்கிய பணியே, உடல் முழுவதும் ஆக்சிஜனை எடுத்து செல்வது தான். ஹீமோகுளோபின் குறைந்தால், சிவப்பணுக்களின் எண்ணிக்கையும் குறையத் துவங்கும்.
ஆண், பெண் இருவருக்குமே, உடலில் இரும்புச் சத்து குறைந்தபடியே இருக்கும்.
இறந்த செல்கள் உதிரும் போது, கழிவுகள் வெளியேறும் போது, தினமும் ஒரு மி.லி., கிராம் அளவு, இரும்புச் சத்தும் வெளியேறி விடும். மகப்பேறு தகுதி கொண்ட அனைத்து பெண்களுமே, மாதவிடாய் காலங்களில் தினமும், கூடுதலாக ஒரு மி.லி., கிராம் அளவும், மகப்பேறு காலத்தில் 500 மி.லி., கிராம் அளவும் இரும்புச் சத்தை இழக்கின்றனர். எனவே, ஆண்களை விட பெண்கள் ரத்தசோகை நோயால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
பெண்களுக்கு ரத்தசோகை ஏற்படும் போது உடல் சோர்வு, வீடு மற்றும் அலுவலகப் பணிகளை சுறுசுறுப்பாய் செய்ய முடியாமல் போதல் ஆகியவை ஏற்படும். மகப்பேறு தகுதி உடைய பெண்களுக்கு கருச்சிதைவு, குழந்தை இறந்து பிறத்தல், ரத்தசோகை உள்ள குழந்தை பிறத்தல் ஆகியவை ஏற்படலாம். கடும் ரத்தசோகை ஏற்படின், தாய் உயிருக்கே உலை வைத்து விடும். குழந்தைகள், தாயிடமிருந்தே இரும்புச் சத்தை வாங்கிக் கொள்கின்றன. பிறந்து ஆறு மாதம் வரை, தாயிடமிருந்து பெறப்பட்ட இரும்புச் சத்தே, குழந்தைக்குப் போதுமானதாக இருக்கும். அதன் பிறகு, இரும்புச் சத்து டானிக் கொடுக்கத் துவங்க வேண்டும். குழந்தைகளுக்கு ரத்தசோகை இருப்பதைத் தெளிவாகக் கண்டறிந்து, உடனுக்குடன் சிகிச்சை அளிக்க வேண்டும். இதைக் கண்டு கொள்ளாமல் விட்டு விட்டால், குழந்தையின் அறிவுத் திறன் 5 முதல் 10 பாயின்ட் வரை குறையும். மொழி கற்றுக் கொள்வதில் சிரமம் உண்டாகும். உடல் வளர்ச்சியும் குன்றும். சோர்வு, தாமத செயல்பாடு, உணவு சாப்பிடத் தோன்றாமை, நோய் எதிர்ப்பு சக்தி குறைதல், தொடர் தொற்று ஏற்படுதல் ஆகியவை உண்டாகும்.
விடலைப் பருவத்தை அடைந்த பெண்கள், அதிகளவில் ரத்தசோகையால் பீடிக்கப்படுகின்றனர். மாதவிடாய் ஏற்படத் துவங்கும் காலமான இந்த நேரத்தில், திடீர் சோர்வு ஏற்படுவதால், பள்ளிக்கு செல்வதில் சிரமம் ஏற்படும். கவனம், நினைவுத் திறன் குறையும். நல்ல முறையில் தேர்வு எழுத முடியாத நிலை ஏற்படும். இதனால், பல பெண்களுக்குப் பள்ளிக்குப் போவதே பிடிக்காத நிலை ஏற்படும்.
இந்தியாவில் ரத்தசோகை ஏற்பட முக்கிய காரணமாக இருப்பது, குடலில் புழுக்கள் வளர்வது தான். கொக்கிப் புழு, கீரைப் புழு, வட்டப் புழு ஆகியவை வயிற்றில் சேர்வதால், ரத்தசோகை ஏற்படுகிறது. இந்தியாவில் தாய்ப்பால் மறந்த குழந்தைகள் வயிற்றில் இது போன்ற புழுக்கள் வளர்வது சகஜமாகி விட்டது. இதனால், வாழ்நாள் முழுவதும் அவதிப்பட நேர்கிறது. வயிற்றில் புழு தோன்றுவதைத் தவிர்க்க அனுபவ ரீதியான மருத்துவம் தான் இந்தியாவில்
பின்பற்றப்படுகிறது. அல்பெண்டிசால் மருந்து சாப்பிடுவது அல்லது மூன்று நாட்களுக்கு, இரண்டு வேளை மெபெண்டசால் மருந்து சாப்பிடுவது என்ற நிலை உள்ளது.
சரியான முறையில், சரியான அளவு மருந்து சாப்பிடவில்லை எனில், வயிற்றில் எல்லா புழுக்களும் அழியாமல், சதை வழியே மற்ற பாகங்களுக்குப் பரவும் நிலை ஏற்படும்.
கீரைப் புழு ஒருவரிடம் இருந்தால், வீட்டிலுள்ள மற்றவர்களுக்கும் வந்து விடும். இதனால், இந்தப் புழுவை அழிக்க, வீட்டில் உள்ள அனைவரும் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். இரண்டு வாரத்திற்குப் பின், மீண்டும் சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.
இது போன்ற புழுக்கள் வயிற்றில் வளராமல் இருக்க...
* சமையல் செய்வதற்கு முன், கையை நன்கு சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும். சாப்பிடுவதற்கு முன்னும், ஒவ்வொரு முறை சிறுநீர், மலம் சென்ற பின்னும், கையை மிகச் சுத்தமாகக் கழுவ வேண்டும்.
* கையில் நகங்கள் வளர்ந்தால், இடுக்குகள் இல்லாமல், சீராக கத்தரிக்கப்பட வேண்டும்.
* பச்சைப் பழங்களைச் சாப்பிடக் கூடாது. நன்கு சமைக்கப்படாத காய்கறிகளை சாப்பிடக் கூடாது. காய்கறிகளை நறுக்குவதற்கு முன், நன்றாகக் கழுவ வேண்டும்.
* படுக்கை விரிப்புகளை, வாரத்திற்கு இரு முறை மாற்ற வேண்டும். துவைத்த விரிப்புகளை, வெயில் படும்படி உலர்த்த வேண்டும்.
ரத்தசோகை ஏற்படாமல் இருக்க, இது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம்.
நாள் ஒன்றுக்கு, 10 முதல் 15 மி.லி., கிராம் வரை இரும்புச் சத்து நம் உடலுக்குத் தேவைப்படுகிறது. மாட்டுக்கறி, பன்றிக்கறி, ஆட்டுக்கறி, கோழிக்கறி, இறால், வஞ்சிரம் மீன் ஆகியவற்றில் இரும்புச் சத்து அதிகம்.
சைவம் சாப்பிடுபவர்கள், சோயா, கோதுமை, ஓட்ஸ், உலர் பழங்கள், பசலைக் கீரை, உலர் திராட்சை ஆகியவற்றைச் சாப்பிடலாம்.
காய்கறிகளில் உள்ள சில ரசாயனங்கள், அதில் உள்ள இரும்புச் சத்தை உடல் உறிஞ்சுவதற்குத் தடை ஏற்படுத்தி விடுகின்றன. எனவே, ஆட்டுக் கறி, மீன் ஆகியவற்றிலிருந்து கிடைக்கும் இரும்புச் சத்தை விட, காய்கறியில் கிடைக்கும் சத்து குறைவானதே. எனவே, காய்கறிகளை அதிகமாகச் சாப்பிட வேண்டும்.
குழந்தைகளும், பெண்களும் இரும்பு ஊட்டச்சத்து மாத்திரைகள் சாப்பிட வேண்டும். உணவுடன் சாப்பிட்டால் அதிக பலன் கிடைக்கும். தினமும் ஒரு மாத்திரை என சாப்பிடத் துவங்கலாம். எலுமிச்சை அல்லது சாத்துக்குடி சாறுடன் சாப்பிடலாம். அமிலம் கலந்த சாறு, இரும்புச் சத்து உடலில் நன்கு உறிஞ்சிக் கொள்ள உதவும். இதனால் மலச்சிக்கல் ஏற்பட்டால், கூடவே வாழைப்பழமோ, கொய்யா பழமோ சாப்பிடலாம். இரும்புச் சத்து மாத்திரையுடன்,
கால்சியமோ, துத்தநாகச் சத்து நிறைந்த மாத்திரையோ சாப்பிடக் கூடாது.
அரசு பள்ளிகளில் குழந்தைகளுக்கு இரும்புச் சத்து மற்றும் பாலிக் ஆசிட் அடங்கிய சத்து மாத்திரைகள் கொடுக்கப்படுகின்றன. தனியார் பள்ளிகளில் இப்படி கொடுப்பதில்லை. பெற்றோராகிய நாம் தான், நம் குழந்தைகளின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டும்.
Monday, May 10, 2010
முருங்கைப்பூ

முருங்கைப்பூ
இயற்கை வைத்தியத்தை இன்றும் நம்மவர் பின்பற்றி வருகிறார்கள், சமீபத்தில் தமிழ்நாட்டில் ஏற்பட்ட சூறாவளி [காலாவதியான மருந்து மாத்திரை, உணவு பொருட்கள்]
காரணத்தால் பலர் இன்று நாட்டு வைத்தியம், அலோபதி மருத்துவத்திற்கு மாறியுள்ளார்கள்.அமெரிக்காவில் வெளியிடப்பட்ட ஆங்கில அறிக்கையை திரு,சர்மா வெளியிட்டுள்ளார். அதனையும் நமது தமிழ்நாட்டு முருங்கையின் அற்புதத்தினை இங்கு வெளியிட்டு வெளியிட்டுள்ளேன்.
பொதுவாக தமியேன் அடிக்கடி கூறுவது:-
’’தமிழ் தங்க சுரங்கத்தின் மீது ஒட்டு குடிசைப்போட்டு கொண்டு இன்றும் வாழ்கிறான்’
’விதியே விதியே தமிழ் சாதியை என் செய்ய நினைந்துள்ளாய்’
முருங்கைப்பூ
பொதுவாக தாவர இனங்களின் அனைத்து பாகங்களும் மருத்துவக் குணங்கள் நிறைந்தது. தினமும் உணவில் சேர்க்கும் கீரை, காய், பூ மூலம் உடலுக்குத் தேவையான அனைத்து சத்துக்களும் இதிலிருந்து கிடைக்கின்றன. இந்த உணவுகள் எளிதில் ஜீரணமாகக் கூடியதும், உடலுக்கு புத்துணர்வு ஏற்படுத்துவதுமாகும்.
முருங்கையைப் பற்றி அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. வீடு கட்டும் முன்பே முருங்கைக் கொம்பை நட்டு வைப்பார்கள். அது வளர்ந்து மரமாகி காலங்காலமாக பயன் கொடுக்கும் என்பதால்தான் அதனை நட்டு வைக்கின்றனர்.
முருங்கையின் பயன்களை ஒரு புத்தகமாகவே எழுதலாம். ஆயுர்வேத மருத்துவத்திலும், சித்த மருத்துவத்திலும் முருங்கையின் பயன்களைப் பற்றி அதிகம் கூறப்பட்டுள்ளது.
சித்தர்கள் முருங்கையை பிரம்ம விருட்சம் என்றே அழைக்கின்றனர்.
முருங்கையின் இலை, பூ, பிஞ்சு, காய், விதை, பட்டை, வேர் என அனைத்து பாகங்களும் அளவற்ற மருத்துவக் குணங்களைக் கொண்டவை.
இந்தியாவில் இமயமலையில் தொடங்கி தென்குமரி வரை எங்கும் காணப்படும் மரங்களில் முருங்கையும் ஒன்று. இலங்கை, மியான்மர், மலேசியா போன்ற நாடுகளில் இதனை அதிகம் பயிர்செய்கின்றனர். இதில் காட்டு முருங்கை, கொடிமுருங்கை, தவசு முருங்கை என பலவகையுண்டு.
முருங்கைக் கீரையைப் போலவே பூவிலும் அதிக மருத்துவக் குணங்கள் உள்ளன. முருங்கை பூவின் மருத்துவ மகிமையை பல நூல்களில் சித்தர்கள் எழுதியுள்ளனர்.
விழிகுளிரும் பித்தம்போம் வீறருசி யேகும்
அழிவிந் துவும்புஷ்டி யாகும் – எழிலார்
ஒருங்கையக லாககற் புடைவா ணகையே
முருங்கையின் பூவை மொழி
- அகத்தியர் குணபாடம்
கண்களைப் பாதுகாக்க
இன்றைய கம்ப்யூட்டர் யுகத்தில் கண்களுக்குத் தான் அதிக வேலை கொடுக்கிறோம். அதுபோல் வீடுகளில் தொலைக்காட்சியும் நம் கண்களுக்கு ஓய்வு கொடுப்பதில்லை. இதனால் கண்கள் விரைவில் வறண்டுவிடும். கண் இமைகள் சிமிட்டும் தன்மை குறைந்து விடும். இதனால் தலைவலியும், கண்கள் முன்னால் மின்மினிப் பூச்சிகள் பறப்பது போலவும் தோன்றும். பார்வை மங்கலாகத் தெரியும். இவர்கள் முருங்கைப் பூவுடன் பசும்பால் சேர்த்து நன்றாகக் காய்ச்சி காலை மாலை என இருவேளையும் அருந்தி வந்தால் கண்களில் ஈரப்பசை அதிகரித்து, கண் பார்வைக் கோளாறுகள் நீங்கும்.
40 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கண்ணாடி இல்லாமல் பேப்பர் படிக்க முடியாது. இதை வெள்ளெழுத்து என்பார்கள். இவர்கள் முருங்கைப் பூவை நிழலில் உலர்த்தி காயவைத்து பொடி செய்து தேன்கலந்து சாப்பிட்டு வந்தால் வெள்ளெழுத்து மாறும். கண்ணில் ஏற்படும் வெண்படலமும் மாறும்.
ஞாபக சக்தியைத் தூண்ட
சில பெற்றோர்கள் தங்கள் குழந்தை நன்றாக படித்தும் தேர்வில் மதிப்பெண் பெறவில்லை என்பார்கள். இந்த பிரச்சனைக்குக் காரணம் அந்தக் குழந்தைகளுக்கு ஞாபக சக்தி குறைவே. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஞாபக மறதியால் பெரும் அவதிக்கு ஆளாகின்றனர். இந்த ஞாபக மறதி கொடிய நோய்க்கு ஒப்பாகும்.
இந்த ஞாபக மறதியைப் போக்கி நினைவாற்றலைத் தூண்டும் சக்தி முருங்கைப் பூவிற்கு உண்டு. முருங்கைப் பூவை அரைத்து பாலில் கலந்து கொதிக்க வைத்து அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து காலை மாலை இருவேளையும் அருந்தி வந்தால் நினைவாற்றல் அதிகரிக்கும்.
பித்தம் குறைய
மன உளைச்சல், மன அழுத்தம், பயம், கோபம், இயலாமை போன்ற மனம் சார்ந்த காரணங்களும், தூக்கமின்மை, உடல் அசதி போன்ற காரணங்களும் ஈரலை பாதித்து அதனால் பித்தம் அதிகரித்து இரத்தத்தில் கலந்து மேல் நோக்கிச் சென்று தலைவலி, தலைச் சுற்றல், வாந்தி, மயக்கம் போன்றவற்றை உண்டாக்கும். பித்த அதிகரிப்பால் தான் உடலில் பல நோய்கள் உருவாகின்றன. இதற்கு முருங்கைப் பூவை நிழலில் உலர்த்தி பொடி செய்து வைத்துக்கொண்டு தினமும் கஷாயம் செய்து காலை மாலை அருந்தி வந்தால் உடலில் உள்ள பித்தம் குறைந்து, உடல் அசதி நீங்கி உடல் நிலை சீராகும்.
நரம்புத் தளர்ச்சி நீங்க
அதிக வேலைப் பளு, மன அழுத்தம் காரணமாக சிலருக்கு நரம்புகள் செயலிழந்து நரம்பு தளர்ச்சி உண்டாகும். முருங்கைப் பூவை கஷாயம் செய்து வாரம் இருமுறை அருந்தி வந்தால் நரம்புத் தளர்ச்சி நீங்கும்.
நீரிழிவு நோயாளிக்கு
கிராமங்களில் ஒரு பழமொழி சொல்வார்கள். நித்திய கண்டம் பூரண ஆயுசு என்று. நீரிழிவு நோயாளிகளின் நிலையும் இதுபோல்தான். இவர்கள் முருங்கைப் பூவை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால் நீரிழிவு நோயால் ஏற்பட்ட பாதிப்புகள் நீங்கும்.
பெண்களுக்கு
சில பெண்கள் மாத விலக்குக் காலங்களில் அதிக கோபம், எரிச்சல், தலைவலி, அடி வயிறு வலி என பல வகையில் அவதிக்கு ஆளாவார்கள். இவர்கள் முருங்கைப் பூவை கசாயம் செய்து அருந்தி வந்தால் மேற்கண்ட உபாதைகள் குறையும்.
தாது புஷ்டிக்கு
ஆண் பெண் இருபாலரும் இன்றைய அவசர உலகில் பொருளாதாரப் போராட்டத்தில்
அதிகம் மூழ்கிவிடுகின்றனர். இதனால் இவர்கள் தாம்பத்ய உறவில் நாட்டமில்லாமல் உள்ளனர். மேலும் மன அழுத்தம், மன உளைச்சல், பயம் போன்றவற்றாலும் தாம்பத்ய எண்ணம் தோன்றுவதில்லை.
இவர்கள் முருங்கைப் பூவை அரைத்து பாலில் கொதிக்க வைத்து பனங்கற்கண்டு கலந்து 48 நாட்கள் அதாவது ஒரு மண்டலம் அருந்தி வந்தால் தாம்பத்ய உறவில் நாட்டம் உண்டாம்
Wednesday, November 11, 2009
HOME REMEDIES FOR DARK UNDER ARMS

I used to use anne french for removing hair on the underarms.Due to darkening of the armpits I stopped using that about 10-11 months ago.Instead have gone for waxing but the dark underarms still prevail.I am so tensed.Am not able to wear sleeveless dresses.
Can u please suggest any method, preferably any natural remedy for it? I have my friend's marriage in Dec.I want to flaunt myself then. Please help.
Dark underarms are often the cause of embarrassment when you wear your favorite sleeveless top. Dark underarms are of more concern to fair people because it is visible more on fair skin.
Dark underarms symptoms
Following are the few symptoms of dark underarms Dark skin at armpits, It may be accompanied by itching, sweating and bad odor.
Some of the causes of dark underarms are as follows Friction due to tight blouses and tops that brush against the skin, Excessive sweating, Infections due to improper washing of underarms, Shaving, Dead skin buildup, Chemicals, alcohol and strong fragrance in deodorants.
Remedies for armpits
Remedies for Underarms
Apply a paste of 1 tbsp. curd, 1 tsp. gram flour, pinch of turmeric and 1 tsp. milk on your underarms. Rinse with cold water when it dries. Apply paste of rose water and sandalwood powder on your underarms.
Dark underarms diet
Use anti-fungal powder instead of anti-perspirants. Wear cotton clothes instead. Do not shave your underarms, instead wax them regularly. It will not only remove hair but also the dead skin.
Dark underarms home cures
Skin darkens in places like the armpits because we do not pay adequate attention to them while cleaning and washing. Because of this, dirt and sweat collect in the fine folds of skin present there and over a period of time, the skin becomes dark and unsightly. This is one of the primary reasons for dark skin in the armpits.There are simple remedies you can use to lighten the color of your skin there. Begin by exfoliating regularly. Make an effective exfoliating scrub at home by mixing sugar crystals and olive oil to make a creamy paste.
For oily skin, make the cream with equal parts of dried and powdered orange peels and yogurt.
Be smile and Be healthy
Nalini

