பெண் பார்க்க போகிறீர்களா...
ஓர் ஆண்டுக்கு முன், என் நண்பனுக்கு திருமணம் நிச்சயம் ஆனது.
ஓடிப்போன அப்பெண்ணை, சமீபத்தில், ஒரு பொது இடத்தில், தற்செயலாக பார்த்துள்ளான், நண்பன். தனியாக வந்திருந்த அவளிடம், 'உனக்கு என்ன பாவம் செய்தேன்... ஏன் இப்படி என்னையும், என் குடும்பத்தாரையும் அவமானப்படுத்தினே... உன் வீட்ல எல்லார்கிட்டயும் கேட்டு தானே, திருமணத்துக்கு ஏற்பாடு செய்தோம். ஏன் இப்படி எல்லார் முகத்துலயும் கரியை பூசுன...' என்று ஆதங்கத்தோடு கேட்டுள்ளான்.
அதற்கு அவள், 'எங்க வீட்ல எங்கப்பா, அம்மா, அண்ணன், சித்தப்பா, சித்தின்னு எல்லார்கிட்டயும் சம்மதம் கேட்டீங்க... வாழப் போற என்கிட்ட நீங்களோ, உங்க பெற்றோரோ ஒரு வார்த்தை கேட்டீங்களா... அப்படி கேட்டிருந்தால், என் கண்ணீரைக் காட்டி, சூசகமாகவாவது என் நிலையை உணர்த்தியிருப்பேனே..' என்று கூலாக சொல்லி, போய் விட்டாள்.
அதன்பின் தான், அவனுக்கு தன் தவறு உறைத்துள்ளது. பெண் பார்க்க செல்வோர், இதை கவனத்தில் கொள்வது அவசியம்!

திருமணத்திற்கு முதல் நாள் இரவு, தன் காதலனுடன், ஊரை விட்டு ஓடி விட்டாள் மணமகள். திருமணம் நின்று போன விரக்தியில், நொந்து நூலாகி, இன்று வரை, பெண் பார்க்க மறுத்து வருகிறான், நண்பன்.