Friday, July 15, 2016

நம்ம பிள்ளைகள் தான் நம் உலகம்,


நம்ம பிள்ளைகள் தான் நம் உலகம்,


நாம் நம் பிள்ளைகளுக்காக தான் வாழ்கிறோம்,

அவர்கள் தான் நமக்கு எல்லாம்,

அவர்களுக்காக தான் இவ்வளவு கஷ்டங்கள், சங்கடங்களை சந்தோசமாக தாங்கிக்கொள்கிறோம், 

அவர்களை நன்றாக படிக்க வைத்து நல்ல வாழ்க்கையை அமைத்துக்கொடுக்க எவ்வளவு கஷ்டங்களையும் சந்திக்க தயார்,

அவர்களுக்கு சிறு கஷ்டம்,உடல் நலக்குறைவு ஏற்பட்டாலும் நம் மனது உடைந்துவிடும்,

நமக்கு நம் பிள்ளைகள் தான் உலகம்,அவர்களுக்காக தான் இந்த வாழ்வு...

> இப்படி எண்ணுபவர்கள் முதலில் கை தூக்குங்கள்...

ஓகே,சந்தோசம்... :)

> இப்போ ஒரு விஷயத்தை சொல்கிறேன் யோசிங்க...

இப்போ நாம என்னென்ன நம் பிள்ளைகளுக்காக யோசிக்கிறோமோ, செய்கிறோமோ அதனை பல வருடங்களாக செய்து நம்மை கஷ்ட்டப்பட்டு ஆளாக்கி இன்று நம்மை இந்த நிலைக்கு கொண்டு வந்தவர்கள் நம் பெற்றோர்கள்,நாம் நம் பிள்ளைகளை பற்றி சிந்திக்கும் முன் அவர்கள் பிள்ளைகளாகிய நம்மை பற்றி சிந்தித்து எல்லாம் செய்தவர்கள் அவர்கள்...

> ஆகையால்...

நம் பிள்ளைகளின் மேல் நமக்கிருக்கும் பாசம் போல் ஆயிரம் மடங்கு நம் மேல் பாசம் வைத்து நமக்கு எல்லாம் செய்த நம் பெற்றோர்களுக்கு பெரிதாக நாம் என்ன செய்து விட்டோம்...

நாம் நம் பிள்ளைகளை,குடும்பத்தை பார்த்துக்கொள்ளவேண்டும் தவறில்லை ஆனால் நம்மை இந்த அளவுக்கு ஆளாக்கிய நம் பெற்றோர்களை எந்த அளவுக்கு பார்த்துக்கொள்ளவேண்டும்,நேசிக்க வேண்டும்,அன்பு செலுத்த வேண்டும்,மனம் கோணாமல் நடந்துகொள்ள வேண்டும் என்று கொஞ்சம் யோசியுங்கள்,எல்லாம் புரியும்...

# ஆக மொத்தம்"நாம் இன்றைக்கு என்ன செய்துக்கொண்டிருக்கிறோமோ அதனை பல வருடம் முன்பு,பல வருடங்களாக நமக்கு செய்தவர்கள் நம் பெற்றோர்கள்" என்பதனை மட்டும் மறவாதீர்கள்...

> எங்கே கிளம்பிட்டீங்க, புரியுது,புரியுது... :)