ஒருத்தர் குதிரை வாங்க போனாராம் அங்க ஒருத்தன் "கடவுளின் குதிரை"ன்னு ஒரு குதிரையை வித்துக்கிட்டிருந்தான். இவரு விவரம் கேட்க வியாபாரி சொன்னான். இது கெளம்பணும்னா "கடவுளே நன்றி"ன்னு சொல்லணும், நிறுத்தணும்னா "கடவுளே காப்பாத்துன்னு சொல்லணும்".
அந்த குதிரை பார்க்கவும் நல்லா இருந்ததால, கடவுளோட குதிரையாச்சேன்னு அவரும் அதை வாங்கினாரு.
ஊருக்கு வந்து குதிரை மேல ஏறி உட்கார்ந்து "கடவுளே நன்றி" ன்னாரு. குதிரை புயல் மாதிரி பறக்க ஆரம்பிச்சிருச்சி. கடவுளே காப்பாத்துன்னாரு, குதிரையும் நின்னுடுச்சு. இவருக்கு ரொம்ப குஷி ஆகிடுச்சு.
ஒரு நாள் ஒரு மலைக்கு அந்த குதிரையில் பிரயாணம் போய்ட்டு இருந்தார். குதிரை வேகமா போக அவருக்கு பயம் வந்ததிடுச்சு, குதிரைய எப்படி நிறுத்தறதுன்னு மறந்துட்டாரு. இன்னும் ரெண்டு அடி போனா பாதாளத்தில விழுந்துடுவோம்கிற நிலைமையில அவரையும் அறியாம 'கடவுளே காப்பாத்து'ன்னாரு. பட்டுன்னு குதிரை நின்னுடிச்சி.
போன மூச்சு அவருக்கு திரும்பி வந்துச்சு. அப்பாடான்னு ஆசுவாசப்படுத்திட்டு சொன்னார்: "கடவுளே நன்றி"
அவ்ளோதான்...மேட்டர் ஓவர்.