மூளையில் சிலந்தி வலை
வீட்டின் மூலையில் உள்ள சிலந்தி வலையை விட, மூளையில் உள்ள சிலந்தி வலை ஆபத்தானது.
வீட்டில் சிலந்தி வலை கட்ட விட்டால், ஒரு பூச்சி உண்ண, தன் வலைக்குள் பூச்சியை சிக்க வைக்கும், .
அதை போல் ஒரு தாழ்வு மனபான்மையை நுழைய விட்டால், மட்டமான எண்ணத்தை பக்கத்தில் துணையாக வைத்து கொள்ளும்.
வீட்டை போலவே, மனதை ஒட்டடை அடியுங்கள். பழைய கருத்துக்களை கழித்து கட்டுங்கள்.
தன்னம்பிக்கையை கழுவி பத்திரமாக வைத்து கொள்ளுங்கள்.
உணவை செரித்து சத்துகளை உள்வாங்கி, தேவையற்ற கழிவுகளை வெளியேற்றும் உடல் போல,
பகை, கோபம், தாழ்வு மனபான்மை ஆகியவை வெளியேறட்டும் இதற்கு மன குவிப்பு என்னும் கலை வேண்டும். தியானம் சிறந்தது .
பொது சேவை மற்றும் ஆன்ம முன்னேற்ற காரியங்களில் ஈடுபடலாம். அவ்வாறு ஈடுபடும் போது பல தடைகள் வரும். நம் ஈடுபட்டிருக்கும் செயலை பல பேர் தவறாக தலைகீழாக நினைத்து தவறான அபிப்ராயம் வைப்பார்கள்.
ஒரு ராணுவ பயிற்சி முகாம். வரிசையில் வீரர்கள். தளபதி உரக்க
" போரில் எதிரி படையை நாசம் செய்ய தற்கொலைக்கு துணிந்த வீரன் ஒரு அடி முன்னால் வரட்டும். ஒரு நிமிஷம் டைம் " என்று திரும்பி கொண்டான்.
மீண்டும் 1 நிமிடம் கழித்து திரும்பினான். வரிசை கலையவில்லை, யாரும் 1அடி முன்னால் வந்த அடையாளம் இல்லை.
ஆத்திரத்தில் கத்தினான் " கோழைகளே யாருக்கும் உயிரை கொடுக்கும் எண்ணமில்லையா? " என்றான்.
ஒரு வீரன் கோபத்துடன்
" தளபதி நாவை அடக்குங்கள், எல்லாருமே துணிந்து ஒரு அடி முன்னால் வந்து விட்டதால், வரிசை கலையவில்லை,
எங்களை புரிந்து கொள்ளும் பக்குவம் உமக்கு ஏன் இல்லை? " என்றான்.
நமது அர்பணிப்பை, நம் எண்ணத்தை, முன்னேறும் தீர்மானத்தை வறட்டு சமூகத்தால் சுலபமாக புரிந்து கொள்ள இயலாது.
நாம் முன்னேற மனதை ஒட்டடை அடியுங்கள்.
சுய மாற்றமே முன்னேற்றம் .