Monday, May 30, 2016

கோமாதாவின் உடற்பகுதியும் அங்கே அருளும் தெய்வங்களும்

 

கோமாதாவின் உடற்பகுதியும் அங்கே அருளும் தெய்வங்களும்

 தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது பாற்கடலில் இருந்து ஐந்து பசுக்கள் வெளிப்பட்டன. அவை நந்தா, பத்திரை, சுரபி, சுசீலை, சுமனை ஆகியவை. இவை பொன்னிறம், கருமை, வெண்மை, புகை, சிவப்பு நிறம் கொண்டிருந்தன. இவற்றின் சந்ததிகளே பூலோகத்தில் நமக்கு உதவியாக இருந்து வருகின்றன. இவற்றில் இருந்துவரும் சாணம், கோமியம், பால், தயிர், வெண்ணெய் ஆகிய ஐந்தும் புனிதமானவை. பசுக்களில் மும்மூர்த்திகள், சத்தியம், தர்மம் என்று எல்லா தேவதைகளும் வசிக்கின்றனர். அவை எந்த இடத்தில் அமைந்திருக்கின்றனர் என்பதை பார்ப்போம்.

✩ முகம் மத்தியில் - சிவன்

✩ நெற்றி - சிவசக்தி

✩ வலதுகொம்பு - கங்கை

✩ இடதுகொம்பு - யமுனை

✩ வலக் கண் - சூரியன்

✩ இடக் கண் - சந்திரன்

✩ மூக்கு வலப்புறம் - முருகன்

✩ மூக்கு இடப்புறம் - கணேஷர்

✩ கழுத்து மேல்புறம் - ராகு

✩ கழுத்து கீழ்புறம் - கேது

✩ கொண்டைப்பகுதி - பிரம்மா

✩ இருகாதுகளீன் நடுவில் - அசுவினி தேவர்

✩ வாய் - சர்ப்பசுரர்கள்

✩ பற்கள் - வாயுதேவன்

✩ நாக்கு - வருணதேவன்

✩ நெஞ்சு மத்தியபாகம் - கலைமகள்

✩ மணித்தலம் - யமன்

✩ உதடு - உதயாத்தமன சந்தி தேவதைகள்

✩ மார்பு - சாத்தியதேவர்கள்

✩ முன்கால்கள் மேல்புறம் - சரஸ்வதி, விஷ்ணு

✩ முன்வலக்கால் - பைரவர் 

✩ முன் இடக்கால் - ஹனுமார்

✩ பின்னங்கால்கள் - ப்ராசரர், விஷ்வாமித்திரர்

✩ பின்னகால் மேல்பகுதி - நாரதர், வசிஷ்டர்

✩ முதுகுப்புறம் - பரத்வாஜர், குபேரர் வருணன், அக்னி 

✩ வயிற்றுப்பகுதி - ஜனககுமாரர்கள், பூமாதேவி

✩ வால் மேல் பகுதி - நாகராஜர்

✩ வால் கீழ்ப்பகுதி - ஸ்ரீமானார்

✩ முன்வலக்குளம்பு - விந்தியமலை

✩ முன்இடக்குளம்பு - இமயமலை

✩ பின் வலக்குளம்பு - மந்திரமலை

✩ பின் இடக்குளம்பு - த்ரோணமலை

✩ பால் மடி - ஏழு சமுத்திரங்கள்

✩ குதம் - இலட்சுமி.