முட்டைகோஸ் சட்னி
தேவையானவை: முட்டைகோஸ் - கால் கிலோ, காய்ந்த மிளகாய் - 10 (அல்லது தேவைக்கேற்ப), புளி - சிறிய நெல்லிக்காய் அளவு அல்லது தக்காளி - 3, சின்ன வெங்காயம் - 10, உளுத்தம்பருப்பு - - 2 டீஸ்பூன், கடுகு - அரை டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்த மல்லி - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: சின்ன வெங்காயத்தை நறுக்கிக் கொள்ளவும். கடாயில் கொஞ்சம் எண்ணெய் ஊற்றி, சூடாக்கி உளுத்தம்பருப்பை சேர்க்கவும். அது பொன்னிறம் ஆகும் சமயம் நறுக்கிய வெங்காயம், முட்டைகோஸ், காய்ந்த மிளகாய், சேர்த்து நன்கு வதக்கவும். முட்டைகோஸ் பச்சை வாசனை போனதும்... புளி,உப்பு, கொத்தமல்லி சேர்த்து வதக்கவும் (புளிக்கு பதில் தக்காளி விரும்புபவர்கள் இச்சமயத் தில் நறுக்கிய தக்காளி சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்). பிறகு அடுப்பிலிருந்து இறக்கி, ஆற விட்டு, மிக்ஸியில் அரைக்கவும். கடுகு, கறிவேப்பிலை தாளித்து, இதனு டன் சேர்த்துக் கலக்கவும்.
இந்த சட்னியை சப்பாத்தி, இட்லியுடன் பரிமாறலாம்.