Wednesday, March 6, 2013

" உங்க டூத்பேஸ்ட் " - ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட்..!

" உங்க டூத்பேஸ்ட் " - ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்..!

" உங்க டூத்பேஸ்ட்ல ஆக்ஸிஜன் இருக்கா..? " -னு சூர்யா கேட்டாரேன்னு அந்த பேஸ்ட் வாங்கி யூஸ் பண்ண ஆரம்பிச்சேன்...

அப்புறம்

" உங்க டூத்பேஸ்ட்ல உப்பு இருக்கா..? " -னு அனுஷ்கா கேட்டாங்க... அதனால அதையும் வாங்கினேன்..

( ஹி., ஹி., அனுஷ்கா பீல் பண்ணினா எனக்கு மனசு தாங்காதுல்ல... )

சரி மேட்டர்க்கு வருவோம்...

கம்பெனிக்காரன் குடுத்த காசை வாங்கிட்டு அது இருக்கா..? இது இருக்கான்னு கேட்டாங்களே தவிர... அதுல நிக்கோடின் இருக்குன்னு யாருமே சொல்லலை...

என்னாது நிக்கோடினா..?!!

( அடப்பாவிகளா.. நிம்மதியா பல்லு வெளக்க 
கூட விட மாட்டீங்களா..?!!! )

DISPAR ( Delhi Institute of Pharmaceutical Sciences & Research ) நிறைய இந்திய டூத்பேஸ்ட்ல நிக்கோடின் 
இருக்குன்னு கண்டுபிடிச்சி இருக்காங்க.. 

( நிக்கோடின் கேன்சரை உண்டாக்கும் )

Colgate, Vicco, Dabur, Himalaya இப்படி 24 Brands எடுத்து சோதனை பண்ணினதுல 7 Brands-ல நிக்கோடின் கலந்து இருக்கறது கண்டுபிடிக்கப்பட்டு இருக்கு..

S. No Brand Nicotine found in dental care products in 2008 (mg/g) Nicotine found in dental care products in 2011 (mg/g) Manufacturer
1. Vicco 0.002 0.05 Vicco laboratories, Goa
2. Alka
dant manjan
- 1.0 Dev Chemical Works Pvt. Ltd., New Delhi
3. Yunadant nil 1.7 Aayam Herbal And Research, Jaipur, Rajasthan
4. Dabur Red 5.75 0.01 Dabur India Limited, Solan, Himachal Pradesh
5. Payo kil nil 16 Gurukul Kangri Pharmacy, Haridwar, Uttarakhand
6. Colgate Herbal nil 18 Colgate Palmolive India Limited, Mumbai, Maharashtra
7. Neem Tulsi nil 10 Ayur Siddha Limited, Kangra, Himachal Pradesh
8. Stoline Paste nil 0.06 Group pharmaceuticals limited, Kolar, Karnataka
9. Himalaya nil 0.029 Himalaya Drug Company, Bengaluru, Karnataka
10. Sensoform nil 0.065 Indoco Remebies Limited, Solan, Himachal Pradesh


ஒரு சிகரெட்லயே 2mg தான் நிக்கோடின் இருக்காம்.. ஆனா Colgate Herbal-ல அதிகபட்சமா 18mg /gm நிக்கோடின் இருக்காம்..

அப்ப நாம ஒரு தடவை இந்த பேஸ்ட்ல பல்லு விளக்கினா... அது 9 சிகரெட் குடிச்சதுக்கு சமம்... அவ்வ்வ்....!!!

இந்த ஆராய்ச்சி முடிவு 2011-லயே வந்திருச்சி, ஆனா இதை பத்தி நமக்கு எதுவுமே தெரியாம பாத்துகிட்ட  நம்ம 
பத்திரிக்கை , டி.வி சேனல்களோட சேவையை எப்படிதான் பாராட்றது..?

" என்னங்க இது அநியாயமா இருக்கு..? நம்ம கவர்மெண்ட் என்ன பண்ணுது..?"-னு தானே கேக்க வர்றீங்க..? 

ம்ம்... என்னங்க பண்றது..? 

காசுக்காக மக்களுக்கு கவர்மென்ட்டே சாராயம் விக்கிற நாடுங்க இது..

இங்கே போயி நியாயமாவது, தர்மமாவது..!


for further reading, open this link:

http://vasukimahal.blogspot.in/2013/03/toothpastes-contain-cancer-causing.html