- Stability in thoughts and actions
- Logical thinking
- Marriage (removes obstacles in marriage)
- Children (it is the significator for children)
- Religious/charitable bent in life
- Uninterrupted flow of income
- Multiple sources of income
Sunday, April 21, 2013
Magic of Peepal Tree
Monday, April 15, 2013
திருத்தலாம்; தப்பில்லை! ஆனா...
'என்னோட நண்பன் ஒருத்தன் சமீப காலமா குடிக்க ஆரம்பிச்சிருக்கான். 'ஏண்டா உனக்கு இந்த வேண்டாத புதுப் பழக்கம்? என்னாச்சு உனக்கு?'ன்னு கேட்டேன். 'நீயும் கொஞ்சம் குடிச்சுப் பாரு! அப்போ தெரியும் இதன் சுகம்'கிறான். இத்தனைக்கும் மத்தவங்களைக் குடிக்க வேணாம்னு உபதேசம் பண்ணிட்டிருந்தவன் அவன். பலரைக் குடிப் பழக்கத்திலிருந்து திருத்தியும் இருக்கான். அவனா இப்படின்னு என்னால நம்பவே முடியலை!' என்று, மாதப்பன் தனது நண்பரின் மீதான ஆதங்கத்தை என்னிடம் பகிர்ந்துகொண்டார்.
'என்ன செய்யறது மாதப்பன்... தண்ணியில விழுந்தவனைக் காப்பாத்துறபோது, அவன் நம்மையும் சேர்த்துத் தண்ணியில மூழ்கடிக்கப் பார்ப்பான். அதுதான் யதார்த்தம். அதை எதிர்பார்த்து நாம உறுதியா நிக்கணும். மத்தவங்களைத் திருத்திக் கரைசேர்க்க நினைக்கிறது நல்ல விஷயம்தான். ஆனா, அதுக்கு முன்னே நாம அந்தக் கொள்கையில உறுதியா இருக் கணும். அது முக்கியம்!' என்றேன். அதோடு, அவருக்கு ஒரு கதையும் சொன்னேன்.
'அது ஒரு ரம்மியமான புல்வெளி. அங்கே தினமும் மேய வரும் பசுக்களில் ஒரு கன்னுக்குட்டியும் உண்டு. பசுக்களெல்லாம் மேய்ச்சல்ல ஈடுபட்டிருக்கும்போது, இந்தக் கன்னுக்குட்டி அந்தப் புல்வெளியில் ஒரு ஓரமா தனியா துள்ளி விளையாடிக்கிட்டு இருக்கும். புல்வெளிக்குப் பக்கத்திலேயே ஒரு குட்டை இருந்துச்சு. அதுல அழுக்குத் தண்ணி தேங்கி இருக்கும். அதை நெருங்கும்போதே துர்நாற்றம் வீசும். அந்தக் குட்டையில் தினமும் ஒரு குட்டிப் பன்றி வந்து குதிச்சு வெளையாடும்.
இதை ரெண்டு மூணு நாளாக் கவனிச்சுது கன்னுக்குட்டி. சுத்தம், சுகாதாரத்தைப் பத்தி பன்னிக்குட்டிக்கு எடுத்துச் சொல்ல விரும்புச்சு. குட்டைக்குக் கிட்டப்போய், 'ஏ... குட்டிப் பன்னி! நான் சொல்றதைக் கேளு. அது ரொம்பக் கெட்ட தண்ணி. பூச்சிங்கல்லாம் இருக்கு. இந்தத் தண்ணியில குதிச்சு விளையாடினா உனக்கு வியாதிதான் வரும்'னு சொல்லிச்சு. ஆனா, அந்தக் குட்டிப் பன்றி அதைக் காதிலேயே போட்டுக்கலை. இப்படியே பல நாள், கன்னுக்குட்டி உபதேசம் பண்றதும், பன்றிக்குட்டி அதை அலட்சியம் பண்றதுமாவே போச்சு.
ஒருநாள் பன்னிக்குட்டி சொல்லுச்சு... 'சரி, நீயும்தான் தினம் தினம் எனக்கு புத்திமதி சொல்லிட்டிருக்கே! நமக்குள்ள ஒரு ஒப்பந்தம் போட்டுக்கு வோம். ஒருநாள், ஒரே ஒருநாள் நீ வந்து இந்தக் குட்டையிலே காலையிலே இருந்து சாயங்காலம் வரைக்கும் இருந்து பாரு. உனக்கு இது பிடிக் கலைன்னா நானும் இன்னியோட இந்தக் குட்டையில குதிக்கிறதை நிறுத்திக்கிறேன்'னுச்சு.
கன்னுக்குட்டி யோசிச்சுது. 'சரி! பன்னிக் குட்டியைத் திருத்தணும்னா இந்தச் சவாலை ஏத்துக் கிட்டுத்தான் ஆகணும்'னு முடிவு பண்ணி, 'தடால்'னு அந்த அழுக்குக் குட்டையில குதிச்சுது.
கொஞ்ச நேரம் ஆச்சு! அந்தக் குட்டையில் சூரிய ஒளி படறதால, நீரின் இதமான வெதுவெதுப்பு உடம்புக்கு சொகமா இருந்துச்சு. நேரம் ஆகஆக, துர்வாடையும் பழகிப்போச்சு. பூச்சிங்க கடிக்கிறதுகூட ஒருவகையான மசாஜ் மாதிரி இதமா இருந்துச்சு. 'ஆஹா! இந்த சொகம் தெரியாம இத்தனை நாள் இருந்துட்டோமே'னு நினைச்சுது. பன்னிக்குட்டிக்கு நன்றி சொல்லிச்சு. அதுக்கப்புறம் கன்னுக்குட்டியும் தினசரி அந்த அழுக்குக்குட்டையில குதிக்க ஆரம்பிச்சிருச்சு. ஆக, பன்னியைத் திருத்த நினைச்ச கன்னுக்குட்டி, தானும் அதனோடு சேர்ந்து கெட்டுப் போச்சு!
அதனால, அடுத்தவங்களைத் திருத்துறதுக்கு முன்னாடி, அதுக்கான தகுதி நமக்கு இருக்கா, நாம நம்ம காலை ஸ்டெடியா ஊனி இருக்கோமான்னு பார்க்கிறது முக்கியம். இல்லேன்னா, உங்க நண்பருக்கு நேர்ந்த கதிதான் நேரும்!' என்றேன்.
பெருமூச்சு விட்டார் மாதப்பன். தன் நண்பரைத் திருத்துவதற்குத் தான் தகுதியானவன்தானா என்று அவர் யோசிப்பதாக எனக்குத் தோன்றியது.
ஒரு கதை... ஒரு தீர்வு! சத்யகாமனின் கதை
எனக்கு நன்கு அறிமுகமான ஒருவரிடமிருந்து ஒருநாள் தொலைபேசி அழைப்பு வந்தது. பதற்றமும் பரபரப்புமாகப் பேசினார். ''என் தம்பி தற்கொலைக்கு முயற்சி செய்கிறான். ஏற்கெனவே இரண்டு முறை முயன்று, நல்லவேளையாகக் காப்பாற்றி விட்டோம். நீங்கள்தான் அவனிடம் பேசி, நல்ல வார்த்தைகள் சொல்லி, தற்கொலை எண்ணத்திலிருந்து அவன் மனசை மாற்றவேண்டும்'' என்றார்.
''அவனை முதலில் ஒரு மனவியல் மருத்துவரிடம் அழைத்துச் செல்லுங்கள்'' என்றேன்.
''இரண்டு வாரங்களுக்கு முன்பு அழைத்துச் சென்றேன். அவர் மருந்துகளும் கொடுத்தார், ஆலோசனையும் தந்தார். ஆனாலும், என் தம்பி மனம் மாறியதாகத் தெரியவில்லை. இப்போதுகூட சோக மயமாகத்தான் இருக்கிறான். அடிக்கடி அறைக்குள் சென்று, கதவைத் தாளிட்டுக் கொள்கிறான். பயமாக இருக்கிறது'' என்றார்.
மறுநாள், நண்பரைப் பார்க்கப் போவது போல் அவரது வீட்டுக்குப் போய், அவரின் தம்பியையும் தற்செயலாகப் பார்ப்பது போல் பார்த்துப் பேச்சுக் கொடுத்தேன்.
20 வயது ஆகிறதாம். சரி, இளம் வயது; எனவே, காதல் தோல்வி போன்ற பிரச்னையாக இருக்கலாம் என்றுதான் முதலில் நினைத்தேன். ஆனால், காரணம் முற்றிலும் வேறாக இருந்தது.
அவனுக்கு 7 வயதிருக்கும்போது, கர்னாடக சங்கீதம் கற்றுக் கொள்ள அவனை ஒரு குருவிடம் சேர்த்துவிட்டிருக்கிறார்கள். சுமார் 12 வருடங்கள் பயிற்சி தொடர்ந்திருக்கிறது. மிகச் சிறப்பான குரல். கூடிய விரைவில் மேடைகளில் தனியே பாடும் வாய்ப்பு கிடைத்துவிடும் என்கிற ஒரு கட்டத்தில், சோதனையாக ஒருவித வைரஸ் காய்ச்சலால் அவன் தொண்டை கடுமையாகப் பாதிக்கப்பட்டது. அவன் குரல் கரகரப்பாகி, ரொம்பவே சீர்கெட்டுவிட்டது. ''என் குரலைக் கேட்க எனக்கே சகிக்கவில்லை'' என்று அவன் கூறியபோது பரிதாபமாக இருந்தது. நகரின் தலைசிறந்த காது மூக்கு தொண்டை நிபுணரே, 'ஸாரி! இதற்குமேல் எந்தச் சிகிச்சையும் இல்லை' என்று கைவிரித்துவிட்டதாகவும் சொன்னான்.
அவனோடு தன்மையாகப் பேசி, ஆறுதல் சொன்னேன். ஆனால், என் ஆறுதல் மொழிகள் எதுவும் அவனிடம் எந்த மாறுதலையும் உண்டாக்கவில்லை. தன் வாழ்க்கையே அஸ்தமித்துப் போனதாகச் கருதி, மருகினான்.
அப்போதுதான் சத்யகாமனின் கதையை அவனுக்குக் கூறினேன்.
சத்யகாமன் என்ற சிறுவனுக்குக் குருகுல வாசம் செய்து, கல்வி கற்க வேண்டும் என்ற ஆசை வந்தது. கௌதமர் என்கிற ரிஷியிடம் சென்றான். ''ஐயா! என்னை உங்கள் சீடனாக ஏற்றுக்கொண்டு, குருகுல வாசம் செய்ய அனுமதிக்க வேண்டும்'' என்று பணிவுடன் வேண்டினான்.
''குலப் பின்னணி தெரியாமல் யாரையும் நான் மாணவனாக ஏற்றுக்கொள்ள மாட்டேன். அந்தணர்களை மட்டும்தான் நான் குருகுலவாசம் செய்ய அனுமதிப்பேன். உன் குலம் என்ன? கோத்திரம் என்ன?'' என்றார் கௌதமர்.
சத்யகாமனுக்கு அவை இரண்டுமே தெரியவில்லை. தன் தாய் ஜபாலாவை அணுகினான். ''அம்மா, என் குலம், கோத்திரம் என்ன?'' என்று கேட்டான்.
ஜாபாலா சங்கடம் அடைந்தாள். அவள், தன் கணவரிடம் குலம், கோத்திரம் குறித்து எதுவும் கேட்டறிந்தது கிடையாது. இப்போது அவர் இருக்கும் இடமோ, அவரைக் குறித்த வேறு விவரங்களோ அவளுக்குத் தெரியாது (இந்தத் தகவல் வேறு விதமாகவும் சொல்லப்படுவது உண்டு).
மகனிடம் மறைக்காமல் இந்த உண்மையைக் கூறினாள். இதனால், மகன் விரும்பிய குருகுல வாசம் கிடைக்காது என்பது அவளுக்குத் தெரியும். என்றாலும், பொய்யின்மீது தன் மகனின் குருகுல வாழ்க்கை எழுப்பப்படுவதை அவள் விரும்பவில்லை.
சத்யகாமன் மறுநாளே கௌதமரிடம் சென்று, தன்னுடைய குலம், கோத்திரம் குறித்த விவரங்களை அறியமுடியாத நிலையை கூறினான். அவர் ஒரு கணம் திகைத்தாலும், 'இந்த அளவுக்கு நேர்மையாகவும் உண்மையாகவும் இருக்கும் இவன் நிச்சயம் ஒரு நல்ல வித்துதான்' என்று முடிவு செய்து, அவனைத் தமது சீடனாக ஏற்றுக்கொண்டார்.
மிகச் சிறப்பாகக் குருகுலம் பயின்றான் சத்யகாமன். அவன் செயல்களில் மட்டுமின்றி, எண்ணங்களில்கூட அப்படியரு தூய்மை! கௌதமரின் பசுக்களை தினமும் மேய்க்கும் வேலையும் அவனுக்குதான். அவனது நல்லொழுக்கத்தையும், ஆன்ம தாகத்தையும் தேவர்களும் கண்டனர்.
ஒருமுறை, அவன் பசுக்களை மேய்த்துக்கொண்டிருந்தபோது, சூரிய தேவனும் வாயு பகவானும் அவனுக்கு ஞானோபதேசம் செய்தனர். குருகுலம் திரும்பிய சத்யகாமனின் முகத்தில் ஞான ஒளி வீசுவதைக் கண்ட கௌதமர் சற்றே திகைத்து, ''யார் உனக்கு ஞானோபதேசம் செய்தது?'' என்று கேட்க, சத்யகாமன் நடந்ததைக் கூறினான். அதன் பின்னர், சத்யகாமனுக்குப் பூரணமான உபதேசங் களை கௌதமர் வழங்கினார்.
ஜபாலன் என்று அழைக்கப்பட்ட அந்தச் சத்யகாமன்தான் பின்னாளில் மிகச் சிறந்த மகரிஷியாக மாறினார்.
இந்தப் புராணக் கதையைச் சொன்ன நான், மேலும் சில ஆலோசனைகளையும் அந்த இளைஞனுக்குச் சொன்னேன்.
''சத்யகாமனும் அவன் தாயும் நிதர்சனத்தை ஏற்றுக்கொண்டனர். அவன் தாயும் தன் கடந்த காலத் தவறுகளை மறைக்கவில்லை. சத்யகாமனும் தன் கோத்திரம் குறித்து கௌதமரிடம் பொய் சொல்லவில்லை. நமது எதிர்காலம் பாழாகிவிடுமோ என்ற அச்சத்தில் உண்மையை எதிர்கொள்ள அவன் தயங்கவில்லை. ஆனது ஆகட்டும், வருவது வரட்டும் என்று தைரியமாக நின்றான். அதனாலேயே பின்னாளில் மகரிஷியாக ஆனான்.
நம் வாழ்விலும் நம்மை மீறிச் சில கசப்புகள் நேரும்போது, அவற்றைத் துணிச்சலோடு ஏற்க வேண்டும். 'எனக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் நடக்கிறது?' என்று புலம்புவதிலோ, தப்பித்து ஓடுவதாக நினைத்து, கோழைத்தனமாக ஒரு முடிவெடுப்பதிலோ எந்த அர்த்தமும் இல்லை. 'சரி, இது இப்படி நடந்துவிட்டது. இதை எப்படிச் சரிசெய்யலாம்? இதிலிருந்து எப்படி மீண்டு வரலாம்?' என்று யோசிக்கவேண்டும்!'' என்றேன்.
''என் தொண்டை இனி சரியாக வாய்ப்பே இல்லை என்கிற நிலையில், எப்படி மீள்வது? இதெல்லாம் வெறும் ஆறுதல் வார்த்தைகள்!'' என்றான் அந்த இளைஞன்.
நான் புன்னகைத்தேன். அவன் தோளில் கை வைத்து, ''லதா மங்கேஷ்கரைத் தெரியும்தானே?'' என்றேன்.
''அவரைத் தெரியாதவர் இருக்க முடியுமா? மிகச் சிறந்த இந்திப் பாடகியாயிற்றே! எனக்கு ரொம்பவும் பிடித்த இசைக்குயில் அவர். ஹூம்... நானும் அப்படி ஒரு மனக்கோட்டை கட்டியிருந்தேன். எல்லாம்தான் பாழாய்ப் போச்சே!'' என்றான்.
''கர்னாடக இசை உலகில்தான் என் வாழ்க்கை என்கிற என் ஆசை ஒரேயடியாகப் பொசுங்கிவிட்டதே!'' என்று அவன் சொன்ன போது, அவன் கண்கள் கலங்கியிருந்தன.
''உன் ஆசை பொசுங்கவில்லை. உயிர்ப்புடன்தான் இருக்கிறது'' என்றேன் நான். எரிச்சலும் குழப்பமுமாக என்னைப் பார்த்தான்.
''உனக்கு ஒரு விஷயம் தெரியுமா? லதா மங்கேஷ்கர் ஒரு நடிகையாக ஆசைப்பட்டுத்தான் திரைத் துறைக்கு வந்தார். சில படங்களிலும் நடித்தார். ஆனாலும், ஒரு நடிகையாக அவரால் சோபிக்க முடியவில்லை. அதனால் அவர் சோர்ந்து போய்விட்டாரா என்ன? தனது ஆசை திரைத்துறையில்; அது நடிகையாக இருந்தால் என்ன, பாடகியாக இருந்தால் என்ன என்று பின்னணிப் பாடகியாக தன் திறமையை வளர்த்துக்கொண்டார். இன்றளவும் அவரது சாதனையை முறியடிக்க இன்னொருவர் பிறக்கவில்லை. உனது தொண்டைதானே பாதிக்கப்பட்டது? அதனால் என்ன? உனக்குத்தான் கர்னாடக சங்கீத ஞானம் இருக்கிறதே! முயற்சி செய்தால், நீ சுலபமாக வயலின் வித்வானாகவோ மிருதங்க வித்வானாகவோ ஆகலாமே!'' என்றேன் நான்.
இப்படிச் சொன்னதும், அந்த இளைஞனின் முகம் மலர்ந்தது; கண்களில் நம்பிக்கை ஒளி பளிச்சிட்டது. 'இனி அவனது அறைக் கதவின் உள்தாழ்ப்பாள் போடப்படாது' என்று அவனது அண்ணனுக்கு தைரியம் சொன்னேன்.
கல்யாணத்தடை நீக்கும் கந்தன் வழிபாடு
எப்போதும் இளமையானவனான அழகன் முருகன், பக்தர்களுக்கு அருள்வதில் மிகப் பெரியவன். அந்த ஏரகச் செல்வன் நம்மை ஏறெடுத்துப் பார்த்தால், காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிட்டும். பெண்களுக்கு உண்டாகும் தோஷங்கள் அனைத்தும் விலகும். கந்தவேளை வழிபட, அவனைப் போலவே அழகான ஆண் மகவு, பொற்சிலையாய்ப் பிறக்கும்.
திருவடியும் தண்டையும் சிலம்பும் பூடுருவப்
பொருவடி வேலும் கடம்பும் தடம் புயம் ஆறிரண்டும்
மருவடிவான வதனங்கள் ஆறும் மலர்க்கண்களும்
குருவடிவாய் வந்தென் உள்ளம் குளிரக்குதி கொண்டனவே
என்று கந்தரலங்காரப் பாடலில், முருக வழிபாட்டுப் பெருமையைப் போற்றிப் பரவுகிறார் அருணகிரிநாதர்.
இந்த இதழில், செந்தமிழ்க் கடவுளின் திருவருளால் அங்காரக தோஷம் நீக்கும் அற்புதமான ஒரு வழிபாட்டை அறிவோம்.
ஒரு வளர்பிறைச் செவ்வாய்க்கிழமை அன்று துவங்கி, தொடர்ந்து ஆறு செவ்வாய்க்கிழமைகள் இந்த பூஜையைச் செய்தல் வேண்டும்.
அதிகாலையில் குளித்து மடியுடுத்திக்கொண்டு, வீட்டு பூஜை அறையில் சுத்தமான மணைப் பலகையில் பச்சரிசி மாவினால் சடாட்சர கோலம் போட்டு, அதில் நெய் தீபம் ஏற்றி வைக்கவேண்டும். கோலத்தில் எழுதப்பட்டுள்ள, 'ஓம் சரவணபவ' என்ற எழுத்துக்கள் மேல் செவ்வரளி மலர்களை வைக்க வேண்டும். அந்த மணைப் பலகைக்கு இருபுறமும் குத்து விளக்குகளும், முன்பக்கத்தில் கல்யாண கோல முருகன் படமும் வைக்கவேண்டும்.
அன்றைய திதி- வாரம், நட்சத்திரம், யோகம் உள்ளடக்கிய பஞ்சாங்கக் குறிப்புகளைச் சொல்லிக்கொண்டு 'மம, அங்காரக தோஷ நிவர்த்தியர்த்தம் சடாட்சர பூஜாம் கிருத்வா' என்று சொல்லவேண்டும். அடுத்து,
'ஓம் கார்த்திகேயாய வித்மஹே குக்குட த்வஜாய தீமஹி
தந்தோ சண்முக பிரசோதயாத்'
என்ற சண்முக காயத்ரியை இரண்டு முறையும்,
'ஓம் சக்தி அஸ்தம் விரூபாட்சம் சிகி வாகம் ஷடானனம்
தாருணம் ரிபுரோகக்னம் பாவயே குக்குடத்வஜம்'
என்ற முருகனின் தியானச் சுலோகத்தை மூன்று முறையும் சொல்லவேண்டும். தொடர்ந்து செவ்வரளி, முல்லை மலர்களைக் கலந்து வைத்துக்கொண்டு, கீழ்க்காணும் போற்றிகளைக் கூறி அர்ச்சிக்க வேண்டும்.
ஓம் வேலனே போற்றி
ஓம் வரமருள் தேவா போற்றி
ஓம் சக்தி மைந்தனே போற்றி
ஓம் சரவணனே போற்றி
ஓம் தோஷம் அகற்றுவாய் போற்றி
ஓம் மங்களனே போற்றி
ஓம் சிவனார் மகவே போற்றி
ஓம் வள்ளி மனதோய் போற்றி
ஓம் அங்காரக் கடிவே போற்றி
ஓம் குரு குணனே போற்றி
ஓம் மயில்வாகனா போற்றி
ஓம் சேவற்கொடி செவ்வேளே
போற்றி, போற்றி!
இப்படி மும்முறை கூறி, 'சரவணபவ' எனும் அட்சரங்களில் ஒவ்வொரு மலராகப் போட வேண்டும்.
பிறகு, வெல்லம் கலந்த தினைமாவு, தேங்காய், பழம், பாக்கு, வெற்றிலை வைத்துப் படைத்து, முல்லைமலர், செவ்வரளி (அரளி கிடைக்காவிடில் செம்பருத்தி) மலர் கலந்து கைகளில் வைத்துக் கூப்பியபடி...
நாளென் செயும் வினைதானென் செயுமெனை நாடிவந்த
கோளென் செயுங் கொடுங்கூற்றென் செயும் குமரேசரிரு
தாளும் சிலம்பும் சலங்கையும் தண்டையும் சண்முகமும்
தோளும் கடம்பும் எனக்கு முன்னே வந்து தோன்றிடினே!
என்று முருகனின் துதி கூறி, சடாட்சர கோலத்தில் மலரிட்டுக் கற்பூர ஆரத்தி செய்து, விபூதி குங்குமம் எடுத்துக்கொண்டு ஆறு முறை திருச்சுற்றுதலும் மூன்று முறை ஆத்ம பிரதட்சிணமும் (தன்னையே சுற்றிவரல்) செய்ய வேண்டும். முல்லை மலர் குருபகவானுக்கு உரிய மலர். குரு பலன் அள்ளித் தரும் திருச்செந்தூர் செந்திலாண்டவனும் இந்த வழிபாட்டில் சேர்வதால், குருபலம் இல்லாததாலும், செவ்வாய் தோஷத்தாலும் திருமணத்தில் தடைகள் ஏற்பட்டு வருந்துவோருக்கு இந்த வழிபாடு மிகவும் நலம் பயக்கும். வீட்டில் விரைவில் கெட்டிமேளம் கொட்டும். கே.குமார சிவாச்சார்யர்
Sloka while lighting lamp
Sloka while lighting lamp
Light is considered as a symbol of auspiciousness, prosperity and abundance in the Hindu religion. Light brings brightness with it and removes the darkness. Light makes it possible to see things clearly. Following Sloka / Shloka can be recited while lighting the lamp. This prayer is also known ''deepa shlokam''.
"Subham Karoti Kalyanam
Arogyam Dhana Sampadah
Shatru Buddhi Vinashaya
Dipa Jyotir Namostute
Meaning: The accurate meaning of the mantra is: "I fold my hands before the light that brings prosperity, auspiciousness, good health, abundance of wealth and destruction of the enemy's intellect". Here, Darkness symbolizes enemy's intellect and with the arrival of light, darkness disappears. Likewise, light (God's Grace) destroys darkness (enemy's intellect).
"Deepajyothi Parabrahma
Deepajyothi Janardhana
Deepo Me Hara Tu Paapam
Deepaa Jyothir Namostute"
Meaning: The literal meaning of the mantra is: "I fold my hands before the lord, the maintainer of this creation, in the form of this light. I adore this light, which destroys all the pains resulting from my omissions and commissions".
Sunday, April 14, 2013
Sloka while eating
Sloka while eating
Eating is an important activity, which is required in order to live. It is God, who has created each and every thing. Food, hunger, living beings, all of them form the part of God's creation. One should remember God, the omnipresent, who has given both, sweet and sour delicacies to satisfy our taste-buds. Following is the Sloka/ Shloka which can be recited while eating or taking your food.
"Brahmaarpanam Brahma Havih Brahmaagnau Brahmana Hutam,
Brahmaiva Tena Gantavyam Brahmakarmasamaadhina"
Meaning: The accurate meaning of this mantra is: "A practice of offering is Brahman, the oblation is Brahman, the device of offering is Brahman, and the fire (hunger) to which the offering is made, is also Brahman. For such a one, who abides in everything (Brahman), by him alone Brahman is reached".
Significance: Brahman refers to God himself. This Shloka suggests that god is everywhere, in the food, inside the devotee and even the hunger is God. So, devotee is taking the food (God) to the hunger (God). To put succinctly, we always thank god for his divine grace.
Saturday, April 13, 2013
Our Eternal Duty: Protection of Cow and Bull
Friday, April 12, 2013
Do you know why...
“டிங்...டிங்...டிங்” காலை ஆசிரம மணியின் ஓசை கேட்டது.
நான்கு மணி ஆகிவிட்டது என்ற எண்ணத்துடன் எழுந்தான் விஷ்ணு. விஷ்ணு ஆசிரமத்தின் அனைத்து வேலைகளையும் பார்ப்பவர்களில் ஒருவன்.
காலை ஐந்து மணிக்கு யோக பயிற்சி முடித்ததும், ப்ரார்த்தனை மற்றும் காலை உணவுடன் துவங்கும் அவனது பணி இரவு ஒன்பது வரை நீடிக்கும்.
புத்தகங்கள் பார்சல் அனுப்புவது, தோட்டத்தை சுத்தம் செய்வது மற்றும் குரு வெளியே செல்லுவதற்கு வாகன ஓட்டியாக மாறுவது என ஒரு நாளில் பல அவதாரம் எடுப்பவன் விஷ்ணு.
அன்று காலை வழக்கம் போல யோக பயிற்சிக்காக ஆசிரம யோக சாலைக்கு சென்று பயிற்சி செய்ய துவங்கினான்.
இன்று என்னமோ அவனுக்கு யோக பயிற்சியை சரிவர செய்ய முடியவில்லை.முன்னால் அமர்ந்திருந்த குருவின் மேல் அவனுக்கு கவனம் முழுவதும் சென்றது. விஷ்ணு ஆசிரமத்திற்கு வந்த நாள் முதல் பார்த்திருக்கிறான் குரு யோக பயிற்சியை கற்றுக்கொடுக்கிறாரே தவிர அவர் செய்வதில்லை.
இவனும் சக ஆசிரம வாசிகளும் ப்ராணயாமமும், ஆசனமும் செய்யும் பொழுது அவர் கண்களை மூடி அமர்ந்திருப்பார். அல்லது ஜன்னலுக்கு வெளியே எங்கோ பார்த்துக்கொண்டிருப்பார்.
பிறருக்கு பயிற்சி அளிக்கும் நேரத்தில் குரு செய்து இருப்பதை பார்த்திருக்கிறேன். எங்களை தினமும் செய்ய கூறும் குரு தான் செய்வதில்லையே என்ற எண்ணம் அதிகமாக வந்தது. தவறு என்றாலும் எண்ணத்தை தவிர்க்க முடியவில்லை. அவனது யோக பயிற்சியில் கூட அந்த தடுமாற்றம் தெரிந்தது.
ஆனாலும் யாருக்கும் தெரியாத வண்ணம் சரிசெய்து யோக பயிற்சி முடித்துவிட்டு அறையைவிட்டு வெளியேறினேன்.
“விஷ்ணு...”.. குருவின் குரல் கேட்டது.
அவரை நோக்கி புன்னகையுடன் கைக்கூப்பி நின்றேன்.
“ கொஞ்சம் வெளியே போகனும், ஜீப் ரெடி பண்ணுப்பா” என்றார் குரு.
என்றும் இல்லாத அதிசயமாக இன்று காலையிலேயே வெளியே செல்ல அழைக்கிறாரே என்ற தயக்கத்துடன் ஜீப்பை தயார் செய்தேன். குருஜி ஏறியதும் ஜீப்பை ஸ்டார்ட் செய்து ஆசிரமத்திலிருந்து வெளியே கொண்டு வந்தேன். ஆசிரமம் இருப்பது மலைபகுதி என்பதால் ஜீப் பயணிக்கும் பொழுது குளிர்ந்த காற்று ரம்மியமாக இருந்தது.
சில தூரம் பயணித்ததும் குருஜி என்னை பார்த்து திரும்பினார்..
பிறகு கேட்டார்.. “ சாவி போட்டுட்டியா விஷ்ணு?” என்றார்.
வண்டி ஓடிக்கொண்டிருக்கும் பொழுது இது என்ன இப்படி கேட்கிறார் என்ற குழப்பம் வந்தாலும் வேறு வழியில்லாமல் “போட்டாச்சு குருஜீ” என்றேன்.
ஜீப்பினுள் மெளனம் நிலவியது.
வண்டி சில கிலோ மீட்டர் சென்றது
மீண்டும் குருஜீ என்னை பார்த்து திரும்பினார்.
பின்பு கேட்டார்.. “ஜீப்புக்கு சாவி போட்டுட்டியா விஷ்ணு?”
இது என்ன முட்டாள் தனமான கேள்வி என தோன்றினாலும் வேறுவழியில்லாமல்.. “போட்டாச்சு குருஜீ” என்றேன்.
மேலும் சில கிலோமீட்டர் சென்றது. மீண்டும் குருஜீ என்னை பார்த்து...
“விஷ்ணு சாவி... ” என துவங்கும் முன் இடைமறித்தேன். “குருஜீ சாவி போடாமல் எப்படி வண்டி ஸ்டார்ட் ஆகும்? நாம் இவ்வளவு கிலோமீட்டர் வர முடியுமா? ” என்றேன்.
வேறு எங்கோ பார்வையை நிலைபடுத்திய படியே குருஜீ கூறினார்.
“ உள் இருக்கும் தெய்வீகத்தை தூண்டுவதற்காகத்தான் எல்லோரும் யோகப்பயிற்சி செய்கிறார்கள். இது வண்டிக்கு சாவி போடுவது போல. தூண்டிவிடப்பட்டதும் தெய்வீகம் ஆற்றலுடன் செயல் படத்துவங்கும். அப்பொழுது மீண்டும் மீண்டும் தூண்டிவிட தேவையில்லை. வண்டி ஓடும் பொழுது நீ மீண்டும் மீண்டும் சாவி போட்டு துவக்கவில்லை இல்லையா?”
Thursday, April 11, 2013
Shiva Sloka
Shiva Sloka
Lord Shiva or Siva is considered as the destroyer of the world. Shiva is one of the most popular gods of the Hindu religion. Shiva is also a kind-hearted god who blesses people. Sloka on Lord Shiva forms the part of prayers offered to the lord. Following is the Shloka for invoking Lord Shiva or Shiva Sloka:
"Kailaasarana Shiva Chandramouli
Phaneendra Maathaa Mukutee Zalaalee
Kaarunya Sindhu Bhava Dukha Haaree
Thujaveena Shambho Maja Kona Taaree"
Meaning: Lord Shiva is seated on Mount Kailash; his forehead is decked with the moon and the king of serpents as a crown. The lord is full of compassion and the remover of illusion. Shiva is the only protector. I surrender myself to such great Lord Shiv-Shankar.
Wednesday, April 10, 2013
Saraswati Sloka
Saraswati Sloka
Saraswati is the goddess of arts, music, knowledge, and wisdom. Saraswati is considered as the divine consort of Lord Brahma, the Creator of the universe as per the Hindu Religion. Saraswati is regarded as the destroyer of chaos and confusion. Slokas on Saraswati form the part of prayers offered to the goddess. Saraswati Slokas/ Shlokas are as follows:
"Ya Devi Stuyate Nityam Vibhuhairvedaparagaih
Same Vasatu Jihvagre Brahmarupa Saraswati"
Meaning: Saraswati, the goddess of knowledge, is praised by the intelligent who have mastered the Shastra (scriptures). She is the wife of the Creator. May she live on my tongue.
"Shrii Saraswatii Namahstubhyam Varade Kaama Ruupini
Twaam Aham Praarthane Devii Vidyaadaanam Cha Dehi Me"
Meaning: I bow to Goddess Saraswati, who fulfills the wishes of the devotees. I pray her to enlighten me with knowledge.
"Sarasvathi Namastubhyam, Varade Kaamaroopini
Vidyaarambham Karishyaami, Siddhir Bhavatu Mey Sada"
Meaning: Saraswati is the provider of boons and the one, who grants all our desires. As I begin my studies, I bow to the Goddess to help me in making it fruitful and make me successful in all my efforts.
Rama Sloka
Rama Sloka
Lord Rama is the seventh incarnation of Lord Vishnu, as per the Hindu Mythology. Ram symbolizes morality, virtue and idealism. Rama Slokas form part of prayers offered to the lord. Slokas on Lord Rama are as follows:
"Yanmaya Vashvarti Vishwamkhilambrahamadidevasura,
Yat Sat Vadmrishave Bhati Sakalam Rajoo Yadhaahaibharama,
Yatpadah Palvmaive Bhati Hi Bhavambhodhaisitatti Shravtam,
Vandeaham Tamsheshkaranparam Ramakhayamesham Harim"
Meaning: Lord Hari is also called as Rama and he is beyond all cause. This whole world is a part of his Maya. Lord Ram is the only one, with whose essence everything shines as real (though in reality it is false) where snake is misapprehended as a rope and whose feet are a boat to those who aspire to cross the ocean of Samsara, the relative existence. I surrender myself to such great Lord.
"Moolam Dharmtarovivekjaldhae Poornedumannandam,
Vaiaragayambuj Bhaskaram Tawaghharam Dhavanta Paham Tapham,
Mohambhodharpunjhpatanvidhoo Khe Sambhavam Shankaram,
Vande Braham Kul Kalankshamanam Shree Rambhoopam Priyam"
Meaning: Lord Rama, the beloved King is the root of the tree of all Dharma. He is the full moon, giving delight to the ocean of Viveka or discrimination and the sun for the lotus of Vairagya. He is the destroyer of sin, the dispeller of the darkness of ignorance and the destroyer of pain. In the act of destroying the masses of clouds, of delusion he acts like wind. I bow to the Lord, who is propitious and who brought death to the disgrace to the Brahmin family of Ravana.
"Prasantam Ya Na Gatabhishaket Satatha Na Mamloo Banvasdukhta,
Mukhambujshree Raghunandan Sai Mai Sada Aastu Sa Mujulmangalprada"
Meaning: Lord Rama has a lotus like beautiful face. His beauty neither gets enhanced at the coronation nor fades at the hardships of an exile in the forest. May Lord bless me with all auspicious.
"Neelambhuj Shyamalkomlang Sita Samaropitvambhagam,
Pano Mahasaikacharoochapam Namame Ramam Raghuvanshnatham"
Meaning: Lord Rama is the chief amongst the Raghus. His handsome body is of dark blue color like the blue lotus. He has Sita seated on his left. He is the one, who wields a beautiful bow and arrows in his hands. I bow to such great Lord.
Parvati Sloka
Parvati Sloka
Goddess Parvati is the divine consort of Lord Shiva, the destroyer. Gauri represents virtue, fertility, marital felicity, asceticism and power, as per the Hindu mythology. Parvati is worshipped by women of all ages and is considered as an auspicious goddess. Slokas on Hindu goddess Parvati form the part of prayers offered to the goddess. Parvati Slokas / Shlokas are as follows:
"Sarva Mangala Maangalye, Shive Sarvaartha Saadhike
Sharanye Tryambake Gaurii, Naaraayanii Namostute"
Meaning: Goddess Parvati is the auspiciousness of all that is auspicious. She is the consort of Lord Shiva, who grants every desire of one's heart. I adore such Devi Parvati, who loves all her children. I bow to the great mother, who has given refuge to me.
"Maata Cha Paarvati Devi, Pitaa Devo Maheshvara
Baandhavah Shiva Bhaktaacha, Svadesho Bhuvanatrayam"
Meaning: Goddess Parvati is the mother and the divine father is Shiva. The devotees are the children. The world is the creation of these divine beings and we live on the land of such celestial beings.








