கட் ஜீன்ஸ், பூட் கட் ஜீன்ஸ், ஸ்லிம் ஃபிட் ஜீன்ஸ், ஸ்ட்ரெட்ச் ஜீன்ஸ், ஜெக்கிங்ஸ் என வெவ்வேறு பெயர்களிலும் மாடல்களிலும் அப்டேட் ஆகிக்கொண்டே வரும் ஜீன்ஸ் என்றும் பல பெண்களின் ஆல்டைம் சாய்ஸ். நம்மை டிரெண்டியாகவும் கிளாஸியாகவும் காட்ட உதவும். ஜீன்ஸை, நாம் எப்படிக் கையாள்கிறோம் என்பதைப் பொறுத்துதான் அதன் லைஃப் இருக்கும். சில `ஜீன்ஸ் தகவல்கள்' இதோ...
பாதுகாக்க டிப்ஸ் 7
உங்கள் உடல்வாகுக்கு ஏற்ற சரியான சைஸில் ஜீன்ஸ் வாங்குவது முக்கியம். வாங்கும்போதே கொஞ்சம் லூஸாக இருந்து, 'இட்ஸ் ஓ.கே...' என்று காம்ப்ரமைஸ் ஆகி வாங்கிவிட்டால், அணிய அணிய இன்னும் லூஸாகும். மற்ற துணிகளுக்கும் ஜீன்ஸுக்கும் உள்ள முக்கிய வித்தியாசம் இது.
ஜீன்ஸ் விஷயத்துல 'லூசு'ப் பொண்ணா ஆகாதீங்க!
புது ஜீன்ஸை முதன் முதலில் துவைக்கும்போது, தண்ணீரில் ஒரு மூடி வினிகரைச் சேர்த்து ஜீன்ஸை ஊறவைத்துத் துவைத்தால், அதன் பின்னர் கலர் போகவே போகாது. வினிகர், ஜீன்ஸின் கலரை சீல் செய்ய உதவும். பொதுவாக, நாளாக ஆக பல ஜீன்ஸ் பேன்ட்டுகள் 'ஃபேட்' ஆகத் தொடங்கிவிடும். வினிகர், அதைத் தவிர்க்கச் செய்யும்.
டிப்ஸை டியூட்ஸுக்கும் ஃபார்வேர்டு பண்ணுங்க!
ஜீன்ஸை வார்ட்ரோபில் மடித்து வைப்பதைவிட, ஹேங்கரில் தொங்கவிடுவதே நல்லது. நீளமாக இருக்கும் பேன்ட்டை சில பெண்கள் கீழே மடித்துவிடுவார்கள். அப்படி அவசியம் எனில், சிங்கிள் ரோல் மட்டும் செய்யுங்கள். அதற்கு மேல் மடித்து விட்டுக்கொண்டே இருந்தால், பேன்ட்டின் கீழ்ப் பகுதி வேகமாகக் கிழியத் தொடங்கி விடும்.
பத்திரமா பாத்துக்கோங்க!
மற்ற துணிகளைப் போல ஜீன்ஸை ஒருமுறை அணிந்ததும் துவைக்க வேண்டிய அவசியமில்லை என்பது மட்டுமல்ல... ரொம்ப நாள் துவைக்கக் கூடாது! 'சரி, எப்போதான் துவைக்கிறது?' என்றால், அதற்கு ஒரு டிப். ஜீன்ஸின் முட்டிப் பகுதியிலும் இடுப்புப் பகுதியிலும் சுருக்கங்கள் தெரிய ஆரம்பிப்பதுதான் வார்னிங் பெல். அதன் பிறகு கண்டிப்பாகத் துவைத்துவிடுங்கள். அதுவரைக்கும் ஐந்து, ஆறு தடவைகூட துவைக்காமல் அணிந்துகொள்ளலாம்.
'அய்யே அழுக்கு'னு வீட்டுல வாந்தியெடுத்தாலும் கண்டுக்காதீங்க!
ஜீன்ஸை நேரடியாக வெயிலில் காயவைப்பது, ட்ரையரில் காயவைப்பது, வெந்நீரில் ஊறவைத்துத் துவைப்பது... இவை யெல்லாம் கூடாது. நிழலில் உலர்த்துவதே நல்லது. அதேபோல நோட் இட் டௌன்... ஜீன்ஸை அயர்ன் செய்யவே கூடாது.
அயர்ன் காசு/கரன்ட் செலவு மிச்சம்!
வினிகர் போலவே உப்பும் கலரைப் பாதுகாக்க உதவும். ஒரு பக்கெட் தண்ணீரில் ஒரு கப் கல் உப்பு சேர்த்து, அதில் ஜீன்ஸை ஊறவைத்த பின் துவைத்தால் நீல நிறமோ, கறுப்பு நிறமோ... அப்படியே நீடித்திருக்கும். முதல் முறை மட்டுமல்ல, ஒவ்வொரு முறை துவைக்கும் முன்பும் இப்படிச் செய்யலாம்.
வாங்கி வெச்ச உப்பைக் காணோமேனு அம்மா தேடும்போது, அப்ஸ்காண்ட்!
எப்போதும் ஜீன்ஸை உட்புறமாகவே பிரஷ் செய்து துவைக்கவும். மாறாக, வெளிப்புறத்தில் பிரஷ்ஷால் கொரகொரவென, கல்லில் வைத்து மரமரவென்றெல்லாம் தேய்த்தால், விரைவிலேயே அந்த ஜீன்ஸ் தரையைத் துடைக்கும் அழுக்குத் துணிபோல வலுவிழந்துவிடும். அதேபோல, துணி ஊறவைக்கும்போது லைட் கலர் துணிகளோடு சேர்த்து ஊற வைக்க வேண்டாம். பிளாக், டார்க் ப்ளூ போன்ற ஜீன்ஸின் சாயம் அந்தத் துணிகளில் இறங்கி நாசம் செய்துவிடும்.
ஸோ, துணி ஊறவைக்கிற வேலையை நீங்க செஞ்சுதான் ஆகணும்!