Friday, December 26, 2014

சாதனையாளர்கள் தவிர்க்கும் 10 விஷயங்கள்!

சாதனையாளர்கள் தவிர்க்கும் 10 விஷயங்கள்!

 
ஒருவர் சாதனையாளராக இருக்கிறார் என்றால் அவர் கடினமாக உழைக்க வேண்டும், நேர்மையாக இருக்க வேண்டும் என்று அனைவரும் கூறுவது உண்டு.இதுபோன்ற செயல்களை அவர்கள் தவறாமல் செய்ய வேண்டும், ஆனால் அவர்கள் கட்டாயம் தவிர்க்க வேண்டிய விஷயங்கள் சில உள்ளன. அவற்றை பார்ப்போம்!
 
1.பெரும்பாலும் சாதனையாளர்கள் இவர் இப்படி செய்துவிட்டார்? இவர் நல்லவர்! இவர் கெட்டவர்! என்று ஒருவரை பற்றி மற்றோருவரிடம் புறம்பேச மாட்டார். தனக்கு எது சரியென்று தோன்றுகிறதோ அதனை சரியாக சம்பந்தப்பட்ட நபரிடம் பேசி விடுவார்.இது தான் ஒரு சாதனையாளருக்கு இருக்க வேண்டிய மிக முக்கியமான தகுதி.
 
2.தன்னால் முடியாது என தோன்று விஷயத்துக்கு மற்றவரிடம் நல்ல பெயர் வாங்க வேண்டுமே என்பதற்காக ஆம் முடியும் என்று கூறி ரிஸ்க் எடுக்க மாட்டார்.அதனால் முடியும் என்ற விஷயத்துக்கு மட்டுமே ஆம் முடியும் என்று கருத்து தெரிவிப்பார்.
 
3.பேச்சு வார்த்தைகளின் போது குறுக்கே புகுந்து வாதத்தில் ஈடுபடமாடார். அவர் மற்றவர்களது கருத்துக்களை முழுமையாக கேட்டு தெரிந்து கொண்டு அதில் தோன்றும் சந்தேகங்களை குறித்து வைத்து அவர் பேசி முடித்த பின் தனது விளக்கங்களை கேட்டு தெரிந்து கொள்வார். இதனால் ஒருவரது கருத்து மரியாதை கொடுக்க தெரிவந்தவராகவும், ஆழ்ந்த கவனிப்பு திறன் உடையவராகவும் அவர் திகழ்வார்.
 
4.அவர்களை ஒருபோதும் தமாதமாக பார்க்க முடியாது. தாமதம் அவர்கள் செய்யும் செயலிலும் கூட இருக்காமல் பார்த்து கொள்வார்கள். அவர்கள் சரியான திட்டமிடலை வைத்திருப்பார்கள் அதனால் அவர்கள் செயல் தாமதமாக வாய்ப்பில்லை. அப்படியே சிறுது தாமதம் உண்டானாலும் அதில் ஒரு நியாயம் இருக்கும்.
 
5.தனது முழு கவனத்தையும் தான் செய்யும் வேலையில் வைத்திருப்பார்கள். அடுத்தவர் என்ன செய்கிறார்? நம்மைவிட அதிகம் செய்துவிடுவாரோ என்ற எண்ணம் எல்லாம் இன்றி தனது முழு கவனத்தையும் ஒரே விஷயத்தில் கொண்டு செயல்படுத்துபவராக இருப்பார்.
 
6.அவர்கள் செய்ய வேண்டிய விஷயத்தை குறித்த நேரத்தில் செய்ய நேரமில்லை என்று ஒரு போதும்கூறமாட்டார்கள் அவர்கள் என்ன செய்ய வேன்டும் அவர்கள் செயலில் எந்த விஷயத்தை முதலில் முடிக்க வேண்டும். எந்த விஷயத்துக்கு எவ்வளவு நேரம் ஒதுக்க வேண்டும் என திட்டமிட்டு சரியான நேரத்தில் வேலையை முடிப்பவராக இருப்பார்.
 
7.அனைவருமே தவறு செய்பவர்கள் தான். என்ன தவறு செய்தோம் என்று எண்ணி அதிலேயே நின்று விடமாட்டார்கள் சாதனையாளர்கள். அதிலிருந்து சரியான பாடத்தை கற்று கொண்டு அந்த தவறை திரும்ப செய்யாத அளவுக்கு தன்னை வளர்த்து கொள்ளும் இயல்பு உள்ளவராக இருப்பார்.
 
8.தெரியாத விஷயங்களை மற்றவர்கள் தன்னை தவறாக நினைப்பார்களோ என்ற எண்ணத்தில் தெரியும் என்று எதாவது பொருந்தாத ஒரு விஷயத்தை சொல்ல மாட்டார். அதுவும் ஒரு பெரிய கூட்டங்களில் தன்னை நிரூபிக்க வேண்டும் என்ற வீண் விவாதங்களில் ஈடுபடமாட்டார்.
 
9.தனக்கு சரி என்று படும் செயலை பல பேர் தடுத்தாலும் . 100 சதவிகித நம்பிக்கையில் இது சரியாக இருக்கும் என்று தோன்றிவிட்டால் அதனை சரியான நேரத்தில் செய்து முடிக்க வேண்டும் என்ற நோக்கில் முழு வேகத்தில் செயல்பட்டு முடிப்பவராக இருப்பார். தனது முடிவுகளில் திடமாக இருக்கும்போது அதனை மாற்ற வைக்க முயலும் எந்த காரணத்துக்காகவும் வளைந்து கொடுக்க மாட்டார்.
 
10. மற்றவர்களும் இருக்கிறார்கள் அவர்கள் இந்த வேலையை பார்க்கமாட்டார்களா? நான் மட்டும் தான் பார்க்க வேண்டுமா? என்று எண்ணம் இவர்களிடத்தில் அறவே இருக்காது. ஒரு வேலை நடக்க வேன்டுமென்றால் அதை இவர் தான் செய்ய வேண்டும் என்று காத்திருக்க மாட்டார்.தானாக முன் வந்து அந்த வேலையை முடிப்பவராக இருப்பார்.
 
இந்த தகுதிகள் எல்லாம் உங்களிடமும் உள்ளதா? பிறகு என்ன நீங்கள் சாதனையாளர் தான்!