Friday, January 31, 2014

ப்ளீஸ் சிகரெட் குடிக்காதீங்க...

வருகின்ற 4ம்தேதி கேன்சர் தினம், உலகம் முழுவதும் ரோஸ் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. மருந்து மாத்திரைகளை விட அன்பும், அரவணைப்பும் அதிகம் தேவைப்படுவது இந்த புற்றுநோய்க்குதான். 


இந்த நோய் தானாக வருவதை விட புகையிலை, சிகரெட் போன்ற பழக்கங்களால் வலிய வரவழைத்துக் கொள்பவர்களே அதிகம்.


அதிலும் இளைஞர்கள் சிகரெட் பிடிக்கம் பழக்கத்தால் குரல்வளை புற்று நோய் வந்து பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகக்கூடாது என்பதற்காக, அந்த நோயின் பிடியில் சிக்கி திரும்பிய ஒருவர் தனது வாழ்வின் லட்சியமே இளைஞர்களை சிகரெட் பிடிக்கும் பழக்கத்தில் இருந்து மீட்பதுதான் என்ற எண்ணத்தோடு எழுபது வயதிலும் இளைஞர்கள் இருக்குமிடமான கல்லூரி போன்ற இடங்களை தேடித்தேடிப்போய் பரப்புரை செய்துவருகிறார்.


அவரது பெயர் ஏ.சர்புதீன்.
சென்னை முகப்பேரைச் சேர்ந்தவர்.


மாநில அரசு ஊழியராக இருந்த போது அவர் சார்ந்திருந்த அமைப்பின் செயலாளராகவும் இருந்தார். இந்த பொறுப்புக்கு முக்கிய தேவையான பேச்சுக்கலையிலும் வல்லவர்.


இவருக்குள்ள ஒரே கெட்ட பழக்கம் சிகரெட் பிடிப்பதுதான். இவருக்கு பொழுது போகாத போதெல்லாம் சிகரெட் பிடிப்பார், நண்பர்கள் யாருக்கு பொழுது போகவில்லை என்றாலும் இவரிடம் வந்து சிகரெட் பிடித்து செல்வார்கள். இப்படி ஒரு நாளைக்கு இரண்டு பாக்கெட் சிகரெட் பிடிப்பது என்பது இவரது அன்றாட அலுவலில் சேர்ந்துவிட்டது. இப்படி பல ஆண்டுகள் தொடர்ந்த இவரது சிகரெட் பழக்கம் விபரீதமாக வெளிப்பட்டது.
ஒரு நாள் காலை படுக்கைவிட்டு எழுந்தவர் பேசமுடியாது திணறினார். பக்கத்தில் இருந்த மருத்துவ மனைக்கு சென்ற போது அவர்கள் காது மூக்கு தொண்டை நிபுணரை கலந்து ஆலோசிக்க சொன்னார்கள். அவர் கொடுத்த மருந்து மாத்திரைகளை சாப்பிட்டபோது அது ஒரு வாரம் வேலை செய்தது, அதன் பிறகு நிலமை இன்னும் மோசமாகியது.


பிரிதொரு மருத்துவ மனையின் ஆலோசனையின் பேரில் தொண்டை சதையை எடுத்து சோதனை செய்து பார்த்தபோதுதான், சர்புதீனுக்கு குரல்வளை புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது என்ற அதிர்ச்சி தகவல் தெரிய வந்தது.
மனிதர் ஆடிப்போய்விட்டார். குணப்படுத்த முடியுமா? என்று எங்கெங்கோ போய் முட்டி மோதி பார்த்தார். இனிமேல் சிகரெட்டை தொடவே மாட்டேன் என்று சூளுரைத்தார். இதெல்லாம் தாமதமான முடிவு. நீண்ட நாள் சிகரெட் குடித்ததன் பலனாக கிடைத்த இந்த குரல்வளை புற்றுநோய்க்கு பலியாகிவிடாமல் உங்களை காப்பாற்றுகிறோம் ஆனால் இனிமேல் பேசுவது என்பதும் சுவாசிப்பது என்பதும் முடிந்து போன விஷயம் என்றார்கள். அதன்படியே நடந்தது. மூக்கு என்பது முகத்தின் ஒரு அங்கமாகத்தான் இன்று வரை இருக்கிறது, அதன் குணாதிசயமான நுகரும் தன்மை இழந்துவிட்டது. சுவாசம் தொண்டையில் போடப்பட்ட குழியின் வழியாகவே நடக்கிறது. இதெல்லாம் நடந்தது இவரது ஐம்பதாவது வயதில். விரக்தியான வாழ்க்கையில் இருந்த போதுதான் சென்னை அடையார் கேன்சர் இன்ஸ்டியூட் டாக்டர் விதுபாலாவின் அறிமுகம் கிடைத்தது. அவர் இவரிடம் நிறைய பேசி நம்பிக்கையை வளர்த்தார். சிகரெட் பிடிக்கும் பழக்கத்தால் உங்களுக்கு ஏற்பட்ட குரல்வளை புற்று நோய் நமது இளைஞர்கள் யாருக்கும் ஏற்படக்கூடாது என்பதற்காக நீங்கள் ஏன் பள்ளி, கல்லூரி போன்ற இடங்களிலும் இளைஞர் கூடுமிடங்களிலும் பேசக்கூடாது என்று சொன்ன போது நான் எப்படி பேச முடியும் என்றார்.


முயற்சித்தால் எல்லாம் முடியும் என்று சொன்னதுடன் இது தொடர்பாக சிறப்பு பயிற்சி கொடுத்தனர். பின்னர் "எலக்ட்டோ ஸ்பீச் 'என்ற சிறிய கைக்கடக்கமான கருவியை கொடுத்தனர். பேட்டரியால் இயங்கும் இந்த கருவியை தொண்டையில் வைத்துக்கொண்டு இவர் பேசும்போது ரோபா என சொல்லப்படும் எந்திர மனிதன் பேசுவது போல பேச்சு வந்தது.


சர்புதீனுக்கு பெரிதும் சந்தோஷம் தனது தேவைகளை காலம் காலமாக பக்கம் பக்கமாக எழுதி காண்பித்த நிலைமைக்கு விடுதலை கிடைத்தது. இவர் பேசுவது முதலில் புரியாதது போல இருக்கும், சிறிது நேரம் கவனம் செலுத்தினால் பிறகு எளிதான புரிந்து விடும். முதன் முதலாக இவருடன் மொபைல் போனில் பேசும் போது ஒரு மெஷின் பேசுவது போலத்தான் உணருவார்கள் ஆனால் பிறகு போகப்போக இவரது பேச்சு பிடிபட்டுவிடும்.


யார் சொல்லியும் சிகரெட் பழக்கத்தை விடாத பல இளைஞர்கள் இவர் மைக்கில் பேசுவதைக் கேட்டு அந்த நிமிடமே சிகரெட்டை தூக்கி எறிந்திருக்கின்றனர். இப்படி ஒருவரல்ல இருவரல்ல பல ஆயிரம் பேரை சிகரெட் பழக்கத்தில் இருந்து மீட்டு இருக்கிறார் மீட்டு வருகிறார். இவரது இந்த தன்னலமற்ற சேவையை பாராட்டி பலர் பாராட்டி விருதுகள் கொடுத்த போதும், எம்புள்ளைய சிகரெட் பழக்கத்தில் இருந்து மீட்டுக்கொடுத்த ஐயா நீங்க நல்லா இருக்கணும் என்று சொல்லும் ஏழை பெற்றோர்களின் வாழ்த்தையே பெரிதாக எண்ணுகிறார்.


இவரது போன் எண்: 9445170464. மீண்டும் சொல்கிறேன் இவரிடம் முதல் முறையாக பேசும்போது ஒரு எந்திரத்திடம் பேசுவது போலத்தான் இருக்கும். கொஞ்சம் புரிபடாது கவனத்தை சிதறவிடாமல் பேசினால் புரியும். உங்கள் பகுதி பள்ளி, கல்லூரியில் ஏதேனும் விழா நடக்கும் போது இவரை ஒரு பதினைந்து நிமிடம் பேசுவதற்காக வாய்ப்பு கொடுத்தால் நிச்சயம் சிகரெட் பிடிக்கும் இளைஞர்கள் மீட்டு எடுக்கப்படுவார்கள்.


வயதை மீறி தனது நோயைத்தாண்டி ஆரோக்கிய சமுதாயம் அமைய தனது வாழ்க்கை தொண்டுள்ளத்துடன் அர்ப்பணித்துக்கொண்டுள்ள சர்பபுதீனின் சேவைக்காகவாவது இறைவன் இவருக்கு நீண்ட ஆயுளை தந்தருளட்டும்.


Dinamalar 01/02/2014

Thursday, January 30, 2014

Contents of your suitcase

Contents of your suitcase

 

A man died, when he realized it, he saw God coming closer with a suitcase in his hand.

 

God said, “Alright son it’s time to go.”

 

Surprised the man responded, “Now? So soon? I had lot of plans..”

 

“I’m sorry but it’s time to go.”

 

“What do you have in that suitcase?” the man asked.

 

God answered, “Your belongings.”

 

“My belongings? You mean my things, my clothes and my money?”

 

God answered, “Those things were not yours they belonged to the earth.”

 

“Is it my memories?” the man asked.

 

God answered, “Those never belonged to you. They belonged to Time.”

 

“Is it my talents?”

 

God answered, “Those were never yours. They belonged to circumstances.”

 

“Is it my friends and family?”

 

God answered, “I’m sorry they were never yours. They belonged to the path.”

 

“Is it my wife and son?”

 

God answered, “They were never yours. They belonged to your heart.”

 

“Is it my body?”

 

God answered, “It was never yours. It belonged to the dust.”

 

“Is it my soul?”

 

God answered, “No, that’s mine.”

 

Full of fear, the man took the suitcase from God and opened it just to find out the suitcase was empty. With a tear coming down his cheek the man said, “I never had anything?”

 

God answered, “That is correct, every moment you lived were only yours. Life is just a moment. A moment that belongs to you.”

 

For this reason enjoy this time while you have it. Don’t let anything that you think you own stop you from doing so. Live now. Live your life. Don’t forget to be happy, that is the only thing that matters. Material things and everything else that you fought for stay here, you can’t take anything.

சந்தோஷமாகத் தொடங்கும் வாழ்க்கை இறுதி வரை இனிப்பாக இருப்பது இல்லையே... ஏன்?

ர் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் வாழ்க்கைப் பந்தம் உருவாவது திருமணத்தின்போதுதான் என்பது பலரின் கருத்து. ஆனால், திருமணச் சடங்குகள் முடிந்த பிறகு, முதல் இரவு வேளையில் 'இவன் நமக்கானவன்; இவள் நமக்கானவள், இனி வாழப்போகும் ஒவ்வொரு நொடியும், இனிமை மட்டுமே எங்களுக்குள் இருக்க வேண்டும்' என்ற ஓர் எண்ணம் வேர்விடும். அப்போது உருவாகும் பந்தம்தான், உண்மையிலேயே அந்தத் தம்பதியை மகிழ்ச்சியாக வாழவைக்கும். இப்படி சந்தோஷமாகத் தொடங்கும் வாழ்க்கை இறுதி வரை இனிப்பாக இருப்பது இல்லையே... ஏன்?

ஐந்து இலக்கத்தில் சம்பாதிக்கும் ஐ.டி. இளைஞன் அவன்; அதிர்ந்து பேசாதவன். அவளோ, இருக்கும் இடத்தைக் கலகலப்பாக்கிவிடும் அல்ட்ரா மாடர்ன் பெண். இருவரின் ஜாதகங்களையும் அலசி, பொருத்தங்கள் பார்த்தே திருமணம் செய்துவைத்தனர். முதல் இரண்டு மாதங்கள் நன்றாகவே போனது வாழ்க்கை. ஒருநாள், 'இன்னைக்குச் சீக்கிரம் வந்துடுங்க, வெளியே போறோம்... டின்னர் முடிச்சுட்டுத்தான் வீட்டுக்கு ரிட்டர்ன்' என்றாள் அவள். அலுவலகப் பணிகள் அழுத்தவே, அவன் சுத்தமாக மறந்துபோனான். போன் சைலன்ட் மோடில் இருந்ததால், மனைவியின் குறுஞ்செய்திகள், அழைப்புகள் எதையும் பார்க்கவில்லை. வீட்டுக்குக் கிளம்பியபோது போனைப் பார்த்தவன் அதிர்ந்து, மனைவிக்கு போன் செய்தான். முதல் முறை லாங் ரிங் போனது. இரண்டாவது முறை ஸ்விட்ச்டு ஆஃப்.

'சரி, சமாளிக்கலாம்' என வீட்டுக்கு வந்தவனிடம், சாமியாடிவிட்டாள். 'என்னைவிட உனக்கு வேலை முக்கியமா? என் சின்ன ஆசையைக்கூட நிவர்த்தி பண்ணமுடியாத நீயெல்லாம் ஒரு ஆம்பிளையா?' என்று அதிகம் பேசிவிட்டாள். பொறுத்துப் பார்த்தவன் 'பொளேர்' என அறைந்தான். 'நான் பேசுறதே எனக்குக் கேட்காத அளவுக்கு அமைதியானவன் நான். எனக்குன்னு வந்து வாச்சிருக்கியே...' என்று கத்திவிட்டுப் போய்விட்டான். அவள், கன்னத்தில் கைவைத்தபடி தூங்கியே போனாள். காலையில் அவன் சொல்லாமல் கொள்ளாமல் அலுவலகம் போய்விட்டான். 'நீ மட்டும்தான் இப்படிப் பண்ணுவியா... நானும் போறேன்' என்று அவள் அம்மா வீட்டுக்குப் போய்விட்டாள். இரண்டு குடும்பங்களும் சமாதானம் செய்துவைப்பதற்குப் பதிலாக ஆளாளுக்குத் தூண்டிவிட, இப்போது இருவரும் விவாகரத்துக்காக, கோர்ட் படி ஏறியிருக்கின்றனர்.

பெற்றோர் பார்த்து நிச்சயித்த திருமணத் தில் மட்டுமா... காதல் திருமணம் செய்தவர்களிலும் கணிசமானோர், விவாகரத்து கேட்டு விண்ணப்பிப்பதும் வினோதம்தான். இப்படிப் பிரச்னைகள் அதிகரிக்க என்ன காரணம்? ஆணும் - பெண்ணும் திருமண வயதை அடைந்துவிட்டாலும், மனதளவில் அவர்கள் தயாராக இருக்கிறார்களா என்பதைப் பெற்றோர் உறுதி செய்ய வேண்டும். கால்கட்டு போட்டால் எல்லாம் சரியாகிவிடும் என்று கல்யாணம் செய்துவைப்பதன் விளைவு, குடும்பத்தை நிர்வகிக்கத் தெரியாமல், சமூகத்தை எதிர்கொள்ள முடியாமல் பிரச்னை ஆரம்பமாகி, இறுதியில் அது தாம்பத்திய வாழ்க்கையையே நாசமாக்கிவிடுகிறது.

எல்லாப் பிரச்னைகளுக்கும் தாம்பத்தியம் தீர்வாகிவிடாது. ஆனால், தம்பதியராக இணைந்து பிரச்னைகளை எதிர்கொள்வதற்கு தாம்பத்தியம் ஏற்படுத்தும் பிணைப்பும், அது தரும் சக்தியும் அபாரமானது!

'தாம்பத்திய உறவு நல்லபடியாக இருந்தாலும், பிரச்னைக்குக் குறைவில்லை என்ன செய்வது?' என்று சிலர் கேட்கலாம். உங்கள் பிரச்னைகளை, நம்பிக்கைக்குரியவர்கள் தவிர மற்றவர்களிடம் சொல்லாதீர்கள். தாம்பத்திய உறவு சம்பந்தப்பட்டவற்றை மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்வது அமைதியைக் குலைத்துவிடும். இருவர் பக்கமும் சாராமல் பிரச்னைகளை அணுகக்கூடிய குடும்பநல ஆலோசகர்களிடம் வேண்டுமானால் சொல்லலாம்.

இருபாலருக்கும் வயசு ரொம்ப முக்கியம். நாம் திருமணம் செய்துகொண்ட பிறகு, அதற்குரிய கடமைகளில் நம்மை முழுமையாக ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும் என்கிற எண்ணம், அதைவிட மிக முக்கியம். எமோஷனல் மெச்சூரிட்டி கொண்டவர்கள் மட்டுமே, பிரச்னைகளைச் சுமுகமாகக் கையாள்வார்கள். இப்போது திருமணமான தம்பதிகளின் பிரச்னையின் மூலவேரை ஆராய்ந்தால், அது பொருளாதாரத்தின் தலையை முட்டிக்கொண்டு நிற்கும். எனவே, ஃபைனான்ஸ் மேனேஜ்மென்ட் மிக முக்கியம்.

 

தம்பதியர் உறவை புத்துணர்ச்சியாக்க...

செய்ய வேண்டியவை:

ஒருவரை ஒருவர் குற்றம் சுமத்திக்கொள்வதைக் கைவிட வேண்டும்.

ஒருவருடைய தனித் திறமைகளை, மற்றவர் மதிக்க வேண்டும்.

ஒருவர், ஒரு நல்ல காரியம் செய்யும்போது, மற்றவர் அவருக்கு ஆதரவாக இருந்து பாராட்ட வேண்டும்.

ஒருவருக்கொருவர் உண்மையாகவும் நேர்மையாகவும் இருக்க வேண்டும்.

வாரத்துக்கு இருமுறையாவது திருப்தியான தாம்பத்திய உறவு மிக முக்கியம்.

ஈகோவைக் கைவிடுவது மிக முக்கியம்.

உங்கள் பார்ட்னரின் தேவைகளுக்குக் காதுகொடுங்கள்.


செய்யக் கூடாதவை:


இறந்தகாலச் சம்பவங்களைக் கூடுமானவரை மறப்பது அவசியம்.

மற்றவர்களோடு உங்கள் வாழ்க்கைத் துணையை என்றைக்கும் ஒப்பிடக் கூடாது.

பொதுவெளியில் சண்டை போட்டுக்கொள்வதைத் தவிர்ப்பது நல்லது.

Wednesday, January 29, 2014

MAKING OF SAI BABA'S ORIGINAL IDOL AT SHIRDI

Making Of Sai Baba's Original Idol At Shirdi

Most of you must have visited Shirdi at least once and must have had the darshan of Sri Saibaba. 

The lively marble statue of BABA must have captured your heart and mind. 

You will be thrilled to know, how the statue was made and when it was installed at Shirdi.

For those, who don't know the real facts, please go through the appended note. 

Incidentally, i have received this note from the Grand-son of the sculpture, who gave life to the marble stone, which is what we all are worshipping today and he happens to be my neighbour in Dubai. 
He is a pious and highly successful professional but has all along maintained a low profile.

He is a personification of humility and simplicity.

He shared this info with me, after reading one of the inspirational messages of BABA that was read by him yesterday. 

Thought of sharing this original piece of information with you.

~~ 

MAKING OF SAI BABA'S ORIGINAL IDOL AT SHIRDI ~~

Sai Baba's Statue in Shirdi, which has become the most mesmerizing divine image of Baba,
was installed on 7th October`1954, Vijayadashami Day - 36 years after Baba's Mahasamadhi.


In 1952, a piece of a White Italian Marble had arrived from Italy at the Bombay Docks but for whom or why, nobody seemed to know anything about it. Thus, in the absence of a claimant, the dockyard authorities auctioned it off and the purchaser later offered it to the Shirdi Sai Sansthan.

Impressed by the quality of the Italian Marble, the Shirdi Sansthan planned to use it for an Idol of Sai Baba. So they gave Shri.Balaji Vasantrao Talim - a sculptor from Bombay, the humungous task of sculpting Baba's Idol. Meticulously, Shri.Balaji Talim got his tools 'made to order' from iron-smiths and carpenters. and started off by first making a Model of Baba using Mud Clay.


But it was difficult for Shri.Balaji Talim to make the statue in its exact likeness without the intricate details of the physical characteristic's of Baba's face, to profile which he only had Baba's one black & white photograph.

Therefore, he prayed saying "If Sri Sai Baba gives me darshan while making His Statue, the Statue will be worthy & the devotees also will have feelings of devotion".

And sure enough one early morning, around 07:00 am when Shri.Balaji entered his Studio, he saw a bright light even before he could switch on the Lights. 

Baba had appeared in the Light and given Darshan to him in the studio itself. Baba remarked on Talim's difficulties and showed him his Face from various angles, encouraging Talim to study it thoroughly and remember it well.

This gave Talim the fillip he needed and after that the work just flowed easily and the result exceeded all expectations. Shri.Balaji Talim testified about this to Sri Sai Narayan Baba, as to how Baba himself had directed the Sculpting of the Statue and how at every stage, he could very clearly hear the divine voice of Baba guiding him.

The Shirdi Sai Sansthan immediately approved this Mud Statue of Baba, on the basis of which the present Italian Marble Statue of Sai Baba was carved and installed in the Samadhi Shrine.

- SHRI B.V.TALIM SCULPTING BABA'S IDOL - 



 

~ A MIRACLE ~ 

In 1954, while working with his workers at the finishing stages of Sculpting the almost ready Marble Statue of Sai Baba, Shri.Balaji Talim found an Air Pocket in a small additional portion below the Left Knee of Baba's Statue, which had to be removed. It seemed dangerous, as in removing an Air Pocket from a Finished Statue, there was every risk of the entire portion coming down, thus leaving the Statue Khandit (Broken), which therefore could not be worshiped at all.

So the work stopped and Shri.Balaji Talim hesitated to strike and chisel out the additional portion. He feared that the entire Statue might get destroyed and all his labour & time would go waste.

He became nervous and prayed to Baba, "Baba have mercy on me. Your Murti is ready. Please Baba have mercy on me." Just then he then heard a voice within saying "Balaji, Carry on".

So Balaji instructed his workers to carry on and chisel out the additional portion, but the workers refused to do so fearing that the entire knee portion would just drop out.

Eventually & quite nervously, Shri.Balaji Talim took the chisel & hammer himself and while praying "Baba, help me" gave a small stroke,
touching the additional portion of the marble below the Left Knee.
And to his great surprise, only the additional portion of the marble came down leaving the rest of Baba's Statue intact. Seeing this, tears rolled down his eyes and he prostrated before Baba, started dancing and distributing sweets to all. As, he experienced such a wonderful miracle of Sai Baba.

The 5' 5" finished Idol of Sai Baba was taken throughout the village with pomp & ceremony. Baba's Idol was so Life like that devotees like Swami Sri Sai Saranananda & Laxmibai, who had personally been with Baba, felt as if Baba had come back alive in the form of his Idol.

- Laxmibai Shinde -



- Swami Sri Sai Saranananda -



On 7th October`1954, Vijayadasami Day, this lifelike Marble Statue of Sai Baba was installed on the platform of the Samadhi Shrine's western side behind Baba's Samadhi and the due formalities of Prana Pratistha were done by Swami Sri Sai Saranananda who had met Baba before His Mahasamadhi.

At the time of preparation of Baba's Statue, one day Baba gave Darshan to Shri.Balaji Talim and said, 
"Finish the work and you will not do any other Idol in future." 
So Talim did not prepare any other Idol since then 
and finally at the age of 82 on 25th December`1970 he breathed his last. 




- THE FIRST ORIGINAL IDOL OF SAI BABA -

 
- PLACE WHERE BABA GAVE DARSHAN TO TALIM - 

New-found Respect

New-found Respect


Once a sculpture in a village made a beautiful idol of a goddess and thought of selling it at a good price in the city. So he loaded the idol on his donkey and started towards the city. When he was going through the village, the villagers bowed in front of the idol as it looked like a real goddess. Whichever street he crossed, a crowd would bow in front of the idol. But a strange thing happened. The donkey, which was carrying the idol, thought that he was special and that was the reason why people were bowing to him. He was thrilled with his new-found respect.

 

Soon the sculpture returned after selling the idol. While he was crossing the village, the donkey stopped in the middle of the road, expecting a warm welcome. But nobody paid attention to him. The donkey felt insulted and started braying, so much so, that the villagers drove him away. The same mistake, what the donkey did, is what most of us do.

 

When we are on the divine path of self realization, with God’s grace, a glow enters our demeanor and we stand out of the crowd. People respect such persons and often bow in respect. But we should realize that people are bowing not to us but to the glimpse of God whom they realize resides within us. So the credit of this respect goes solely to God, not to us. If we start taking the credit, we cross the thin line of demarcation and enter in to an area of false ego, which God dislikes most.

Monday, January 27, 2014

பெண்களை வளைக்கும் ‘சைபர்’ வில்லன்கள்!

சென்னையைச் சேர்ந்த அந்த இளம்பெண், தன் சக அலுவலக நண்பருடன் எடுத்த புகைப்படங்களை எப்போதோ ஃபேஸ்புக்கில் போஸ்ட் செய்திருக்கிறார். ஒரு மாதத்துக்கு முன் அவருக்குத் திருமணம் நடந்திருக்கிறது. அதன் பிறகு, மனைவியின் ஃபேஸ்புக்கைப் பார்த்த கணவர், அந்த போட்டோவை பார்த்துக் கொந்தளித்திருக்கிறார். பிரச்னை முற்றிப்போக... அந்தப் பெண் தற்கொலை செய்துகொண்டார்.

கடலூர் மாவட்டம், பண்ருட்டியைச் சேர்ந்தவர் 29 வயது பரந்தாமன். இவருடைய மனைவி சத்யாவின் செல்போனில், தட்டாம்பாளையத்தைச் சேர்ந்த கரும்பு வெட்டும் தொழிலாளி ஸ்ரீதர், ஆபாச வார்த்தைகளைப் பேசித் தொந்தரவு செய்து வந்திருக்கிறார். கணவரிடம் சத்யா சொல்ல, உறவினர்களுடன் சென்று ஸ்ரீதரை எச்சரித்துள்ளனர். ஆனாலும், மாதக்கணக்காக தொல்லை தொடரவே போலீஸில் புகார் கொடுத்தனர். அப்போதும் தொல்லை ஓயாத நிலையில், ஒருகட்டத்தில் மனைவி மீதே பரந்தாமனுக்கு சந்தேகம் வந்துவிட்டது. ஜனவரி 17 அன்று பூச்சிக்கொல்லி விஷத்தைக் குடித்துத் தற்கொலை செய்துகொண்டு விட்டார். சத்யாவின் புகாரின் பேரில் தற்போது ஸ்ரீதரை தேடிக் கொண்டிருக்கிறது போலீஸ். ஒரு மகள் மற்றும் இரண்டு மகன்கள் என்று பிஞ்சுக் குழந்தைகளுடன் பரிதாபமாக நிற்கிறார் 25 வயது சத்யா!

மத்திய இணையமைச்சர் சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் சமீபத்தில் மர்மமான முறையில் இறந்திருக்கும் விஷயத்தில்கூட, தகவல் தொழில்நுட்பத்தின் கோரக் கரங்கள் படிந்திருக்கின்றன. 'ட்விட்டர்' மூலமாக கணவன், மனைவி மற்றும் கணவனின் புதுத்தோழி என்று வர்ணிக்கப்படும் பாகிஸ்தான் பெண் பத்திரிகையாளர் மெர் தரார் ஆகியோரிடையே நடந்த பகிரல்கள், மரணத்துக்கு முக்கிய காரணமாக வர்ணிக்கப்படுகிறது.

செல்போன், ஃபேஸ்புக், ட்விட்டர், இணைய பக்கங்கள் என்று தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி படுவேகமெடுத்து முன்னேறிக் கொண்டிருக்க, அதைவிட படுவேகமெடுத்துக் கொண்டிருக்கின்றன... இந்தத் தொழில்நுட்பங்களை வைத்து நடத்தப்படும் குற்றங்கள். அதற்கு ஒரு சோற்றுப் பதம்தான் மேற்கண்ட கொடூரச் செய்திகள். பல குடும்பங்களின் அமைதிக்கு, ஆப்பு வைத்துக் கொண்டிருக்கும் இதுபோன்ற விவகாரங்களால் பெரும்பான்மையாக பாதிக்கப்படுவது பெண்களே!

ஃபேஸ்புக் விவாகரத்து!

இதைப் பற்றி சில விஷயங்களை நம்மிடம் பகிர்ந்து கொண்டார், சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் அழகுராமன்.

''இன்றைய சூழலில் ஒரு பெண்ணைப் பற்றி முழுமையாகத் தெரிந்துகொள்ள வேண்டுமானால், அவரது ஃபேஸ்புக் பக்கத்துக்குச் சென்று ஃப்ரெண்ட் ஆனாலே போதும். 'தன் குடும்பம், தான் எங்கே குடியிருக்கிறேன்' என்பதில் ஆரம்பித்து, தினசரி நடவடிக்கைகள் வரை ஒன்று விடாமல் 'ஃப்ராங்க்'காகப் பகிர்ந்துகொள்கிறார்கள். தான் போட்ட 'போட்டோ' அல்லது 'போஸ்ட்'டுக்கு மற்றவர்கள் 'லைக்ஸ்' போடாமல் விட்டுவிட்டால்கூட, மன உளைச்சல் அடைகிற அளவுக்கு ஃபேஸ்புக் வியாதி, இளைய தலைமுறையை ஆட்டிப்படைக்கிறது.

முன்பெல்லாம் விவாகரத்துக்காக நீதிமன்றம் வரும் தம்பதிகள், போலீஸிடம் புகார் கொடுத்த நகல் அல்லது எஃப்.ஐ.ஆர் நகலைக் கொண்டு வருவார்கள். இன்றைக்கோ மனைவி/கணவர் ஃபேஸ்புக் பக்கத்தில் இருந்த புகைப்படத்தையோ, அவர்களது பதிவையோ பிரின்ட் எடுத்துக்கொண்டு வருகிறார்கள். நம்மிடம் சுயகட்டுப்பாடு இல்லாததே இதற்கெல்லாம் காரணம்'' என்று சுட்டிக்காட்டிய வழக்கறிஞர், சமீபத்திய விஷயங்கள் சிலவற்றைப் பகிர்ந்தார்.

''ஐ.டி. கம்பெனியில் பணிபுரியும் அந்தப் பெண், தன் அலுவலக டூரின்போது சக அலுவலர்களுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்திருக்கிறார். அதில் சக நண்பரின் கை, இந்தப் பெண்ணின் இடுப்பில் பட்டிருப்பது போல உள்ள புகைப்படத்தை, அவரது அலுவலக நண்பர்கள் ஃபேஸ்புக்கில் அப்லோட் செய்திருக்கிறார்கள். அந்த பெண்ணுக்கு நிச்சயதார்த்தம் நடந்த பிறகு, புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் பார்த்த மாப்பிள்ளை பையன், 'எனக்கு இந்தப் பெண் வேண்டாம்' என்று திருமணத்தை நிறுத்தியதோடு, அந்தப் பெண்ணைப் பற்றி மற்றவர்களிடமும் பகிர்ந்துகொள்ள... இதுவரை அந்தப் பெண்ணுக்கு திருமணம் நடக்கவேயில்லை.

'என் அம்மாவை கேவலமாகச் சித்திரித்து ஃபேஸ்புக்கில் எழுதியிருக்கிறாள் என் மனைவி. அதற்கு அவளுடைய நண்பர்கள் அடித்த கமென்ட்டைப் பாருங்கள்' என்று அனைத்தையும் அள்ளிக் கொண்டு வந்து காண்பித்ததோடு, விவாகரத்து வாங்கித் தாருங்கள் என்று வந்து நின்றார் ஒரு கணவர். எவ்வளவோ அறிவுரைகள் சொல்லியும் அவர் ஏற்றுக் கொள்ளவில்லை. தற்போது வழக்கு நடந்து கொண்டிருக்கிறது. குடும்ப விஷயம் என்பது கண்ணாடி போன்றது. அதை யார் யாரிடம் பகிர வேண்டும் என்ற வரைமுறை தெரியாமல் பொது சபையில் பகிர்வதால் வரும் வினைகள்தான் இவையெல்லாம்'' என்று ஆதங்கப்பட்டார், அழகுராமன்.

மூன்றாவது கண் வில்லன்கள்!

நமக்கே தெரியாமல், பொதுக் கழிவறைகள், ஹோட்டல்களின் படுக்கை அறை மற்றும் குளியல் அறைகள், பெரிய பெரிய துணிக்கடைகளின் டிரயல் ரூம்கள்... என பல இடங்களிலும் மூன்றாவது கண்ணாக கேமரா ஒளிந்திருப்பது சர்வசாதாரணமாகி விட்டது. இப்படி எடுக்கப்படும் பெண்களின் போட்டோக்களில் இருக்கும் தலையை வேறொரு நிர்வாண உருவத்துடன் பொருத்தி, அந்தப் பெண்ணின் வாழ்வைச் சீரழிக்கும் சைபர் குற்றவாளிகள் அதிகரித்துக் கொண்டுள்ளனர். எல்லோர் கைகளிலும் செல்போன்கள் இருப்பதால், பக்கத்து வீட்டு குளியல் அறை ஜன்னல் வழியாக அந்த வீட்டுப் பெண்களைத் தாறுமாறாக படம்பிடித்து, இணையங்களில் உலவவிடுவதும் அதிகரித்துள்ளது!

சைபர் குற்றங்களின் வீரியம் குறித்து சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் வே.பாலுவிடம் கேட்டபோது, ''மார்டன் உலகத்தில் செல்போன் வைத்திருப்பதை ஒரு கௌரவமாகவே கருதுகிறார்கள். அதிலும் கேமராவுடன் கூடிய உயர்ரக செல்போன்தான் பலருடைய சாய்ஸாக இருக்கிறது. எதைப் பார்த்தாலும் அதில் படம் பிடிக்க ஆரம்பித்துவிடுகிறார்கள். எதிர்பாராதவிதமாக நம் செல்போனை தொலைத்துவிட்டால் போதும்... குடும்ப விவரங்களிலிருந்து அந்தரங்கம் வரை அனைத்தும் அடுத்தவரால் திருடப்பட்டுவிடும். அதனால் செல்போனில் எப்போதும் ஒரு செக்யூரிட்டி பாஸ்வேர்டு போட்டு வைத்துக்கொள் வது மிகவும் நல்லது. மிஸ்டு கால் கொடுப்பதன் மூலமாகவும் பல குற்றங்கள் அரங்கேறிவிடுகின்றன. இந்த விஷயத்திலும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

குழந்தைகள் இன்றைக்கு எந்த சந்தேகம் வந்தாலும் கூகுளிடம்தான் கேட்கிறார்கள். தானாகவே வந்து விழும் சில இணைய பக்கங்கள், ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவர்களுக்கு அறிமுகம் செய்கிறது. அதனால் தயவு செய்து உங்களது கண்காணிப்பு இல்லாமல் இணையத்தில் குழந்தைகளை உலவ விடாதீர்கள்.

பாசக்கார கணவனால், மோசம் போகக்கூடும்!

நமக்குத் தெரியாமலே நம்மை சிக்க  வைக்கக் கூடிய வலிமை உள்ளவை இந்த சைபர் க்ரைம்கள். அல்லது, வலிய போய், அறியாமை காரணமாக நாமே சிக்கிக்கொள்வதும் நடந்துவிடும். பெரும்பாலான பெண்கள், தங்களுக்கு மிக நெருக்கமான ஆண்களாலேயே இதுமாதிரியான குற்றங்களில் சிக்கிக்  கொள்கிறார்கள். உதாரணத்துக்கு...  கணவ னும்  மனைவியும் நெருக்கமாக  இருப்பதை,  கணவரே செல்போன் மூலமாக படம்  எடுக்கிறார். அதை மனைவி தடுக்க நினைத்தால், 'உன் மீதுள்ள பாசத்தால்தான் எடுக் கிறேன். நீ வெளியூர் சென்றால், அந்த வீடியோவை பார்த்து உன் நினைவை ஆற்றிக் கொள்வேன்' என்றெல்லாம் பேசி, சமாளிப் பார் கணவர். இந்தப் பேச்சில் மயங்கி  மனைவியும் சம்மதித்துவிடுவாள்.

ரகசியமாகவே இருக்கும் இந்த வீடியோ... ஒருவேளை கணவரின் செல்போன் தொலைந் தாலோ, ரிப்பேருக்கு போனாலோ, அல்லது கணவன் - மனைவி இடையே மோதல் வந் தாலோ... ஏதாவது ஒரு வகையில் வெளியில் வந்து, மனைவியின் எதிர்காலத்தையே கேள்விக்குள்ளாக்கிவிடும்.

செல்போனில் பேசுவதிலும் கவனமாக  இருக்க வேண்டும். காதலர்கள் பேசிக்கொள் ளும் கொஞ்சலான உரையாடல்கள், கண வன் - மனைவி இடையேயான ரொமான்ஸ் பேச்சுக்கள் என பலவற்றையும், செல் போனில் இருக்கும் ரெக்கார்டு ஆப்ஷன் மூலமாக மிகச்சுலபத்தில் பதிவு செய்துவிட முடியும். அத்தகைய ஆபாச குரல் பதிவுகளை 'யூடியூப்'-ல் வெளியிட்டு, சம்பந்தப்பட்ட வரை அவமானப்படுத்தவும் மிரட்டவும்கூட வாய்ப்பிருக்கிறது.

சைபர் க்ரைமை பொறுத்தவரை நேரடியான தண்டனை காலம் குறைவுதான். சைபர் க்ரைம்களில் கொலை, கொள்ளை, கடத்தல் முதலியவற்றுக்குக் குற்றத்தின் அடிப்படையில் தண்டனை வழங்கப்படுகிறது. கையில் போன் இருக்கிறதே என்று வெளி யிடங்களில் யாரையாவது நாம் புகைப்படம் எடுத்தால், அதுவும்கூட நம்மை சைபர் க்ரைம் விஷயத்தில் சிக்க வைக்கும் அள வுக்குக் கொண்டு செல்லும் ஆபத்து காத் திருக்கிறது. எனவே, விழிப்போடு இருப்பது தான் புத்திசாலித்தனம்'' என்று எச்சரிக்கை செய்தார், வே.பாலு.

பொது இடங்களில் வரம்பு மீறாதீர்!

'இதுபோன்ற சூழலில் ஒரு பெண் எப்படி ஜாக்கிரதையாக நடந்துகொள்ள வேண்டும்' என்பதுபற்றி பேசிய ஓய்வுபெற்ற டி.ஜி.பி- யான திலகவதி ஐ.பி.எஸ்., ''ஆண் நண்பருடன் சேர்ந்து புகைப்படம் எடுக்க வேண்டிய சூழ்நிலை வந்தால், நெருக்கம் காண்பிக்காத அளவுக்கு 'ஃப்ரெண்ட்லி'யாக போஸ் கொடுங்கள். ஆண் நண்பர்களுடன் வெளியில் செல்லும்போது, 'நம்மை யாரும் கவனிக்கவில்லை' என்று நினைத்து, வரம்பு மீறி புகைப்படம் எடுப்பதோ அல்லது போஸ் கொடுப்பதோ வேண்டவே வேண்டாம். இன்றைக்கு எல்லோரது கைகளிலும் கேமரா செல்போன்கள் தவழ்கின்றன. 'நமக்கே தெரியாம நம்மை இஷ்டத்துக்கு படம் எடுக்க மற்றவர்களால் முடியும்' என்பதால், பொது இடங்களில் ஆடைகளில் கவனமாக இருங்கள். அதேபோல, வெளியிலோ அல்லது ஹோட்டல்களுக்கோ செல்லும்போது, உங்கள் மீது தேவையில்லாமல் ஃப்ளாஷ் ஒளி பட்டால், தைரியமாக விசாரணையில் இறங்கி சந்தேகப்படுபவர்களின் கேமராவை செக் செய்துவிடுங்கள். இதையெல்லாம் மீறி ஏதாவது ஒரு புகைப்படம் காரணமாக நீங்கள் பிரச்னையை சந்திக்க நேர்ந்தால், அஞ்சாமல் எதிர்த்துப் போராடுங்கள். அதைவிட்டு மனம் உடைவதோ... தற்கொலை எண்ணங்களை ஏற்படுத்திக் கொள்வதோ முட்டாள்தனமானது'' என்றார், அழுத்தமாக.

துவள வைத்த தோழி!

சைபர் குற்றங்கள் பற்றி பேசிய மதுரை எஸ்.பி-யான பாலகிருஷ்ணன், ''இன்டர்நெட், ஃபேஸ்புக், எஸ்.எம்.எஸ் போன்றவற்றில் நடக்கும் குற்றங்கள் மட்டும் சைபர் குற்றங்கள் இல்லை. எலெக்ட்ரானிக்ஸ் சம்பந்தப்பட்ட அனைத்து குற்றங்களும் சைபர் குற்றங்களையே சாரும். ஸ்கைப், வாய்ஸ் சாட், இன்டர்நெட் சாட்... என பெண்களிடம் சாட் செய்வதோடு ரெக்கார்ட் செய்துகொண்டு, அந்தரங்கமான பேச்சுக்களையும், அந்தரங்க உறுப்புகளையும் படம்பிடித்து வேறொரு படத்துடன் சேர்த்து வெளியிடுவது; ஆபாசமாக எஸ்.எம்.எஸ் அனுப்புவது; பொது இடங்களில் பெண்களுக்கு தெரியாமல், அவர்களைப் படம் எடுப்பது/ வெளியிடுவது... போன்றவையும் சைபர் குற்றங்களே.

மதுரையில் உள்ள பிரபலமான கல்லூரியில் படிக்கும் மாணவி ஒருவர், தனது புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் பயன்படுத்தியுள்ளார். அந்தப் புகைப்படத்தை எடுத்த சைபர் க்ரைம் குற்றவாளிகள், 'இவர் கால் கேர்ள்' என குறிப்பிட்டு அந்த பெண்ணின் செல் போன் எண்ணையும் கொடுத்துவிட்டனர். இது தொடர்பாக நாங்கள் விசாரித்து பார்த்ததில், 'அந்த மாணவியுடன் படிக்கும் தோழிதான் குற்றவாளி' என்பதைக் கண்டுபிடித்தோம். அவர்களுக்கு இடையிலான பிரச்னையில் இதுபோன்று செய்துவிட்டதாக அந்தத் தோழி வாக்குமூலம் கொடுக்க, அதிர்ந்து போனோம்'' என்று சொன்ன பால கிருஷ்ணன், அடுத்து சொன்னது பேரதிர்ச்சி!

வில்லனாக மாறிய தோழியின் கணவன்!

''தான் குளிக்கும் வீடியோ, 'யூடியூப்'-பில் உலவிக் கொண்டிருப்பதாக ஒரு பெண் பத றிக் கொண்டு எங்களிடம் ஓடி வந்தார். களத் தில் இறங்கி விசாரித்தபோது எங்களுக்கே பலத்த அதிர்ச்சி. அந்தப் பெண், தன் தோழி வீட்டுக்குச் சென்றிருக்கிறார். அங்கே குளித் திருக்கிறார். அப்போது 'டூத் பிரஷ் மைக்ரோ கேமரா' மூலம், தோழியின் கணவனே படம் பிடித்து, 'யூ டியூப்'-ல் உலவ விட்டிருக்கிறான். பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரின் பேரில், தோழியின் கணவன் கைது செய்யப் பட்டு... அவனுடைய செல்போனில் இருந்த அந்த வீடியோ பதிவு அழிக்கப்பட்டதுடன், இணையத்திலிருந்தும் நீக்கப்பட்டது.

இதிலிருந்து பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான விஷயம்... குற்றங்கள் எங்கே, எப்போது, எப்படியெல்லாம் நடக்கும் என்பதை யாருமே யூகிக்க முடியாது என் பதைத்தான். ஆம், கூட இருந்து கொண்டே அத்தனையும் செய்வார்கள். சொந்த வீட்டி லேயே வெகு ஜாக்கிரதையாக வாழ வேண் டும் என்கிற அளவுக்கு நெருக்கடிகள் முற்றிக் கொண்டிருக்கும் இந்தக் காலகட்டத்தில், வெளியிடங்களுக்குப் போகும்போது, இரு நூறு சதவிகித பாதுகாப்பு உணர்ச்சியுடன் செயல்படுவது நல்லது'' என்று அக்கறை பொங்கச் சொன்னார்!


தமிழகத்துக்கு 2வது இடம்!

தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம், கடந்த ஆண்டு வெளியிட்டுள்ள தகவலின்படி, நாடு முழுக்க 86 கோடியே 16 லட்சம் செல்போன் இணைப்புகள் பயன்பாட்டில் உள்ளன. உத்தரப்பிரதேசம் 12.16 கோடி என்ற எண்ணிக்கையுடன் முதலிடத்திலும், 7.18 கோடி என்ற எண்ணிக்கையுடன் தமிழகம் இரண்டாவது இடத்திலும் இருக்கிறது

சமீபத்தில் வெளியான மற்றொரு புள்ளிவிவரத்தின்படி, 'இந்தியாவில் மட்டும் செல்போன்கள் மூலம் இணையதளம் பயன்படுத்து வோர் எண்ணிக்கை வருகிற மார்ச் மாதத்துக்குள் 15 கோடியே 50 லட்சமாக உயரும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

'உடனடி நடவடிக்கை அவசியம்!'

சைபர் வில்லன்களிடம் சிக்காமலிருக்க, மதுரை எஸ்.பி. பாலகிருஷ்ணன் தரும் டிப்ஸ்...

ஃபேஸ்புக்கில் பெண்கள் புகைப்படங்களைப் போடுவதை கூடுமானவரை தவிர்க்க வேண்டும். செல்போனில் வேண்டாத, பெயர் தெரியாத அழைப்புகள் வந்தால், வீட்டில் உள்ள பெரியவர்களிடம் கொடுத்துப் பேச வைக்க வேண்டும். ஃபேஸ்புக்கில் முகம் தெரியாத நபர்கள் நட்பு கோரிக்கை எழுப்பினால் ஏற்றுக்கொள்ளக் கூடாது.

  ஃபேஸ்புக்கில் நடக்கும் குற்றங்கள் குறித்து ஃபேஸ்புக்கில் 'ரிப்போர்ட்' பகுதியில் 'க்ளிக்' செய்து புகார் தந்தால், உடனே ஃபேஸ்புக் நிர்வாகத்தினர், அருகில் இருக்கும் காவல்நிலையத்துக்கு உங்கள் புகாரை பரிந்துரை செய்வார்கள். நாங்கள் துரிதமாக நடவடிக்கை எடுப்போம். 'தமிழக காவல்துறை' என்ற வெப்சைட்டில் புகார் கொடுத்தால், உங்களைப் பற்றிய தகவல்களை ரகசியமாக வைத்துக்கொண்டு குற்றவாளிகளைக் கண்டுபிடித்து தண்டனை வாங்கித்தருவோம்.

 செல்போன், எம்.எம்.எஸ்., எஸ்.எம்.எஸ்., ட்விட்டர், இணைய பக்கங்கள் என்று எந்த ரூபத்தில் உங்களுக்குத் தொந்தரவுகள் வந்தாலும், அதைப் பற்றி உடனடியாக உரிய வகையில் நடவடிக்கைக்கு உட்படுத்துங்கள். அதைவிடுத்து, 'தானாகவே சரியாகிவிடும்' என்று நினைத்தால், அதுவே எதிரிக்கு இடம் கொடுத்தது போலாகிவிடும். பிறகு, அதிலிருந்து விடுபடுவதற்குள் போதும்போதும் என்றாகிவிடும்.


பெண்களே... மிகவும் கவனமாக இருங்கள்!

 உங்களது ஒவ்வொரு அசைவையும் புகைப்படம் எடுக்க ஒரு கூட்டமே திரிகிறது என்பதை மறவாதீர்கள். பொது இடங்களில் நடக்கும்போதுகூட உங்களைப் புகைப்படம் எடுத்து, அதை இணையத்தில் உலவவிடும் நாசக்காரர்கள் இருக்கிறார்கள். பசியால் அழும் பிள்ளைக்கு பால்கொடுக்கும் தாயைக்கூட இந்தச் சதிகாரர்கள் விட்டுவைப்பதில்லை. மறைந்து நின்று புகைப்படம் எடுத்து அட்டூழியம் செய்கிறார்கள்.  

 'ஒரு போன் செய்துவிட்டு தருகிறேன்' என்று உங்களது கைபேசியை அறிமுகம் இல்லாத நபர்கள் கேட்டால், தரவே தராதீர்கள். தெரிந்தவர்களாக இருந்தால், அவர்கள் போன் பேசத்தான் அதை வாங்கினார்களா என்பதை உறுதிபடுத்திக் கொள்ளுங்கள். உங்களிடம் இருந்து கைமாறிய நொடிகளில்கூட உங்கள் போனை வைத்து, வில்லங்கங்களை விலைக்கு வாங்கித் தந்துவிடுவார்கள்.

 செல்போனை ரிப்பேருக்கு கொடுக்கும் போது, மறக்காமல் புகைப்படங்களை அழித்து விடுங்கள். மெமரி கார்டை அகற்றிவிட்டு கொடுங்கள். கான்டாக்டில் இருக்கும் எண்களை யும் கூட கணினியில் சேமித்துக் கொண்டு, செல் போனில் இருந்து அகற்றிவிட்டே கொடுங்கள்.

 முன்பின் தெரியாதவர்களை ஃபேஸ்புக் நண்பர்கள் பட்டியலில் இணைக்காதீர்கள். முடிந்தவரை பிரச்னைகள் எழக் காரணமாக தெரியும் நபர்களை, நண்பர்கள் பட்டியலில் இருந்து நீக்கிவிடுவது நல்லது. ஃபேஸ்புக்கில் ஒவ்வொருமுறை எழுதும்போதும் கவனமாக எழுதுங்கள். உங்களது எழுத்தே உங்களை சிக்க வைக்கும் வாய்ப்பை ஏற்படுத்திவிடக்கூடும் ஜாக்கிரதை!


தண்டனைகள் பலவிதம்..!

சைபர் க்ரைம் தொடர்பான குற்றங்களுக்காக போலீஸ் வழக்குப் பதிவுசெய்து கைது செய்தால், ஐ.டி சட்டம் 2008-ன் படி மூன்று ஆண்டுகள் முதல், ஆயுள் வரை தண்டனையாக வழங்கப்படும். ஒரு லட்சம் ரூபாய் முதல் ஐந்து லட்ச ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்படும். இவர்களில் ஆபாசமாக மெசேஜ் அனுப்புவது, ஆபாசமாக போட்டோ வெளியிடுவது, ஆபாச வீடியோ காட்சிகளை வெளியிடுவது, குழந்தைகள் தொடர்பான ஆபாசப் படங்களை வெளியிடுவது, ஆண் - பெண் இருவரின் உடல்பாகங்களை சட்டவிரோதமாக பயன்படுத்தி வெளியிடுவது உள்ளிட்ட குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டால், அவர்கள் ஜாமீனில் வரமுடியாத சட்டங்களின்படி கைது செய்யப்படுவார்கள்.

சென்னையில் கடந்த ஆண்டு 1,472 சைபர் க்ரைம் புகார்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இதில் 27 புகார்கள் வழக்குப் பதிவு செய்யப்பட்டும், 35 குற்றவாளிகள் கைதும் செய்யப்பட்டும் உள்ளனர். இந்தியா முழுவதும் ஓர் ஆண்டுக்கு சைபர் க்ரைம் சம்பவங்களில் வெறும் 21% அளவுக்குத்தான் புகார்களாக காவல் நிலையங்களில் பதிவாகின்றன. இந்தியாவில், இன்டர்நெட் மோசடிகள் மூலமாக, ஆண்டுக்கு 5 பில்லியன் டாலர் அளவுக்கு பண மோசடிகள் நடக்கின்றன.

எப்படி புகார் செய்வது?

சைபர் க்ரைம் தொடர்பான புகார்களை, சென்னையைப் பொறுத்தவரை மாநகர போலீஸ் கமிஷனரிடம் நேரடியாகவும், நேரில் செல்ல இயலாதவர்கள் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் தொலைபேசி எண்கள் மூலமாகவும், மெயில் ஐ.டி வழியாகவும் தெரிவிக்கலாம். தவிர, தமிழகத்தின் அனைத்து உள்ளூர் காவல் நிலையங்களிலும் சைபர் க்ரைம் புகார்களை உடனுக்குடன் தெரிவிக்கலாம்.  

எஸ்.எம்.எஸ் : 95000 99100; போன் : 044 - 23452350; இ-மெயில் முகவரி:  cop@vsnl.net.


அதிர்ச்சிப் புகைப்படம்!

'சன் டிடெக்டிவ் ஏஜென்சி' எனும் அமைப்பை நடத்தி வரும் தடயவியல் சிறப்பு நிபுணர் வரதராஜன், சொன்ன ஒரு தகவல், அதிர வைப்பதாக இருந்தது. ''சில மாதங்களுக்கு முன் டெல்லியில் ஒரு பள்ளி ஆசிரியையின் நிர்வாணப் புகைப்படம் நெட்டில் உலவி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உடனே அந்த ஆசிரியை போலீஸில் புகார் கொடுத்தார். அவர்கள் எங்களிடம் அதை ஒப்படைத்தார்கள். பலவித பிரயத்தனங்களுக்குப் பிறகு, அந்த ஆசிரியையிடம் படிக்கும் 8-ம் வகுப்பு மாணவன்தான் குற்றவாளி என்பதைக் கண்டுபிடித்தோம். வீட்டுப்பாடம் செய்யவில்லை என்று அந்த மாணவனை திட்டியிருக்கிறார் ஆசிரியை. கோபமடைந்த மாணவன் வகுப்பில் ஆசிரியை பாடம் நடத்தும்போதே கையில் வைத்திருந்த செல்போன் மூலம் அவரைப் புகைப்படம் எடுத்திருக்கிறான். தொழில்நுட்ப யுக்திகளைக் கையாண்டு, வேறொரு நிர்வாணப் படத்துடன் 'மார்ஃபிங்' செய்து, ஆசிரியையின் முகத்தை அதில் பொருத்தி நெட்டில் உலவ விட்டிருக்கிறான்'' என்று சொன்ன வரதராஜன்,

''இதுபோன்று நாடெங்கிலும் பல்வேறு சம்பவங்கள் தினந்தோறும் நடந்துகொண்டு இருக்கிறது. அதனால் புகைப்பட விஷயத்தில் ஒவ்வொருவரும், குறிப்பாக, பெண்கள் கவனமாக இருக்க வேண்டியது மிக அவசியம். அதேசமயம், இதுபோன்ற புகார்களுக்கு உடனடியாக குற்றவாளியைக் கண்டுபிடிக்கும் வசதிகளும், அதற்கு போதுமான நிபுணர்களும் தமிழகத்தில் இல்லை என்பது வருத்தமான விஷயம். அரசாங்கம் உடனடியாக திறமைவாய்ந்த நிபுணர்களைப் பணியமர்த்த வேண்டும். அப்போதுதான் குற்றங்கள் உடனுக்குடன் கண்டறியப்பட்டு, தண்டனைகள் வழங்க முடியும். இதன் மூலமாக மேற்கொண்டு குற்றங்கள் நடப்பதையும் குறைக்க முடியும்'' என்று சொன்னார்.


இந்தியா 2வது இடம்!

மூக வலைதளமான ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட வலைதளங்களை உலகெங்கிலும் உள்ள 60-க்கும் மேற்பட்ட நாட்டினர் பரவலாக பயன் படுத்துகின்றனர். இதில், 92 மில்லியன் (7.73%) பயன்பாட்டாளர்களுடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறது இந்தியா.

17 வயது மற்றும் அதற்கு கீழ் : 11%

18-24 வயதினர் : 50%

25-34 வயதினர் : 28%

35-44 வயதினர் : 6.6%  

45-54 வயதினர் :  2.2%

55 வயது மற்றும் அதற்கு மேல் 2.2%

இவர்களில் 75 சதவிகிதத்தினருக்கும் அதிக மானோர், ஆண்களே என்பது, பெண்கள் குறித்து வைத்துக்கொள்ள வேண்டிய விஷயமாகும்!

Sunday, January 26, 2014

Children's educational web site


Enchanted Learning® produces children's educational web sites which are designed to capture the imagination while maximizing creativity, learning, and enjoyment.
Ease of use is a hallmark of our material. Children need the clearest, simplest computer interface, and our material is created so that the navigation and controls are intuitive. Our mission is to produce the best educational material, emphasizing creativity and the pure enjoyment of learning.
காடு மற்றும் வீடுகளில் வாழும் அல்லது வளர்க்கப்படும் மிருகங்களை எப்படி ஆங்கிலத்தில் அழைப்பது? இந்த சந்தேகம் இது குறித்து எழுதுபவர்களுக்கும், படிப்பவர்களுக்கும் ஏற்படுவது உண்டு. எடுத்துக் காட்டாக, ஆடு ஒன்றை எப்படி ஆங்கிலத்தில் அழைப்பது - goat/sheep எது சரி?

பெண் ஆட்டிற்கான சொல் என்ன? ஆடுகள் கூட்டமாக இருந்தால் அதனை எப்படிக் குறிப்பிடுவது? குட்டி ஆட்டினை எந்தப் பெயர் சொல்லி அழைப்பது?
டிக்ஷனரியைப் புரட்டினாலும், அதற்கான ஏதேனும் ஒரு பெயர் தெரியாமல் கண்டறிவது கஷ்டமல்லவா? இந்த வகையில் உதவி செய்திட ஓர் இணைய தளம் உள்ளது. அதன் முகவரி  http://www.enchantedlearning.com/subjects/animals/Animalbabies.shtml. இந்த தளத்தில் நுழைந்தவுடன், அகரவரிசையில் மிருகங்களின் பெயர்ப்பட்டியல் காணப்படுகிறது. அதன் அருகிலேயே Animal, Male, Female, Baby, and Group எனப் பட்டியல் வரிசை தரப்பட்டு அதன் பெயர்கள் தரப்பட்டுள்ளன. ஏதேனும் ஒரு மிருகம் குறித்து மேலும் கூடுதல் தகவல்கள் அறிய வேண்டுமானால், மிருகத்தின் பெயரில் கிளிக் செய்தால், இன்னொரு தளத்திற்கு நீங்கள் எடுத்துச் செல்லப்படுவீர்கள். அதில் பலவகையான தகவல்களைப் பெறலாம். 

எடுத்துக்காட்டாக, ஆடு குறித்து அறிய goat என்னும் பெயரில் கிளிக் செய்த போது, பத்தாயிரம் ஆண்டுகளாகத்தான் ஆடு, வீட்டில் வளர்க்கப்படும் பிராணியாக மாறியது என்ற தகவல் கிடைக்கிறது. காடுகளில் இவை வளர்ந்தால் 12 ஆண்டுகள் வரை வாழும் என்ற உண்மையும், ஆண் மற்றும் பெண் ஆகிய இரண்டு ஆடுகளுக்கும் கொம்பு மற்றும் தாடி உண்டென்றும் அறியப்படுகிறது.
இப்படியே பல தகவல்கள் நமக்கு அதிசயத்தக்க வகையில் கிடைக்கின்றன. குழந்தைகளை இந்த தளத்திற்குப் பழக்கிவிடுங்கள். பல கூடுதல் தகவல்களை அவர்களாகவே அறிந்து கொள்வார்கள். நீங்களும் அறிந்து கொள்ளலாம்

Saturday, January 25, 2014

ஆனந்தம் நமக்குள்ளேயே இருப்பது தெரியாமல் தேடிக்கொண்டு இருக்கிறோம்!

''ஹலோ சார், எப்படி இருக்கீங்க?''

- இந்தக் கேள்விக்கு மூன்று விதமான பதில்கள் புழக்கத்தில் உள்ளன.

''நல்லா இருக்கேன்...'' என்று 'நல்லா'வுக்கு அழுத்தம் தந்து பதில் அளித்துப் பல் இளிப்பர் சிலர்.

''ஆண்டவன் புண்ணியத்துல ஆனந்தமா இருக்கேன் சார்...'' என்று ஒரு சிலர் சொல்லும்போது, அவர்கள் 'குறையன்றும் இல்லை...' பாடுவது போலிருக்கும்.

வேறு சில பிரகஸ்பதிகள் உண்டு. எந்நாளும் நான்கு நாள் தாடியுடன் காணப்படும் இவர்கள், எந்நேரமும் முகத்தைத் தொங்கப் போட்டுக்கொண்டு நிரந்தர சோகத்துடன் திரிவர். எப்போது நலம் விசாரித்தாலும், ''ம்... என்னத்தச் சொல்றது! என்னமோ இருக்கேன், போங்க! ஏதோ வண்டி ஓடிட்டிருக்கு!'' என்பதுதான் இவர்களின் பதிலாக இருக்கும்.

பங்களா, பகட்டு வாழ்க்கை, பர்ஸ் நிறையப் பணம்... இவை மட்டுமே பலரின் சந்தோஷத்துக்கான அடையாளங்களாக உள்ளன. இவற்றில் எது ஒன்றில் சிறிது குறைவு தென்பட்டாலும், வாழ்க்கையே போச்சு என்பதான முடிவுக்கு இவர்கள் வந்துவிடுவார்கள்.

சரி, இவை சந்தோஷ அடையாளங்கள் இல்லை எனில், ஆனந்தம் கிடைப்பதுதான் எங்கே? இதோ, சுவாமி பார்த்தசாரதி சொன்ன ஒரு குட்டிக்கதையைக் கேளுங்கள்.

ரயிலில் இருவர் பயணம் செய்கிறார்கள். ஒருவர், பணக்கார வியாபாரி; மற்றவன் திருடன். தன் பையிலிருந்து கத்தை கத்தையாக ரூபாய் நோட்டுகளை எடுத்து, எண்ணுவதற்கு ஆரம்பித்தார் வியாபாரி. திருடனுக்குக் குறுகுறுவென்று இருந்தது. பணத்தில் நாட்டமில்லாத யோக்கியன் போல் எழுந்து, பாத்ரூம் பக்கம் போனான் அந்த பலே திருடன். அவன் திரும்பியதும், வியாபாரி ஒரு நடை டாய்லெட் பக்கம் சென்று வந்தார்.

வந்தவர், ஒரு புன்னகையோடு திருடனுக்கு குட் நைட் சொல்லிவிட்டுப் படுத்துக்கொண்டார். அவர் நன்கு தூங்கட்டும் என்று அந்தத் திருடன் காத்திருந்தான். கம்பார்ட்மென்ட்டே உறக்கத்தில் ஆழ்ந்திருந்த நேரத்தில் மெள்ள எழுந்து, அந்த வியாபாரின் பெட்டி, பைகளைக் குடைந்தான் திருடன். பணத்தைக் காணவில்லை. இடுப்பில் முடிந்து வைத்திருக்கிறாரா என்றும் நைஸாகத் தடவி ஆராய்ந்தான். இல்லை. அத்தனை பணமும் எங்கேதான் மாயமாகிப் போனது?

இரவு முழுவதும் திருடனுக்குத் தூக்கம் வரவில்லை. வியாபாரி குறட்டை விட்டுத் தூங்கிக்கொண்டு இருந்தார்.

விடிந்தது. தூங்கி எழுந்த வியாபாரி, கொட்டக் கொட்டக் கண்விழித்தபடி உட்கார்ந்திருந்த திருடனுக்கு ஒரு ஹாய் சொல்லிவிட்டு, அவனது தலையணைக்கு அடியில் கைவிட்டு, பணத்தைச் சுற்றி வைத்திருந்த தனது மஞ்சள் பையை எடுத்துக்கொண்டார். 'ராத்திரி பூராவும் என் பணத்தைப் பத்திரமாக வைத்திருந்ததற்கு தேங்க்ஸ்!' என்றார்.  

இந்தத் திருடனைப் போலத்தான் நாமும், ஆனந்தம் நமக்குள்ளேயே இருப்பது தெரியாமல், வெளியே எல்லா இடங்களிலும் தேடிக்கொண்டு இருக்கிறோம்!

Monday, January 20, 2014

Beware of Receiving Registered Letters - Do Not Sign

REGISTERED LETTERS.. DO NOT SIGN…

Something to ponder about when receiving registered letter.

How often do we take the trouble of opening the letter before signing the Registered AD (Acknowledgement Due) Letter acknowledgement slip?

Read to find out more.... in future be cautious.  

Open letters BEFORE signing to acknowledge receipt of the Registered AD (Acknowledgement Due) Letter..!!!

Folks, the next time the postman or courier guy comes to deliver a Registered AD (Acknowledgement Due) Letter, a Certificate Of Posting Letter or Parcel, do the following:

a) Check who is it from..??

b) If you do not know the source, reject it.

If you accept it without knowing the source, the following has happened and can happen to you too…

There have been cases where lawyers have done the following:

a) Mailed empty / sealed Registered AD (Acknowledgement Due) Letter to people on behalf of their clients for some court case matter.

b) The Registered AD (Acknowledgement Due) Letter either, consisted of brochures promoting sale of new real estate or some car model or just an empty A-4 size paper inside.

In normal circumstances, when one receives an empty letter or junk mail, they will just tear it up and throw it away,

 BUT, here lies the danger:

a) You signed the Registered AD (Acknowledgement Due) Letter acknowledgement card and it is returned to the law firm. That signed Registered AD (Acknowledgement Due) Letter acknowledgement card is proof that a letter was delivered and confirms the delivery and can/will be used against you in court.

b) Same applies to the so very convenient "CERTIFICATE OF POSTING" mail.

When the grace period for you to respond is over, they quietly go to court and show proof that a Registered AD (Acknowledgement Due) Letter was sent to you as a reminder and you did not bother to defend it and thus convince the court officials and get a judgment against you.

 

Next another Registered AD (Acknowledgement Due) Letter is sent to you asking for damages approved by the court, or just another empty envelope and you discard it once more and this time the white collar crook will go to the court quietly and seek the assistance of the court to seal/attach your property to recover the amount awarded by the court and soon the court bailiff will be at your door step to execute the order.

What happens next..?

You frantically call your relatives in disbelief and seek legal advice. You are lost not knowing what's happening.

Anxiety, stress, palpitation, sleepless nights cannot be compensated as this is a reality check. You engage a lawyer's firm; spend a many thousand rupees for paper work and an appeal to the higher court to set aside this matter… and also spend several days in court trying to prove your innocence.

What are your rights?

a) You have every right to reject any mail / parcel that comes from unknown sources, be it a debt collection company, law firm or some individual.

b) You have every right to ask the postman or the person delivering it to open the mail and let you see what is inside and the contents of the letter.

c) REJECT IT if you are not comfortable… or ask them to deliver to a law firm that you know.

d) If you have inadvertently signed and collected the empty Registered AD (Acknowledgement Due) Letter/mail, lodge a police report and also report to the bar council… as this will help in your case to protect you… if the matter goes to court.

Eye opener isn't it, crime is no longer just house break-ins and snatch thefts where most of the thieves get a few hundred rupees… BUT these days, the crooks come dressed in suits, so be aware and be smart… or you will end up spending thousands of rupees, many hours spent travelling to court or to your lawyers office, not forgetting the stress, anxiety, sleepless nights, etc.

Do inform ALL your family members  and staffs of your firm.

NOT TO SIGN ON BEHALF OF ANYONE… let the postman leave a card, go check at the post office, ask the postman to open and show you what is inside the envelope… or lastly… if you are not comfortable, just reject it… BUT DON'T SIGN WITHOUT KNOWING WHAT IS INSIDE…!!