Tuesday, September 25, 2012

வசதிகள் இருந்தும் இல்லாததை இலக்கு வைத்து நகரும் மென்டாலிட்டி

'வாழ்க்கை என்பது ஒருமுறைதான். அதை அனுபவித்து வாழ வேண்டும்' என்று நினைப்பவள் நான். ஆனாலும், ஒவ்வொரு கட்டத்திலும் குடும்பக் கடமைகளும், உறவுப் பொறுப்புகளும் அழுத்த... ரசிக்க நேரமின்றி நகர்ந்து கொண்டேதான் இருந்தன நாட்கள். அதிலும் வயது ஏற ஏற, வாழ்க்கையின் பக்கங்களை சுவாரசியமாகப் புரட்ட இயலாமல் இருப்பது... மனதின் ஒரு மூலையில் வருத்தத்தை வழிய வைத்துக் கொண்டேதான் இருந்தது!


இந்நிலையில்... மூன்று மாதங்களுக்கு முன், எங்கள் வீட்டின் எதிரே திறந்த வெளியில் புதிதாக குடியமர்ந்த விளிம்புநிலை மனிதர்கள், 'வாழ்க்கை வாழ்வதற்கே' என்கிற சின்ன, பெரிய பாடத்தை எனக்குப் புரிய வைத்து... தெளியவும் வைத்துவிட்டனர்!


புதுச்சேரியைச் சேர்ந்த நான் ஓர் இல்லத்தரசி. ஒரே மகன், மருத்துவம் இரண்டாம் வருடம் படித்துக் கொண்டிருக்கிறான். கணவர் வி.ஆர்.எஸ். வாங்கிவிட்டார். வசதிக்கும் சந்தோஷத்துக்கும் குறைவில்லாத குடும்பம். ஆனாலும், 'மகன் எம்.எஸ் படிக்கணும்னு சொல்றான்... அதுக்கு ஒண்ணரை கோடி செலவாகுமே', 'அவன் படிப்பை முடிச்சதும்... ஹாஸ்பிட்டல், வீடுனு வசதி செய்து கொடுக்கணுமே...' என்று எப்போதும் மனதுக்குள் கணக்குகளும் குழப்பங்களுமாக குடியமர்ந்துகொண்டிருக்கும்.




நான் மட்டுமல்ல... எங்கள் தெருவில் இருக்கும் அத்தனை பேரும் வசதியானவர்கள்தான். என்றாலும், புது கார், வீடு, ஃபேக்டரி, புரமோஷன் என்று ஏதாவது ஒரு கமிட்மென்ட்டில் சிக்கி, சதாசர்வமும் அந்த யோசனையாகவே இருப்பார்கள். இன்னும் தெளிவாகச் சொன்னால், தேவைக்கு மேலேயே வசதிகள் இருந்தும், இல்லாததை இலக்கு வைத்து நகரும் அப்பர் கிளாஸ் மென்டாலிட்டி! என் இந்த மனநிலை, இம்மனிதர்களின் வரவால் இப்போது அடியோடு மாறியிருக்கிறது.


மூன்று மாதங்களுக்கு முன்பு ஒரு நாள் அதிகாலை வேளையில், எங்கள் வீட்டுக்கு அருகே இருந்த இடத்தை பரபரப்பாக சுத்தம் செய்த சில குடும்பங்கள், அழகாக டென்ட் அமைத்து, அவற்றில் குடி புகுந்தனர். சமையலுக்குத் தேவையான மிகச் சில பாத்திரங்களே வைத்திருந்தனர். அதிகாலையில் கிளம்பிச் செல்லும் இவர்கள், இரவு ஏழரை மணி வாக்கில் திரும்பி வந்து சமையல் வேலைகளைச் செய்கின்றனர். சாதம், ஒரு குழம்பு என சிம்பிளான சாப்பாடு.


ஆனால்... கணவன், மனைவி, குழந்தை என அனைவரும் ஒரே நேரத்தில் அமர்ந்து ஆனந்தமாகச் சாப்பிடுகின்றனர். பின்னர் எஃப்.எம். ரேடியோவில் பாட்டுக் கேட்டபடி, பேச்சும் சிரிப்பும் கும்மாளமுமாக முடிகிறது அவர்களின் நாள்.


வேடிக்கையாக அவர்களை கவனிக்க ஆரம்பித்த நான், சில நாட்களிலேயே அவர்களின் லைஃப் ஸ்டைலை ரசிக்க ஆரம்பித்துவிட்டேன். இருக்கும் இடம் வசதி இல்லை, உடுத்த நல்ல ஆடைகள் இல்லை, மூன்று வேளை உணவுகூட எல்லா நாட்களும் நிரந்தரமில்லை. ஆனாலும்... சந்தோஷம் ஆயுட்கால உறுப்பினராக இருந்தது அவர்களின் குடும்பங்களில்.


அன்று மாலை கையில் குழந்தையுடன் நின்றுகொண்டுஇருந்தார் அந்த குடும்பங்களைச் சேர்ந்த ஒரு பெண். அவரிடம் நெருங்கிப் பேசினேன் ஆர்வமாக. பாப்பாம்மாள் என்று பெயர் சொன்னவர், ''கையில் இருக்கறது எம்பேத்தி பானு. கிருஷ்ணகிரிதான் சொந்த ஊரும்மா. ரோடு போடுற வேலை பார்க்குறோம். அதனால எந்தெந்த ஊருல ரோடு போடுறமோ, அங்கயே எங்கயாச்சும் டென்ட் போட்டு இருந்துக்குவோம். வயசுக்கு வந்த புள்ளைங்க இருந்தா, கிருஷ்ணகிரியிலயே வீட்டுல விட்டுட்டு வருவோம். மாச மாசம் பணம் அனுப்புவோம். சின்னப் புள்ளைங்கனா, போற எடத்துக்கு எல்லாம் கையோட தூக்கிக்கிட்டுப் போயிடுவோம். தெனக்கூலி 350 ரூபாய் கொடுப்பாங்க. பத்தாதா..?!'' என்று நிறைவுடன் அவர் கேட்டபோது, ஆச்சர்யமாக இருந்தது.


தொடர்ந்து, அந்த டென்ட் பெண்கள் பலரிடமும் நான் சிநேகமானேன்.


''என்னம்மா கரன்ட்டு இல்லைனு இப்புடிப் புலம்புறீங்க? எங்களுக்கெல்லாம் நெலாதான் லைட்டு, மரங்கதான் காத்தாடி!'' என்று, தன் செம்பட்டை கேசத்துக்கு எண்ணெய் வைத்துக்கொண்டே அவர்களில் ஓர் இளம் பெண் பேசியபோது, கூடுதல் அழகியாகத் தெரிந்தாள் எனக்கு.


எங்கள் தெரு குழந்தைகள் எல்லோரும் அவரவர் வீட்டு காம்பவுண்ட் சுவர்களுக்குள், கண்காணிப்புக்கு நடுவே விளையாடிக் கொண்டிருக்க, மணலிலும், மழையிலும், வெயிலிலும், வேப்ப மரத்தடியிலும் வியர்க்க விளையாடும் அந்த பயமறியா குழந்தைகளின் சந்தோஷம், நிச்சயமாக... எங்கள் குழந்தைகளுக்கு இல்லை என்பது புரிந்தது.


கையில் கொண்டு வந்த பொட்டலத்தில் இருந்த கடைப் பண்டங்களை தன் குழந்தைக்கு ஊட்டிவிட்டு, சொம்பு தண்ணீரை மடமடவென குடித்த அந்தத் தாயிடம், ''நீ ஒண்ணு சாப்பிட்டிருக்கலாம்ல..?'' என்றேன். 


''வாயக்கட்டுனவளுக்குதான் புள்ள!'' என்று திருக்குறளினும் சுருக்கமாக புரியவைத்த அந்த மத்திம வயதுப் பெண்ணின் முகம், என் ஆயுளுக்கும் மறக்காது.


எந்த உறவையும் எதிர்பார்க்காமல், ஜல்லி சுமந்து தன் வாழ்க்கையைச் செலுத்தும் அந்த 60 வயதுப் பாட்டி, ''கவலைப்பட்டு என்னாகப் போகுது? ஒடம்புல தெம்பிருக்கிறவரைக்கும் ஓடுவோம். உழைக்கறவரைக்கும் சாப்புடுவோம். இல்லியா... சாவு வர்ற அன்னிக்கு கிளம்பிடுவோம்!'' என்று பேசியபோது, வாழ்க்கையை அதன் போக்கில் வாழும் அந்த மக்களின் மீதான ரசனை, ஏக்கமாகவே மாறியது எனக்குள்!


எத்தனையோ வசதிகள் இருந்தும், மனதில் நிறைவும்... நிம்மதியும் இல்லாமல் இருக்கும்போது, எதுவுமே இல்லை என்றாலும் உலகமே தனக்காகத்தான் என்று கொண்டாடி வாழும் அந்த மக்களின் வாழ்க்கை எத்தனை அழகானது?! 'வாழ்க்கையை ரசிக்க அறிவுதான் தடை' என்று படித்திருந்தாலும், வறுமை பற்றிய எந்த வருத்தமும் இல்லாமல் வாழும் அவர்களிடம்தான் அதை முழுமையாக கற்றுணர்ந்தேன். பல நாட்களாக அவர்களைப் பார்த்துப் பார்த்து ரசித்த, மகிழ்ந்த, ஏங்கிய என்னுள், இப்போது பல மாற்றங்கள்.


சேர்க்க வேண்டியதையே சதா சிந்திக்காமல், இருக்கும் நிலையில் நிறைவுற்று, இன்றைய பொழுதில் வாழப் பழகியிருக்கிறேன்!


இதை எழுதி முடித்த நேரம், தூரத்தில் மண்ணெண்ணெய் விளக்கொளியில் உறங்கிக் கொண்டிருக்கின்றன அந்த டென்ட்கள், நிம்மதியாக!

இந்த சந்தோஷம் என்னவரோடு இன்னும் பல ஜென்மங்களுக்கு வேண்டும்!

உலக சதுரங்க நட்சத்திரம்... விஸ்வநாதன் ஆனந்த்! புதிய நுணுக்கங்களோடு சதுரங்கப் போட்டிகளில் வாகை சூடும் சாதுர்யன். கடந்த மே மாதம் மாஸ்கோவில் நடந்த உலக அளவிலான சதுரங்கப் போட்டியில் ஐந்தாவது முறையாக 'வேர்ல்ட் செஸ் சாம்பியன்' பட்டத்தை வென்ற திறமைத் தமிழன்!

''இத்தனை வெற்றிகளுக்கும், பெருமைக்கும் காரணம்... எனக்கு அமைந்த நல்ல சூழல்தான். அந்த சுகந்த, சுதந்திர சூழலை என் உடன் இருந்து கொடுப்பது என் அன்பு ஜீவன், அருணா!''

- கிடைக்கும் சந்தர்ப்பங்களில் எல்லாம் தன் மனைவி அருணாவின் அன்பை பகிர்ந்துகொள்ள மறவாதவர் ஆனந்த். சதுரங்கப் போட்டிகளுக்காக சதா சர்வதேசப் பயணங்களில் இருக்கும் அந்த சாகசக்காரரின் அன்பைப் பேசு கிறார் அருணா!

''நாங்கள் இருவரும் பிறந்து, வளர்ந்தது சென்னைதான். அவர் லயோலா கல்லூரியில் பி.காம்... நான் எத்திராஜ் கல்லூரியில் பி.காம். லவ்வாலஜி கதை எல்லாம் எதுவும் இல்லை. பெற்றோர் நிச்சயித்த திருமணம்தான். பத்திரிகை, டி.வி. என்று அவ்வப்போது இவர் முகம் பார்த்திருக்கிறேன். நிச்சயத்துக்குப் பிறகு, இவர் திறமையின் வீச்சை இன்னும் அறிய முடிந்தது.

கல்லூரியில் படித்தபோதே உலக அளவிலான போட்டிகளில் கலந்துகொள்ளும் தகுதியுடன் வளர்ந்திருந்தவர், அதிலும் கல்லூரி இறுதிஆண்டின்போது, உலகளவில் நிச்சயம் வெற்றி பெறுவார் என நாடே நம்பிக்கை வைத்திருந்த செஸ் பிளேயர் என்றெல்லாம் வீட்டினர் சொல்லக் கேட்க கேட்க, அப்போது என் மனதில் ஒரு விஷயத்தை உறுதி ஏற்றிக்கொண்டேன். 'வெற்றிகளை வேட்டையாடிக் கொண்டிருக்கும் அவர் பயணத்தை, எந்த வகையிலும் தொந்தரவு செய்யாமல் இருக்க வேண்டும்... ஒரு மனைவியாக முடிந்தவரை மெருகேற்றிக் கொடுக்க வேண்டும்' என்பதே அது. அதில் இந்த நிமிடம்வரை சமர்த்தாகவே இருக்கிறேன் என்று நம்புகிறேன்.

திருமணம் முடிந்த மூன்றாவது நாள், அவருக்கு ஜெர்மனியில் டோர்னமென்ட். எங்களின் ஹனிமூனே இந்த ட்ரிப்தான். 'ஃப்ரீயா, ரிலாக்ஸ்டா இல்லாம... இப்படி போட்டிக்கு கூட்டிட்டு வந்துட்டேன்னு வருத்தமில்லையே..?' என்று என் கண்கள் பார்த்து கேட்டுக்கொண்டே இருந்தார். 'உங்களுக்கு செஸ் எவ்வளவு பிடிக்கும்னு எனக்குத் தெரியும். நாம அவுட்டிங், ஷாப்பிங் போக, ரிலாக்ஸ்டா பேச, சிரிக்க இந்த முழு ஆயுள் இருக்கு. ஆனா, இந்த டோர்னமென்ட்டை இப்போ மட்டும்தான் விளையாட முடியும். ஸோ, எந்தக் குழப்பமும் இல்லாம எப்பவும் போல முழு கவனத்தோட விளையாடுங்க!' என்றேன். அதிலிருந்து அவரின் பெரும்பாலான போட்டிகளில் ஒரு மாரல் சப்போர்ட்டாக நானும் உடன் இருந்திருக்கேன். இதுவரைக்கும் டோர்னமென்டுக்காக 54 நாடுகளுக்கு சென்றிருக்கும் அவருடன், 39 நாடுகளுக்கு உடன் சென்றிருக்கிறேன். 'முக்கியமான நேஷனல், இன்டர்நேஷனல் போட்டிகள்ல நீ என்கூட இருக்கணும்!' என்பது அவரின் அன்புக் கட்டளை.

2010-ல் பல்கேரியா நாட்டின் சோஃபியா நகரத்தில் நடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்துகொள்ளச் சென்றது, த்ரில்லான அனுபவம். இயற்கை சீற்றம் காரணமாக விமானத்தை கேன்சல் செய்துவிட்டார்கள். ஜெர்மனியில் இருந்த நாங்கள், கிட்டத்தட்ட நான்கு, ஐந்து குட்டிக் குட்டி நாடுகளை தரை வழியாகக் கடந்து பல்கேரியாவை அடைய வேண்டும். எனக்குப் பதற்றமாக இருந்தது. 'நாமே பதற்றப்பட்டா, விளையாட வேண்டிய அவங்க என்ன  பதற்றத்துல இருப்பாங்க..?' என்று மனதுக்குள் வெட்ட, என் டென்ஷனை மறைத்து, வழிநெடுக அவரை கூல் செய்துகொண்டே வந்தேன். ஒருவழியாக மூன்று நாட்கள் பயணம் முடித்து அந்த இடத்தை அடைந்தபோது, 'டிராவல் களைப்பு, டென்ஷன்னு எதுவும் என் பக்கத்தில் வரவிடாமல் பார்த்துக்கிட்ட. தேங்க்ஸ் அருணா!' என்று ஒரு புன்னகையுடன் போட்டிக்குச் சென்றார்... வென்றார். அதுதான் நான்காவது முறையாக அவர் உலக சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற தருணம்!

டோர்னமென்ட் இல்லாத சமயங்களில் எல்லாம் பிளானெட்ஸ் வீடியோ, வைல்டு லொகேஷன்ஸ் என்று சார் இயற்கை சார்ந்த தேடலில் மூழ்கிவிடுவார். ஆனால், இப்போது அவரின் அத்தனை மணித்துளிகளையும் தனதாக்கிக் கொள்கிறான்... ஒன்றரை வயதாகும் எங்கள் பையன் அகில் ஆனந்த். அவர் வீட்டில் இருக்கும் நாட்களில்... அகில் என் கைக்கு வருவதே இல்லை, அவர் விடுவதும் இல்லை. அப்போதெல்லாம் அப்பாவையும் பையனையும் பார்க்க அத்தனை ஆனந்தமாக இருக்கும். ஆனால், அவன் முதல் பிறந்த நாளன்று... அவர் ஜெர்மனியில் இருக்க வேண்டிய சூழல். மிகுந்த தவிப்பில் இருந்தவரிடம் மீண்டும் அதையேதான் சொன்னேன்... 'அகில் நம்மோட கொண்டாட இன்னும் நிறைய நிறைய பிறந்த நாட்கள் இருக்கு... ஆனா, நீங்க கமிட் ஆகியிருக்குற வேலையை இப்போதான் முடிக்க முடியும்!'' இங்கு அகில் வீட்டில் கேக் வெட்ட, அவர் அங்கிருந்தே வீடியோ கான்ஃபரன்ஸிங் மூலமாக பார்த்து வாழ்த்துப் பாட, அந்த மகிழ்வில் தூரங்கள் காணாமல் போயின!

சமீபத்தில் மாஸ்கோவில் நடந்து முடிந்த 'வேர்ல்ட் செஸ் சாம்பியன்' போட்டியின்போது, இறுதி மேட்ச் ரொம்பவே ஹாட். இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த கெல்ஃபண்ட் மற்றும் இவருக்குமான போட்டி ரொம்பவே பலப்பட்டது. அப்படியான சமயங்களில், யாராவது ஒருவரை அருகில் வைத்துக்கொள்ள போட்டி யாளர்களுக்கு அனுமதி உண்டு. 'அருணா வா!' என்று இவர் என்னை இருக்க வைத்தார். மனசு முழுக்க பிரார்த்தனைகள் சுமந்து, 'நீங்கதான் ஜெயிப்பீங்க!' என்ற நம்பிக்கையை என் முகத்தில் வெளிப்படுத்தியபடியே அவர் அருகில் இருந்தேன். கிட்டத்தட்ட இரண்டரை வாரம் நடந்த அந்தப் போட்டியின் முடிவில் வெற்றிக் கோப்பையை இவர் கைப்பற்றியது உலகமே அறிந்த விஷயம்!

ஹாலிடேஸ் டூர், நண்பர் களுடன் 'கெட் டுகெதர்' என்று தனக்கான ரிலாக்ஸ் நேரங்களை அவர் தாராளமாக எடுத்துக் கொள்வார். ஆனால், அடுத்த டோர்னமென்ட் வரவிருக்கிறது என்றால், பொழுதுபோக்குகளை குறைத்து, ஏதோ பிகினர் போல குறைந்தது இரண்டு மாதங்களாவது முழு அர்ப்பணிப்போடு பயிற்சி எடுப்பார். அந்த நேரமெல்லாம் அவரின் தேவைகளை அவர் கேட்கும் முன்னே செய்துகொடுப்பதில் நான் மிக கவனமாக இருப்பேன். அவரின் பொறுப்புகளை, அவரே அறியாமல் முடித்து வைப்பதிலும் பெரு மகிழ்ச்சி எனக்கு. 'அருணா இந்த வேலையை மறந்தே போயிட்டேனே!'னு என்று அவர் சொல்லும்போது, அதை முன்பே முடித்திருக்கிற மனைவியாக இருப்பதில்தான் இழையோடுகிறது என் ஆனந்தம்! இந்த சந்தோஷம் என்னவரோடு இன்னும் பல ஜென்மங்களுக்கு வேண்டும்!''


- அருணா ஆனந்த்

FUNtastic படங்கள்

FUNtastic படங்கள்

Gif Images  ஒரு விதத்தில் ஜப்பானிய ஹைகூ போல தான்.. சின்ன சின்ன Idea வில் நச்சென்று ரசிக்கும்படியாக உருவாக்குகிறார்கள். அது மாதிரி என்னைக் கவர்ந்த படங்கள் இவை.





Computer ல் ஒரு மனிதன் சிக்கி விட்டால் என்னா பாடு படுத்துகிறார்கள்






வளைந்து கொடுத்தால் வாழ்க்கைக்கு நல்லது..
   





டீஸல் விற்கிற விலையில் பின்ன எப்படி வண்டி ஓட்டுறது.







'சரக்கு'  விமானம் போல


எறும்பு மொய்க்கிற மாதிரி இங்க ஒன்னும் இல்லையே!





சேர்ல கால் மேல் கால் போட்டு உட்கார்ந்தால் திமிர்னு சொல்வாங்க, சேரே கால் மேல் கால் போட்டு இருந்தால்?







என்ன இது! சின்னப்பிள்ளைத்தனமா வேலை பார்க்கிற இடத்தில விளையாட்டு.






வாழைப்பழ விலையையும் ஏத்திட்டாங்களோ? இந்த திட்டு திட்டுதே!




டீ விற்கிறாங்களாம்!








யார் மேலே கோபமோ!  ' R ' ஐ இந்த அடி அடிக்கிறாரு.






He can walk English, talk English