Saturday, January 25, 2014

ஆனந்தம் நமக்குள்ளேயே இருப்பது தெரியாமல் தேடிக்கொண்டு இருக்கிறோம்!

''ஹலோ சார், எப்படி இருக்கீங்க?''

- இந்தக் கேள்விக்கு மூன்று விதமான பதில்கள் புழக்கத்தில் உள்ளன.

''நல்லா இருக்கேன்...'' என்று 'நல்லா'வுக்கு அழுத்தம் தந்து பதில் அளித்துப் பல் இளிப்பர் சிலர்.

''ஆண்டவன் புண்ணியத்துல ஆனந்தமா இருக்கேன் சார்...'' என்று ஒரு சிலர் சொல்லும்போது, அவர்கள் 'குறையன்றும் இல்லை...' பாடுவது போலிருக்கும்.

வேறு சில பிரகஸ்பதிகள் உண்டு. எந்நாளும் நான்கு நாள் தாடியுடன் காணப்படும் இவர்கள், எந்நேரமும் முகத்தைத் தொங்கப் போட்டுக்கொண்டு நிரந்தர சோகத்துடன் திரிவர். எப்போது நலம் விசாரித்தாலும், ''ம்... என்னத்தச் சொல்றது! என்னமோ இருக்கேன், போங்க! ஏதோ வண்டி ஓடிட்டிருக்கு!'' என்பதுதான் இவர்களின் பதிலாக இருக்கும்.

பங்களா, பகட்டு வாழ்க்கை, பர்ஸ் நிறையப் பணம்... இவை மட்டுமே பலரின் சந்தோஷத்துக்கான அடையாளங்களாக உள்ளன. இவற்றில் எது ஒன்றில் சிறிது குறைவு தென்பட்டாலும், வாழ்க்கையே போச்சு என்பதான முடிவுக்கு இவர்கள் வந்துவிடுவார்கள்.

சரி, இவை சந்தோஷ அடையாளங்கள் இல்லை எனில், ஆனந்தம் கிடைப்பதுதான் எங்கே? இதோ, சுவாமி பார்த்தசாரதி சொன்ன ஒரு குட்டிக்கதையைக் கேளுங்கள்.

ரயிலில் இருவர் பயணம் செய்கிறார்கள். ஒருவர், பணக்கார வியாபாரி; மற்றவன் திருடன். தன் பையிலிருந்து கத்தை கத்தையாக ரூபாய் நோட்டுகளை எடுத்து, எண்ணுவதற்கு ஆரம்பித்தார் வியாபாரி. திருடனுக்குக் குறுகுறுவென்று இருந்தது. பணத்தில் நாட்டமில்லாத யோக்கியன் போல் எழுந்து, பாத்ரூம் பக்கம் போனான் அந்த பலே திருடன். அவன் திரும்பியதும், வியாபாரி ஒரு நடை டாய்லெட் பக்கம் சென்று வந்தார்.

வந்தவர், ஒரு புன்னகையோடு திருடனுக்கு குட் நைட் சொல்லிவிட்டுப் படுத்துக்கொண்டார். அவர் நன்கு தூங்கட்டும் என்று அந்தத் திருடன் காத்திருந்தான். கம்பார்ட்மென்ட்டே உறக்கத்தில் ஆழ்ந்திருந்த நேரத்தில் மெள்ள எழுந்து, அந்த வியாபாரின் பெட்டி, பைகளைக் குடைந்தான் திருடன். பணத்தைக் காணவில்லை. இடுப்பில் முடிந்து வைத்திருக்கிறாரா என்றும் நைஸாகத் தடவி ஆராய்ந்தான். இல்லை. அத்தனை பணமும் எங்கேதான் மாயமாகிப் போனது?

இரவு முழுவதும் திருடனுக்குத் தூக்கம் வரவில்லை. வியாபாரி குறட்டை விட்டுத் தூங்கிக்கொண்டு இருந்தார்.

விடிந்தது. தூங்கி எழுந்த வியாபாரி, கொட்டக் கொட்டக் கண்விழித்தபடி உட்கார்ந்திருந்த திருடனுக்கு ஒரு ஹாய் சொல்லிவிட்டு, அவனது தலையணைக்கு அடியில் கைவிட்டு, பணத்தைச் சுற்றி வைத்திருந்த தனது மஞ்சள் பையை எடுத்துக்கொண்டார். 'ராத்திரி பூராவும் என் பணத்தைப் பத்திரமாக வைத்திருந்ததற்கு தேங்க்ஸ்!' என்றார்.  

இந்தத் திருடனைப் போலத்தான் நாமும், ஆனந்தம் நமக்குள்ளேயே இருப்பது தெரியாமல், வெளியே எல்லா இடங்களிலும் தேடிக்கொண்டு இருக்கிறோம்!

Monday, January 20, 2014

Beware of Receiving Registered Letters - Do Not Sign

REGISTERED LETTERS.. DO NOT SIGN…

Something to ponder about when receiving registered letter.

How often do we take the trouble of opening the letter before signing the Registered AD (Acknowledgement Due) Letter acknowledgement slip?

Read to find out more.... in future be cautious.  

Open letters BEFORE signing to acknowledge receipt of the Registered AD (Acknowledgement Due) Letter..!!!

Folks, the next time the postman or courier guy comes to deliver a Registered AD (Acknowledgement Due) Letter, a Certificate Of Posting Letter or Parcel, do the following:

a) Check who is it from..??

b) If you do not know the source, reject it.

If you accept it without knowing the source, the following has happened and can happen to you too…

There have been cases where lawyers have done the following:

a) Mailed empty / sealed Registered AD (Acknowledgement Due) Letter to people on behalf of their clients for some court case matter.

b) The Registered AD (Acknowledgement Due) Letter either, consisted of brochures promoting sale of new real estate or some car model or just an empty A-4 size paper inside.

In normal circumstances, when one receives an empty letter or junk mail, they will just tear it up and throw it away,

 BUT, here lies the danger:

a) You signed the Registered AD (Acknowledgement Due) Letter acknowledgement card and it is returned to the law firm. That signed Registered AD (Acknowledgement Due) Letter acknowledgement card is proof that a letter was delivered and confirms the delivery and can/will be used against you in court.

b) Same applies to the so very convenient "CERTIFICATE OF POSTING" mail.

When the grace period for you to respond is over, they quietly go to court and show proof that a Registered AD (Acknowledgement Due) Letter was sent to you as a reminder and you did not bother to defend it and thus convince the court officials and get a judgment against you.

 

Next another Registered AD (Acknowledgement Due) Letter is sent to you asking for damages approved by the court, or just another empty envelope and you discard it once more and this time the white collar crook will go to the court quietly and seek the assistance of the court to seal/attach your property to recover the amount awarded by the court and soon the court bailiff will be at your door step to execute the order.

What happens next..?

You frantically call your relatives in disbelief and seek legal advice. You are lost not knowing what's happening.

Anxiety, stress, palpitation, sleepless nights cannot be compensated as this is a reality check. You engage a lawyer's firm; spend a many thousand rupees for paper work and an appeal to the higher court to set aside this matter… and also spend several days in court trying to prove your innocence.

What are your rights?

a) You have every right to reject any mail / parcel that comes from unknown sources, be it a debt collection company, law firm or some individual.

b) You have every right to ask the postman or the person delivering it to open the mail and let you see what is inside and the contents of the letter.

c) REJECT IT if you are not comfortable… or ask them to deliver to a law firm that you know.

d) If you have inadvertently signed and collected the empty Registered AD (Acknowledgement Due) Letter/mail, lodge a police report and also report to the bar council… as this will help in your case to protect you… if the matter goes to court.

Eye opener isn't it, crime is no longer just house break-ins and snatch thefts where most of the thieves get a few hundred rupees… BUT these days, the crooks come dressed in suits, so be aware and be smart… or you will end up spending thousands of rupees, many hours spent travelling to court or to your lawyers office, not forgetting the stress, anxiety, sleepless nights, etc.

Do inform ALL your family members  and staffs of your firm.

NOT TO SIGN ON BEHALF OF ANYONE… let the postman leave a card, go check at the post office, ask the postman to open and show you what is inside the envelope… or lastly… if you are not comfortable, just reject it… BUT DON'T SIGN WITHOUT KNOWING WHAT IS INSIDE…!!

 

 

 

அருள்மிகு பாபாஜி திருக்கோயில்

அருள்மிகு பாபாஜி திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: பாபாஜி
 


 பழமை :500 வருடங்களுக்குள்
 


 ஊர் :பரங்கிப்பேட்டை
 மாவட்டம் :கடலூர்
  மாநிலம்: தமிழ்நாடு
 





 
   
 திருவிழா:
   
 பாபாஜி அவதார நாளான கார்த்திகை மாத ரோகிணி நட்சத்திரத்தில் யாக பூஜை நடக்கும்.  
   
 தல சிறப்பு:
   
 இவ்வூரில் மட்டுமே பாபாஜியை சிலை வடிவில் தரிசிக்கலாம்.  
   
திறக்கும் நேரம்:
   
  காலை 6 மணி முதல் 9.30 மணி வரை, மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும். மற்ற நேரங்களில் சன்னதிக்கு வெளியே நின்று பாபாஜியைத் தரிசிக்கலாம். 
   
முகவரி:
   
  அருள்மிகு பாபாஜி திருக்கோயில், ரேவு மெயின்ரோடு, பரங்கிப்பேட்டை - 608 502. சிதம்பரம், கடலூர் மாவட்டம். 
    
போன்:
   
  +91 44 - 2464 3630, 99941 97935 
   
 பொது தகவல்:
   
 சன்னதி முகப்பில் விநாயகர் இருக்கிறார். பாபாஜி கதிர்காமம் சென்றபோது, அவருக்கு முருகன் காட்சி தந்தார். இதை உணர்த்தும்விதமாக, ஒரு ஆலமரத்தின் கீழ் பாபவிற்கு முருகன் காட்சி தரும் சிலை வடிக்கப்பட்டுள்ளது. பாபாஜி சன்னதி விமானத்தில் அவரது வாழ்வில் நடந்த நிகழ்ச்சிகள் சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளது.  
   
 
பிரார்த்தனை
   
  தியானம் மற்றும் யோக நிலையை அடைய விரும்புபவர்கள் இங்கு வழிபாடு செய்கிறார்கள். 
   
நேர்த்திக்கடன்:
   
  பிரார்த்தனை நிறைவேறியவுடன் நெய் தீபமேற்றி வழிபாடு செய்யப்படுகிறது. 
   
 தலபெருமை:
   
 

யந்திர சிறப்பு: பாபாவின் தீவிர பக்தர் ஒருவர், அவரது தரிசனம் கிடைக்க விரும்பி பலமுறை இமயமலைக்குச் சென்றார். அவருக்கு பாபா காட்சி தரவில்லை. சோர்வடைந்த பக்தர், தனக்கு குறிப்பிட்ட நாளில் காட்சி கிடைக்காவிட்டால், தான் மலையிலிருந்து குதித்து உயிரை விடப்போவதாக கூறினார். அப்போதும், பாபாவின் தரிசனம் கிடைக்காமல் போகவே, அவர் இமயமலையில் இருந்து குதித்தார். பாபா அவரது உடலை எடுத்து வரச்செய்து, மீண்டும் உயிர் கொடுத்து தன் சீடராக ஏற்றுக் கொண்டார். இவரையும், மற்றொரு பிரதான சீடரான அன்னை என்பவரையும் யந்திரமாக பிரதிஷ்டை செய்துள்ளனர். அருகிலேயே பாபாஜி மற்றும் முருகன் யந்திரங்கள் உள்ளன.


பாபாஜிக்கு அருளிய முருகன்: அமைதியே உருவாக அமைந்த தலம் இது. பாபாஜி இவரது சன்னதிக்கு முன், கவுரிசங்கர்பீடம் என்னும் யாக குண்டம் உள்ளது. பாபாஜி அவதார நாளன்று (கார்த்திகை மாத ரோகிணி நட்சத்திரம்) இதில் யாக பூஜை நடக்கும். அருகில் பாபாஜியின் பாதம் உள்ளது. சன்னதி முன்புள்ள இரண்டு தூண்களில் அன்னை மற்றும் கிரியா அம்மான் என்னும் சீடர்களின் வடிவங்கள் உள்ளன. இந்த தூண்களின் கீழே பஞ்சாங்க கிரியாபீடம் உள்ளது. சன்னதி முகப்பில் விநாயகர் இருக்கிறார். பாபாஜி கதிர்காமம் சென்றபோது, அவருக்கு முருகன் காட்சி தந்தார். இதை உணர்த்தும்விதமாக, ஒரு ஆலமரத்தின் கீழ் பாபவிற்கு முருகன் காட்சி தரும் சிலை வடிக்கப்பட்டுள்ளது. பாபாஜி சன்னதி விமானத்தில் அவரது வாழ்வில் நடந்த நிகழ்ச்சிகள் சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளது.


அவதார விழா: பிரதான சன்னதியில் பாபாஜி, சதுர வடிவ ஆவுடையார் பீடத்தில் வடக்கு நோக்கி அமர்ந்திருக்கிறார். வலது கையில் அபய முத்திரை காட்டுகிறார். இடக்கையை மடியில் வைத்திருக்கிறார். இவ்வூரில் மட்டுமே பாபாஜியை சிலை வடிவில் தரிசிக்கலாம். வியாழனன்று இரவு 7 மணிக்கு பாபாஜிக்கு அபிஷேகம் நடக்கும்.


 
   
  தல வரலாறு:
   
  பரங்கிப்பேட்டையில் சுவேதநாதய்யர், ஞானாம்பிகை தம்பதியர் வசித்தனர். சுவேதநாதய்யர் இங்குள்ள முத்துக்குமாரசுவாமி கோயிலில் அர்ச்சகராகப் பணியாற்றி வந்தார். இவருக்கு கி.பி.203ம் ஆண்டு, கார்த்திகை மாத ரோகிணி நட்சத்திரத்தில் ஒரு மகன் பிறந்தார். அவருக்கு நாகராஜன் என பெயர் சூட்டினர். சிறு வயதிலேயே கல்வி, கேள்விகளில் புலமை பெற்றவராக திகழ்ந்த நாகராஜன், பிற்காலத்தில் "பாபாஜி' என பெயர் பெற்றார்.நாகராஜனுக்கு ஏழு வயதானபோது, முருகன் கோயிலில் திருவிழா நடந்தது. விழாவுக்கு வந்த ஒருவர், அவரைக் கடத்திச் சென்று காசியில் விட்டு விட்டார். அங்கு யோக மார்க்கத்தைக் கற்ற பாபாஜி, பொதிகைமலைக்குச் சென்று அகத்தியரைத் தரிசித்தார். அவர், "பக்தனே! உனக்கு யோக மார்க்கத்தை போதிக்கும் குரு கதிர்காமத்தில் (இலங்கை) இருக்கிறார்,'' எனச் சொல்லி அனுப்பி வைத்தார். 12 நாட்களில் கதிர்காமம் சென்ற பாபாஜிக்கு, அங்கிருந்த போகர் சித்தர் பஞ்சாங்க கிரியா முறைகளை உபதேசித்தார். அதன்பின், பாபாஜி இமயமலைக்குச் சென்றார். தற்போதும் இவர் இமயமலையில் இருப்பதாகச் சொல்கிறார்கள். பிற்காலத்தில் பாபாஜியின் சீடர் ராமைய்யா, இங்கு பாபாஜிக்கு கோயில் எழுப்பினார்.  
   
சிறப்பம்சம்:
   
  அதிசயத்தின் அடிப்படையில்: இவ்வூரில் மட்டுமே பாபாஜியை சிலை வடிவில் தரிசிக்கலாம்.