Tuesday, November 2, 2010

நீங்கள் கல்லூரி அல்லது பள்ளியில் படிக்கிறீர்களா?‏

நீங்கள் கல்லூரி அல்லது பள்ளியில் படிக்கிறீர்களா?‏

 

நீங்கள் கல்லூரி அல்லது பள்ளியில் படிக்கிறீர்களா? அல்லது திறந்த வெளி பல்கலைக் கழகம், அஞ்சல் வழியில் ஏதேனும் பட்ட வகுப்பில் சேர்ந்து பயில்கிறீர்களா? வீட்டிற்கு வந்த பின்னும், ஆசிரியர் ஒருவரின் வகுப்பறைப் பாடம் போல கேட்டு உங்கள் பாட அறிவை வளர்த்துக் கொள்ள ஆசையா? அப்படியானால் நீங்கள் செல்ல வேண்டிய இணைய தளம் Academic Earth.

இந்த தளத்தில் பல பிரபலமான வெளிநாட்டு பல்கலைக் கழகங்களின் ஆன் லைன் பாடத்திட்டங்களுக்கான வகுப்பறை ஆசிரியர் விளக்க உரைகள் தரப்பட்டுள்ளன. அனைத்து பாடங்களுக்குமான வீடியோ உரைகள் உள்ளன. அப்படியே வகுப்பில் தரப்படும் காட்சியையும், வீடியோ பாடங்களையும் கண்டு, குறிப்பெடுக்கலாம். பாடங்கள் பல வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. நமக்குத் தேவையான பிரிவைத் தேர்ந்தெடுத்து கிளிக் செய்தால், பின் அந்த பாடப் பிரிவின் கீழ் உள்ள துணைப் பாடப் பிரிவுகள் தரப்படுகின்றன. இங்கும் நமக்கு தேவைப்படும் பாடத்தைத் தேர்ந்தெடுத்தால், அதில் உள்ள அனைத்து வீடியோக்களும், பாடக் குறிப்புடன் காட்டப்படுகின்றன. இந்த பல்கலைக் கழகங்கள் இவ்வாறு ஆன்லைனில் வகுப்புகளை நடத்துவது நமக்கும் பயனளிக்கிறது. இதன் பாடப்பிரிவுகள் எதனையும் விட்டு வைக்கவில்லை.

அவை: Architecture, Astronomy, Biology, Chemistry, Computer Science, Economics, Engineering, Environmental Studies, History, International Relations, Law, Literature, Mathematics, Media Studies, Medicine, Philosophy, Physics, Psychology, , மற்றும் Religious Studies!

இந்த வகுப்பறைகளில் உள்ள வெளிச்சத்தைக் குறைத்து வைத்து, ஆசிரியரின் கருத்துரை மீது நம் முழுக்கவனத்தையும் செலுத்தி கேட்கவும் வசதி தரப்பட்டுள்ளது.

ஆசிரியரின் விரிவுரையைக் கேட்டபின் அவருக்கு மார்க் போடும் வாய்ப்பும் தரப்பட்டுள்ளது. வீடியோ காட்சியின் மேலாகத் தரப்பட்டுள்ள A முதல் F வரையிலான ஸ்கேலைப் பயன்படுத்தி, இதற்கான மதிப்பெண்ணை வழங்கலாம்.

கற்றுக் கொள்ளவும், தகவல்களையும் தெரிந்து கொள்ளவும் விரும்புபவர்களுக்கு இது ஒரு அருமையான தளம். ஒருமுறை சென்ற பின் தினந்தோறும் பல மணி நேரம் இதில் செலவிடுவீர்கள் என்பதுவும் உறுதி.


இந்த தளம் www.academicearth.org என்ற முகவரியில் இயங்குகிறது.

THE LONELY EMBER

THE LONELY EMBER

 

A member of a certain church, who previously had been attending services regularly, stopped going. After a few weeks, the pastor decided to visit him. It was a chilly evening. The pastor found the man at home alone, sitting before a blazing fire.


Guessing the reason for his pastor's visit, the man welcomed him, led him to a big chair near the fireplace and waited.

 

The pastor made himself comfortable but said nothing. In the grave silence, he contemplated the play of the flames around the burning logs.

 

After some minutes, the pastor took the fire tongs, carefully picked up a brightly burning ember and placed it at one side of the hearth all alone. The he sat back in his chair, still silent. The host watched all this in quiet fascination.

 

As the one lone ember's flame diminished, there was a momentary glow and then its fire was no more. Soon it was cold and 'dead as a doornail.'

 

Not a word had been spoken since the initial greeting.

 

Just before the pastor was ready to leave, he picked up the cold, dead ember and placed it back in the middle of the fire. Immediately it began to glow once more with light and warmth of the burning coals around it.

 

As the pastor reached the door to leave, his host said, "Thank you so much for your visit and especially for the fiery sermon. I shall be back in church next Sunday."

செய்கூலி இல்லை; சேதாரம் இல்லை, ஆனால்..?

செய்கூலி இல்லை; சேதாரம் இல்லை, ஆனால்..?


செய்தித் தாள்களை நாம் புரட்டுபோது, செய்கூலி இல்லை; சேதாரம் இல்லை; கிராமுக்கு 100 ரூபாய்  குறைவு; எடைக்கு மட்டுமே விலை  என்றெல்லாம் பல்வேறு நகைக்கடை விளம்பரங்களை  நாம் பார்க்கலாம். தங்கவிலை தாறுமாறாக எகிறிவரும் நிலையில், எவ்வாறு இவர்களால் இவ்வாறான அறிவிப்பு செய்ய முடிகிறது என்றெல்லாம் பாமரர்கள் அறிவுக்கு எட்டாமல் புலம்பி வந்தார்கள். ஏனெனில் தங்கம் குறித்து  போதிய விழிப்புணர்வு சமுதாயத்தில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு காலத்தில் கைகளால் தூக்கி எடைபோடும் தராசு இருந்தது. அதில் சிலர் 'கை' வித்தை காட்டி எடையை கூட்டியும், குறைத்தும்  காண்பிப்பார்கள். இன்னும் சிலர் தராசின் ஒரு தட்டின் கீழ் புளியை ஒட்டி வைத்து, மக்கள் வயிற்றில் புளியை கரைப்பார்கள். நாகரிக வளர்ச்சியில், எலெக்ட்ரானிக் எடை மெஷின்கள் எல்லா கடைகளையும் ஆக்கிரமித்தது. இதில் ஓரளவு எடை சரியாக மக்களுக்கு கிடைத்தது. விடுவார்களா போலிகள்..? இதிலும் புகுந்து விட்டார்கள்.

 இந்நிலையில் இன்றைய செய்தித்தாள்களில் போலி  தராசு தாயாரித்ததாக  சிலர் கைது செய்யப்பட்டுள்ள செய்தி வெளியாகியுள்ளது. அவர்கள் தயாரித்துள்ள  எலெக்ட்ரானிக் தராசுகளில், ஒரு வகை கம்ப்யூட்டர் சிப் பொருத்தப்பட்டு உள்ளது. இது, எடைகளை அதிகமாகவோ குறைவாகவோ காட்டும். ஒரு கிலோ எடையை 10 சதவீதம் அதிகமாகவும், குறைவாகவும் காட்டும் வகையில் தயாரித்து இருக்கிறார்கள். உண்மையான எடை கொண்ட தராசு ரூ.10 ஆயிரத்திற்கும், தில்லுமுல்லு செய்ய உதவும் தராசை ரூ.20 ஆயிரத்திற்கும் விற்பனை செய்து உள்ளனர்.

இந்த வகை எடை எந்திரங்களில் 4 பட்டன்கள் உள்ளன. ஒரு பட்டனை அழுத்தி எடை போட்டால், சரியான எடையை காட்டும். அடுத்த பட்டனை அழுத்தி எடை போட்டால் 50 சதவீத எடையை குறைத்து காட்டும். 3வது பட்டனை அழுத்தினால் 50 சதவீத எடையை அதிகரித்து காட்டும். 4வது பட்டன் வேறு ஒரு எடையை காட்டும். இவ்வாறு பலவிதமான எடைகளை காட்டும் வகையில் எடை எந்திரங்களை தயாரித்து, அவற்றை தமிழ்நாட்டில் உள்ள நகைக்கடைகள், ரேஷன் கடைகள், பழைய இரும்பு கடைகள், பாத்திரக்கடைகள் போன்றவற்றுக்கு கூடுதல் விலைக்கு விற்று பெரும் பணம் சம்பாதித்து இருக்கிறார்கள்.

ஏற்கனவே பெரும்பாலான ரேஷன் கடைகளில் வழங்கப்படும்  பொருட்கள் எடை குறைவாக  உள்ளதாக குற்றச்சாட்டு பரவலாக மக்கள் மத்தியில் உண்டு. ஆனால் இந்த போலி தராசு நகைக்கடை வரை சென்றுள்ளதை பார்க்கும் போது, ரேஷன் பொருள் போல, நாம்  வாங்கிய நகையும் எடை குறைவாக இருக்குமோ என சந்தேகம் வருகிறது.

ஏனெனில் நாம் வாங்கிய நகைகளை சிறிது காலம் கழித்து விற்பதற்காக சென்றால், நகைக்கடைக்காரர்  நமது நகையின் எடையை சொல்லும் போது, நாம் வாங்கியபோது உள்ள எடையை விட குறைவாக சொல்வார். அப்போது நாம் 'தேய்மானம்'  ஆகியிருக்கும்  என்று நம்மை நாமே தேற்றிக் கொள்வோம். ஆனால் நாம் வாங்கும்போதே எடை குறைய வாய்ப்புண்டு என்ற உண்மையை இந்த போலி தராசுகள் படம்பிடித்துக்  காட்டுகிறது.

அதிகாரிகள் போலி தராசு தயாரித்தவர்களை கைது செய்ததோடு நின்று விடாமல், அவர்கள் எந்தெந்த நிறுவனங்களுக்கு விற்பனை செய்துள்ளார்கள் என்பதையும் கண்டறிந்து, அந்த நிறுவனங்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க முன்வரவேண்டும்.

ஒரு திரைப்படத்தில் பட்டுச்சேலை வாங்கசெல்லும் கதாநாயகன், ஒரு வாளியில் தண்ணீரோடும், தீப்பெட்டியோடும் செல்வார். அதுபோல ரேஷன்கடை, நகைக்கடை, பாத்திரக்கடை என்று இப்போது  எங்கே சென்றாலும் நாமும் ஒரு தராசுடன்தான் செல்லவேண்டும் போல் தெரிகிறது.

தாய்ப்பாலைத் தவிர அனைத்திலும் போலி. ஆண்டவன்தான் இந்த போலிகளிடமிருந்து  மக்களை காக்கமுடியும்.