Sunday, February 12, 2012

Oddball Indian wedding rituals

If you thought wedding ceremonies can't get more bizarre than the groom breaking a wine glass by stepping on it at a Jewish wedding, or the Finnish bride going from door to door with a pillowcase to collect her wedding gifts accompanied by an old man with an umbrella, think again.

Not only are Baltic or Greek wedding traditions peculiar, some of our very own rituals surrounding the wedding can be as off-the-wall. True, a wedding brings happy tidings to the family, but it is after all the eclectic rituals associated with it that make for real memories.

The most common perception of a Hindu wedding is the lighting up of the Vedic fire around which the bride and groom walk seven times while the priest chants mantras. Assumingly for the sake of brevity, almost all television series or cinema dealing with a Hindu wedding conjures up an image similar to this. Then what about the many awkward and flamboyant rituals that precede or succeed it, rituals that are unique to every culture, rituals that are perhaps relevant no more but lovingly adhered to.

With the wedding season upon us, let's vet some truly obscure Indian wedding traditions that evoke emotions ranging from laughter, grimace, scorn, tears, to sheer amusement.

Bengali weddings: That the mother of the bride is not supposed to see the wedding is common knowledge. But did you know that on the day of the wedding, married women from the bride's family rise at the break of dawn and arrange a plate of aarti complete with sweets, twigs and incense, and go over to invite the Ganges to the wedding of their daughter. The holy river is believed to bless the girl in her future life.

Bihari weddings: This could be a rather curious post-wedding ritual performed by any groom's-side-of-the-family on bringing the bride home. Here an eager, expectant bride suddenly finds herself grappling with a huge earthen pot set on her head by her mother-in-law. Without losing time, few more pots are added to the pile while she is expected to bow down and touch the elders' feet. As the dramatic scene is played out, all and sundry gather to see how many pots the new bride actually balances, which is ostensibly an indicator of her skills at striking a balance in the family.

Tribal wedding in UP: Sarsaul, a small town in Kanpur district has given a new dimension to wedding hospitality. In keeping with the tradition, the baaratis here are not greeted with flowers and rose water spray, instead tomatoes and potatoes are hurled at them followed by a round of choicest abuses. Your sides might hurt imaging such a welcome, but the tradition takes root in the belief that a relationship that doesn't begin on a not-so-happy note always culminates in love.

Rabha weddings in Assam: The weddings of the Rabha tribes of Assam is an aesthetic affair. Performed as per Gandharva marriage tradition, the ceremony involves a simple exchange of garlands - no pheras around the fire, and a lavish feast to round it up with. An extremely patriarchal ritual, the newly wed on their first day together at the boy's family home is expected to give a hand in cooking the afternoon meal and serve only to the male, elderly members of the family. For the rest, food is served in subsequent batches by the helpers.

Malayalee weddings: How much the rest of the world frets about keeping the auspicious time for the wedding, tell this to the Nairs of Kerala and you'll manage a wry smile out of them. For them, the auspicious time is when they set out from their homes to marry in a temple or the ancestral home of the girl, and not the actual muhurat of the wedding. Like all Malayalee weddings, this too happens at daytime. A serene white wedding with a generous flash of gold jewellery, the bride and groom walk around the mandapam thrice - not seven times.

Kumaoni weddings: The use of flags in the marriage ceremony sets Himachali weddings apart. Traditionally, a white flag called 'Nishan' leads the marriage procession representing the bridegroom, followed by drummers, pipers and a white palanquin carrying the groom. The last man of the procession carries another flag, of red colour, representing the bride. When the marriage party returns from the girl's home after completing all ceremonies, the red flag takes the lead followed by a red palanquin of the bride, succeeded by the white palanquin of the groom, and the white flag at the tail end of the procession.

Tamil Brahmin weddings: At an Iyer wedding, just as the groom is about to step into the mandapam for the actual wedding ceremony, he has a change of mind and decides to pursue 'sanyaasam' (asceticism). An age-old Brahmin tradition 'Kasi Yaatrai' this, the bride's father too plays his part of a distressed father by reaching out to the groom and convincing him to take up 'Grahastham' (family life) with his daughter who would in turn support him in his spiritual pursuit. Umbrella, Bhagwad Gita, hand fan and sandals are the props used by the bride's father to win his would-be-son-in-law back.

anwesha.mittra@indiatimes.co.in

Thursday, February 9, 2012

ஒரு மனைவி, தன் கணவனிடம் அப்படி என்னதான் எதிர்பார்க்கிறாள்….?

ஒரு மனைவி,

தன் கணவனிடம்

அப்படி

என்னதான் எதிர்பார்க்கிறாள்….?

 

விதவிதமான பட்டுப்புடவைகளா? தங்கம், வைரம் என்று நகைக் குவியலா? பெரிய பங்களா, ஏ.சி.கார் என்று ஆடம்பர விஷயங்களா….? நிறைய சம்பளமும், ஏகப்பட்ட பேங்க் பேலன்ஸும் வேண்டுமென்றா? அல்லது தன் கணவன் மன்மதன் போல் அழகாக இருக்க வேண்டுமென்றா?

இல்லவே இல்லை…! மனைவியின் எதிர்பார்ப்பே வேறு விதமானது. அவள் அப்படி என்னதான் எதிர்பார்க்கிறாள் என்று கணவன் தெரிந்து கொண்டாலே அவர்களுடைய இல்லற வாழ்க்கை இன்னும் அன்னியோன்யம் கூடியதாக அமையும்!



கணவனிடம் ஒரு மனைவி எதிர்பார்க்கும் விசயங்கள் இவை தான்

 

ஆண்களேஉங்கள் மனைவியைப் புரிந்துகொள்ள இதைப் படியுங்கள்….

அன்பாகப் பிரியமாக இருங்கள்அதுவே ஆயிரக்கணக்கான மதிப்புள்ள புடவைகள் தராத மகிழ்ச்சியைத் தரும்!.

 

மனது புண்படும்படி பேசாதீர்கள். அது உங்கள் மனைவிக்கு உங்கள் மேல் உள்ள பிரியத்தைக் கூடச் சில சமயங்களில் குறைத்துவிடக் கூடும். அது போல அடிக்கடி கோபப்படவும் செய்யாதீர்கள்.

 

சாப்பாட்டில் குறை சொல்லக்கூடாது. பல கணவன்மார்கள் இதைத்தான் பெரிய கடமையாகச் செய்து கொண்டிருக்கிறார்கள். உப்பு அதிகமாக இருக்கிறது என்று நீங்கள் நினைத்தீர்கள் என்றால், இன்னிக்கி சமையல் சூப்பரா இருக்கு என்று முதலில் பாராட்டிவிடுங்கள். அப்புறம் மெதுவாக கொஞ்சம் உப்பைக் குறைச்சு போட்டிருக்கலாம் என்று சொல்லிப் பாருங்கள். உங்கள் மனைவி விஷயத்தைப் புரிந்து கொண்டு அடுத்த முறை இன்னும் சூப்பராக சமைப்பார்!

 

எந்த இடத்திலும் மனைவியை விட்டுக்கொடுக்கக் கூடாது. பலர் முன்னிலையில் திட்டவோ, மரியாதைக் குறைவாகவோ பேசாதீர்கள். இது உங்கள் அன்யோன்யத்தைக் குறைத்துவிடும்.

 

உறவினர் வீட்டு விசேஷங்களுக்கு மனைவியுடன் செல்லுங்கள். அது மனைவிக்கு நீங்கள் மரியாதை கொடுப்பதாகத் தோன்றச் செய்யும்.

 

எந்த ஒரு விஷயத்தையும் மனைவியுடன் கலந்து ஆலோசிக்க வேண்டும்.

மனைவி சொல்வதைக் காது கொடுத்துக் கேளுங்கள். காதுக்கு வைரத்தோடு வாங்கித் தருவதைவிட சந்தோஷம் தரும் விஷயம் இது.

 

மனைவியிடம் மனம்விட்டுப் பேசுங்கள். நிறைய விஷயங்களுக்கு நல்ல தீர்வு கிடைக்கும்.

 

மனைவி வித்தியாசமாக ஏதாவது செய்தால் ரசித்துப் பாராட்டுங்கள்.

 

மாதம் ஒரு முறையாவது வெளியில் கூட்டிக் கொண்டு போங்கள். உங்கள் பேரிலுள்ள கோபம்கூட ஓடி விடும்.

 

பிள்ளைகள் படிப்பில் அக்கறை கொண்டு உதவி செய்யுங்கள். அப்படிச் செய்தால் மனைவிக்கு இன்னும் உங்கள் மீதுள்ள காதலை அதிகப்படுத்தும்.

 

இரவு விழித்து அழும் குழந்தையைப் பார்ப்பதில் உங்களுக்கு இருக்கும் அதே கஷ்டம் போலத்தான் உங்கள் மனைவிக்கும் இருக்கும். எல்லா விஷயங்களுக்கும் இது பொருந்தும்.

 

மனைவி உடல்நலம் இல்லாமல் இருக்கும் பொழுது அக்கறையுடன் உடன் இருந்து கவனியுங்கள்.

அவளுடைய சின்னச்சின்ன தேவைகளைப் பூர்த்தி செய்து சிறு சிறு உதவிகள் செய்தாலே அவளுக்கு மிகுந்த மகிழ்ச்சி ஏற்படும்.

 

அம்மாவிடம் காட்டும் பாசத்தை மனைவியிடமும் காட்டுங்கள். தாயளவுக்கு தாரமும் வாழ்க்கையில் முக்கியத்துவம் வாய்ந்தவர்தான்!

 

எங்கு சென்றாலும் மனைவியிடம் சொல்லி விட்டே கிளம்புங்கள். குடும்பத்தில் பல குழப்பங்களைத் தடுக்க இது உதவும்.

 

மனைவியின் பிறந்த நாளை அவரைக் கேட்காமலேயே தெரிந்து வைத்துக் கொண்டு கட்டாயம் ஏதாவது சிறு பரிசாவது வாங்கிக் கொடுங்கள். அல்லது அவளுக்கு எது பிடிக்கும் என்று தெரிந்து கொண்டு அதை இன்ப அதிர்ச்சி ஏற்படுத்தும் பரிசாகக் கொடுக்கலாம்.

 

ரொம்ப முக்கியமான விஷயம் இதுமனைவியிடம் பொய் பேசாமல் இருங்கள்.

 

கடைசியாக

கெட்ட பழக்கங்கள் எதுவும் இல்லாமல் இருக்கும் கணவனையே மனைவி கடவுள் தனக்குத் தந்த பெரும் வரமாக நினைப்பாள்.

 

Tuesday, February 7, 2012

சதை கரைந்து, உடல் எடை குறைந்தது.


ந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் உள்ள சிறப்புகளில் முக்கியமானதுஎது தெரியுமா?

பிள்ளைப் பாசம்! தனக்குத் தேவையானது கிடைக்காவிட்டால்கூடப் பரவாயில்லை. தனக்கு மிகப் பெரிய அவமானம் நேர்ந்துவிட்டால்கூட, அதை பல்லைக் கடித்துத் தாங்கிக் கொள்வார்கள். உடலில் ஏதும் பிரச்னை என்றால் கூட அலட்டிக்கொள்ள மாட்டார்கள். ஆனால், தன் பிள்ளைகளுக்கு ஒரு சிறு துரும்பளவு பிரச்னையோ, வலியோ, வேதனையோ வந்து விட்டால், அதைத் தாங்கிக் கொள்ளவே மாட்டார்கள், பெற்றோர்கள்!

இங்கே, திருமணத்துக்குப் பிறகு கணவன்- மனைவி என்று வாழத் துவங்குபவர்கள், பிறகு குழந்தை பிறந்ததும் பெற்றோர்கள் ஆகிவிடுகிறார்கள். பெற்றவர்கள் ஆகிவிட்டவுடனேயே, தன் குழந்தை என்னென்ன சந்தோஷங்களையெல்லாம் பெற வேண்டும் என்று பட்டியல் போடத் துவங்கிவிடுகிறார்கள்.

குழந்தைகளின் பேச்சு, சிரிப்பு, ஓட்டம், ஆட்டம், கோபம், அழுகை எனச் சகலத்தையும் ரசித்து ரசித்து வாழ்கிறார்கள். அவர்களின் ஒவ்வொரு நாளின் விடியலும் குழந்தையிடம் இருந்து துவங்கி, அன்றைய பொழுது குழந்தையிடமே நிறைவுறுகிறது.

கடைவீதிகளில், கடைகளில், உணவகங்களில்... எந்தப் பொருளைப் பார்த்தாலும், எந்த உணவைப் பார்த்தாலும் சட்டென்று பிள்ளைகளின் நினைவில் மூழ்குகிற தகப்பன்களும் தாயார்களும் நிறைந்திருக்கிற பூமி இது! அந்த அன்பு எனும் சக்திதான், மரம் செடி கொடிகளிலும், காற்றிலும் மழையிலுமாகப் பரவி, இந்த உலகைச் செழிக்கச் செய்துகொண்டிருக்கிறது. அன்பு எனும் மந்திரம், சொல்லவொண்ணா சக்தி கொண்டது!

பார்க்கிற பொருளையும் பண்டங்களையும் வாங்கிக் கொடுத்து, அதைக் குழந்தைகள் சாப்பிடுவதைப் பார்த்துப் பரவசப்படுகிற ஜீவன்கள், பெற்றோர்கள்.

அப்படியான அன்பான பெற்றோர், சென்னையின் புறநகர்ப் பகுதியில் இருந்து வந்திருந்தனர். கூடவே, அவர்களின் மகனும் வந்திருந்தார்.

''எங்க பையன் பிளஸ் டூ படிக்கிறான். படிப்புல கவனம் செலுத்த முடியலை. ரெண்டாவது மாடியில அவனுக்கு கிளாஸ் ரூம். சாப்பிட, தண்ணி குடிக்கன்னு கீழே வந்துட்டு, மாடியேறிப் போனா, மூச்சு வாங்குது. ரொம்பவே கஷ்டப்படுறான் சுவாமி. சீக்கிரமே டயர்டாயிடுறான். இத்தனைக்கும் குழந்தை, கண்டபடி எதுவும் சாப்பிடுறதே இல்லை'' என்று சொல்லிக் கண்ணீர் விட்டார் அந்தத் தாய்.

''ஏழு மணிக்கெல்லாம் தூங்கிடுறான் சுவாமி. எழுப்பி, சாப்பாட்டை ஊட்டி விட்டாத்தான் உண்டு. இல்லாட்டா, சாப்பிடாம அப்படியே தூங்கிடுவான். இப்படி அதிகம் சாப்பிடாதபோதே, இத்தனை வெயிட் போட்டிருக்கானேன்னு டாக்டர்ங்க கிட்டே காட்டினா, 'இது இயல்பா அமைஞ்ச விஷயம். போகப் போக சரியாயிடும்'னு சொல்லிட்டாங்க. இந்தப் பிளஸ் டூல கவனமா படிச்சு நல்ல மார்க் எடுத்தால்தான், அடுத்த கட்டமா நல்ல காலேஜ்ல இடம் கிடைச்சு, நல்ல விதமாப் படிச்சு, முன்னுக்கு வரமுடியும். இப்படிச் சுருண்டு சுருண்டு படுக்கறவனைப் பார்க்கவே கஷ்டமா இருக்கு சுவாமி!'' என்று அந்தப் பையனின் அப்பா, கலக்கமான முகத்துடன் சொல்லி முடித்தார்.

விஷயம் இதுதான். ஒரே பிள்ளை என்று மிகுந்த பிரியத்துடன், அவன் கேட்டதையெல்லாம் வாங்கிக் கொடுத்திருக்கிறார்கள். அவன் கேட்காத உணவையும் வாங்கித் தந்திருக்கிறார்கள். எல்லாமே எண்ணெய்ப் பதார்த்தங்கள். ஒரு பக்கம் தின்பண்டங்களால் நிரம்பிய வயிறு, சாதத்தையும் காய்கறிகளையும் ஏற்க மறுத்ததன் விளைவு... அந்தப் பையன் குண்டாகிவிட்டதுடன் உணவைப் பார்த்தாலே வெறுக்கத் துவங்கினான்.

அதிக எடை அவனுக்குச் சோர்வைத்தான் கொடுத்தது. அந்தச் சோர்வு, எதன் மீதும் ஒட்டாத மனநிலையைத் தந்தது. அந்த மனதுடன், அவனால் படிக்க முடியவில்லை. படிப்பு வேம்பாகக் கசந்தது. பள்ளி விட்டு வீட்டுக்கு வந்ததும், தின்பண்டங்களைத் தின்று முடித்து, ஏழு மணிக்கெல்லாம் படுக்கைக்குச் சென்று விட... அதீத தூக்கமும் ஒரு வகை நோய் என்பதை அந்த வீடு புரிந்து கொள்ளவில்லை.

அந்தப் பையனுக்கு மனவளக் கலைப் பயிற்சி கொடுக்கப்பட்டது. குறிப்பாக, மகராசனப் பயிற்சிகள் சொல்லிக் கொடுக்கப்பட்டன. அந்தப் பயிற்சியின் அடுத்தடுத்த நிலைகளை மேற்கொள்ள... உடல் முழுவதும் ரத்த ஓட்டமும் வெப்ப ஓட்டமும் காற்றோட்டமும் உயிரோட்டமும் சீராகத் துவங்கின. சதை கரைந்து, உடல் எடை மெள்ள மெள்ளக் குறைந்தது.

எடை குறையத் துவங்கியதும், சுரப்பிகளின் பணிகள் ஒழுங்குக்கு வந்தன. தங்கு தடையின்றி, செவ்வனே தங்களது கடமைகளைச் செய்யத் துவங்கின. தொப்பைப் பகுதியில் ஒட்டிக் கொண்டிருந்த சதைகள் கரைந்து, தட்டையான வயிற்றுடன் அந்தப் பையனைப் பார்க்கவே ஸ்லிம்மாக, அத்தனை அழகாக இருந்தது.

கால்களிலும் வயிற்றுப் பகுதிகளிலும் சிறுகச் சிறுக பலம் கூடிக் கொண்டே வந்தது. எடை குறைந்து, கால்களின் பலமும் கூடியபோது, அந்தப் பையனால் மிக எளிதாகப் படியேறவும் ஓடவும் முடிந்தது. படிப்பில் கவனம் செலுத்தி, அதிக மதிப்பெண் எடுத்து, வீட்டையே மகிழ்ச்சியில் ஆழ்த்தினான்.

மகராசனத்தின் ஒவ்வொரு பயிற்சியும் உன்னதமானது. மொத்த உடலின் பாகங்களையும் பரிசுத்தமாக்கக் கூடியது. மகராசனம் போல் படுத்துக்கொண்டு, கால்களை நன்றாக நீட்டிக்கொண்டு, வலது பாதத்தை இடது பாதத்தில் கணுக்காலுக்குக் குறுக்கே வைத்துக் கொள்ளுங்கள். கைகள் வழக்கம் போல், சின் முத்திரையுடன் உடலில் இருந்து 45 டிகிரி கோணத்தில் தள்ளியே இருக்கட்டும். இந்த நிலையில் இருந்தபடி, வலது பக்கம்- இடது பக்கம் என மூன்று முறை உடலை அப்படியே திருப்புங்கள்.

அதேபோல், அடுத்ததாக... இடது பாதத்தை வலது பாதத்தின் கணுக்காலுக்குக் குறுக்கே வைத்துக் கொள்ளுங்கள். பிறகு, வலது பக்கம்- இடது பக்கம் என மூன்று முறை மாறி மாறி, உடலைத் திருப்புங்கள்.

இந்த இரண்டு பயிற்சிகளிலும் தலை நேராகவே இருக்கட்டும். கைகள் சின் முத்திரையுடனே இருக்கட்டும். வலது பக்கம் கால்கள் திருப்புகிறபோது, தலையை இடது பக்கமாகவும், கால்களை இடது பக்கம் திருப்புகிற வேளையில், தலையை வலது பக்கமாகவும் திருப்புங்கள்.

கழுத்து நரம்பு முதல் கணுக்கால்களில் பரவிக்கிடக்கிற நரம்பு வரைக்கும் செயல்பாடுகளில் ஒருவித மாற்றம் கிடைப்பதை உங்களால் உணர முடியும்.

'ச்சே... பாழாப் போன இந்த உடம்பைத் தூக்கிட்டு நடக்கறதைப் போல கொடுமையான விஷயம் எதுவுமே இல்லை' என்று தன் உடம்பு குறித்து வெகுவாக அலுத்துக்கொள்கிற அன்பர்கள், இந்தப் பயிற்சியை அவசியம் செய்ய வேண்டும்.

பல நிலைகள் கொண்டது மகராசனப் பயிற்சி. இந்தப் பயிற்சிகளைச் செவ்வனே செய்தால், இந்த உடலுக்கும் நமக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்பது போன்று உணர்வீர்கள்!

உடலை மறந்து வாழ்வது என்பது ஆன்மிகத்தின் மிக அருமையான, உன்னத நிலை என்பது தெரியும்தானே, உங்களுக்கு?!

Monday, February 6, 2012

Fruits we eat are loaded with chemicals

Fruits and vegetables are known to be possessing antioxidant and anti-ageing factors. If they are a source of harmful chemicals as well, then are we heading towards fitness or otherwise?

Fresh colourful fruits and vegetables are a beautiful sight, commonly seen in this season of the year. Health consultants highly recommend fruits and salads in their prescriptions and we take the best advantage of the availability of the range of variety in the markets. But how close we are to nature, when we are consuming these fruits is a very big question mark. Fruits and vegetables are known to be possessing antioxidant and anti-ageing factors. If they are a source of harmful chemicals as well, then are we heading towards fitness or otherwise?

In recent times, there is much concern about artificial ripening of fruits. Though fruits like mango naturally ripen in trees; some chemicals are used to ripen them artificially which hasten the ripening process. Ripe fruits are not suitable to carry and distribute as they get rotten. So traders pick unripe fruits and use certain methods to increase their shelf life.

For many years, ethylene had been used as a fruit ripening agent, but nowadays ethane, calcium carbide and ethephon are commonly used for faster ripening. But inappropriate use of these chemicals to ripen fruits is associated with many health hazards.

Ripening is a process in fruits that causes them to become edible. Globally, the ripening is done through gas emission systems or ethylene generator systems, depending on quality and shelf life desired.

"Fruits like bananas ripened through scientific ways will have uniform colour, good taste and longer shelf life. The market is evolving and awareness is slowly growing. Currently, small volume of banana traded goes through scientific ripening process," says B Thiagarajan, president, air-conditioning & refrigeration products group, Blue Star Ltd, which offers gas emission ripening systems as well as ethylene generator systems.

Ill-effects of artificial ripening
- Ethylene is known to cause damage to the neurological system, affects the eyes, skin, lungs, memory and leads to prolonged hypoxia (lack of oxygen supply).

- Ethephon is a plant growth regulator. It promotes pre-harvest ripening in apples, currants, blackberries, blueberries, cranberries, morello cherries, citrus fruit, figs, tomatoes, sugar beet and fodder beet seed crops, coffee, capsicum. Ethephon is easily converted into ethylene and has the same harmful effects.
State Food and Drugs Control Administration (FDCA) has banned the use of ethephon last year, but fruit traders have now resorted to bethylene.

- Bethylene is not known to have any harmful effects but it alters the taste and the nutritional value of fruits and also reduces the shelf life of the fruits, if used beyond the recommended limits. And most of the traders do use quantities of bethylene which are much higher than the prescribed limits.

- Besides ripening agents, farmers also use many pesticides to grow fruits and vegetables which are detrimental to our health.
Take care

- Wash your fruits and vegetables in a sink full of water in which a tablespoon of salt is added with a lime squeezed in it. Allow the fruits to float in the sink for 5-7 minutes before rinsing them with plain water and then draining them in a colander. Allow to dry and then consume.

- While selecting fruits, look for nail marks, punctures or powdered applications on the fruits. Do not pick fruits with any of the above signs.

(Inputs by Sveta Bhassin, nutritionist and wellness consultant)

Saturday, February 4, 2012

VISION POSITIVE

VISION POSITIVE

 

"Whatever is bestowed on him by God must be for his good." – Sri Sai Satcharitra, Ch.  20

 

Sri Krishna and Arjuna once were guests of a widow.  The widow had no children, nobody. She was all alone. But she had a cow. This cow was her only means of support. She used to sell milk, and by selling milk she used to maintain her life.


She was a great devotee of Sri Krishna. When Sri Krishna and Arjuna went to visit her in disguise, incognito, she was so happy to see these two divine guests. She fed them with whatever she had in her house. Sri Krishna was extremely pleased with her surrendering attitude and her devotion. On their way back, Arjuna said to Krishna, You were so pleased with her. Why didn't you grant her a boon? Why didn't you tell her that she would be prosperous soon, now that you are pleased with her?


I have already granted her the boon that her cow must die tomorrow.


What? Her only means of support? She has only the cow, and nothing else. Without the cow how can she live on earth?


Krishna answered, You don't understand me. She always thinks of the cow. The cow has to be fed, has to milked, has to be bathed and so forth. I want her only to think of me, and when the cow is gone, she will think of me all the time, twenty-four hours. Then soon the time will be right for me to take her away from this world, and after a few years I will give her a better and more fulfilling incarnation. When she has nobody on earth, not even the cow, she will try and spend all her time, day and night, in devoting herself to me. Otherwise, this way she will linger on earth and constantly think of the cow and not of me.

Sometimes when we are in utter difficulty, the Grace of God acts in a very peculiar way. We feel that God becomes crueler when we are in difficulties and sufferings. But very few people realise our problems and sufferings are actually a blessing in disguise in developing more detachment from the world and attaching towards a spiritual life and God.


Learn to see troubles with a positive eye.

இட்லி, தோசை கடை மாவு: ஒரு ஸ்லோ பாய்ஸன்

இட்லி, தோசை கடை மாவு:

ஒரு ஸ்லோ பாய்ஸன்

என்ன தலைப்பைப் பார்த்து பயந்துவிட்டீர்களா, ஆம் இது பெரிய உண்மை. பரோட்டா மைதாவினால் செய்த பண்டம் அதில் உள்ள கெமிக்கல் உடம்புக்கு நல்லது அல்ல என கொஞ்ச நாளுக்கு முன் ஃபேஸ்புக்கில் பெரிதளவில் பேசப்பட்ட செய்தி. பரோட்டாவது நமது பாரம்பரய உணவு அல்ல, மேலும்
அதை இளைஞர்கள்தான் உண்ணுவார்கள், ஆனால் இப்பொழுது ஒரு வயது குழந்தை முதல் 80 வயது வயாதனவர்கள் வரை உண்பது "இட்லி" எனப்படும் ஒரு தமிழனின் உணவு.


இட்லியை நீங்கள் வீட்டில் மாவரைத்து சாப்பிட்டால் பிரச்சினை கொஞ்சமும் இல்லை இதையே கடையில் வாங்கி சாப்பிட்டால் பல பேருக்கு ஒத்து வராது என்பது மறுக்க முடியாத உண்மை. அப்படி என்னததான் பிரச்சினை என்கிறீர்களா, அதற்குத் தேவையான் மாவு பற்றி தான் இந்த ஆய்வு கட்டுரை.

ஆம் ஒரு காலத்தில் நாம் ஆட்டுரலில் மாவு அரைத்தோம், பின்பு அது மிக்ஸி மற்றும் எலக்ட்ரானிக் கிரைன்டர்ஸ் வந்தது. அதுவும் பரவாயில்லை வாழ்க்கை மாற்றங்களின் காரணத்தால் தவிர்க்க முடியாத ஒரு விஷயமாகிப் போனது. சமீபமாக ஒரு முக்கிய திருப்பு முனையாக இட்லி தோசை மாவு ரெடியாக இப்பொழுது பட்டி தொட்டி, அண்ணாச்சி கடை முதல் பெரிய சூப்பர் மார்க்கெட் வரை விற்கப்படுகிறது. மக்களும் இட்லி மாவு அரைப்பதையே மெல்ல மெல்ல மறந்து வருகின்றனர்.


முன்பாவது திடீர் டிபன் ரவா உப்புமாதான் இப்போது நம்ம வாண்டுகளிடம் " தம்பி ஒடி போய் ஒரு பாக்கெட் இட்லி தோசை மாவு தெருமுனை கடையில வாங்கி வா" அப்ப்டின்னு சொல்லி வாங்கிவந்த மாவை இட்லி தோசை ஊத்தி மிச்சத்தை ஃபிரிஜ்ஜில் வைத்து அது முடியும் இட்லி தோசை சாம்ராஜ்யம் நடக்கும். ப்போது இந்தமாவால் பேச்சலர்ஸ் கூட இட்லி தோசை செய்கின்றனர்.


இந்த மாவு ஒரு உயிர்கொல்லி - ஸ்லோ பாய்ஸ்ன் என்பது ஏனோ நிறைய பேருக்கு தெரிவதில்லை. இதன் பயங்கரத்தை இப்பொழுது கூறுகிறேன். உங்கள் பங்கிற்கு நீங்களும் இந்த விழிப்புனர்ச்சியை உங்கள் உற்றார் உறவினர்களிடையே கொண்டு செல்லுங்கள்.

1.
நீங்கள் வாங்கும் எந்த ஒரு வெட் ஃப்ளோர்-Wet Flour (ஈர பத தோசை மாவிற்க்கு) ஐ எஸ் ஐ-ISI தர சான்றிதழ் கிடையாது. அதனால் இது எந்த ஒரு தரக்கட்டுப்பாட்டு கூடத்திலும் சோதனை செய்யப் படுவதில்லை. எனவே சுத்தம் சுகாதாரம் பற்றியெல்லாம் கவலைப் படாமல் எங்கெங்கோ தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு எடுத்துச் செல்லப்படுகிறது.

2.
இந்த மாவு சில மட்ட்மான அரிசியும் உளுந்தும் பயன்படுத்தப் படுவது மட்டுமல்லாமல், முக்கியமாக மாவுக்கு தோலில் வரும் காயத்திற்கு பயன்படுத்தபடும் போரிங் பவுடர் மற்றும் ஆரோட் மாவு போடுவதால் மாவுக்கு புளிப்பு வாசனை கண்டிப்பாக வராது. அது போக மாவும் பொங்கி நிறைய வரும் என்பதால் இதை கலக்கின்றனர்.  இதே மாதிரி வீட்டில் அரைத்த மாவை ரெண்டு நாள் வைத்து மூனாவது நாள் முகர்ந்து பாருங்கள் புளிப்பு வாசைனையும் வரும் தோசையும் புளிக்கும். ஏன் என்றால் மாவு பக்குவமாவதும் தயிர் உறைவதும் ஒரு நல்ல பேக்டீரியாவின் செயலாகும். இதை தவிர்க்கத்தான் கடையில் வாங்கும் மாவுக்கு 6 நாள் கியாரன்டி அளித்தும் ஒரு வாசனை வராமல் இருக்க காரணம் இந்த போரிக் பவுடர் மற்றும் ஆரோட் மாவுதான்.


3.
முக்கியமாக இந்த மாவை அரவை செய்யும் கிரைன்டர்கள் கமர்ஷியல் ரகம் இல்லை. அதாவ்து ஒரு நாளைக்கு 3 - 6 மணி நேரம் மட்டுமே அரைக்க வேண்டும். ஆனால் இவர்கள் 12- 18 மணி நேரம் தொடர்ந்து ஓட்டுவதால் அந்த கல் கொஞ்சம் கொஞ்சமாக தேய்மானம் ஏற்பட்டு பல சமயம் இந்த சிறு கருங்கல் துகள்களால் நிறைய பேருக்கு சிறு நீரகத்தில் கல் உண்டாகிறது.


4.
உங்களுக்கு நன்கு தெரியும் சமையல் செய்யும் ஆட்கள் கை அடிக்கடி அலம்ப வேன்டும் மற்றும் நகங்கள் வளர்க்கவே கூடாது. ஆனால் இந்த மாதிரி எந்த ஒரு சுத்ததையும் இவர்கள் பேனுவதில்லை. ஒவ்வொரு நகத்தின் இடுக்கிலும் உள்ள கிருமிகள் இந்த மாவில்கெட்ட பேக்டிரியாக்கள் மற்றூம் கிருமிகள்  ஈஸியாக சேர்ந்து உங்களுக்கு எதிர்ப்பு சக்தி குறைந்து மற்றும் வாந்தி பேதி அடிக்கடி உடம்பு முடியாமல் போவதற்கு இதுவும் ஒரு காரணம்.

5.
கிரைன்டரை எனக்கு தெரிந்து தாய்மார்கள் பயன்படுத்த தயங்கும் இரண்டு விஷயங்கள். 1. கிரையன்டரை சுத்தம் செய்ய கஷ்டம் 2. கல்லை துக்கி போட வேண்டும். ஆனால் இவர்கள் கிரைன்டரை ஒவ்வொரு முறையும் அரைத்து முடிந்ததும் கழுவுவதில்லை அதனால் அந்த கிரைன்டரின் கிருமிகள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இவர்கள் கமர்ஷியலாக பயன்படுத்தும் ஒவ்வொரு முறையும் வெண்ணீர் (Hot Water) ஊற்றி சுத்தம் செய்ய வேண்டும் ஆனால் இவர்கள் ஒரு வாரத்திர்க்கு ஒரு முறை கழுவினாலே அதிகம், கிரைண்டரில் ஒட்டி இருக்கும் மாவுப் பொருட்களினால் எலிகள் மற்றும் கரப்பான் பூச்சிகள் அந்த மிச்ச மாவை ருசித்து அந்த மிஷினின் சுத்ததன்மையை கெடுத்துவிடுகிறது.

6.
என்னதான் நல்ல அரிசி உளுந்து போட்டாலும் நல்ல தண்ணீர்தான் ஊற்றி மாவு அரைக்க வேண்டும். இவர்கள் எந்த தண்ணீரை உபயோகப் படுத்துகின்றனர் என்பது நமக்குத் தெரியாது. பொதுவாக இவர்கள் போரிங் தண்ணீர் மற்றும் உப்பு தண்ணிரை ஊற்றும் காரணம் உப்பு போட வேண்டிய வேலை இல்லை என்பதுதான்.

7.
அந்த கால ஃபார்முலா படி நம் முன்னோர்கள் இட்லிக்கு மாவு அரைக்கும் போது ஒரு கை வெந்தயத்தை போட்டு அரைப்பார்கள். வெந்தயம் ஒரு இயற்கை ஆன்டிபயாடிக், உடம்பு உஷ்னம், வாய் நாற்ற்ம், அல்சர்க்கு இது ஒரு நல்ல மருந்து ஆனால் இவர்கள் யாரும் வெந்தயத்தை உபயோகிப்பதில்லை.

8.
கிரையன்டரில் மாவு தள்ளிவிடும் அந்த ஃபைபர் பிளாஸ்டிக்கை ஆறு மாதத்திற்கு அல்லது வருடத்திற்கு ஒரு முறை மாற்ற வேன்டும் ஆனால் இவர்கள் அதை மாற்றவே மாட்டார்கள் அதனால் அந்த பிளாஸ்டிக் கொஞ்சம் கொஞ்சமாக தேய்ந்து அதுவும் இந்த மாவில் சேர்ந்து கொள்ளும்.

9.
கிரையன்ட்ர் ஒட அந்த மத்திய குழவியை இனைக்கும் ஒரு செயின். அந்த செயினை இவர்கள் கழட்டி ஒரு கார்பன்டம் பெல்ட்டை மாட்டி இருப்பர்கள் ஒன்று சத்தம் வராமல் இருபதற்க்கும் மற்றூம் மாவு கை தள்ளி விடாமல் அரையும் டெக்னிக்குககாக. அந்த பெல்ட் தண்ணீர் பட்டு பட்டு அந்த பெல்ட் துகள்களும் அந்த மாவில்தான் கலக்கிறது.

10.
இந்த மாவை இவர்கள் அரைத்து கடைக்கு பிளாஸ்டிக் பேக் மூலம் சப்ளை செய்கின்றனர். நமது தமிழ் நாட்டு கிளைமேட்படி இதை ஃப்ரீஜ்ஜில் தான் வைக்க வேண்டும் அப்பொழுது தன் இந்த மாவில் பாக்டீரியாவின் உற்பத்தியை கட்டுபடுத்த முடியும், ஆனால் நம்மூர் கடைகளில் ஃப்ரிட்ஜில் வைத்திருந்தாலும் வீட்டிலுள்ள பிரிஜ்ஜில் வைத்திருந்தாலும் இப்போது இருக்கிற மின்வெட்டு பிரச்சனையில் இந்த மாவு குளிர்விக்கப் படாத்தால் மெல்ல மெல்ல பாய்ஸ்னாகிறது.

இந்த மாவை சோதனை செய்ததில் ஈகோலி (E-COLI) எனும் பேக்டீரியா இருப்பது தெரியவந்தது. இதனால் சிலருக்கு உடனே பிரச்சினையும் சிலருக்கு ஸ்லோ பாய்ஸனாகவும் மாற வாய்ப்புள்ளது. இந்த ஈகோலி மைனஸ் 24 டிகிரிக்கு கீழே இருந்தால் தான் கொஞ்சமாவது கட்டுப்படும். அதனால் தயவு செய்து இவர்கள் கொடுக்கும் 6 நாள் கியாரன்டியில் எவ்வளவு பாக்டீரியா பல்கிபெருகி இருக்கும் என்பதை நீங்களே கணக்கிட்டுக் கொள்ளுங்கள். எனவே ஈரமான இட்லி தோசை மாவு வாங்குவதை கண்டிப்பாக தவிர்த்து விடுங்கள்.

Thursday, February 2, 2012

எல்லா நாளும் நல்ல நாளே......

சென்ற வாரம் நான் என் சகோதரி வீட்டிற்கு சென்றிருந்தேன். அங்கு உணவருந்தி ஓய்வெடுத்த பின் அவர்கள் நீண்ட நாட்களாக ஒரு வீட்டுமனை வாங்க வேண்டும் எனக் கூறி வந்ததை நினைவுபடுத்தினேன். எனக்குத் தெரிந்த ஒருவர் நல்ல இடத்தில் ஒரு வீட்டுமனை இருப்பதாகவும் விலையும் சற்று சகாயமாகவுள்ளதாகவும் கூறினார். அதைப் போய் இன்று பார்த்துவிட்டு வரலாம் என்று கூறினேன். உடனே என் சகோதரி இன்று வேண்டாம் அண்ணே என்றாள். நான் ஏன்? இன்று விட்டால் மனை கிடைக்காமல் போகலாம் வேகமாக விற்று வருவதாகக் கேள்விப் பட்டேன். இன்று ஏன் வேண்டாம் என்கிறாய்? எனச் சகோதரியைக் கேட்டேன். அவர் இன்று அஷ்டமி, நாளை நவமி என்றாள்.ஆகையால் நாளை மறுநாள் போய் பார்க்கலாம் என்று சொன்னார்.

நான் அஷ்டமி, நவமி என்றால் என்ன? ஏன் கூடாது என்பதற்குக் காரணம் என்ன? என்று கேட்டேன். அதற்கு என் சகோதரி எனக்கு விளக்கம் தெரியாது அண்ணே, ஆனால் எல்லோரும் அவை நல்ல நாட்கள் இல்லை என்பதால் நானும் கூறினேன் என்று கூறினார்.

நான் சிரித்துக் கொண்டே அஷ்டமி, நவமியில் நீங்கள் சாப்பிடுவதில்லையா? ரயில், பஸ், விமானம் ஆகியவை ஓடுவதில்லையா? மருத்துவமனை, வங்கிகள் மற்றும் அலுவலகங்கள் செயல்படுவதில்லையா? அவசர அறுவை சிகிச்சையைத் தவிர்க்கிறோமா? என்று கேட் டேன்.

அதற்கு என் சகோதரி போங்க அண்ணா நீங்க எப்போதும் இப்படித் தான் எடக்கு முடக்காகப் பேசுவீர்கள் என்று கேலி செய்தார். நான் இல்லையம்மா இதற்கு விளக்கம் கூறுகிறேன். நாம் ஓரளவு படித்தவர்கள் எதையும் அறிவுப்பூர்வமாக சிந்தித்துத் தெரிந்து கொள்ள வேண்டாமா? என்று கேட் டேன். மைத்துனரும், என் சகோதரியும் நீங்கள்தான் விளக்குங்களேன் என்றார்கள்.


நான் பின்வரும் விளக்கத்தைக் கூறினேன்.


ஒரு மாதத்திற்கு அமாவாசை, ஒரு பவுர்ணமி வரும். அந்த இரு நிகழ்ச்சிகளும் பூமி மற்றும் சந்திரனின் சுழற்சியால் ஏற்படுவதை நீங்கள் அறிவீர்கள். நாட்களைச் சுட்டிக்காட்ட அமாவாசையிலிருந்து அல்லது பவுர்ணமியிலிருந்து எத்தனையாவது நாள் என்று குறிப்பிட்டுக் காட்டவே பிரதமை முதல் சதுர்த்தசி வரை 14 நாட்களுக்கும் பெயரிட்டிருக்கிறார்கள். பெயர் தமிழில் வைத்திருந்தால் விளங்கும். சமஸ்கிருதம் ஆதிக்கத்தில் இருந்தபோது தமிழ் வருடங்களின் பெயரை கூட பொருள் தெரியாத வடமொழியில் அல்லவா வைத்து விட்டார்கள்? நாமும் அதை மாற்ற மனமின்றி வைத்துக் கொண்டு திண்டாடுகிறோம். அதே போல் தான் நாட்களின் பெயர்களும் பின்வருமாறு வடமொழியில் உள்ளன என்று விளக்கினேன்.

1. பவுர்ணமி, அமாவசைக்கு அடுத்த நாள் பிரதமை பிரதமர் என்றால் முதல்வர் என்று பொருள். அதுபோல் பிரதமை என்றால் முதல் நாள்.


2. துவிதை என்றால் இரண்டாம் நாள் தோ என்றால் இரண்டு. துவிச் சகர வண்டி என்று சைக்கிளைக் கூறுவது தங்களுக்கு தெரியும்.

3. திரிதியை என்றால் மூன்றாம் நாள் திரி என்றால் மூன்று அல்லவா?


4. சதுர்த்தி என்றால் நான்காம் நாள் சதுரம் நான்கு பக்கங்கள் கொண் டது.

5. பஞ்சமி என்றால் அய்ந்தாம் நாள் பாஞ்ச் என்றால் அய்ந்து எனப் பொருள்.

6. சஷ்டி என்றால் ஆறாம் நாள்.


7. சப்தமி என்றால் ஏழாம் நாள். சப்த ஸ்வரங்கள் என ஏழு ஸ்வரங்களைக் கூறுவதில்லையா?

8. அஷ்டமி என்றால் எட்டாம் நாள். அஷ்டவக்கிரம் என்று எட்டு கோணல்களைக் கூறுவதையும் அஷ்ட லட்சுமி என்றெல்லாம் கூறக் கேட்டிருக்கிறோம்.

9. நவமி என்றால் ஒன்பதாம் நாள் நவ என்றால் ஒன்பது என்றும் நவ கிரகங்கள் என்பதும் தங்களுக்குத் தெரியும்.


10. தசமி என்றால் பத்தாம் நாள் தஸ் என்றால் பத்து அல்லவா? தாரம் என்ற கடவுளின் அவதாரங்களைக் கூறக் கேட்டிருக்கிறோம்.

11. ஏகாதசி என்றால் பதினொன் றாம் நாள் ஏக் என்றால் ஒன்று தஸ் என்றால் பத்து இரண்டின் கூட்டுத் தொகை பதினொன்று.


12. துவாதசி என்றால் பன்னிரண் டாம் நாள் தோ/துவி என்றால் இரண்டு தஸ் என்றால் பத்து எனவே இதன் கூட்டுத்தொகை பன்னிரண்டு ஆகும்.

13. திரியோதசி என்றால் பதிமூன் றாம் நாள் திரி என்றால் மூன்று + தஸ் என்றால் பத்து ஆகப் பதிமூன்று.


14. சதுர்த்தசி என்றால் பதினான்காம் நாள் சதுர் (சதுரம்) என்றால் நான்கு அத்தோடு தஸ் என்ற பத்து சேர்த்தால் பதினான்கு என ஆகும்.

சதுர்த்தசிக்கும் அடுத்தது பவுர்ணமி அல்லது அமாவாசை ஆகி விடும். இப்படி நாட்களைக் சுட்டிக் காட்ட வைத்த பெயர்களில் என்ன வேறுபாடு இருக்கிறது? அமாவாசை அல்லது பவுர்ணமிக்குப் பிறகு வரும் எட்டாம் நாளும் ஒன்பதாம் நாளும் கெட்டவை என்பதற்கு ஏதேனும் அறிவியல் பூர்வமான விளக்கம் இருந்தால் கூறுங்கள்.  என் சகோதரியும் மைத்துனரும் வாயடைத்துப் போயினர். இந்த விளக்கம் கண்டு அவர்கள் மிகத் தெளிவு பெற்றனர்.


நான் மேலும் கூறினேன். அட்சய திரிதியையில் தங்கம் வாங்க அறியாத மக்கள் தங்கக் கடைக்கு ஓடுவதும் அறியாமையே என்றேன். என் சகோதரி மிகவும் ஆர்வமாக இதற்கும் விளக்கம் கூறுங்கள் அண்ணா என்று கேட்டுக் கொண்டாள். க்ஷயம் என்றால் தேய்வு (-க்ஷயரோகம் = எலும்புருக்கு நோய் அக்ஷயம் என்றால் வளர்ச்சி அதாவது வளர்பிறையில் அமாவாசையிலிருந்து மூன்றாம் நாள் திரிதியை என்று ஏற்கெனவே விளக்கிக் கொண்டோம். அதாவது வளர்பிறையில் மூன்றாம் நாள் இதில் என்ன சிறப்பு இருக்க முடியும்இது தங்க வியாபாரிகள் சேர்ந்து செய்த விற்பனை உத்தியே ஆகும் என்று விளக்கம் கூறினேன்.


மக்கள் எப்படி அறியாமையில் மூழ்கிப் போயிருக்கிறார்கள் என்று அனைவரும் பரிதாபப்பட்டோம். பிறகு அன்றே மூவரும் சென்று வீட்டு மனையைப் பார்வையிட்டு இடம் பிடித்திருந்ததால் முன் பணம் செலுத்தி பத்திர நகல்களை வாங்கி வந்தோம். அஷ்டமி, நவமி பார்த்துத் தாமதம் செய்திருந்தால் இந்த வாய்ப்பு கிட்டுமா என்று மகிழ்ந்தோம்.

"செய்யும் வேலைகளின் வெற்றி தன்னை நம்பி இல்லை, கடவுளை நம்பித்தான் இருக்கிறது" என்று நினைத்து உருவாக்கப்பட்ட "நல்ல நேரம்,கெட்ட நேரம்" என்ற பயங்கள் உலகெங்கும் மனிதனை ஆட்டிப்படைக்கின்றன.(நம் நாட்டில் கொஞ்சம் அதிகம்)

இந்திய அளவில் உள்ள பஞ்சாங்கங்களின்படி ஒரு மாதத்திற்கு எவ்வளவு கெட்ட நேரம் வருகிறது என்று கணக்கிட்டுப்பார்ப்போம்.

வாரத்தில் செவ்வாய்,சனி நல்ல காரியம் துவங்கக்கூடாது (10 நாட்கள்).


மாதத்தின் அஷ்டமி,நவமி நன்மைக்கு உகந்தது அல்ல (4நாட்கள்).


பாட்டிமுகம் நாளில் நல்லது செய்வது நல்லதில்லை (2 நாட்கள்).


ஒரு மாதத்தில் வரும் ராகு காலம், எமகண்டம்,குளிகை இவற்றின் கூட்டுத்தொகை (3 முக்கால்) தவிர கௌரி பஞ்சாங்கத்தின் படி நன்மை செய்ய தகாத நாட்கள் 2 நாட்கள்.


ஆக மொத்தத்தில் ஒரு மாதத்தில் 21 முக்கால் நாட்கள் நாம் நல்லது செய்ய பயந்தால் எப்படி உருப்பட...எப்படி முன்னேற...?


என்று தணியும் நம் மக்களிடம் நிரம்பியுள்ள அறியாமையின் மோகம்
?

நன்றி: அறிவுத்திருக்கோவில் ஆண்டு மலர்