Monday, October 31, 2016

மகிழ்ச்சி குறித்து ஓஷோவின் விளக்கம்

 
மகிழ்ச்சி குறித்து ஓஷோவின் விளக்கம் 

நீ மகிழ்ச்சியாக இருக்கும் போதெல்லாம் சிகரத்தில் இருக்கிறாய் 

ஆனால் சிகரங்களாேடு பள்ளத்தாக்குகள் எப்பாெழுதும் சேர்ந்தே இருக்கின்றன என்பதை மறந்து விடுகிறாய்

எப்பாேதும் சிகரத்தின் உச்சியிலேயே இருந்து விட முடியாது 

பள்ளத் தாக்கின் ஆழத்துக்குள் விழத்தான் வேண்டும் 

அதுதான் உனக்கு மன அழுத்தமாக மாறுகிறது 

எதிரிடையானது எப்பாேதும் காத்துக் கொண்டே இருக்கிறது 

அது நிரப்புகிறது 

நீ மகிழ்ச்சியாக இருக்கும் பாேது அது கிளர்ச்சியை தருகிறது 

அதற்கு எதிரிடையான வருத்தம் தளர்ச்சியைத் தருகிறது 

மகிழ்ச்சியில் கிளர்ச்சியும் வருத்தத்தில் தளர்ச்சியும் ஒரு மன நிலை 

அது உன்னை சூழ்ந்திருக்கும் சூழல் 

அது ஒரு நிலை, அது நீயல்ல 

நீ ஒரு கவனிக்கிறவன் அதை மறக்காமல் இருந்தால் எதற்கும் எதிரிடையானது உண்டு என்பதை நினைவில் கொள்வாய்

அப்பாேது உனக்கு மகிழ்ச்சியில் கிளர்ச்சி இருக்காது 

வருத்தத்தில் சோகமும் தெரியாது 

அந்த நிலை தான் ஆனந்தம் 

அது மெளனத்திலும் அமைதியிலும் இருக்கும் நிலை 

அப்பாேது உன்னை எதுவும் அசைக்க முடியாத நிலைக்கு நீ வந்து விடுகிறாய் 

ஓஷோ 

வகுப்பு வருகை பதிவேடு.

வகுப்பு வருகை பதிவேடு.
==================
பள்ளியின் பெயர் - "வாழ்க்கை";
வகுப்பில் இருப்பவர்கள் - 40வயதுக்கு மேற்பட்டவர்கள்;
கோபம் - உள்ளேன் ஐயா!
டென்ஷன் - உள்ளேன் ஐயா!
தனிமை - உள்ளேன் ஐயா!
ஆசைகள் - உள்ளேன் ஐயா! (கோரஸாக);
வெறுப்பு - உள்ளேன் ஐயா!
மாத தவணை - உள்ளேன் ஐயா! மீண்டும் கோரஸாக
அலுவலக டென்ஷன் - உள்ளேன் ஐயா!
கவலை - உள்ளேன் ஐயா;
சோகம்-உள்ளேன் ஐயா!
நிலையற்ற தன்மை - உள்ளேன் ஐயா!
மகிழ்ச்சி - ??????
(ஆசிரியர் மீண்டும் ஒருமுறை)
மகிழ்ச்சி - ??????
மகிழ்ச்சி - வரவில்லை ஐயா!
நிம்மதி - வரவில்லை ஐயா!
திருப்தி - வரவில்லை ஐயா!
இதுதான் நிலை.
வகுப்பு ஆசிரியர்:-
வாழ்வில் கவலை என்ற ஒன்று என்றுமே இல்லை. ஒன்று சந்தோஷம் இருக்கக்கூடிய மனநிலை, இரண்டாவது சந்தோஷத்தை தொலைத்த மனநிலை.
வாழ்க்கை மிக எளியதானது. ஆனால் அந்த எளிய நிலை பெற பலர் வளையத்துக்குள் சென்று எளிதாக முயலாமல் திணறுகின்றனர்.
ஹிட்லர் சொன்னார்: "ஒருவன் இறந்த பொழுது அவன் வங்கி கணக்கில் இருக்கும் பணம் அவன் தேவைக்கு மேல் அதிகமாக வாழ்வதற்கு சம்பாதித்தது" என்று.
தேவையற்ற பலவற்றை உள்ளே வைத்து, தேவையானவைகளை நாம் வெளியே வைத்து, நாமே தொலைத்து விட்டு, தொலைந்தது போல தேடிக்- கொண்டிருக்கிறோம்.
கவலை என்பது ஒரு வலை. மாயவலை.
நீ வலைக்குள் இருக்காதே என்றும் உன் நிலைக்குள் இரு. நிம்மதி உன்னை நேசிக்கும்.
உன் வாழ்க்கை உன் கையில்.
உன் சந்தோஷம், நிம்மதி உன் கையில்.
"ஜீவன் இருக்கு மட்டும் 
வாழ்க்கை நமக்கு மட்டும்" இதுதான் ஞானசித்தர் பாட்டு....
இந்த பூமி சமம் நமக்கு
நாம் பிறக்கையில் 
கையில் என்ன கொண்டு வந்தோம் 
கொண்டு செல்ல...."

வாழ்க வளமுடன்

Friday, October 28, 2016

எல்லாம் மாறும் உன் மனம் மாறினால்

யாரோ உன்னைப் புறக்கணித்துவிட்டதாக ஏன் கதறுகிறாய் ?

யார் உன்னைப் புறக்கணித்தால் என்ன?

இந்தப் பிரபஞ்சம் எப்போதும் உன்னைத் தன் அன்பால், கருணையால் அரவணைத்துக்கொண்டுள்ளது.

சூரியனோ, சந்திரனோ என்றாவது உன்னைப் புறக்கணித்துத் தன் ஒளியை உனக்குத்தர மறுத்ததுண்டா?

இயற்கை உன்னை ஒருபோதும் புறக்கணிப்பதில்லை.

உன் மீது எல்லையில்லா கருணை கொண்டிருக்கும் இயற்கையை மறந்து நீ மனிதர்களின் புறக்கணிப்பு குறித்து கவலை கொள்கிறாய்...

உண்மையில் புறக்கணிப்பு குறித்துச் சற்று ஆராய்ந்து பாரேன்.

அது மனதின் வேலை.

உண்மையில் எத்தனையோ மனிதர்கள் உன்னைப் புறக்கணிப்பதுண்டு. நீயும் எத்தனையோ மனிதர்களைப் புறக்கணிப்பதுண்டு.

எல்லாப் புறக்கணிப்புகளும் உனக்கு வலியைத் தருவதில்லை.

சில மனிதர்களை மனம் கூழாங்கற்களாக நினைக்கிறது.

சில மனிதர்களை மனம் விலையுயர்ந்த வைரம் போல் மிக உயர்வாக நினைக்கிறது. அவர்களின் அன்பிற்கும், அங்கீகாரத்திற்குமாய் ஏங்குகிறது.

கூழாங்கற்களின் புறக்கணிப்பு வலியைத் தருவதில்லை.

வைரத்தின் புறக்கணிப்பு வலியைத் தருகிறது.

இது மனதின் "உயர்வு-தாழ்வு மனப்பான்மை" என்ற குணத்தினால் விளைவது.

அந்த மனப்பான்மையினால் பிறரை உயர்வாகக் கருதும்போது உன்னை நீயே தாழ்வாகக் கருதுகிறாய்.

பிறரைத் தாழ்வாகக் கருதும்போது நீயே உயர்வாகக் கருதிக்கொள்கிறாய்.

உன்னை நீ தாழ்வாகக் கருதும் தருணத்தில் வரும் புறக்கணிப்பு வலியைத் தருகிறது.

உன்னை உயர்வாகக் கருதும் தருணத்தில் வரும் புறக்கணிப்பை வலியில்லாமல் உன்னால் கடந்து செல்ல முடிகிறது.

இவையனைத்தும் உன் மனதின் கற்பனையான நிலைப்பாடுகளேயன்றி உண்மையில் இயற்கையில் அத்தகைய உயர்வு-தாழ்வு ஏதுமில்லை.

சிறு புல்லும், பெருஞ்சூரியனும் இயற்கையில் சமமாகவே உள்ளன.ஆக இப்போது உனக்குத் தேவை சமநோக்குப் பார்வை.

தியானம் செய். இயற்கையை நேசி. வலிகள் மறையும்.
பாராட்டுக்காக ஏங்கும் நேரத்தில் நீ எத்தனை பேரை பாராட்ட மறந்திருக்கிறாய் என்று எண்ணி பார். இது இயல்பே என எண்ணு.

வேகமாக சென்று கொண்டு இருக்கும் போது பார்க்கும் இயற்கை அழகை நின்று பார்க்க நேரம் இருப்பதில்லை. அதற்காக இயற்கை தம் அழகை குறைத்து கொள்வதில்லை. அது இயல்பாய் இருக்கிறது. அது போல் இயல்பாய் கடமையைச் செய்.....

உங்கள் அன்பு தோழன்...
எல்லாம் மாறும் உன் மனம் மாறினால்

குழந்தைகள் வீட்டில் தனியாக இருக்கிறார்களா? இதெல்லாம் செக் பண்ணுங்க ப்ளீஸ்!

நீங்கள் அலுவலகம் போய்க்கொண்டிருக்கும்போது, 'சமையலறை லைட்டை அணைத்துவிட்டோமா... பீரோவைப் பூட்டிவிட்டோமா' என்று திடீரென ஒரு சந்தேகம் எழுந்து மனதைப் பதறவைக்கும். ஆனால், எல்லாவற்றையும் சரியாகத்தான் செய்துவிட்டு வந்திருப்பீர்கள். ஆனால், இதுபோன்ற எந்த நினைப்பும் முன்னெச்சரிக்கையாக வருவதில்லை என்பதுதான் வருத்தமான விஷயம். வீட்டைவிட்டுக் கிளம்புவதற்கு முன்பே இதெல்லாம் வந்திருந்தால், ஒரு தடவைக்கு இரு தடவையாக செக் செய்துவிட்டே புறப்பட்டிருக்க முடியும்.
சரி, வீட்டைவிட்டு கிளம்பும்போது என்னென்ன விஷயங்களைக் கவனிக்க வேண்டும் என்று பார்ப்போமா...!

1. கூல்டிரிங்ஸ் பாட்டில்: கூல்டிரிங்ஸ் வாங்கிவந்து குடித்துவிட்டு, அந்த காலியான பாட்டிலை வேறு ஒரு பயன்பாட்டுக்காக வைத்திருப்பீர்கள். ஒரு நாள், அதில் மண்எண்ணெயையோ, கிளீனிங் கரைசலையோ ஊற்றிவைக்கக்கூடும். அதை அறியாத குழந்தைகள், பாட்டிலில் கூல்டிரிங்ஸ்தான் இருக்கிறது என நினைத்து அதை எடுத்துக் குடிக்க நேரும். அதன் பின் குழந்தை படும் கஷ்டத்தை நினைத்துப்பாருங்கள்.
என்ன செய்ய வேண்டும்? : நீங்கள், அந்த பாட்டிலின் மேல் ஒட்டியிருக்கும் ஸ்டிக்கரை நீக்கிவிட்டு அல்லது மறைத்துவிட்டு, அதை அவர்கள் கைகளுக்கு எட்டாத இடத்தில் வைக்க வேண்டும்.

2. மிக்ஸி: மிக்ஸியைப் பயன்படுத்திவிட்டு அதே இடத்தில் வைத்திருந்தால், குழந்தைகள் அரைத்துப்பார்க்க முயற்சித்து, கையை காயப்படுத்திக் கொள்ளலாம்.
  என்ன செய்ய வேண்டும்? : அறைத்த பின், மின் இணைப்பிலிருந்து நீக்கி, மிக்ஸியை அந்த இடத்திலிருந்து எடுத்து வேறு இடத்தில் வைத்துவிடவும். கண்ணில் படாதபடி மூடியும் வைக்கலாம்.


3. கேஸ் ஸ்டவ்: பெற்றோர் வெளியே சென்றதும் குழந்தை, கிச்சனுக்குள் சென்று விளையாட்டாக ஸ்டவ்வை ஆன் செய்துவிட்டு பற்றவைத்துப்பார்க்க முயற்சிக்கலாம். இது விபரீதத்துக்கு வழி வகுத்துவிடக்கூடும்.
என்ன செய்ய வேண்டும்? :  வெளியே செல்லும்போது சிலிண்டரின் ரெகுலேட்டரை ஆஃப் செய்துவிடவும். தீப்பெட்டி அல்லது லைட்டரை கைக்கு எட்டாதபடி வைக்கவும்.

4.  தண்ணீர்த்தொட்டி: வீட்டில் இருக்கும் தண்ணீர்த்தொட்டியில் ஏறி, தடுமாறி உள்ளே விழுந்து, ஆபத்தை விலைக்கு வாங்கக்கூடும்.
  என்ன செய்ய வேண்டும்? : குழந்தைகளைத் தண்ணீர்த்தொட்டி அருகில் விளையாட விடக் கூடாது. தொட்டியை  எட்டும் உயரத்தில் அமைக்கக் கூடாது. அல்லது குழந்தைகளால் திறக்க முடியாதபடி மூடியே வைக்கவேண்டும்.


5. மருந்துகள்: பெரியவர்கள் மருந்து, மாத்திரைகளை சாப்பிடும்போது, அதைச் சாப்பிடுவதற்கு குழந்தைகளும் ஆசைப்படக்கூடும். குறிப்பாக மருந்தோ, மாத்திரையோ இனிப்பாக இருப்பது தெரிந்தால் அவற்றைச் சாப்பிட நினைப்பார்கள். அதனால் ஆபத்து நேரலாம்.
  என்ன செய்ய வேண்டும்?  : மருந்து, மாத்திரைகளைக் குழந்தைகள் எடுக்காதபடி பூட்டி வைக்கவும்.


6. அயன்பாக்ஸ்: நீங்கள் அவசர அவசரமாக துணியை அயன் செய்துவிட்டு வெளியே சென்றுவிடும் நேரத்தில், குழந்தை அதை எடுத்து, நானும் அயன் பண்ணுகிறேன் என்று கை, கால்களில் சுட்டுக்கொள்வதற்கு வாய்ப்பு உண்டு.
என்ன செய்ய வேண்டும்? : அயன் பண்ணிய உடனே, மின் இணைப்பிலிருந்து நீக்கி, அயன் பாக்ஸை குழந்தைக்கு எட்டாத இடத்தில் வைத்துவிடவேண்டும்.

7.  வாகன சாவி: ஸ்கூட்டி, கார், பைக் போன்ற வண்டிகளில் சாவியை போட்டுவிட்டு, மறந்து வேறு வேலைகளில் மூழ்கிவிடாதீர்கள். நீங்கள் இல்லாத சமயத்தில், குழந்தை சாவியைத் திருகி ஆன் செய்து, ரெய்ஸ் பண்ணி, அதனால் கீழே விழுந்து அடிபடும்.
என்ன செய்ய வேண்டும்? : வண்டியில் ஒருபோதும் சாவியை வைத்துவிட்டு நகரக்கூடாது. வண்டியை நிறுத்தியதும் சாவியை எடுத்து, குழந்தைகளுக்கு எட்டாத இடத்தில் வைக்கவும். குழந்தையை வண்டியில் உட்கார வைத்துவிட்டு வேறு வேலைகளில் மூழ்கக்கூடாது. கையோடு அழைத்துச் செல்லவேண்டும்.

8. கிணறு, குழிகள்: கிணற்றில் அல்லது ஆழமான குழிக்குள் குழந்தைகள் விழுந்து இறக்க நேர்தல்.
   என்ன செய்ய வேண்டும்? : ஆழமான குழியை எதற்காகத் தோண்டியிருந்தாலும் அதை மூடி, பள்ளம் இருக்கிறது என்கிற அடையாளம் வைக்க வேண்டும்.
   கிணறுகளின் சுவரை உயரமாகக் கட்டவேண்டும். தரையோடு தரையாக வைத்திருந்தால் ஆபத்து நிகழும்.



9. கூர்மை ஆயுதங்கள்:  கத்தி, பிளேடு, ரேசர் போன்றவற்றை குழந்தைகள் விளையாட்டுக்குப் பயன்படுதினால் ஆபத்து.
   பிளேடு இணைந்த ரேசர்களைப் பெரியவர்கள் பயன்படுத்தும்போது பார்த்துக்கொண்டிருக்கும் குழந்தைகள், ஆள் இல்லாதபோது, நாமும் ஷேவ் செய்து பார்க்கலாம் என கன்னத்தில் கிழித்துக்கொள்ளக் கூடும்.
 என்ன செய்ய வேண்டும்? : குழந்தைகளை அருகில் வைத்துக்கொண்டு ஷேவ் செய்யக் கூடாது. காய்கறி நறுக்கியபின் அரிவாள்மனை போன்றவற்றை எடுத்து மறைவாக வைத்துவிட வேண்டும். இதோடு, காயம் ஏற்படுத்தும் கூரான பொருட்களை எட்டும்படி வைக்காதீர்கள்.

10. கிராமங்கள் மற்றும் புறநகர்ப் பகுதிகளில், வீட்டைச் சுற்றியுள்ள பகுதியில் விஷமாகக்கூடிய அல்லது ஆபத்து உண்டாக்கக்கூடிய பொருள்கள் இருக்கலாம்.
  என்ன செய்ய வேண்டும்? : குழந்தைகளுக்கு அது பற்றி பெற்றோர் சொல்லிவைக்கவேண்டியது அவசியம். விஷச் செடிகள் இருப்பின் அவற்றை அப்புறப்படுத்த வேண்டும்.

இவற்றையெல்லாம் பெரியவர்கள் கவனமாகச் செய்தால், குழந்தைகள் எந்தவிதமான பாதிப்புகளுக்கும் ஆளாக வாய்ப்பில்லை.

Thursday, October 27, 2016

கிட்னியில் கல்லு வராம என்ன செய்யும்?

பொறுக்க முடியாத அடி வயிற்று வலியோடு, ஒரு நடுத்தர வயதுக்காரர் இரவு இரண்டு மணிக்கு என் வீட்டுக் கதவைத் தட்டினார். நான் உறக்கத்தை விட்டு எழுந்து வந்து அவரை முழுமையாகப் பரிசோதித்துவிட்டு, உங்கள் சிறுநீர்ப்பையில் கல் உள்ளது. அதனால்தான் இந்த வயிற்றுவலி என்றேன். உடனே அவர் அருகில் நின்று கொண்டிருந்த தன் மனைவியிடம் மிகக் கோபமாகச் சொன்னார்: அரை ரூபாய்க்கு ஆசைப்பட்டு அந்தப் பெட்டிக்கடை அரிசியை வாங்க வேண்டாம்னு தலையில அடிச்சி அடிச்சிச் சொன்னேன். கேட்டியா? அரிசியில் சரிபாதி கல்லு!  அதை வச்சி இட்லி செய்துபோட்டா கிட்னியில் கல்லு வராம என்ன செய்யும்?

இப்படி அரிசியில் உள்ள கல்தான் சிறுநீரகக் கல்லாக உருவாகிறது என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படியில்லை. நாம் குடிக்கும் தண்ணீரிலும் உண்ணும் உணவிலும் கால்சியம், மெக்னீசியம், பாஸ்பேட், ஆக்ஸலேட், யூரிக் அமிலம், சிஸ்டைன், ஜான்தைன், ஸ்ட்ரூவைட் என்று பல தாது உப்புகள் உள்ளன. சாதாரணமாக இவை சிறுநீரில் கரைந்து வெளியேறிவிடும். சமயங்களில் இவற்றின் அளவுகள் ரத்தத்தில் எல்லையைத் தாண்டும் போது, அடர்த்தி அதிகமாகிவிடும். இதன் விளைவால், தண்ணீர்க் குழாயில் பாசி சேருகிற மாதிரி இவை சிறுநீரகப்பாதையில் உப்புப்படிகமாகப் படிந்து, மணல் போல் திரண்டு விடும். ஆரம்பத்தில் சிறு கடுகு போலத் தோன்றும், நாளடைவில் பெரிய நெல்லிக்காய் அளவிற்கு அது வளர்ந்துவிடும். சிலருக்குக் கிரிக்கெட் பந்து அளவிற்கும் கல் உண்டாவது உண்டு.
சிறுநீரகக்கல் உருவாவதற்குப் பல காரணங்கள் உண்டு. தினமும் உடலுக்குத் தேவையான தண்ணீர் குடிக்காதது முதல் காரணம். கற்களை உண்டாக்கும் உப்புகள் மிகுந்த உணவுகளை அதிகமாக உண்பது அடுத்த காரணம். சிறுநீர்ப் பாதையில் அடிக்கடி கிருமித்தொற்று ஏற்படுவது இன்னொரு காரணம். இது எப்படியென்றால், கிருமிகள் சிறுநீர்ப்பாதையின் தசைச்சுவரை அரித்துப் புண்ணாக்கும்போது, அங்கு பல்லாங்குழிகளைப் போல பல குழிகள் உண்டாகும். இவற்றில் சிறுநீரின் உப்புகள் தங்கும். அப்போது சிறுநீரகக்கல் உருவாகும். அடுத்ததாக, ஆண்களுக்கு 50 வயதிற்கு மேல் புராஸ்டேட் சுரப்பி வீங்கிக் கொள்ளும். அப்போது சிறுநீர் வெளியேறுவதில் தடை ஏற்படும். இதனால் சிறுநீர்ப்பையிலும் சிறுநீர் தேங்கும். விளைவு, சிறுநீரகக்கல்! இன்னும் சிலருக்கு பேராதைராய்டு இயக்குநீர் மிகையாகச் சுரந்து ரத்தத்தில் கால்சியத்தின் அளவை அதிகரித்துவிடும். இதனாலும் சிறுநீரகக்கல் உண்டாகும்.

சிறுநீரகக்கல் சிறுநீரகத்தில் இருக்கலாம். சிறுநீர்ப்பையில் இருக்கலாம். அல்லது இந்த இரண்டையும் இணைக்கின்ற சிறுநீர்க்குழாயில் இருக்கலாம். ஏன், சிறுநீர்த் தாரையிலும் இருக்கலாம். எங்கிருந்தாலும் சரி அது சும்மா இருப்பதில்லை. விருந்துக்கு வந்த வீட்டிலேயே திருடின கதையாக, அது தங்கியிருக்கும் இடத்தையே பழுதாக்கும். மேலும் அது சிறுநீர்ப்பாதையை அடைத்து, சிறுநீர் ஓட்டத்தைத் தடை செய்து, சிறுநீரகத்திற்குப் பின்னழுத்தத்தைக் கொடுக்கும். இதனால் சிறுநீரகம் வீங்கும். வீங்கிய சிறுநீரகத்தில் நோய்க் கிருமிகள் எளிதாகத் தொற்றிக்கொள்ள அது விரைவிலேயே செயலிழந்துவிடும்.
சிறுநீரகத்தில் கல் இருந்தால் வலது அல்லது இடது பக்கக் கீழ்முதுகில் வலி ஏற்படும். சிறுநீர்க்குழாயில் இருந்தால் வலி விலாவிலிருந்து வயிற்றுக்கும் விரைக்கும் பரவும். சிறுநீர்ப்பையில் இருந்தால் அடிவயிறு வலிக்கும். அத்தோடு நீர்க்கடுப்பு, வாந்தி, சிறுநீரில் ரத்தம் கலந்து வருதல் ஆகிய அறிகுறிகளும் சேர்ந்து கொள்ளும். சமயங்களில் கற்களோடு நோய்த்தொற்றும் கைகோர்த்துக் கொண்டால் குளிர்காய்ச்சலும் வரலாம். எக்ஸ்ரே மற்றும் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் மூலம் கல் இருக்கும் இடத்தைத் தெரிந்து கொள்ளலாம்.

வழக்கமாக 3 - 6 மி.மீ. அளவில் கல் இருந்தால் அது மெல்ல மெல்லக் கரைந்து தானாகவே வெளியேறிவிடும். 2 செ.மீ. வரை உள்ள கற்களை லித்தோட்ரிப்சி எனும் மின் அதிர்வு அலைகளைச் செலுத்தி, கல்லை உடைத்து, அது தானாகச் சிறுநீரில் வெளியேறும்படிச் செய்யலாம். சிறுநீர்க்குழாயில் உள்ள கல்லை லித்தோகிளாஸ்டி எனும் கருவியை சிறுநீர்த்தாரை வழியாகச் செலுத்தி உடைத்து விடலாம். 2 செ.மீ.க்கு மேல் உள்ள கல்லை சாவித்துளை அறுவை சிகிச்சை மூலம் அகற்றி விடலாம்.

உணவு உட்கொள்ளும் முறை:

பொதுவாக, பெண்களோடு ஒப்பிடும் போது ஆண்களுக்கே சிறுநீரகக்கல் உருவாவதற்கு 3 மடங்கு வாய்ப்பு அதிகம். அதிலும், அலுவலகத்தில் பணிபுரிபவர்களைவிட வெயிலில் வேலை செய்பவர்களுக்கு இந்தத் தொந்தரவு அதிகமாக வருகிறது. ஆதலால் இவர்கள்தான் சிறுநீரகக் கல்லைக் கரைக்கவும் தடுக்கவும் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

குறிப்பாக கோடை காலம் சிறுநீரகக் கல்லுக்கு வசந்த காலம். வெயில் காலத்தில் வியர்வை மூலம் அதிக நீரிழப்பு ஏற்படுவதால் சிறுநீரின் அளவு குறைந்துவிடும். இதனால் சிறுநீர்ப் பாதையில் சிறுநீரகக்கல் உருவாக வாய்ப்புக் கிடைக்கும். இந்தச் சமயத்தில் தினமும் 10 தம்ளர் - அதாவது 2 லிட்டர் - தண்ணீர் குடிக்க வேண்டும். அத்தோடு இளநீர், பார்லி நீர், எலுமிச்சைச் சாறு, நீர் மோர், பழரசங்கள் சாப்பிட வேண்டியதும் முக்கியம். தினமும் இரண்டு வேளை காபி போதும். தேநீர் அறவே வேண்டாம். நாளொன்றுக்கு 250 மி.லி. பால் போதும். அதுபோல் பாலில் தயாரிக்கப்பட்ட உணவுப் பொருள்களைக் குறைத்துக் கொண்டால் நல்லது. கோக்கில் தயாரிக்கப்பட்ட பானங்கள் ஆகாது.

ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி போன்ற அசைவ உணவுகளை அடிக்கடி சாப்பிடுபவர்களுக்கு சிறுநீரகக்கல் உருவாகும் வாய்ப்பு அதிகம். இவற்றை அவசியம் தவிர்க்க வேண்டும். அசைவம் அவசியம் என்று ஒற்றைக் காலில் நிற்பவர்கள் சிறிதளவு கோழிக்கறி சாப்பிடலாம். மீன் சாப்பிடலாம். முட்டை எந்த வடிவத்திலும் வேண்டாம். மேலும் கால்சியம், ஆக்சலேட், பாஸ்பேட், யூரிக் அமிலம், சிஸ்டின் ஆகிய உப்புகள் நிறைந்த உணவுகளைத் தவிர்ப்பதன் மூலமும் சிறுநீரகக் கற்கள் உருவாவதைத் தடுக்கலாம். பால், தயிர், வெண்ணெய், பாலாடைக்கட்டி, பால்கோவா, ஐஸ்கிரீம் ஆகியவற்றில் கால்சியம் அதிக அளவு உள்ளது. கருப்புத் திராட்சை, வெள்ளரிக்காய், நெல்லிக்காய், தக்காளி, அவரை, பீட்ரூட், கீரைகள் (குறிப்பாகப் பசலைக்கீரை), இலந்தைப்பழம், சீத்தாப்பழம், முந்திரி போன்ற உலர்ந்த பழங்கள், தேநீர், கோக், சாக்லேட் முதலியவற்றில் ஆக்சலேட் மிகுதி. காலிஃபிளவர், பூசணி, காளான், கத்தரிக்காய், வெண்டைக்காய், பேரிக்காய், கொய்யா ஆகிய காய்கனிகளிலும் முந்திரிப்பருப்பு, பாதாம்பருப்பு, பிஸ்தா பருப்பு போன்ற உலர்ந்த கொட்டைகளிலும் ஆட்டு இறைச்சியிலும் யூரிக் அமிலம் அதிகம். இந்த உணவுகளை எல்லாம் தவிர்த்து விடுங்கள். இயலாவிட்டால் குறைத்துக் கொள்ளுங்கள்.

முட்டைக்கோஸ், முள்ளங்கி, வெங்காயம் ஆகியவை சிறுநீரகக் கற்கள் உருவாவதைத் தடுக்கின்றன. ஆகையால் இவற்றை அடிக்கடி சாப்பிடுங்கள். காய்களில் காரட், பாகற்காய், வாழைப்பூ முதலியவற்றைச் சேர்க்கலாம். பழங்களில் வாழைப்பழம், அன்னாசி, ஆரஞ்சு, ஆப்பிள், மாம்பழம் ஆகியவற்றைச் சாப்பிடலாம்.
சிறுநீரகக்கல் உள்ளவர்கள் வாழைத்தண்டு சாறு சாப்பிடுவது நல்லது. இது சிறுநீர்ச் சுரப்பை அதிகப்படுத்தும். கல்லைக் கரைக்கும் தன்மையும் இதற்குண்டு. சிறுநீரகக்கல்லுக்கான அறிகுறிகள் தொடங்கிய உடனேயே இந்தச் சாறைச் சாப்பிட்டால் மிளகு அளவில் இருக்கும் கற்கள் அதி விரைவில் கரைந்து சிறுநீரில் வெளியேறிவிடும். அதற்காக திராட்சை அளவிற்கு வளர்ந்துள்ள கல்லும் இதனால் கரைந்துவிடும் என்று எதிர்பார்த்தால் ஏமாந்து போவீர்கள்.

குளிக்கும் முன் நினைவில் கொள்ளவும்

குளிக்கும் முன் நினைவில் கொள்ளவும்


உண்மையில் நம்மில் பல பேருக்கு எதற்காக குளிக்கிறோம் என்றே தெரியவில்லை.

அழுக்கு போகவா.....! நிச்சயம் கிடையாது.....!

சரி பின் எதற்கு தான் குளிக்கிறோம் என்று கேட்கிறீர்களா....?

குளியல் = குளிர்வித்தல்

குளிர்வித்தலே மருவி குளியல் ஆனது.

மனிதர்களுக்கு உள்ள 75% நோய்களுக்கு காரணம் அதிகப்படியான உடல் வெப்பம்.

இரவு தூங்கி எழும்போது நமது உடலில் வெப்பக் கழிவுகள் தேங்கியிருக்கும்.

காலை எழுந்ததும் இந்த வெப்பகழிவை உடலில் இருந்து நீக்குவதற்காக குளிந்தநீரில் குளிக்கிறோம்.

வெந்நீரில் குளிக்க கூடாது.

எண்ணெய் குளியலின் போது மட்டுமே மிதமான வெந்நீர் பயன்படுத்த வேண்டும்.

குளிர்ந்த நீரை அப்படியே மொண்டு தலைக்கு ஊற்றிவிடக்கூடாது. இது முற்றிலும் தவறு.

நீரை முதலில் காலில் ஊற்ற வேண்டும், பின், முழங்கால், இடுப்பு, நெஞ்சு பகுதி, இறுதியாக தலை.

எதற்கு இப்படி?
காலில் இருந்து ஊற்றினால் தான் வெப்பம் கீழிருந்து மேல் எழும்பி விழி மற்றும் காது வழியாக வெளியேறும்.

நேரடியாக தலைக்கு ஊற்றினால் வெப்பம் கீழ் நோக்கி சென்று வெளியில் போக முடியாமல் உள்ளேயே சுழன்று கொண்டிருக்கும்.

இப்பொழுது நம் முன்னோர்களின் குளியல் முறையை கண்முன்னே கொண்டு வாருவோம்.

குளத்தில் ஒவ்வொறு படியாக இறங்குவார்கள். காலில் இருந்து மேல் நோக்கி குளிரும்.. வெப்பம் கீழ் இருந்து மேல் எழும்பி இறுதியில் தலை முங்கும் போது கண், காது வழியே வெப்பக் கழிவு வெளியேறிவிடும்.

இறங்கும் முன் ஒன்று செய்வார்கள் கவனித்ததுண்டா??

உச்சந்தலைக்கு சிறிது தண்ணீர் தீர்த்தம் போல் தெளித்துவிட்டு இறங்குவார்கள்.

இது எதற்கு... உச்சந்தலைக்கு அதிக சூடு ஏறக்கூடாது. சிரசு எப்போதும் குளிர்ச்சியாக இருக்க வோண்டும்.

எனவே உச்சியில் சிறிது நினைத்து விட்டால் குளத்தில் இறங்கும் போது கீழ் இருந்து மோலாக எழும் வெப்பம் சிரசை தாக்காமல் காது வழியாக வெளியேறிவிடுகிறது.
வியக்கவைக்கிறதா... !

நம் முன்னோர்களின் ஒவ்வொறு செயலுக்கும் ஆயிரம் அர்த்தங்கள் உண்டு.

குளித்து விட்டு சிறிது நேரம் ஈரத் துணியோடு இருப்பது மிக நல்லது.

பித்தம் நீங்கி பிராணவாயு அதிகரித்தால் அனைத்து நோய்களும் ஓடிவிடும்.

புத்தி பேதலிப்பு கூட சரியாகும்.

குளியலில் இத்தனை விஷயங்கள் இருக்கும் போது. குளியல் அறை என்றாலே அதில் ஒரு ஹீட்டர் வேர, இப்படி சுடு தண்ணீரில் சோப்பும், ஷாம்பையும் போட்டு குளிச்சிட்டு வந்தா நாம நோயாளியா இல்லாம வேற எப்படி இருப்போம்.

குளிக்க மிக நல்ல நேரம் - சூரிய உதயத்திற்கு முன்

குளிக்க மிகச் சிறந்த நீர் - பச்சை தண்ணீர்.

குளித்தல் = குளிர்வித்தல்

குளியல் அழுக்கை நீக்க அல்ல உடலை குளிர்விக்க.

இறைவன் கொடுத்த இந்த உடல் மீது உங்களுக்கு அக்கறை இருந்தால் மாற்றிக் கொள்ளுங்கள்.

Prayer List for Shirdi Sai Spiritual Group Prayers on Thursday after Dhoop Aarati – 18:30 hrs on 27th October 2016.

Prayer List for Shirdi Sai Spiritual Group Prayers on Thursday after Dhoop Aarati  –  18:30 hrs on 27th October 2016.

 

 

Dear Sai Brothers and Sisters,

 

When our prayers from all parts of the world focusing on a specific day & specific time (on  ALL Thursdays at 18:30 hrs after Dhoop Aarati) with a single object and total concentration on praying for others, with our noble intention of getting help from Shri Sai Baba for those known and unknown to us, praying selflessly for the benefit of all global Sai families, certainly this divine vibrations from all participating devotees all over the world energize and elevate  our subconscious mind with powerful spiritual vibrations, that our group prayers shall have the capability to release divine guidance, divine protection, averts disaster, very powerful divine impact and more importantly all participants witness powerful answers to our prayers.

 

All prayer requests received from online, Whatsapp, Prayer Request Drop Box at Mandir up to Madhyan AArati will be placed under Baba's Lotus Feet after Dhoop Aarati and all devotees present at Mandir will pray for you. We request Sai devotees all over the world to pray for our Sai Brothers and Sisters and ask Shirdi Sai Baba to accomplish all their wishes and desires as soon as possible.

 

Om Sai Sri Sai Jaya Jaya Sai.

 

 

 

N.Srinivas

 

Prayers

 

Om Sai Ram, O Sainatha Please take care of my whole family members in all aspects of life. Bless us with Peace, Love and Prosperity Please take care of my brother who is undergoing medical treatment N.Srinivas

Posted in Prayer for health, happiness and peaceOctober 27, 2016 at 9:35 am

 

 

Swaroop

 

Family problems

 

We are having financial problems from last 20 years it making us to to lost faith in god.

Posted in Prayer for resolving financial problemOctober 26, 2016 at 8:23 pm

 

 

Anusha

 

Prayer for child and illness

 

Please pray for conceiving this month.my bp tension fear has to go.my all pains and infections has to go.this month I have to get sai Baba as my son my all problems in life has to go.please pray for my athai and father they are having piles pain in leg they have to be healthy.I […]

Posted in prayersOctober 26, 2016 at 5:48 pm

 

 

Moumita Das

 

Justice Baba

Four years passed by. The fatherless and brother less girl couldn't get married, instead has been cheated ruthlessly and the wrongdoer got all the marital bliss ; from marriage to parenthood. Is there no justice in your Kingdom BABA , if you are the father of all ! Moumita, Hyderabad

Posted in Prayer for health, happiness and peaceOctober 26, 2016 at 4:26 pm

 

 

Bottom of Form

Shalini

 

Please baba show some mercy

 

Om sai ram..please baba its been 3 years im suffering ..eventough im taking udi and praying no improvement..please baba forgive me and guide me give me some power to survive and i just want to be helpful to my parents..please baba..

Posted in Prayer for health, happiness and peaceOctober 26, 2016 at 7:08 am

 

 

SUJATA

 

FINANCE SITUATION

OM SAI RAM SAI BABA PLEASE SAVE MY FAMILY. PROTECT MY HUSBAND FROM EVERY SITUATION PLEASE SAVE BABA PLEASE SAVE. I AM IN A VERY TOUGH SITUATION BLESS MY HUSBAND

Posted in Prayer for resolving financial problemOctober 25, 2016 at 2:51 pm

 

 

ranjit

 

health problem

 

please pray for me …..quick and permanent cure from this problem. 1….chronic venous insufficiency,varicose veins 2….dry eczema

Posted in Prayer for health, happiness and peaceOctober 24, 2016 at 5:04 pm

 

 

Sivaram Krishnan

 

Good Job Needed

 

Om Sairam, My name Sivaram Krishnan from UAE. Last 6 months I am struggling with my family for job. I got a job and joined. But last 3 months they are not paying my salary. I am struggling for my life. Also I am searching for a job, so far nothing came. Pls Baba try […]

Posted in Prayer for job​, business​October 24, 2016 at 2:23 pm

 

 

Moumita Das

 

Prayer

 

I pray and believe BABA , YOU will provide a JUSTICE which will be perfect and permanent for all the injustices done to a fatherless and brother less regarding marriage since September,2012 ( Just 2 months after my only sibling's demise) . Om Sai Sri Sai Jai Jai Sai

Posted in Prayer for health, happiness and peaceOctober 23, 2016 at 6:45 am

 

 

sivaramakrishnan

 

pray for me

 

Om Sairam, am a devotee of baba for the last 14 years, and i have seen many miracles in my life, Baba last 6 months am struggling in my job in UAE , last 3 month my company has not paying salary. am with my family. am serching for new job so for nothing came, […]

Posted in Prayer for job​, business​October 22, 2016 at 5:07 pm

 

 

Moumita Das

 

Thank You Baba

 

Dear BABA, Thank you so much for blessing me this evening. Thou art my savior. Mortal me, how can I describe YOUR divine LEELAS BABA ! After a long time I visited YOU as I saw YOU in dream in the early morning today . How wonderful was the vision there at Sri Shiridi Sai […]

Posted in prayersOctober 21, 2016 at 9:22 pm

 

 

neha

 

Sai g blessed me with happy married life

Sai g please bless me with happy married life. Sai g u know that my marriage is going to be held on 26Oct. Sai g please come in my marriage and blessed me and my Husband. Sai g give me wisdom so that I donot do anything wrong to any body.

Posted in Prayer for health, happiness and peaceOctober 21, 2016 at 11:41 am

 

 

Sarada Swaminathan

 

Prayer request

Baba, please help me get through this difficult phase of life. Forgive all my sins and guide me through each step in life.

Posted in Prayer for health, happiness and peaceOctober 20, 2016 at 11:02 pm

 

 

Let's All Pray for All

 

UNIVERSAL PRAYER

 

Universal Prayers – May Everybody Be Happy !!! Sadguru Sainath Maharaj, May the wicked turn good; May the good attain peace; May the peaceful be freed from all bondage and May the liberated redeem others. May everybody be happy; May everybody be free from disease; May everybody have good luck; May none fall on evil […]

Posted in Prayer for health, happiness and peaceAugust 19, 2016 at 8:31 am

 

 

 

CONFIDENTIAL PRAYERS:

 

1.       Honey M

2.       Prita Pradhan – Thanks giving

3.       Girish

 

 


 

Wednesday, October 26, 2016

GURUVAAR PRARTHNA

GURUVAAR   PRARTHNA

 

 

 

Our Beloved Sadguru Sainath, please accept our humble prayers on this Holy Day of Guruvaar. Baba, our body needs food just as our mind needs peace. Our body needs a meal while our mind needs fullfilment, A meal fills our stomach while our mind enriches with thoughts, the food will give us temporary satisfaction to the body while our mind needs permanent satisfaction, our food gives us energy while our mind gives us inspiration to achieve. Our food will increase our weight while our mind increases our creativity. All above mind's expressions are achievable if You stay in our mind and bless us. Please bless us to explore our mind's potential. On this holy day we start our prayers by reading your divine guidance from Shri Sai Samartha Satcharitra.

 

 

 

 

 

Once a great devotee, while somebody was talking of another person, was prejudiced and got deeply involved in criticising.

 

 

The virtues were overlooked; and only the criticism was recounted on all sides. The actual story was lost sight of and this became a reviling session.

 

 

If at all there is a reason (for disagreement), or if someone behaves abominably, then one should frankly and sweetly try to correct him, and should pity him.

 

 

Never belittle anybody. This is known to everyone. But such a nature cannot be suppressed. It cannot remain under control.

 

 

From within it rises, gradually, till it is blurted out of the mouth. When the lips open, happiness and contentment are pushed out.

 

 

There is none else better than a critic, in the three worlds. He can help a person. Criticism does good to a person and a critic thus obliges a person.

 

 

Some people remove dirt with the help of the soap-nut; some use products like soap; some do it with clean and pure water; but a critic does so with his tongue.

 

 

In a way, they bear the deterioration of their own character for the sake of others, to do good to them. Therefore, their deeds are, really speaking, indescribably benedictory. Surely, a critic should be highly respected.

 

 

At every step, he points out the hazards. He lets a person know his shortcomings under the pretext of criticising, thus helping him to avoid future calamities and obliging everyone. How much more could I praise him?

 

 

Many people have praised them. Even saints and sages have talked about their greatness. I bow down to that band of critics.

 

 

 

 

 

I bow down to Sree Ganesh

I bow down to Sree Saraswati

I bow down to the Guru

I bow down to the Family Deity

I bow down to Sree Sita-Ramachandra

I bow down to Sree Sadguru Sainath.

 

 

 

 

 

Sarveshaam Svaastir Bhavatu

Sarveshaam Shaantir Bhavatu

Sarveshaam Poornam Bhavatu

Sarveshaam Mangalam Bhavatu

Om Shanti, Shanti, Shanteeh

 

 

 

 

 

-(from Shri Sai Samartha Satchrita, Chapter  19, Ovi  189 - 198)

 

Saturday, October 22, 2016

தேர்வு எழுத வந்த பலர் தேர்வு எழுத அனுமதிக்காமல் திருப்பி அனுப்பப்பட்டனர்.

 
சமீபத்தில் கடந்த ஞாயிற்றுக் கிழமை IBPS தேர்வு நடந்தது. அதற்கு நான் invigilatorஆக சென்றிருந்தேன். அங்கே தேர்வு எழுத வந்த பலர் முறையான அடையாள அட்டை (ID PROOF ) இல்லாதால் தேர்வு எழுத அனுமதிக்காமல் திருப்பி அனுப்பப்பட்டனர். குறிப்பாக திருமணம் ஆன பெண்கள்! அவர்களில் பலர் தேர்வு -க்கு விண்ணப்பிக்கும் போது கணவரின் initialஐ போட்டு விண்ணப்பித்துவிட்டு தேர்வு எழுத கொண்டுவந்த ID PROOF களில் தந்தையின் initial இருந்ததால் அவர்கள் அனுமதிக்கப்படவில்லை. அப்படிப்பட்டவர்கள் ORIGINAL MARRIAGE CERTIFICATE இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும் என்று IBPS கண்டிப்பான உத்தரவு பிரப்பித்திருந்ததால் அனுமதிக்கப்படவில்லை . அவர்கள் அழுது கொண்டே சென்றது மனதுக்கு வேதனையாக இருந்தது. தேர்வாளரின் பெயரில் சிறு தவறு ( spelling mistake ) இருந்தால் கூட தேர்வு எழுத அனுமதி வழங்கப்பட வில்லை. எனவே வரும் சனி, ஞாயிறு கிழமைகளில் ( 23.10, 2016 24.10.2016 ) தேதிகளில் நடைபெறஉள்ள IBPS தேர்வு எழுத உள்ள நபர்கள் (குறிப்பாக திருமணம் ஆன பெண்கள் ) இதை கவனத்தில் கொள்ளவும். உங்களிடம் இரண்டு , மூன்று ID இருந்தால் கூட எடுத்து செல்லுங்கள் ஒன்றில் தவறு இருந்தால்கூட மற்றதை பயன்படுத்திக் கொள்ளலாம். ( தயவு செய்து இதை அனைத்து குரூப்பிலும் பதிவிடுங்கள் ஓரிருவர் பயனடைந்தாலும் சந்தோசம் தானே! ) - 

கேரிபேக் தவிர்ப்போம்!



கேரிபேக் தவிர்ப்போம்!"

நினைவில் ஓர் ஓரமாய் இருந்தாலும்..இன்னமும் அலட்சியம்தான் நமக்கு வெள்ளம் வடியாமலிருந்த தலையாய காரணங்களில் ஒன்றென தெரிந்தாலுமே..!!

யோசித்து பார்ப்போம்...! 

இரண்டு ரூபாய்க்கு ஒரு வாழைப்பழம் வாங்கினால்கூட நாம் கேட்டாலும் கேட்காவிட்டாலும் ஒரு 'கேரிபேக்' என்னும் பாலிதீன்பை மக்காத குப்பையையும் சேர்த்து வீட்டுக்கு வாங்கிவந்து விடுகிறோம். வீட்டை சுற்றி, ஊரை சுற்றி, ..

சிறிய வயதில், இருந்த பொழுது, எண்ணை வாங்க கடைக்கும், இருமல்மருந்து வாங்க மருத்துவமனைக்கும் பாட்டில் எடுத்து சென்றவர்களை ஞாபகமிருக்கிறது.. நீங்களோ, அல்லது உங்களின் முன்னோர்களே அப்படித்தான். ஆனால் இன்று எண்ணை போன்ற திரவ பொருட்கள் மட்டுமல்லாமல் அனைத்து நுகர் பொருட்களும் பாலிதீன் பைகளால் பேக்கிங் செய்யப்பட்டு விற்பனைக்கு வருகின்றன. டீ கடைகளில் டீ கப் பிளாஸ்டிக்கும் சுற்றுச் சூழலுக்கு ஒரு சவாலாக இருக்கிறது. இன்னும் நவீனமாக இப்போதெல்லாம் கேரிபேக்கில் சுடச்சுட டீ பார்சல் செய்து தருகிறார்கள்!. விளைவு... மண்ணில் மக்காத குப்பைகளாக பரவிக்கிடக்கின்றன. மரம், செடி, கொடிகளின் வேர்களுக்க நீர் செல்வதற்கு ஒரு தடையாக இருக்கிறது. 

பொதுவாக 18 மைக்ரானுக்கு குறைவான பாலித்தீன் பைகள், பிளாஸ்டிக் பொருட்களை மறு சுழற்சி செய்ய முடியாது ஒரு கேரிபேக் மண்ணில் மக்கிப்போக 400 ஆண்டுகளாகும் என்கிறது ஒரு புள்ளி விவரம்.

நம் வீட்டை சுற்றி கிடக்கும் இந்த பைகளில் மழை நீர் தேங்கி, தேங்கிய நீரில், கொசு முட்டை இட்டு இனப்பெருக்கம் ஏற்படுகிறது. சாக்கடைகளில் அடைப்பு ஏற்பட்டு, கொசு உற்பத்தியாகி சுகாதார கேடும் ஏற்படுகிறது. ஆடு, மாடுகள் இந்த பாலிதீன் பைகளை உண்பதால், அதன் பாலில் கெமிக்கல் கலந்திருக்கிறது. அந்தப் பாலைத்தான் நாமும் குடித்துக் கொண்டு இருக்கிறோம். உச்சகட்ட கொடுமையாக தாய்ப்பாலிலும் இந்த கெமிக்கல் இருக்கிறது என்பது நிரூபணம் செய்யப்பட்டிருக்கிறது.

வீட்டை சுற்றி, ஊரை சுற்றி, ...ஏன் நம்மை சுற்றி தினந்தோறும் வெறுப்பாகவும் அதில் நம் பங்களிப்பு இல்லை என்பது போலவும் பார்த்துக்கொண்டிருக்கிறோம்!

நாம் பயன்படுத்தும் பிளாஸ்டிக்கில் பிஸ்பினால்-ஏ (Bisphenol -A) என்ற கெமிக்கல் இருக்கிறது. இதை அதிக அளவில் பயன்படுத்தும்போது ஆண், பெண் இருவருக்கும் மலட்டுத்தன்மை ஏற்படுகிறது. அதனால்தான் இன்று எங்கு பார்த்தாலும் செயற்கை வழி கர்ப்பங்கள் பெருகி வருகின்றன. 

அதுமட்டுமல்ல, 10, 11 வயதிலேயே பெண் குழந்தைகள் பூப்படைந்து விடுகிறார்கள். கேன்சர், ஒபிஸிட்டி, தைராய்டு கோளாறு என பல நோய்களுக்கும் வாசல்படியாக இருக்கிறது.

இந்த கேரிபேக்கை பயன் படுத்துவதற்கு மாநில அளவில் எடுத்துக்கொண்டால், ஒரு சில மாவட்ட நிர்வாகங்கள் மட்டுமே தடை விதித்துள்ளன. அதுவும் பயன் படுத்துவதற்கு மட்டும் தான். தயாரிப்புக்கு ஏன் தடை விதிக்க மாட்டேன் என்கிறார்கள் என்பதுதான் புரியாத புதிராக இருக்கிறது!. இருக்கட்டும்..

கவர்ன்மென்ட் விழிப்படைந்து தடை விதிப்பதற்குள்... ஆயிரக்கணக்கான நோயும், பிரச்சனையும் பரவியிருக்கும்..! அரசை விடுங கள் நாம் நமக்காக செய்வோமே..!! வெளியில் செல்கையில், ப்ளான் பண்ணுகிறீர்களோ இல்லையோ. எப்போதும் வெளியில் சென்றாலும், .கைவசம், கட்டைபையோ, துணிப்பையோ இருக்கட்டும். மறந்துவிட்டீர்களா? தள்ளிப்போடுங்கள். நாளை வாங்கலாமென..ஒருபோதும் சோம்பலுக்கு அடிமையாகி கடைக்காரர் தரும் ப்ளாஸ்டிக் பையில் வாங்கி வரவேண்டாம்.! இது கூட ஒரு வகையில்.. உறுதிமொழிதான்..நாட்டை, நம்மை, சுற்றுப்புறசூழலை, நம் சந்ததியை..வாழவைக்க..

ப்ளாஸ்டிக் அரக்கன் நம்மை விழுங்குவதற்குள். கை கோர்ப்போம்.. போர் தொடுப்போம்..

நாமே நமக்கு தடை விதித்து கொள்வோமே..!

அந்த கேரிபேக் என்னும் குப்பையை தவிர்த்து, நாம் கொண்டு செல்லும் துணி பையில் பொருள்களை வாங்கி வருவோம்!. பிளாஸ்டிக் டீ கப்பையும் தவிர்ப்போம். இந்த பூமியின் இயற்கை வளத்தை பேணிக்காப்பதில் நாமும் சிறிது பொறுப்பேற்றிருக்கிறோம் என்ற ஆத்ம திருப்தியில் எதிர் வரும் நம் சந்ததிக்கு சுத்தமான காற்றை விட்டுசெல்வோம்..!!

தமிழ்நாடை தனி நாடாக்கனும்னு ஒரு க்ரூப்

 
தமிழ்நாடை தனி நாடாக்கனும்னு ஒரு க்ரூப் தீவிரமா விவாதம் பண்ணிக்கிட்டு இருந்தாங்கலாம் 😳

அதுல ஒருத்தன் சப்போஸ் நாம தனி நாடாயிட்ட அப்புறம் பொருளாதார வளர்ச்சி,முன்னேற்றம் எல்லாம் எப்படி கொண்டுவர்ரதுன்னு அறிவுப்பூர்வமா ஒரு கேள்வி கேட்டான்😱

அதுக்கு இன்னொரு அறிவாளி பதில் சொன்னான்.. அதாவது,
'நாம அமெரிக்காவோட போர் அறிவிச்சிருவோம்😀

எப்படியும் நாம போர்ல கண்டிப்பா தோத்துருவோம்!😨

அப்புறம் நம்மள அமெரிக்காகாரங்கதான் ஆட்சி செய்வாங்க..கிரீன் கார்ட், விசா எதுவுமே இல்லாம நாம அமெரிக்கா குடிமகன் ஆயிறலாம்.. அப்புறம் முன்னேறுறது ரொம்ப ஈசிதான!"💤

இதையெல்லாம் கேட்டுகிட்டு இருந்த இன்னொரு பெரிய அறிவாளி ஒரு சூப்பர் கேள்வி கேட்டான்..என்னன்னா....😜

"அதெல்லாம் சரி..ஒருவேளை நாம போர்ல ஜெயிச்சிட்டா அமெரிகாவ என்ன பண்றது?"

அமெரிக்காவைக் கண்டுபிடிக்கும் முன்

அமெரிக்காவைக் கண்டுபிடிக்கும் 
முன் கொலம்பஸுக்கு ஒரு இந்தியப் 
பெண்ணுடன் திருமணம் ஆகியிருந்தால்...
ஏங்க, எங்கே போறீங்க?
யார்கூட போறீங்க?
ஏன் போறீங்க?
எப்படிப் போறீங்க?
என்ன கண்டுபிடிக்கப் போறீங்க?
ஏன் நீங்க மட்டும் போறீங்க?
நீங்க இங்க இல்லாம நான் என்ன பண்றது?
நானும் உங்ககூட வரட்டுமா?
எப்ப திரும்ப வருவீங்க?
எங்கே சாப்பிடுவீங்க?
எனக்கு என்ன வாங்கிட்டு வருவீங்க?
இப்படி பண்ணணும்னு எனக்குத் தெரியாமல் எத்தனை நாளா பிளான் பண்ணிட்டு இருந்தீங்க?
இன்னும் வேற என்னல்லாம் பிளான் இருக்கு?
இதுக்கு முன்னாடியும் எனக்குத் தெரியாம இந்த மாதிரி பண்ணிருக்கீங்களா?
நான் எங்க அம்மா வீட்டுக்குப் போகட்டுமா?
ஏன் பேசாம இருக்கீங்க?
எத்தனை கேள்வி கேட்குறேன்... 
ஏன் மரமண்டை மாதிரி நிக்கிறீங்க?
இதுக்கு அப்புறமும் அவரு 
அமெரிக்காவைக் கண்டுபிடிக்க 
கிளம்பியிருப்பாருன்னா நினைக்கிறீங்க

Thursday, October 20, 2016

Prayer List for Shirdi Sai Spiritual Group Prayers on Thursday after Dhoop Aarati – 18:30 hrs on 20th October 2016.

Prayer List for Shirdi Sai Spiritual Group Prayers on Thursday after Dhoop Aarati  –  18:30 hrs on 20th October 2016.


Dear Sai Brothers and Sisters,


When our prayers from all parts of the world focusing on a specific day & specific time (on  ALL Thursdays at 18:30 hrs after Dhoop Aarati) with a single object and total concentration on praying for others, with our noble intention of getting help from Shri Sai Baba for those known and unknown to us, praying selflessly for the benefit of all global Sai families, certainly this divine vibrations from all participating devotees all over the world energize and elevate  our subconscious mind with powerful spiritual vibrations, that our group prayers shall have the capability to release divine guidance, divine protection, averts disaster, very powerful divine impact and more importantly all participants witness powerful answers to our prayers.

All prayer requests received from online, Whatsapp, Prayer Request Drop Box at Mandir up to Madhyan AArati will be placed under Baba's Lotus Feet after Dhoop Aarati and all devotees present at Mandir will pray for you. We request Sai devotees all over the world to pray for our Sai Brothers and Sisters and ask Shirdi Sai Baba to accomplish all their wishes and desires as soon as possible.

Om Sai Sri Sai Jaya Jaya Sai.

 





Have Mercy Baba

How come are YOU LORD so silent seeing all the injustices to a fatherless and brotherless !

Posted in Prayer for health, happiness and peace | October 20, 2016 at 6:40 am

prayers to get the visa approved from uscis ,texas for my daughter sai and settle here in usa and drive the car on my own before dec 2016. confidential

sai baba, it is only in your hands only as you can do it as till today you did many things as what all i asked you . baba please be with that person who is working on our paper in uscis and make him to understand our pains and life of my daughter sai […]

Posted in Prayer for Education | October 20, 2016 at 2:06 am

housewife

Baba! My brother is having some health issue. My sincere request Baba that he gets alright soon. Your divine grace can make wonders. Please my dear sadguru shirdi saibaba bless my brther with good health and let him do well in life. We all come to you that you are so kind enough to bless […]

Posted in prayers | October 19, 2016 at 10:35 pm

Prayer

Need little peace Baba. Can't sleep, can't tread. I pray for a justice for all the injustices regarding my marriage since September,2012. Have Mercy Baba.

Posted in prayers | October 19, 2016 at 3:12 am

Bless me

Baba, please bless with a positive result. Om sai ram.

Posted in Prayer for job​, business​ | October 19, 2016 at 2:47 am

Prayers

please pray for Vijay Sukha

Posted in Prayer for health, happiness and peace | October 18, 2016 at 7:28 pm

confidential

Koti Pranams at the DIVINE FEET of SAI…I am facing a very difficult situation in the office environment in a GULF country, we are not treated properly and have been denied many financial benefits. Request BABJI to kindly bless and solve the office environment issue at the earliest…We are fighting for this since last 36 […]

Posted in prayers | October 18, 2016 at 11:43 am

private

MY Pranams at the Divine Feet of SAI..I am presently in USA and working temporality on student VISA. Kindly grant me Employment VISA and a secured job. Kindly Bless my parents with Good Health and Happiness

Posted in Prayer for job​, business​ | October 18, 2016 at 11:38 am

Prayer For Justice & Peace

Sai Ram, I pray for little peace and happiness which has been missing since my only sibling died in June,2012.And also seek justice for all the injustices done to a fatherless and brother less regarding marriage since September,2012. Have Mercy BABA. Moumita, Hyderabad

Posted in Prayer for health, happiness and peace | October 17, 2016 at 12:38 pm

Prayer request

Dear Sai Devotee, Kindly prey for Prosperiety, Good Health, Peace and Bright Future for Ramani Krishnan a divorcee i.e. wife left me and my daughter so we got divorced, Shruti Ramani Alias Mahalaxmi my daughter, I myself Ramani Krishnan should get remarried again with Sai Baba's Grace who should be a Great Sai Baba Devotee […]

Posted in Prayer for health, happiness and peace | October 17, 2016 at 12:36 pm

Praying and healthy baby (boy)and healthy pregnancy

Om Sai Ram….my co-sister ( w/o my Brother Parichay Dewan), name Mrs. Nancy Dewan who is pregnant right now has been told by the doctor of carrying high genetic risks for the baby . Various tests have been done including the risky Amino Test for which the reports are still awaited. Praying to Sai Baba […]

Posted in ​Others | October 16, 2016 at 4:08 pm

PRAYAER REQUEST FOR OFFICER POST

Dear Brother, I am Raman Udayakumar aged 44 years residing at BEML NAGAR, KGF,Karnataka State. Please pray for my Promotion for officer category. I have passed my written test. I have also attended my personnel interview. In the first list I was not selected. I heard that second list will be released. Please pray for […]

Posted in Prayer for job​, business​ | October 15, 2016 at 10:34 am

Prayer

Seeking your intervention Baba amidst complicated situation that YOU will bring justice and peace to the fatherless, brother less and the helpless woman who has no one, except her bereaved and ailing mother. Have Mercy Baba. Moumita, Hyderabad

Posted in Prayer for health, happiness and peace | October 15, 2016 at 12:58 am

UNIVERSAL PRAYER

Universal Prayers – May Everybody Be Happy !!! Sadguru Sainath Maharaj, May the wicked turn good; May the good attain peace; May the peaceful be freed from all bondage and May the liberated redeem others. May everybody be happy; May everybody be free from disease; May everybody have good luck; May none fall on evil […]

Posted in Prayer for health, happiness and peace | August 19, 2016 at 8:31 am

 


CONFIDENTIAL PRAYERS:


1. Prita Pradhan

2. Iyess

3. Honey M