Monday, July 21, 2014

தாம்பூல பையில் சி.டி

தாம்பூல பையில் சி.டி.,

சமீபத்தில் நண்பரின் மகள் திருமண வரவேற்பிற்கு சென்றிருந்தேன். வரவேற்பு நிகழ்ச்சி முடிந்து, விருந்து உண்டு செல்லும்போது, தாம்பூலப்பை ஒன்று கொடுத்தனர். பை, கனம் இல்லாமல், லேசாக இருந்தது. உள்ளே என்ன இருக்கிறது என, தெரிந்து கொள்ள பையை பிரித்து பார்த்தேன். உள்ளே ஒரு சி.டி., மட்டும் இருந்தது. வீட்டில் வந்து அதை போட்டு பார்த்தபோது, அதில் குடும்ப வாழ்க்கைக்கு தேவையான அறிவுரைகள், தத்துவங்கள், விளையாட்டு என, அனைத்து விஷயங்களும் இருந்தன. அதோடு, இரண்டாயிரம் பொது அறிவு கேள்வி, பதில்களும் இடம்பெற்றிருந்தன.

இப்போது பெரும்பாலும் வரவேற்பில், தேங்காய், பழத்திற்கு பதில் மரக்கன்று, புத்தகம் என, பயனுள்ள பொருட்களை வழங்குகின்றனர். அந்த பட்டியலில் இப்போது, சி.டி.,யும் சேர்ந்துள்ளது. இது போன்ற பொருட்களை கொடுத்தால், வாங்குவோருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

- எஸ்.வேல்முருகன், மதுரை.

செல்ஃபோன் ஒலித்தது. ''ஹலோ...'' என்றேன்.

''நாராயணா...'' - எதிர்முனையில் ஒலித்தது குரல்.

சட்டென்று ''ஸாரி... ராங்க் நம்பர்! நான் கேசவன்'' என்று லைனைத் துண்டித்தேன்.

''யாருங்க ஃபோன்ல'' என்று கேட்டார் அருகிலிருந்த நண்பர்.  

''தெரியல! எடுத்த எடுப்பிலேயே 'நாராயணா'ன்னு ஆரம்பிச்சார். என் பெயர் அது இல்லயே! அதான், ராங் நம்பர்னு சொல்லிட்டு வைச்சுட்டேன்''

இதைக்கேட்டதும் நண்பரும் ''நாராயணா...'' என்று இழுக்க, ''அட நீங்களுமா?'' என்று நான் அலுத்துக்கொண்டேன்.

''அட! அது ஒண்ணும் இல்ல சார். சிலபேருக்கு அப்படியொரு வழக்கம் உண்டு. ஃபோன்ல மட்டுமில்ல... நேர்ல பார்க்கும்போதும் 'நாராயணா'ன்னு சொல்லிட்டுத்தான் பேச்சை ஆரம்பிப்பாங்க'' என்றார் நண்பர்.

நண்பர் சொல்வது சரிதான். எனக்குத் தெரிந்த ஒருவர், பார்க்கும்போதெல்லாம் 'சாமி சரணம்' என்று சொல்லிவிட்டே மேற்கொண்டு பேச ஆரம்பிப்பார். ஆரம்பத்தில் நானும், 'இவர் எதுக்கு நம்மகிட்ட சரண்டர் ஆகிறார்'னு யோசித்தது உண்டு. அப்புறம்தான், அவர் தீவிரமான ஐயப்ப பக்தர் என்று தெரிந்துகொண்டேன்.

இந்த 'சிக்னேச்சர் டியூன்' குறித்து எங்கள் விவாதம் தொடர்ந்தது. சிலர் 'ஹரி ஓம்' என்றும், வேறுசிலர் 'ராதே கிருஷ்ணா' என்றும் பேச்சின் துவக்கத்தில் குறிப்பிடுவதை சுட்டிக்காட்டினார் நண்பர். சாயி பக்தர்களான எனது நண்பர்கள் சிலர், 'சாயி ராம்' என்று சொல்லிவிட்டு முகமன் கூறுவதை நானும் நினைவுகூர்ந்தேன்.

''பேசும்போதுதான் என்றில்லை, ஏதாவது எழுத ஆரம்பிக்கும் போதும்... பிள்ளையார் சுழிக்குப் பதில் 'சாயி ராம்' என்றே துவங்குவார்கள்'' என்றார் நண்பர். அதே போன்று 'ராம்... ராம்' என்றும் சிலர் ஆரம்பிப்பது உண்டு.

நண்பர் கூறினார்: ''என்னோட உறவினர் ஒருத்தர் வயிறுமுட்ட  சாப்பிட்டுவிட்டு ஏப்பம் விடுறதுக்கு முன்னாடியும் 'ராம் ராம்'னு சொல்லிவிட்டே ஏப்பம்விடுவார். அதுமட்டுமில்ல, தூங்கப் போகும்போது, தூங்கி எழுந்ததும்னு நேரம் வாய்க்கும்போதெல்லாம் தவறாம ராம நாமம் ஜபிக்கக்கூடியவர்கள் ஏராளம் பேர்...''

நண்பர் சொல்லிக்கொண்டிருக்க... நான், எனது செல்ஃபோனுக்கு வந்த எண்ணுக்கு டயல் செய்துகொண்டிருந்தேன். எனது தவற்றை 'ஃபோன்' செய்த நண்பரிடம் விளக்கி மன்னிப்பு கேட்க வேண்டுமே!

பேசி முடித்தபோது, ராம நாம மகிமையைச் சொல்லும் கம்ப ராமாயண பாடல் வரிகள் என் நினைவுக்கு வந்தன...

நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
ஜன்மமும் மரணமும் இன்றி தீருமே
இம்மையே ராமா என்ற இரண்டு எழுத்தினால்

இப்போதெல்லாம் நானும் எனக்குப் பிடித்த இறை நாமாவைச் சொல்லியே ஆரம்பிக்கிறேன்... முடிக்கிறேன்!

மாற்றி யோசித்தால், தந்திரமாக சிந்திப்பவர்களையும் தோற்கடித்து விடலாம்

பாலைவன வாழ்க்கை துயரமானது. தற்சமயம் அங்கு தாராளமாக பெட்ரோலியம் கிடைப்பதால், பொருளாதார நிலையில் கடல்நீரையும் குடிநீராக மாற்றிக்கொள்ளும் அளவுக்கு வசதி வாய்ப்புகள் அதிகம். ஆனால், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மிகக் கடுமையான வாழ்க்கை அவர்களுக்கு விதிக்கப்பட்டிருந்தது. அந்தத் துயரமான சூழலிலும் வித்தியாசமான சிந்தனைகள் அவர்கள் வாழ்க்கையை வளப்படுத்தின.  

பார்வையற்ற யாசகன் ஒருவன் பிச்சை கேட்டவாறு தெருவில் சென்றுகொண்டிருந்தான். அப்போது, அவன் தட்டில் முழு ரொட்டி ஒன்று விழுந்தது. 'கடவுள் உங்களுக்கு நன்மைகள் செய்வாராக. உங்களுக்கு அவருடைய ஆசிகள் கிடைப்பதாக. நீங்கள் உங்கள் நாட்டுக் குப் பாதுகாப்பாகவும் ஆரோக்கியத்துடனும் திரும்பிச்செல்ல அல்லா உதவுவாராக!' என்றான் அந்த யாசகன்.

'நான் இந்தப் பகுதிக்கு அந்நியன் என்பதை எப்படி நீங்கள் அறிந்தீர்கள்?' என்று வியப்புடன் கேட்டார், ரொட்டி தர்மம் செய்தவர்.

'நான் இந்த நகரத்தில் இருபது வருடங்களாக யாசகம் கேட்டு வருகிறேன். ஒருமுறைகூட யாரும் முழு ரொட்டியைத் தந்ததில்லை' என்றான் யாசகன்.

முழு ரொட்டியைப் போடுகிறவன் கட்டாயம் வேறு தேசத்தைச் சேர்ந்தவனாகத்தான் இருக்க வேண்டும் என்று, எவ்வளவு அகப் பார்வையோடு அவன் சிந்தித்திருக்கிறான், பாருங்கள்!

மாற்றி யோசித்தால், தந்திரமாகச் சிந்திப்பவர்களையும் தோற்கடித்து விடலாம் என்பதற்கு, அரேபியக்கதை ஒன்று உண்டு.

அரேபியர்கள் எப்போதும் இசையையும் கவிதைகளையும் நேசிப்பவர்கள். மன்னர்களைப் புகழ்ந்து பாடல்களை இயற்றினால், பரிசுகள் பெறலாம் என்பது தெரிந்ததுதான். ஓர் அரசன் மிகச் சிறந்த ஞாபகசக்தி உடையவன்; அதோடு கூர்மையான அறிவும் நிரம்பப் பெற்றவன். ஒரு கவிதையை ஒருமுறை கேட்டால் போதும்; அதை வரி மாறாமல், வார்த்தை மாறாமல் அப்படியே திருப்பிச்சொல்ல அவனால் முடியும். அவன் சபையில் விதூஷகன் ஒருவன் இருந்தான். அவனும் நினைவாற்றலில் சிறந்தவன்தான். எதையும் இரண்டு முறை கேட்டால், அப்படியே திருப்பிச் சொல்லும் சக்தி உடையவன் அவன். அந்த அவையில் அடிமைப்பெண் ஒருத்தி இருந்தாள்.  மூன்று முறை கேட்டால், அதை அட்சரம் பிசகாமல் திருப்பிச் சொல்வாள் அவள்.

அந்த அரசன் ஓர் அற்பன். எந்தப் புலவன் வந்து மன்னனைப் புகழ்ந்து பாடினாலும், 'நீ பாடவிருக்கும்  பாடல் இதுவரை நான் கேள்விப்படாத, உன்னுடைய சொந்தப் பாடலாக இருந்தால், அதன் எடைக்குச் சமமாக தங்கக் காசுகள் தருவேன்' என்பான்.

வந்த புலவனும், தன் கவிதையைப் படிப்பான். ஒருமுறை கேட்டதுமே மன்னனுக்குத்தான் அது மனப்பாடம் ஆகிவிடுமே! எனவே, ஏதோ ஒரு பெயரைக் குறிப்பிட்டு, 'அந்தக் கவிதை அவர் எழுதியது; நான் ஏற்கெனவே படித்திருக்கிறேன்' என்று சொல்லி, அதை அப்படியே மளமளவென்று ஒப்பிப்பான். புலவன், ''இல்லை. இந்தக் கவிதை என் சொந்தக் கவிதை'' என்று சாதித்தால், 'கிடையவே கிடையாது! இந்தக் கவிதை என் விதூஷகனுக்குக்கூடத் தெரியும்' என்று சொல்லி, விதூஷகனைப் பாடச்சொல்வான் மன்னன்.  புலவன் பாடி ஒருமுறை, மன்னர் திரும்பச் சொல்லி ஒருமுறை என விதூஷகன் அந்தக் கவிதையை இரண்டு முறை உன்னிப்பாகக் கவனித்திருப்பதால், அவனும் அதை வரி மாறாமல் சொல்லுவான். அப்போதும், ''இருக்க முடியாது! இந்தக் கவிதையை நான் நேற்றுத்தான் புனைந்தேன்!'' என்று புலவன் அழாக்குறையாகச் சொன்னால், 'இல்லை. நீ பொய் சொல்கிறாய். என்னுடைய அடிமைப்பெண்கூட இந்தக் கவிதையைச் சொல்வாள்' என்று சொல்லி, அவளைச் சொல்லச் சொல்லுவான் அரசன். மூன்று முறை கேட்டதால், அவளும் வார்த்தை பிசகாமல் அந்தக் கவிதையைத் திரும்பச் சொல்ல, புலவன் குழம்பிப்போய் சித்தம் கலங்கி, புத்திசுவாதீனத்தை இழக்கும் அளவுக்கு வந்துவிடுவான்.  

'அல் அஸ்மாய்' என்கிற கவிஞனுக்கு மட்டும் இந்த உண்மை தெரியும். அரசனுடைய நினைவாற்றல் குறித்தும் தெரியும். எனவே, இதுவரை யாரும் உபயோகிக்காத வித்தியாசமான சொற்களைப் பயன்படுத்தி, அவர் ஒரு கவிதையைத் தயார் செய்தார். அதை அரசனோ, விதூஷகனோ, அடிமைப்பெண்ணோ மனப்பாடம் செய்து திரும்பச்சொல்லவே முடியாது என்கிற அளவில் மிகக் கடினமான ஒரு கவிதையை உருவாக்கினார் அவர். பின்பு, ஒரு வழிப்போக்கரைப்போல மாறுவேடம் பூண்டு, அரசவைக்குச் சென்றார்.

'மன்னரே, நான் உங்களைப் புகழ்ந்து ஒரு கவிதை தயாரித்திருக்கிறேன்.  உங்களுக்கு படித்துக்காட்ட விரும்புகிறேன்'

'புலவரே! என் நிபந்தனை உங்களுக்குத் தெரியும் அல்லவா?'

'நன்றாகத் தெரியும். அந்த நிபந்தனைக்கு நான் ஒப்புக் கொள்கிறேன்' என்றவர், அந்தப் பாடலைப் பாடிக் காண்பித்தார்.  கடினமான பதங்களுடன்கூடிய, கரடுமுரடான வரிகள் கொண்ட அந்தப் பாடலைக் கேட்ட மன்னனால், திருப்பிச் சொல்ல முடியவில்லை. மன்னரே தடுமாறியதால், விதூஷகனும் மலங்க மலங்க விழித்தான். அடிமைப்பெண்ணாலும் எதுவும் செய்ய முடியவில்லை. மன்னன் தோல்வியை ஒப்புக்கொண்டான்.

'புலவரே, இது உங்கள் சொந்தப்பாடல் என்பதில் எனக்குச் சந்தேகம் இல்லை. நான் சொன்னதுபோல் உங்களுக்குத் தங்கக் காசுகள் பரிசு தருகிறேன். நீங்கள் பாடல் எழுதிய அந்த ஏட்டைத் தாருங்கள். எங்கள் பொருளாளர் அதன் எடைக்குத் தகுந்தவாறு உங்களுக்குத் தங்கக் காசுகள் தருவார்' என்றான் மன்னன்.

'மன்னரே, இதை நான் காகிதத்தில் எழுத வில்லை. என் வீட்டில் உள்ள பளிங்குத் தூணில்தான் இந்தக் கவிதையைச் செதுக்கி வைத்தேன். அதை இங்கே கொண்டு வந்துள்ளேன்'' என்று சொல்லி, அரண்மனை வாயிலுக்குச் சென்று குரல் கொடுக்க, மிகப் பெரிய பளிங்குத் தூண் ஒன்றை நான்கு பேர் தூக்கி வந்து, அரசவையில் மன்னன் முன் நிறுத்தினர்.

வேறு வழியின்றி, அந்தப் பளிங்குத் தூண் எடை போடப்பட்டு, மன்னனின் கஜானாவிலிருந்து அத்தனை தங்கமும் காலியாகியும், இன்னும் போதாத நிலைமை ஏற்பட்டது. மன்னன் தன் அற்பத்தனத்துக்குத் தலைகுனிந்து வருந்த, அல் அஸ்மாய் பெரிய மனத்துடன் சிறிதளவே தங்கத்தை எடுத்துக்கொண்டு, மன்னனிடமிருந்து விடைபெற்றார்.  

துருக்கிய ஆட்சி உச்சத்திலிருந்த காலம்.  துருக்கியின் சுல்தான், ஐரோப்பாவில் இருக்கும் ஒரு நாட்டுக்கு சுற்றுப்பயணம் சென்றுவர விரும்பினார். அதுகுறித்து வசீரிடம் (முக்கிய அமைச்சர்)   தெரிவித்தார். வசீருக்கோ கவலை வந்துவிட்டது.

'மேன்மையானவரே! தங்கள் பயணம் நிச்சயம் சர்வதேச பிரச்னையில் கொண்டுபோய் விட்டு விடும்' என்று எச்சரித்தார் வசீர்.  

'ஏன்?'

'நம் நாட்டில் பாரம்பரியமான விதி ஒன்று உண்டு.  துருக்கிய சுல்தான் எந்த மண்ணை மிதிக்கிறாரோ, அது துருக்கியின் ஆளுகைக்குள் வந்துவிடும். எனவே, இந்த விதியை நடைமுறைப்படுத்தினால் எல்லைப்பிரச்னையோ, போரோ ஏற்பட வாய்ப்பு உண்டு' என்று தயங்கியவாறே தெரிவித்தார் வசீர்.

ஆனால், சுல்தான் விடுவதாக இல்லை. 'நான் இந்தப் பயணத்தை மேற்கொள்வது என்று முடிவுசெய்துவிட்டேன். எக்காரணம் கொண்டும் என் திட்டத்தை மாற்றிக்கொள்ளப் போவதில்லை. எனவே, எந்த சர்வதேசப் பிரச்னையும் இதனால் ஏற்படாத வண்ணம் நான் பயணம் மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளைச் செய்க!' என்று ஆணையிட்டார் சுல்தான்.

வசீர் என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பினார்.  தலைமை நீதிபதி ஷேக்அல் இஸ்லாம் அவர்களிடம் இதுகுறித்து கலந்தாலோசிக்க முடிவு செய்தார்.

தலைமை நீதிபதி நிறையப் படித்தவர். அதிக ஞானம் உள்ளவர். எந்தப் பிரச்னைக்கும் சாதுரியமாகத் தீர்வு காண்பதில் வல்லவர்.  

'பழங்கால விதியை மீறுவதோ, மாற்றுவதோ நடக்காத காரியம். நம் சுல்தான் எந்த மண்ணை மிதிக்கிறாரோ, அது துருக்கிய எல்லைக்குட் பட்டதாகிவிடும் என்பது சட்டபூர்வமான ஒன்று. ஆனால், இந்த விதியை உடைக்காமல் தவிர்க்க ஒரு வழி உண்டு. இந்தப் பயணத்தின்போது சுல்தான் அணிவதற்காக விசேஷமான காலணிகளைச் செய்ய வேண்டும். அந்தக் காலணிக்கு இரண்டு அடிப்பகுதிகள் இருக்க வேண்டும். அந்த இரண்டு அடிப்பகுதிகளுக்கு நடுவில் உள்ள காலி இடத்தில் துருக்கிய நாட்டு மண்ணை நிரப்ப வேண்டும். அப்படிச் செய்தால், நம் சுல்தான் எந்த வெளிநாட்டில் பயணம் செய்தாலும் அவர் உண்மையில் துருக்கிய மண்ணையே மிதித்தவர் ஆவார். எனவே, வேறொரு நாட்டின் எல்லையை நம்முடையதாக்கிக்கொள்கிற சட்டபூர்வமான பிரச்னையும் ஏற்பட வாய்ப்பில்லை' என்று ஆலோசனை சொன்னார் அவர்.  

மனிதர்கள் எப்படி ஒன்றும் தெரியாதவர்கள் போல நடிக்கிறார்கள் என்பதை விளக்குவதற்கும் அரேபியக்கதை ஒன்று உண்டு.

ஒருவன் கோதுமையை மாவாக அரைப்பதற்கு, மாவு மில்லில் காத்திருந்தான். வரிசையாக மக்கள் நின்றிருந்தார்கள். இவன் தன் பக்கத்தில் இருப்பவனின் பையிலிருந்து நைஸாக கோதுமையை அள்ளி, அவ்வப்போது தன்னுடைய பையில் போட்டுக்கொண்டிருந்தான். இதை யாரும் கவனிக்கவில்லை என்று நினைத்து, தொடர்ந்து நிதானமாக இப்படிச் செய்துகொண்டிருந்தான் அவன். ஆனால், அவனது இந்தச் செயலை ஆரம்பத்திலிருந்தே பார்த்துக்கொண்டு இருந்தார் மாவு மில்காரர்.

ஒருகட்டத்தில் மிக எரிச்சலுற்று, 'என்ன செய்கிறாய்?' என்று அதட்டினார்.

இந்தத் திருட்டுப்பேர்வழியோ, 'மன்னிக்கவும். நான் ஒரு முட்டாள்'' என்றான்.

'நீ முட்டாளாக இருந்தால், உன் பையில் இருக்கிற கோதுமையை எடுத்துப் பக்கத்தில் உள்ளவரின் பையில் போட வேண்டியதுதானே? ஏன் அப்படிச் செய்யவில்லை?' என்று மடக்கினார் மாவுமில்காரர்.

'அப்படிச் செய்தால் நான் இரண்டு மடங்கு முட்டாளாக, அடிமுட்டாளாக அல்லவா இருப் பேன்!' என்றான் அந்தப் பேர்வழி சாதுர்யமாக.

பழங்காலத்து மரபுக் கதைகள் நமக்கு விழிப்பு உணர்வையும், எச்சரிக்கையையும் அளிப்பவையாக விளங்குகின்றன. வெறும் ஏட்டுச் சுரைக்காயாக அவை இருப்பதில்லை. எந்த இடத்திலும் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும்;

உலகம் நம்மை ஏமாற்றுவதற்கு எப்போதும் தயாராக இருக்கிறது. எவரையும் லேசில் நம்பிவிடக்கூடாது. பேசுவது ஒன்றாகவும், செய்வது ஒன்றாகவும் உள்ள மனிதர்கள் ஏராளம் பேர் இருக்கிறார்கள். அவர்கள் சொல்வதை அப்படியே நம்பினால், ஏமாறுவதைத் தவிர, வேறு வழியில்லை. நாம் பெரிய படிப்பாளி, நமக்கு எல்லாம் தெரியும், நம்மை யாராலும் ஏமாற்ற முடியாது என்று அலட்சியமாக நினைத்துவிடக் கூடாது என்பதை இந்தக் கதைகள் அறிவுரையாக நமக்கு வழங்குகின்றன.

Friday, July 18, 2014

WHATSOEVER IS GOING TO HAPPEN IS GOING TO BE GOOD

A man just got married and was returning home with his wife. They were crossing a lake in a boat, when suddenly a great storm arose. The man was a warrior, but the woman became very much afraid because it seemed almost hopeless:

The boat was small and the storm was really huge, and any moment they were going to be drowned. But the man sat silently, calm and quiet, as if nothing was happening.

The woman was trembling and she said, "Are you not afraid ?". This may be our last moment of life! It doesn't seem that we will be able to reach the other shore. Only some miracle can save us; otherwise death is certain. Are you not afraid? Are you mad or something? Are you a stone or something?

The man laughed and took the sword out of its sheath. The woman was even more puzzled: What he was doing? Then he brought the naked sword close to the woman's neck, so close that just a small gap was there, it was almost touching her neck.

He said," Are you afraid ?"

She started to laugh and said," Why should I be afraid ?,If the sword is in your hands, why I should be afraid? I know you love me.

" He put the sword back and said, This is my answer". I know God Loves me, and the storm is in His hands

SO WHATSOEVER IS GOING TO HAPPEN IS GOING TO BE GOOD. If we survive, good; if we don't survive, good ,because everything is in His hands and He cannot do anything wrong.

Moral: Develop Trust. This is the trust which one needs to imbibe. and which is capable of transforming your whole life. Any less won't do!

Monday, July 7, 2014

Cancer and working by sitting during the day

A new study suggests that people who spend the bulk of their day sitting -- whether behind the wheel, in front of the TV or working at a computer -- appear to have an increased risk for certain kinds of cancers.

Previous studies have tied too much time spent sedentary to a variety of health problems, including heart disease, blood clots, a large waistline, higher blood sugar and insulin, generally poor physical functioning, and even early death.

The findings of 70,000 cases of cancer published on June 16 in the Journal of the National Cancer Institute, reveals both good news and bad news.

The good news? Being sedentary did not appear to be linked to every kind of cancer. Scientists found no relationship between sitting and breast, ovarian, testicular or prostate cancers, or cancers of the stomach, esophagus and kidneys, or non-Hodgkin lymphoma.

The bad news was that there did seem to be a consistent relationship between hours spent sitting and an increased risk for colon and endometrial (uterine) cancers.

People who spent the most time sitting and watching TV during the day had a 54 percent increased risk of getting colon cancer and 66 percent increased risk of endometrial  cancer compared to those who logged the least number of hours in a chair.  Moreover, every two-hour increase in sitting time was linked to an 8 percent increased risk of colon cancer and a 10 percent increased risk of endometrial cancer.

So, Cutting down on TV viewing and sedentary time is just as important as becoming more active.  For those whose jobs require them to sit at a desk most of the day, it is recommended breaking up the time spent sitting by incorporating short bouts of light activity into the daily routine.

Friday, July 4, 2014

No God Know God

No God Know God

 

The wave of atheism was on the increase in south India, especially in Kerala. One day, in an open-air meeting, a man from audience got up and declared, "You talk of God, but where is God? Believe me, there is no God! God is a superstition. God is an opiate. God is an imaginary being created by priests and Brahmins to rob the people of money. There is no God!" Holding up a watch in his hand, he threw an open challenge, "If God really exists, let Him strike me dead within three minutes!" A wave of suspense swept over the meeting. The people were all lost in thought! What was going to happen now? Two minutes had passed, two minutes and a half, two minutes and forty five seconds, two minutes fifty seconds… three minutes were over!.

 

And he announced triumphantly to the people, "You see, God does not exist. If God existed, He would have struck me dead! I threw an open challenge at Him, and if God really existed, I would not be alive now!" The people were  misled. They all began to exclaim, "There is no God!"

 

Also present in that meeting was a holy man of God – Sadhu Itiwara. He was a homeless wanderer who  moved from place to place, carrying with himself, the Gospel of the love of God. He found that the simple people had been swayed. They had come under the influence of this man who said there was no God. He got up and said to the people, "Never forget that the God is your Mother. God loves you more than your earthly father and mother love you. Tell me which father would strike his son dead only to prove that he existed?" A tremendous wave of relief swept over the people. They declared in one voice, "God is! He loves us more than an earthly father would love his son. That is why He has not struck this man dead!"

 

 

The best time to have a heart attack? When it's a full moon, new studies show

Night of the living: A new study shows that people undergoing heart surgery have a lower death rate if their operation is done when the moon is starting to wane

Night of the living: A new study shows that people undergoing heart surgery have a lower death rate if their operation is done when the moon is starting to wane


  • - The idea that the moon affects our bodies has long caused controversy
  • - New evidence seems to prove the connection
  • - However, not everyone believes in what's called the 'Transylvania effect'

  • For thousands of years, people feared the moon could change us into werewolves or even mermaids.


    These days, alternative health gurus sell calendars that show the 'best' lunar phase for losing weight (supposedly a waning moon - one that is getting smaller in the sky) or using face packs (a waxing moon - which is getting larger).


    Such ideas may seem scientifically laughable. But might there be something in them?

    Last week, U.S. surgeons reported that people undergoing heart surgery have a lower death rate if their operation is done when the moon is starting to wane.


    The study at Rhode Island Hospital followed 210 patients who'd undergone surgery between January 1996 and December 2011 to repair life-threatening tears in the lining of the aorta, a rare condition known as aortic dissection.


    Dr Frank Sellke, the lead researcher and chief cardiothoracic surgeon, says: 'We found the odds of dying following the procedure were greatly reduced during the waning full moon, and that length of stay was also reduced during the full moon.'


    Indeed, people who had the surgery during a full moon stayed in hospital for an average of ten days, compared with 14 for those who underwent it at other times in the lunar cycle, according to a report in the journal Interactive Cardiovascular and Thoracic Surgery.

    This kind of lunar influence - also known as the 'Transylvania effect' - has long caused rows among medical experts. Does the moon really affect our bodies, or is such evidence is merely the result of coincidences and statistical quirks?

     

    A report in April's European Journal of Preventive Cardiology seems to support the moon-believers. As with the Rhode Island study, it found that the waning moon just after a full moon may protect people's hearts. 


    The researchers, from the Central Hospital of Augsburg, Germany, studied the records of 16,000 heart-attack victims, and also found significantly fewer attacks occurred in the three days after a new moon.


    Some experts believe this may be caused by the moon's gravitational pull affecting heart functions. When the moon is full, and at new moons (when the sun and moon are aligned), the gravitational pull of the moon and sun are combined, and gravity is thought to be at its strongest. The idea is that this may have the most beneficial effect on human circulation at or just after a full moon. 


    Evidence for this effect has also been found in India by researchers at Vidyasagar University. They asked 80 students to do exercises every day for a month while having their heart rate, blood pressure and athletic performance monitored. 


    The 'Transylvania effect': Some experts believe the moon's gravitational pull affects heart functions

    The 'Transylvania effect': Some experts believe the moon's gravitational pull affects heart functions


    The results suggested that at full moons, people's cardiovascular systems were working at their most efficient rates, reported the International Journal of Biometeorology last November.


    Some medics also believe that the moon's gravitational pull can affect the flow of fluid in the human body. If this is the case, then it should prompt kidney-stone trouble at times when the moon's pull is strongest - at full moons and new moons.


    One study, in the journal Emergency Medicine International, found that hospital admissions for kidney stones didn't vary according to lunar cycles.


    However, other research suggests the opposite. In 2011, the Urology Journal published evidence from a study of nearly 1,500 patients that renal colic - pain commonly caused by kidney stones - seemed to increase significantly at the time of the full moon.


    Furthermore, a study at the Royal Liverpool University Hospital in 2008 found that emergency urological admissions did seem to be affected by lunar phases.

    'Emergency urological admissions were higher on full-moon days,' said lead researcher Hasan Qazi in the journal Current Urology. 'The new moon had a calming effect.'

    The pull of gravity may also make a difference to other fluids in our bodies - even our brains - according to Dutch researchers. Their study of more than 5,400 patients in 2011 showed that emergency admissions of psychiatric patients rose during full- moon periods.

    The researchers, from Radboud University, Nijmegen, suggest this may be caused by the moon's gravity affecting the flow of fluids in the brain - and in individual brain cells - which in turn may alter people's mood and behaviour.


    Controversial findings: Results from this study suggest that at full moons, people's cardiovascular systems were working at their most efficient rates

    Controversial findings: Results from this study suggest that at full moons, people's cardiovascular systems were working at their most efficient rates

    The effect of the moon on patients' health has also been noted by GPs. In a study published in the doctors' newspaper Pulse, Dr Peter Perkins, a GP in Bournemouth, interviewed 79 general practitioners and found that emergency calls for all conditions increased by 3 per cent at full moon and dropped by 6 per cent during a new moon. 

    Similar research at Leeds University has found that GP consultation rates rise by 3.6 per cent during a full moon. Many experts remain highly sceptical, however. Numerous studies have found no influence in areas where the moon was thought to have power. For example, the moon may have been worshipped in ancient times as the goddess of fertility and delivery, but there seems to be no link between its phases and the rates of childbirth.

    This was the conclusion of a study of 13,000 births by Brazil's University of Sao Paulo, published in the International Journal of Biometereology last July, which investigated whether this phenomenon existed.


    Some German scientists seem particularly keen to debunk the idea of lunar influence. Surveys in Germany show that more than one in ten people are convinced that the moon affects their health, and lunar calendars with recommendations for daily life have become increasingly popular there.


    Some people have claimed that the lunar phase may produce more beneficial outcomes in other surgery, such as hip replacements, but German statistical research so far has shown there's no link.


    But even if we accept that the moon has an effect, this may not be due only to the moon's gravitational pull, argue some scientists. Rather, the effect might be due to the way the moon's proximity distorts the Earth's magnetic field.


    However, sceptics say that such effects are tiny compared with our home environment, which is full of magnets. 


    Perhaps lunar influence could also come down to something simpler than invisible forces. It might be caused by changes in natural levels of light. The full moon's light is up to 16 times greater than at other lunar phases.


    Researchers at University College London have discovered that the number of epileptic seizures, which are related to electrical activity in the brain, falls when the moon is at its brightest. 


    'These findings suggest that epileptic seizures are less likely to occur on brighter nights,' says Dr Sallie Baxendale from the Institute of Neurology, who led the study. She believes the hormone melatonin, secreted only at night and in the dark, might be implicated, although it is not clear how.


    So far, all these research efforts leave us with more tantalising questions than answers. And, as Dr Sellke, author of the latest research, has asked, even if we do prove that the moon has a medical influence, what should we do with that knowledge? 


    While it may help some people with epilepsy to reduce their risk of fits on certain nights, it would cause widespread chaos if hospitals cancelled all surgical operations on nights when the lunar phase appeared statistically unhelpful.


    Anyone who suggested such a thing might be dismissed as moonstruck, or justifiably labelled a complete lunatic.




    Thursday, July 3, 2014

    This Is An Excellent Resume For Someone With No Experience

    Writing your very first resume can be a daunting process. And it doesn't help to know that recruiters spend an average of  six seconds reviewing a resume  before they make the initial decision on candidates, according to research conducted by  The Ladders , an online job-matching service for professionals.
    "Many students don't know what should and should not be included in their first resume," says Amanda Augustine, a career expert at TheLadders. "While there are no hard and fast rules when writing a resume, it really depends on what content you have to work with, there are some preliminary guidelines all students or new professionals should follow."
    She says the most important things to think about when you're creating your first resume are your job goals and your audience. "Ask yourself: If I handed the resume to someone who knew nothing about my college major or career direction, could they easily identify the type of role I'm targeting and why within the first 30 seconds?"  
    To get a clearer picture of what makes a resume great, we asked Augustine to create a sample of an excellent one for someone with little to no experience.
    While your resume may look different, depending on the industry you're in, the one below should serve as a useful guide for entry-level professionals with very little work experience:

    What makes this an excellent resume for someone with no experience? Augustine outlines the following reasons:

    1. The layout is clean and easy to read. 
    The same font type is used throughout the document. Dates and locations are consistently represented, so it's easy to scan and pick out the important information. "In addition, the headers and main sections of information are centered on the page, which The Ladders eye-tracking study revealed is how recruiters tend to scan resumes," she says.

    2. It includes a link to the job seeker's professional profile. 
    While it may seem a little premature, it's important for students to develop good social media habits from the get-go. "Create one professional profile dedicated to your future career," she suggests. "If you're studying to work in a more creative field, consider developing an online portfolio to display as part of your contact information. In addition, increase the security settings on your personal accounts so they're hidden away."

    3. The job seeker's goals are clear. 
    Maria's professional title and summary at the top of the resume clearly indicate her interest in securing an internship in advertising or public relations. "If her resume was passed along to someone by a friend, the reader wouldn't have to guess," Augustine says. "While Maria's personal brand is still under development, her summary references the value she already brings to the table: the relevant degree she's pursuing, her experience using social media, and her writing skills."

    4. It plays up the job seeker's selling points. 
    Maria is pursuing her first internship and doesn't have any relevant work experience to speak of. "As a result, we've shifted around the components within her resume to showcase her strengths: her relevant coursework, leadership activities, achievements, and skills," Augustine explains. "Her work experience is moved to the bottom of the resume because it's not directly tied to her internship goals." However, it's important to include this information because it demonstrates Maria's work ethic and skills. 

    5. It includes some references to high school. 
    If you're pursuing your first internship, it's all right to incorporate some information about your high school career. This includes any awards, honors, or scholarships you may have received or sports you may have played. If you were valedictorian or salutatorian of your class, or you held an office in an honor society or relevant club, include it in your first resume, Augustine says.  "This information paints a picture for the reader of a well-rounded student who was active in and out of school."

    6. It lists her social media skills. 
    "If you grew up with Facebook and other social media channels, it may seem silly to add these to your resume — doesn't everyone know their way around Instagram today?" she says. "But the reality is that this knowledge is an asset to many employers, and not everyone in the job market possesses it." If you're targeting internship opportunities in marketing, public relations, advertising, journalism, or even customer service, include these skills in your resume. Many employers are looking for interns to help manage their online brands; adding these skills to your resume will help them find you.

    7. It doesn't include a list of references.
    You do not need a line at the bottom that reads: "References available upon request."  
    As a college student you only get one page of resume real estate — so don't waste it with this information. "Employers don't ask for that information until you make it to a face-to-face interview, and they know you'll provide it if they request it," she says.
    It's important to remember that experience isn't everything — and, luckily, employers filling internships don't expect you to have much of it just yet, Augustine says. "However, they do want to see an active student who has demonstrated a genuine interest in their position."
    So, when you sit down to write your first resume, try to think about your previous jobs in a new light. "If your experience seems unrelated to the internship you want, think about what skills you've practiced or learned that could be applicable," she says. "For instance, as a waitress you're sure to develop skills in customer service, sales, and multitasking, all of which could be very valuable to a potential employer."

    Way to get rid of your temptations.

    Way to get rid of your temptations.

     

    A young man came to Gurudev and confessed, "I can resist anything but temptation!" O saint of God, tell me how I may overcome my weakness?"

     

    Gurudev prescribed certain disciples, but the young man returned, a few days later, saying that there was no improvement whatsoever in his condition.

     

    "All right," said Gurudev, "Come back early tomorrow morning and spend the day with me."

     

    The next day, the Master said to the young man, "Take the books out of this cupboard, dust them thoroughly, and put them back in their place. Continue to do this until noon."

     

    The young man followed the instructions and met the Master that afternoon. His clothes were covered with dust, but he looked happy.

     

    And Gurudev said to him, "Go and take lunch and, after lunch, you will do the same thing with the books in the other cupboard."

     

    The boy obeyed and when it got dark, he returned, exhausted.

     

    Gurudev asked him, "Tell me, my child, did you face any temptations today?"

     

    "None whatsoever," replied the young man. "I just didn't have the time."

     

    "Try to work that way, everyday!" said the Master to him, "and you will be freed from the snare of temptation.

    Wednesday, July 2, 2014

    கொசு ஒரு பிரச்சனையா?

     

     

    கொசு ஒரு பிரச்சனையா?


    இது 100% வேலை செய்யும்...!


    உங்கள் வீட்டிலில் இருந்து கொசுக்களை விரட்ட ஒரு சக்திவாய்ந்த நுட்பம்..!


    ஒரு எலுமிச்சை பாதியாக அரிந்துக்கொள்ளவும் பின்னர் அந்த பாதியில் படத்தில் கொடுக்க பட்டது போன்று கிராம்பை நெருக்கமாக சொருகவும், வீட்டில் கொசு வரும் இடங்களில் வைக்கவும். ஒரு கொசு கூட இந்த எலுமிச்சை,கிராம்பு வாசனைக்கு வராது, இதை உங்கள் வீட்டில் செய்து பாருங்கள்...!


    நீங்கள் செய்யவேண்டியவை இந்த பதிவை உங்கள்
    நண்பர்கள் அனைவரிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள் !!
    விழிப்புணர்வு செய்யுங்கள் !!! நன்றி

    Tuesday, July 1, 2014

    Lead Me from the Unreal to the Real


    நாங்கள் பிரார்த்தனையை மறந்துவிட்டோம் !!!

    ரஷ்யாவில் ஒரு சிறிய தீவில் மூன்று பேர் வசித்து வந்தனர். அவர்கள் மக்கள் மத்தியில் இறைவன் அருள் பெற்ற புனிதர்கள் எனப் பிரபலமடைந்திருந்தனர். இது தீவிற்கு அருகில் இருந்த வேறொரு குருவுக்கு ஆத்திரத்தை உண்டு பண்ணியது. தன்னிடம் அங்கீகாரம் பெற்றால்தான் அவர்கள் உண்மையான குரு ஆக முடியும் எனச் சொல்லிப் பார்த்தார். ஆனாலும் தொடர்ந்து மக்கள் அவர்களிடம் சென்று ஆசி பெற்று வந்தனர். ஒருநாள் அந்த மூவரும் எப்படியான மனிதர்கள் என்பதைப் பார்ப்பதற்காக அந்தத் தீவுக்குச் செல்ல அந்தக் குரு முடிவு செய்தார்.

    அவர் மோட்டார் படகில் சென்று அந்த தீவை அடைந்தார். இந்த மூவர் மட்டுமே அங்கு வசித்து வந்தனர். அவர் சென்றடைந்தது ஒரு காலை நேரம். இந்த மூவரும் ஒரு மரத்தின் கீழ் அமர்ந்திருந்தனர். அவர்களைப் பார்க்கும்போது கற்றறிந்த ஞானிகள் போலவே தெரியவில்லை. அவர்கள் படிப்பறிவற்ற, நாகரிகமற்ற, சாதாரண மனிதர்கள் போலவே இருந்தனர். ஆயிரக்கணக்கான மக்களை தங்கள் இறையருளால் கவர்ந்து வைத்திருந்த மூன்று ஞானிகள் குறித்த கற்பனையுடன் வந்திருந்த குருவுக்கு ஏமாற்றமாக இருந்தது. இனி அவர்களிடம் பேசுவதிலும் அவருக்குப் பிரச்சினை இல்லை என நினைத்தார்.

    குருவைப் பார்த்த அந்த மூவரும் காலைத் தொட்டு வணங்கினர். குருவுக்குத் திருப்தி. குரு அவர்களிடம், "நீங்கள் புனிதர்கள் என நினைக்கிறீர்களா?"எனக் கேட்டார்.

    அவர்கள், "இல்லை குரு. நாங்கள் படிக்காத பாமரர்கள். எங்களால் அவ்வளவு உயர்ந்த விஷயங்களை நினைத்துப் பார்க்கவே முடியாது. ஆனால் நாங்கள் என்ன சொன்னாலும் கேட்காமல் மக்கள் எங்களைத் தேடி வந்துகொண்டே இருக்கின்றனர். நாங்கள் அவர்களைத் தடுக்க முயன்றோம். நீங்கள்தான் குரு. உங்களிடம்தான் போக வேண்டும் என்றோம். ஆனால் அவர்கள் கேட்பதாக இல்லை" என்றனர்.

    இதைக் கேட்ட குரு, "சரி நீங்கள் ஏன் இங்கு இருக்கிறீர்கள் உங்கள் பிரார்த்தனை என்ன?" எனக் கேட்டார். அவர்கள் மூவரும் ஒருவரை ஒருவர் சுட்டி, "நீ சொல். நீ சொல்" எனச் சொல்லிக்கொண்டே இருந்தனர். சற்று கோபம் அடைந்தாலும் குரு மீண்டும் மிகப் பொறுமையுடன் கேட்டார், "யார் வேண்டுமானாலும் சொல்லலாம். அதில் பிரச்சினை இல்லை. ஆனால் யாராவது ஒருவர் சொல்லுங்கள்" என்றார்.

    அந்த பாமரர்கள் மூவரும், "நாங்கள் கற்கத் தயாராக உள்ளோம். சரியான பிரார்த்தனை முறையை நீங்கள் சொல்லிக் கொடுத்தால் நாங்கள் முயல்வோம்" என்றனர். ஆனால் பிரார்த்தனை பெரிதாக இருந்தால் நாங்கள் அதை மறந்துவிடக் கூடும் எனவும் கூறினர்.

    குரு, சம்பிரதாயமான பிரார்த்தனை முறைகள் அனைத்தையும் கற்றவர். அவை மிகப் பெரியவை. மூவருக்கும் அது மிக நீளமானதாகத் தெரிந்தது. குரு அதைத் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொடுத்த பின்னும் அவர்கள் மறந்தனர். மீண்டும் ஒரு முறை சொல்லிக்கொடுத்தால்தான் நினைவில் கொள்ள முடியும் என வேண்டிக்கொண்டனர். குருவுக்கு ஆத்திரம். இன்னொரு விதத்தில் மூவரும் முட்டாள்கள் என்பதில் மகிழ்ச்சி.

    இவர்களைப் பற்றி எடுத்துக் கூறி மக்களை எளிதாகத் தன் பக்கம் திருப்பிவிட முடியும் என நம்பினார். குருவுக்கு அவர்கள் விடை கொடுக்கும் முன் குருவின் காலைத் தொட்டு வணங்கினர். மகிழ்ச்சியோடும், திருப்தியோடும் குரு விடை பெற்றார். அவர் படகில் ஏரியின் நடுவில் பயணித்துக் கொண்டிருந்தபோது மூவரும் தண்ணீரின் மேல் ஓடி வந்தபடி, "நில்லுங்கள், நாங்கள் பிரார்த்தனையை மறந்துவிட்டோம்.

    மறுபடியும் ஒருமுறை சொல்லுங்கள்" எனக் கேட்டனர். குரு அவர்கள் தண்ணீரின் மேல் ஓடி வந்ததையும், தண்ணீரின் மேல் நின்றுகொண்டு பேசுவதையும் பார்த்து அதிசயத்துவிட்டார். குரு, "என்னை மன்னித்துவிடுங்கள். உங்கள் பிரார்த்தனைதான் சரியானது. அதைத் தொடருங்கள்" என வணங்கினார்.

    - Three Hermits என்னும் லியோ டால்ஸ்டாய் கதையின் சுருக்கப்பட்ட வடிவம்



    Continue to live with your old prayer!

    undefinedOn an island, at the mouth of the Dvian river in Russia, there lived three old hermits. They were simple men who were unaware of the customs of the church. The only prayer they said was "We are three. Thou art three. Have mercy on us!"
    Though simple, this prayer of the hermits brought about many miracles. 

    The news of this simple prayer and the miracles it manifested spread far and wide and a bishop in a neighbouring island came to hear about the three hermits and their prayer. The bishop felt that the hermits' prayer was too naive and it could not be permitted. So, he decided to meet the hermits and teach them the invocations that were prescribed by the church.

    One day, the bishop set sail for the island where the hermits lived. He met the hermits and told them that their prayer was too simple and undignified. They needed to learn to address God with grand words. The bishop taught the hermits the customary prayers like "Father, Thou art in Heaven, Hallowed be thy name Give us our daily bread …….". The humble hermits accepted the bishop's advice and learnt the prayers he taught them.

    Happy that he had educated the three simple men on how to pray, the bishop left the island on his ship. No sooner did his ship leave the shore than he saw a radiant light following his ship As the light approached his ship, he discerned that it was none other than the three hermits who were holding hands and running on the water. They were trying to reach his ship. What did they want? "Oh, revered one, we have forgotten the prayers you taught us," they cried as they reached the bishop, "and we have hastened to ask you to repeat them. Please teach us the prayers once again."

    But the bishop was dumbfounded by the sight of the three men running on the water. He shook his head and humbly answered: "Dear ones, continue to live with your old prayer!"


    "A short story of Leo Tolstoy taken from Autobiography of a Yogi by Paramahamsa Yogananda".

    போதைக்கு அடிமையா, இல்லையா ?

    இப்போதெல்லாம் நமது சினிமா ஹீரோக்கள் வசனம் பேசும் காட்சிகளைவிட கையில் மது பாட்டிலோடு புலம்பும் காட்சிகள்தான் அதிகம். அக்காட்சிகளுடன் கூட வரும் 'மது அருந்துதல் உடல் நலத்துக்குக் கேடு' என்ற எச்சரிக்கை வாசகமும் நமக்குப் பழகிப்போன ஒன்றாகிவிட்டது. ஆனால், உண்மை நிலைமை மிகவும் மோசம். இந்தியாவில் சுமார் 75% ஆண்கள் வாழ்க்கையின் ஏதாவது ஒரு கட்டத்தில் மது அருந்துகின்றனர். இதில் 20-30% பேர் அதற்கு முழு அடிமையாகிறார்கள். குடிப்பழக்கம் பெரும்பாலும் 15-25 வயதில்தான் ஆரம்பிக்கிறது. 50-60% சாலை விபத்துகள் குடிபோதையினால்தான் ஏற்படுகின்றன.

    மது குடிப்பது முதலில் சாதாரணப் பழக்கமாகத்தான் ஆரம்பிக்கும். ஆரம்பிக்கும்போதே யாரும் முழு பாட்டிலையும் குடிப்பதில்லை, குடிக்கவும் முடியாது. சில மாதங்கள் அல்லது வருடங்களில் மூளையில் ஆல்கஹால் சில ரசாயன மாற்றங்களை ஏற்படுத்துவதன் காரணமாக, சாதாரண போதையைத் தருவதற்குக்கூட அதிக அளவு மது தேவைப்படும். இதனால்தான் ஆரம்பித்துச் சில வருடங்களில் பாட்டில் கணக்கில் குடிக்க ஆரம்பிக்கி றார்கள். ஒரு கட்டத்தில் குடியை விட முடியாத அளவுக்கு மனநோயாளி யாகவே மாறி விடுகிறார்கள்.

    யார் போதைக்கு அடிமை?

    பொதுவாக மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளிடம் குடிப்பழக்கத்தைப் பற்றி விசாரித்தால் "நீங்க நினைக்கிற மாதிரி நான் மொடாக்குடிகாரன் கிடையாது டாக்டர்" என்ற பதில்தான் முதலில் வரும். ஆனால், உண்மை வித்தியாசமானது. குடிப் பழக்கத்துக்கு ஒருவர் அடிமையா, இல்லையா என்பதை நிர்ணயிக்கச் சில வரைமுறைகள் இருக்கின்றன. இது தனிப்பட்ட நபரின் எண்ணத்தைப் பொறுத்தது அல்ல. கீழ்க்கண்டவற்றுள் ஏதேனும் சில காரணங்கள் இருந்தாலே, அந்நபர் போதைக்கு அடிமை என்றே அர்த்தம்.

    # தினசரி குடிப்பது, மற்ற விஷயங்களைவிட குடிப்பதற்கு முன்னுரிமை கொடுப்பது.

    # ஆரம்பத்தில் குடித்ததைவிட அதிகம் குடித்தால்தான் போதை ஏற்படுகிறது என்ற நிலை.

    # பல முறை முயன்றும் குடியை முழுவதுமாக நிறுத்த முடியாமல் தோல்வியடைதல்.

    # உடல்நலத்துக்குக் கேடு என்று தெரிந்தும் அல்லது உடல்நலம் பாதிக்கப்பட்ட பின்னரும் குடியை நிறுத்த முடியாமை.

    # குடித்தால்தான் தூக்கம் வரும் அல்லது கைநடுக்கம் குறையும் என்ற நிலை.

    குடிப்பதற்குக் கூறும் காரணங்கள்

    'இந்தக் கண்றாவியையா குடித்தோம்' என்ற குற்றவுணர்வோடு சிலர் காலையில் எழுவது உண்டு. ஆனால், காலையில் பிள்ளையின் தலையில் சத்தியம் செய்து சென்ற பின்னரும், மாலையில் போதையோடுதான் வீடு திரும்புவார்கள். சிலர் பெட் காபி போல் காலையில் கண் விழிப்பதே மது பாட்டில் முன்புதான். இந்த இரண்டு நிலையுமே தீவிரமான அடிமைத்தனத்தின் அறிகுறிகள். தான் மதுவுக்கு அடிமையாகி இருக்கிறோம் என்பதை ஒருவர் உணர்ந்து ஒத்துக்கொள்வதுதான் மாற்றத்தின் முதல் படி.

    பெரும்பாலும் குடிப்பவர்களைக் கேட்டால் தாங்கள் குடிப்பதற்கு ஒவ்வொருவரும் ஒரு காரணம் சொல்வார்கள். கூலி வேலைக்குச் செல்பவர்கள் தங்கள் உடல்வலியை போக்கக் குடிப்பதாகவும், இளம்வயதினரைக் கேட்டால் நண்பர்கள் கட்டாயப்படுத்துவதால் அல்லது ஜாலி மூடில் இருந்ததால் குடிப்பதாகவும், சிலர் கவலையை மறக்கக் குடிப்பதாகவும் காரணம் சொல்வார்கள். இப்படிப்பட்ட பல்வேறு சாக்குப்போக்குகள்தான் நாளடைவில் குடியைத் தொடர்வதற்குக் காரணமாகிவிடும்.

    நிறுத்தினால் என்ன பிரச்சினை?

    தீவிர குடிப்பழக்கம் இல்லாதவர்கள் எப்போது நிறுத்தினாலும் பிரச்சினை இல்லை. ஆனால், தினசரி ஆல்கஹாலுக்குப் பழகிப்போன மூளை நரம்புகள், திடீரென குடியை நிறுத்தும்போது அதை ஏற்றுக்கொள்ள முடியாமல் சில தொந்தரவுகளைத் தருவது உண்மைதான். எனவே, அதிகப் போதைக்கு அடிமையானவர்கள் குடியை நிறுத்திய சில மணி நேரத்தில் கை, கால் நடுக்கம், தூக்கமின்மை, பதற்றம், வாந்தி, எரிச்சல் உணர்வு போன்றவை ஏற்படலாம். சிலருக்கு நிறுத்திய ஓரிரு நாட்களில் வலிப்பு அல்லது யாரோ பேசுவது போல் குரல் கேட்பது, உருவங்கள் தெரிவது, அதீத பய உணர்வு போன்றவை ஏற்படலாம். திரும்பக் குடித்தால்தான் இவை சரியாகின்றன என்ற காரணத்தைக் காட்டியே குடியைத் தொடர்வது ஆபத்தையே விளைவிக்கும்.

    தொடர் குடியால் நாளடைவில் ஏற்படும் உயிருக்கு ஆபத்தான உடல்நலப் பாதிப்புகளைவிட மேற்கூறிய தொந்தரவுகள் மிகச் சாதாரணமானவை. மேலும் மருந்துகளால் கட்டுப்படுத்தக் கூடியவை. தினசரி 800 மி.லி. குடித்தால்தான் போதைவரும் என்ற நபருக்கு, 500 மி.லி. குடித்தால் போதை ஏற்படாது. இப்படிப்பட்டவர்கள் படிப்படியாகக் குடியை நிறுத்துவது சாத்தியமில்லாத ஒன்று. எனவே, அதிக அடிமைத்தனத்துக்கு ஆளானவர்கள் மருத்துவ உதவியுடன் உடனடியாக, முழுவதுமாக நிறுத்தும் முறையே சிறந்தது.

    மேற்கண்ட குடிபோதை நோய் அறிகுறிகள் தென்படும் பட்சத்தில் 'சுயக் கட்டுப்பாடு வேண்டும்', 'உன்னால் முடியும்' என்பது போல இலவசமாகக் கிடைக்கும் அறிவுரைகள் எந்தப் பலனையும் தராது. ஏனென்றால், மூளை நரம்புகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்களால் ஏற்படும் மேற்குறிப்பிட்ட தொந்தரவுகளைச் சரிசெய்ய மனநல மருத்துவரின் உதவி அவசியம்.

    குடி தருவது என்ன?

    ஆல்கஹால் உடலில் சேரும் இடம் கல்லீரல்தான். இதனால் நாளடைவில் மஞ்சள்காமாலையில் ஆரம்பித்து கல்லீரல் செயலிழந்து போவதுவரை உடல்நலப் பிரச்சினைகள் தோன்றலாம். அல்சர், இதய வீக்கம் மற்றும் செயலிழப்பு, நரம்பு கோளாறுகள், கணைய வீக்கம், வைட்டமின் குறைபாடுகள், உணவு மண்டலத்தில் புற்றுநோய் போன்றவை மற்ற முக்கியப் பாதிப்புகள்.

    பாதிக்கு மேற்பட்டோர் மனக்குழப்பங்கள், மனப்பதற்றம், மன அழுத்தம், தூக்கம் சம்பந்தப்பட்ட நோய்கள், செக்ஸ் பிரச்சினை போன்ற மனநலப் பிரச்சினைகளாலும் பாதிக்கப்படுகிறார்கள். இது தவிர சமுதாயத்தில் சுயகௌரவத்தை இழத்தல், குடும்பப் பிரச்சினைகள், பணவிரயம் மற்றும் கடன், தனிமனித உறவு பாதிப்பு, விபத்துகள், தற்கொலை எனப் பட்டியலிட்டுக்கொண்டே போகலாம்.

    'வாழ்க்கையின் எத்தனையோ முக்கியமான சந்தோஷங்களை இழந்துள்ளோம் என்பதை, இப்போதுதான் உணர்கிறோம்' என்பதுதான் குடிபோதையிலிருந்து மீண்டவர்களில் பெரும் பாலோர் சொல்லும் கருத்து. காலம் கடந்த பின் வருந்துவதைவிட, விழிப்புடன் போதையை எதிர்த்துச் செயல்பட்டால் தனிநபருக்கு மட்டுமல்ல நாட்டுக்கும் வீட்டுக்கும் நல்வாழ்வுதான்.

    குடிப் பழக்கம் நிறுத்திய பின்

    #எப்போதும் ஏதாவது ஒரு வேலையில் ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும். சும்மா இருப்பது தேவையற்ற சிந்தனைகளைத் தூண்டும்.

    #ஏற்கெனவே, குடிப்பதைத் தூண்டிய சூழ்நிலைகள், மனநிலைகளில் கவனமாக இருக்கவேண்டும். உதாரணமாக பார்ட்டி, விழாக்களுக்கு மனைவியுடன் சேர்ந்து செல்லுதல், குறிப்பிட்ட நேரத்துக்கு மேல் அங்கு இருப்பதைத் தவிர்ப்பது போன்றவை பலன் கொடுக்கும்.

    #நண்பர்கள் கட்டாயப்படுத்தினாலோ அல்லது 'நீ குடிக்கவேண்டாம் சும்மா பக்கத்தில் இரு' என்று சொன்னாலோ, அந்த இடத்தில் தொடர்ந்து இருப்பது விஷப்பரீட்சைதான்.

    #குடும்பத்தினருடன் அதிக நேரம் செலவழிக்க வேண்டும். இந்த நேரத்தில் குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு மிக அவசியம்

    #முடிந்தால் ஒரு உண்டியல் வாங்கி, முன்பு தினமும் குடிப்பதற்குச் செலவு செய்த தொகையை அதில் போட்டு, சில மாதங்கள் கழித்து எடுத்துப் பார்த்தால் குடிப்பதற்காக எவ்வளவு பணத்தை வீணடித்திருக்கிறோம் என்பது புரியும். இது மனரீதியாக நல்ல மாற்றத்தைக் கொடுக்கும்.

    #சீரான உடற்பயிற்சி, ஆரோக்கியமான உணவு, நல்ல தூக்கம் அவசியம். தேவைப்பட்டால் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் மட்டும் தூங்குவதற்குச் சில நாட்கள் மருந்து உட்கொள்ளலாம்.

    #'இன்றைக்கு ஒரு நாள் மட்டும் தானே' என்று சலனப்பட்டால் இறுதியில் பழைய நிலைமைக்குச் சீக்கிரமே சென்றுவிடும். இதற்கு பீர் ஒன்றும் விதிவிலக்கல்ல. விஸ்கியில் 35-40% எத்தனால் இருப்பது போலப் பீரிலும் 5-10% உள்ளது.

    டாக்டர் ஆ. காட்சன்- கட்டுரையாளர், மனநல மருத்துவர்- தொடர்புக்கு:godsonpsychiatrist@gmail.com